PDA

View Full Version : திருமணக் கவிதைகள்



umakarthick
05-06-2007, 09:45 AM
1.

வீடியோ வெளிச்சம் கண்கள் கூசியது
குனிந்து நிமிர்ந்து உடல் வலித்தது
செயற்கை சிரிப்பில் வரவேற்றது
கைகள் நடுங்க தாலி கட்டியது
வியர்வை மழையில் வீற்றிருந்தது
எல்லாம் நினைவுக்கு வருகிறது
நண்பனை வாழ்த்த மணமேடையில் ஏறிய போது..

-நான்

2.
கதவின் தாழ்ப்பாள் சரிசெய்தது
இரட்டை அர்த்த ஜோக்குகள்
பால் பழம் இனிப்புகள்
ரூம் ஸ்ப்ரே இத்யாதி இத்யாதி
அலமாரி, துணிக் கூடை
பாத்திரங்களில் மறைத்து வைக்கப்
பட்ட செல்போன்கள்
இவையெல்லாம் நியாபத்திற்கு
வந்து தொலைக்கிறது
தோழியை முதலிரவு அறைக்கு
அனுப்பும் போது..

-அவள்

பென்ஸ்
05-06-2007, 01:47 PM
கார்த்திக்...

நினைவுகள் பலமானவை...
ஒப்பீடல் நடக்கும் போது அது கொடுக்கும் இ(ம்)சை இதயத்தில் தட்டி ஒலிக்கும் போது..

கவணித்திருக்கிறிர்களா, மனதின் நிலையை ஒத்தே ஒப்பீடல்,
இடத்தை ஒத்து அடுத்த படியாக...
உ.தா: சந்தோசமாக இருக்கும் போது கானும் காட்சி நான் கடந்து வந்த நிலையை நியாபகபடுத்தும்.
பிரிவில், நல்ல காலங்களை நியாபக படுத்தும்...
உங்கள் கவிதையில் எப்படி வேண்டுமானாலும் எடுத்து கொள்ளும் விதத்தில்....

இந்த கவிதைகள் ஒரு குறிப்பிட்ட நிலையை சொல்லுவதால் கவிதையை குறை கூற முடியவில்லை, ஆனால் ஆண்கள் பெண்களை விட உடல் சம்பந்த பட்ட விடயங்களை நியாபகம் அதிகம் வைத்திருப்பர், பெண்களோ உணர்வுகள் சம்பந்த பட்டதை நியாபகம் வைத்திருப்பர்... அந்த விஷயத்தில் கரு உதைக்கிறது...

மாற்று கருத்து இருப்பின் விளக்கலாமா...????

umakarthick
07-06-2007, 06:34 AM
நீங்க சொல்றது சரி தான்..ஆனால் இந்த அளவுக்கு நான் இதை யோசிக்கலை..தோனியதை எழுதினேன்..கூர்ந்து பார்த்தால் சில கவிதைகளில் லாஜி இடிக்கும்

உதாரணம்:

ஒவ்வொரு பூக்களுமே பாடல்

அறிஞர்
08-06-2007, 04:46 PM
1.
எல்லாம் நினைவுக்கு வருகிறது
நண்பனை வாழ்த்த மணமேடையில் ஏறிய போது..

-நான்

2.
தோழியை முதலிரவு அறைக்கு
அனுப்பும் போது..

-அவள்
சில சம்பவங்கள்
கடந்த காலத்தையே கொண்டுவந்துவிடுகிறது...

அப்படியே தங்களின் யோசனைகளும், வரிகளும் அழகாக உள்ளது...

umakarthick
21-09-2007, 12:21 PM
நன்றி