PDA

View Full Version : கலாப்ரியா கவிதைகள்



umakarthick
05-06-2007, 09:17 AM
1) அடுத்த தொழுவத்தில்
மடி கனத்து அரற்றிக்கொண்டிருந்த
பசுவின் குரல் அடங்கிற்று
பாத்திரத்தில் சர்ர் ரென பால் பீய்ச்சும் முதல் ஒலி

2)காட்டில் எங்கோ மணியோசை
யானையோ எனப் பயப்படும்
நாட்டு மனம்

3)அதிகாலை வாசல் கூட்டித் தெளிக்கும்
அரிசி களையும் வளையோசை
சோம்பேறிக் கணவன்களை
பின்னெழுப்பும் நாளிதழ் 'தொப்'பென விழுந்து.

4) குஞ்சுகளுக்காய் கோழி கிளைத்துப்
போட்ட மண்ணில்
யாரோ தொலைத்த சாவி.

5)ஆகச் சிறந்த உயரங்களை
மறந்து போயிற்று
கூத்தாடியின் குரங்கு

6) ஆளுயரப் புற்றுக்குள்
பாம்பா
முனிவனா.

7)பளிங்கு

பசி முற்றிலும்
தீர்ந்திராத
பகல் நிகழ்வுகளின்
விதிகளற்ற பதிவுகளாய்
இரவு முழுக்க கனவுகள்.

சற்றேயொரு ஒழுங்கைச்
சமைக்க மூளையின்
வேதியல் முயல
பகல் தொடங்குகிறது
மாற்றாரின் ஒழுங்குக்கேற்ப.

கடிதோச்சி
மெல்ல எறியக்
காத்திருக்கிறது,
சிகை திருத்த
சிரைக்கலாமா வேண்டாமா
எனப்பார்க்க
நெஞ்சம் கடுத்தருகில்
நீ வருவாயென
உன் பிம்பம்
அந்தக் கால பெல்ஜியம்
கண்ணாடிக்குள்.

தன் மீதூரும்
சூல் சுமக்கும்
பல்லியின் அடிவயிற்றைப்
பிரதி பலித்துக்கொண்டிருந்தது
அதுவரையது.


கலாப்ரியா பற்றி

"பல வருஷங்களாக கலாப்ரியா கவிதைகள் எழுதி வருகிறார். அவைகளை அவ்வப்போது ஒல்லியான தொகுப்புகளாக அத்தி பூத்தாற்போல் வெளியிடுகிறார்கள். இந்த தொகுப்பு எட்டு வருஷம் கழித்து வருகிறது என அறிகிறேன். கலாப்ரியாவின் கவிதைகளுக்கு எட்டு வருஷம் நிச்சயம் காத்திருக்கலாம்.என் போன்ற எழுத்தாளர்களுக்கு அவை தரும் முழுமையான அனுபவப் பங்கீடு , evocation விலையற்றது."சுஜாதாவின் மேற்படி கூற்று உலகெல்லாம் சூரியன் கவிதைத் தொகுப்பின் முன்னுரையிலிருந்து.

எழுபதுகளில் எழுதத் தொடங்கி ,குறுகிய காலத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற கலாப்ரியா கவிதைக்குள் கதையை சுருக்கி வைக்கும் முயற்சியை தொடங்கினார். பேச்சுவழக்கை கவிதைக்குள் கொண்டுவந்த கலாப்ரியாவினது கவிதைகளின் பாடுபொருளாக அடித்தட்டு மக்களும் அவர்களது வாழ்வு சார்ந்த சிக்கல்களும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

தன் சொந்த வாழ்க்கை பற்றிய விஷயங்களை ஒளிவு மறைவின்றி பேசும் கலாப்ரியாவின் இயற்பெயர் சோமசுந்தரம். சின்ன வயதில் எம்.ஜி.ஆர் ரசிகனாய் தி.மு.க தொண்டனாக தீவிரமாக இயங்கும் போது கலாப்ரியாவுக்கு அடித்தட்டு மக்களுடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அப்போது ஏற்பட்ட அனுபவங்கள் பின்னர் கவிதையாய் வெளிப்பட்டிருக்கிறது, பல வேளைகளில் தீவிரமான விமர்சனத்திற்கும் ஆளாகியிருக்கிறது.

அறிஞர் அண்ணாவின் இரங்கல் கூட்டத்திற்காக முதன்முதலில் கவிதை (இரங்கற்ப) எழுதிய சோமசுந்தரம் ,வண்ணநிலவனின் கையெழுத்துப் பத்திரிக்கையான 'பொருநை'யில் கவிதை எழுதும் போது தனக்குத் தானே 'கலாப்ரியா' என்று பெயர் சூட்டிக்கொண்டார். இந்த பெயருக்குள் சோமசுந்தரத்தின் ஒரு தலைக் காதலியின் பெயரோடு கலாப்பூர்வமானவன் என்ற அர்த்தமும் அடைக்கலம்.

பின்னர் 'கசடதபற'வில் கவிதைகள் வெளிவரும்போது கூர்ந்து கவனிக்கப்பட்டார்.

'கசடதபற'விற்கு பின் வானம்பாடி, கணையாழி, தீபத்தில் எழுதும் போது மிகுந்த வரவேற்பைப் பெற்ற கலாப்ரியாவை நா.பார்த்தசாரதி ,தி.ஜானகிராமன், நகுலன் போன்றோர் பாராட்டியிருக்கிறார்கள்.

பாலுணர்வு வெளிபாடுகளும் ,சில வேளைகளில் வன்முறையும் கலாப்ரியாவின் கவிதைகளில் கொஞ்சம் தூக்கலாக இருக்கிறது என்று சிலரும் ,இது அவரது கவிதை மாந்தர்கள் வாழ்வை ஒட்டியது என்று சிலரும் அபிப்பிராயப்படுவதுண்டு.

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் வங்கிப் பணிகளுக்கு இடையில் தன்னை சுற்றி நிகழும் விஷயங்களை கவிதைகளில் பதிவு செய்து வரும் 'கலாப்ரியா' தமிழின் நவீன கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர்.

பென்ஸ்
05-06-2007, 02:34 PM
நன்றி கார்த்திக்...
கவிதைகள் கொடுப்பது மட்டுமல்லாமல் கவிஜரின் சுவடுகளுக்கு பதிலாய் சரித்திரத்தையே விட்டு சென்றிருக்கிறீர்கள்...
தொடரட்டும் உங்கள் தமிழ் பணி...

சக்தி
05-06-2007, 03:18 PM
நன்றி கார்த்திக், கவிஞர் கலப்ரியாவின் கவிதைகளையும் அவரைப்பற்றிய குற்ப்புக்களும் கொடுத்ததிற்கு

umakarthick
07-06-2007, 06:27 AM
நன்றி சக்தி யாரும் படிக்க காணுமே??

umakarthick
07-06-2007, 09:38 AM
நன்றி பென்ஸ்

இணைய நண்பன்
07-06-2007, 10:00 AM
அருமையான பதிப்பு .நன்றி

umakarthick
08-06-2007, 08:37 AM
நன்றி தொடர்ந்து படியுங்கள்