PDA

View Full Version : பாரத தேசத்து பாவப் பயிர்கள்...



கலைவேந்தன்
05-06-2007, 07:42 AM
பாரத தேசத்து பாவப் பயிர்கள்...

பாதையோரத்துப் பாவங்களின்
விழியோரத்தில் நீர்ப்பூக்கள்..

தேசீயக் கொடிக்கம்பம் போல்
மெலிந்த தேகங்கள்
வாழ்விலும் தேக்கங்கள்...

வாழ்க்கையில் சாவைப் பார்த்துவிட்டு
சாவிலே இன்பம் காணத் துடிப்பவர்கள்...

இவர்களுக்கு வசந்தம் வருவதேயில்லை
சிலர் அதை ஆயுள் குத்தகை எடுத்ததால்..

மாதம் ஒருமுறை
வானத்தில் தோசை தரிசனம்..
பிற நாட்களில் மௌன அமாவாசை...

தூக்கத்தில் கூட
துக்கக கனவுகள்..

இவர்களுக்கு விழிப்புணர்வு வராமல்
பார்த்துக் கொள்ளும் இன்றைய சினிமாக்கள்...
கதைகளில் வாலிபத்தைக் காட்டி
நிஜங்களை கிழமாக்குபவர்கள்...
உழைத்துச் சலித்த இந்த ஊமையர்களை
குருடராக்கவும் செய்யும் ரசவாத வித்தைகள்...

இனியாவது
ஒரு விதி செய்வோம்
அதை விளக்கமாய் வீதியில் வைப்போம்!

சிவா.ஜி
05-06-2007, 07:55 AM
பாதையோரத்துப் பாவங்களின்
விழியோரத்தில் நீர்ப்பூக்கள்..
பிளட்பாரவாசிகளை அழகான சொற்களால் வடித்திருக்கிறீர்கள்
தேசீயக் கொடிக்கம்பம் போல்
மெலிந்த தேகங்கள்
வாழ்விலும் தேக்கங்கள்...
அருமையான உவமானம்.அசத்திடீங்க!
மாதம் ஒருமுறை
வானத்தில் தோசை தரிசனம்..
பிற நாட்களில் மௌன அமாவாசை...
மிக அழகான வார்த்தையாடல்.நல்லதொரு சமூகக்கவிதையை கொடுத்த கலைவேந்தனுக்கு பாராட்டுக்கள்.

அமரன்
05-06-2007, 08:48 AM
வணக்கம் கலைவேந்தன். உங்கள் கவிதைகளை ஆதவன் கூறியதைப் போல தனித் தலைப்பிட்டு புதிய திரிகளில் பதியுங்கள். காதல் கவிதையாயின் காதல் கவிதை என்ற பகுதியிலும் தொடர்கவிதையாயின் தொடர் கவிதைகள் பகுதியிலும் பதிந்து விடுங்கள். கவிஞர்கள் அறிமுகம் தொகுப்புப் பகுதியில் உங்களைப் பற்றிய ஓரளவு விளக்கமான அறிமுகத்தைக் கொடுத்து விட்டு உங்கள் கவிதைகளின் சுட்டியைக் கொடுத்து விடுங்கள். மன்றத்தில் உங்களுக்குப் பிடித்த கவிதைகளின் சுட்டிகளையும் கொடுத்து விடுங்கள். மேலதிகமான உதவிகள் விளக்கங்கள் தேவைப்படின் மேற்பார்வையாளர்களைத் தொடர்புகொள்ளுங்கள்.
நன்றி.

கலைவேந்தன்
06-06-2007, 01:29 AM
எனக்கு சரியாக விவரம் தெரியாத காரணத்தால் நிகழ்ந்த தவறு இது திருத்திக்கொள்கிறேன்!

ஆதவா
06-06-2007, 02:36 AM
பிளாட்பாரத்து மனிதர்கள்...
-----------------------

பாதையோரம் மட்டுமல்ல சில நேரங்களில் அடிபட்டு தெரு மத்தியில் வந்தவர்கள் நிறைய.. இப்போது பெருகிவிட்டார்கள்.. பஸ்டேண்ட் பக்கம் நிறைய காணலாம். சிலருக்கு பிச்சை தொழில், சிலருக்க்கு இச்சை தொழில், சிலருக்கு கச்சை இருக்காது. சிலருக்கு கொச்சையான தொழிலின்றி இருக்காது.. பாரத தேசத்துக் களைகளின் ஊடாக வளர்ந்த புற்கள்.

நீர்ப்பூக்கள் - நல்ல வார்த்தை...

கொடிக்கம்பம் போல மெலிந்த தேகம் - நல்ல கற்பனை. அருமை. தேசீய என்ற வார்த்தையை விட்டிருக்கலாம்.. எல்லா கொடிக்கம்பங்களும் மெலிந்தவைகள்தான்...

அமாவாசை/பெளர்ணமி குறிப்பு பிரமாதம். குறிப்பாக சினிமாக்கள் பற்றீய சாடல் சூப்பர்.. விழிப்பே இல்லாமல் இருட்டடிக்கச் செய்யும் சினிமாக்கள்>..

இனி விதி செய்யலாம்.. ஆனால் வீதியில் வைக்க விடமாட்டார்கள் நம் ???வாதிகள்.

மொத்தத்தில் பிளாட்பாரத்துக் காரர்களை உங்கள் கோணத்தில் அழகாக எளிமையாக சொல்லியிருக்கிறீர்கள்.. கடைசி வரிகள் கவிஞரின் உள்ளம்... வாழ்த்துக்கள்

கலைவேந்தன்
08-06-2007, 04:57 PM
நன்றிகள் ஆதவா நண்பரே!
தங்களின் ஊக்கம் என்னை செப்பனிடும்!

அமரன்
08-06-2007, 07:10 PM
எனக்கு சரியாக விவரம் தெரியாத காரணத்தால் நிகழ்ந்த தவறு இது திருத்திக்கொள்கிறேன்!
இதிலேன்ன இருக்கின்றது வேந்தன். கற்பதுக்குமாகவே மன்றம். இப்போது கவிஞனாக உங்கள் அறிமுகத்தை குடுத்துவிடுங்கள். அங்கே உங்கள் கவிதைகளின் சுட்டிகளை இணைத்து விடுங்கள். நன்றி.

ஓவியன்
16-08-2009, 01:19 PM
கனக்கும் உண்மை,
கலங்க வைக்கும் உண்மை....

இனியொரு விதிசெய்வோம்,
அதில்
இல்லாமையை இல்லாமலொழிப்போம்..!!

நல்ல கவிதைக்கு மனதார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் கலை..!!

கா.ரமேஷ்
17-08-2009, 06:59 AM
அருமையான வரிகள் கலைவேந்தன்...

இனியாவது
ஒரு விதி செய்வோம்
அதை விளக்கமாய் வீதியில் வைப்போம்! ///

அதுவே எமது வேண்டுதலும்....

இன்பக்கவி
17-08-2009, 07:07 AM
"பாதையோரத்துப் பாவங்களின்
விழியோரத்தில் நீர்ப்பூக்கள்.."
பிளட்பாரவாசிகளை அழகான சொற்களால் வடித்திருக்கிறீர்கள்


பிளட்பாரவாசிகளை பற்றி சொல்றீங்களா என்று ஒரு சந்தேகத்தோடு தான் படித்தேன்..
சிவாஜி அவர்கள் அதை விளக்கமாக போட்ட பின் தெளிவானேன்....
எனக்கு கொஞ்சம் உடனே புரியும் திறன் கொஞ்சம் குறைவு....
ஒரு 3 தடவை யாவது வாசித்தால் தான் புரியும்...
எல்லோரும் ரொம்ப அருமையாக கவிதை எழுதுகிறார்கள்

பல நேரத்தில் அர்த்தம் புரியாமல் பதில் போட்டு பிழையாகி விடும் என்ற பயத்தில் தான்
நான் பெரும்பாலும் பதில் போடுவது இல்லை......

உங்கள் கவிதை ரொ ம்ப அருமையாக உள்ளது.....
வாழ்த்துக்கள்....

செல்வா
19-08-2009, 08:25 AM
சுதந்திர காலத்தில்
மிதந்து வந்த திரியின்..

கவிச்சுவை கண்டு சிலிர்த்தேன்..

அருமையான சொல்லாடல்
வாழ்த்துக்கள் அண்ணா...