PDA

View Full Version : சாம்பலும் சிவனும்...



rambal
17-05-2003, 04:43 PM
சாம்பலும் சிவனும்...

ஏகாந்த இரவுகளில்
பற்றியெழுந்த தீ
சிவனைப் பற்றி
பிறிதொரு பொழுதில்
அவன் உடலையும் பற்றியதால்..

உடுக்கையடித்து
ஆட ஆரம்பித்தான்
தாண்டவத்தை
இடுகாட்டில்..

தாண்டவமாடி..
தாவிக் குதிக்க..
கண்ணில் வந்து விழுந்தது
எரிந்து கொண்டிருந்த
பிணத்தின்
நெருப்புப் பொறி...

கனநொடி கலங்கினாலும்
தாளம் தப்பாது
தொடர்ந்தது தாண்டவம்
மாத்திரம்..

எரிந்த பிணம்
சாம்பலாகி
சாம்பலும் பறந்து வந்து
நெற்றியில் இருந்த
கண்ணில் விழும் வரை
தொடரத்தான் செய்தது
ஆட்டமும் குதித்தலும்...

சாம்பல் தூசானாலும்
விழுந்தது
நெற்றிக் கண்ணில்...
சாம்பலை பொசுக்கவா..
இல்லை
ஆட்டத்தை நிறுத்தவா?

Nanban
17-05-2003, 04:57 PM
ஆட்டத்தை நிறுத்த ஆண்டவனுக்கும் இயலாது
நெற்றிக் கண்ணைப் பொசுக்க சாம்பலுக்கும் இயலாது
ஆட்டத்துக்கும், சாம்பலுக்கும் யுத்தம்
ஓங்கி ஒலிக்கும் உடுக்கையின் சத்தம் போல தெறித்து விழும்
ஆக்ரோஷமிக்க கவிதை ஒலிகள்......
காளியின் அருள் பெற்று
அக்னிக்குஞ்சு கொண்டு வந்தவனுக்கும்
அப்பன் கூறிய அறிவுரை
காலத்தை மீறிக் கனவு காணாதே?
அப்பன் பேச்சைக் கேட்டிருந்தால்
அக்னிக் குஞ்சு
அவிஞ்சு போயிருக்கும்
அவன் மனதினுள்ளே?

எரியும் நெருப்பில் தகித்தால்
தங்கமும் மாசு களையும்.....
நீ தங்கம் என்பதால்
இன்னமும் எறி
நன்றாக எறி....
எறிந்து முடிந்து
எழுந்து வருகையில்
தங்கமே வா என்று கொண்டாட
ஆயிரம் கைகள் உண்டு இங்கே.....

e_roy123
17-05-2003, 04:57 PM
ஏதோ ஒரு வலுவான கரு.. ஆனா அந்த கருதான் என்ன என்று எனக்கு பிடி படவில்லை. அந்த அளவுக்கு எனக்கு புலமை இல்லை.....

அன்புடன்,
e_roy123