PDA

View Full Version : அன்புடனில் எனக்கு பரிசு



umakarthick
05-06-2007, 09:16 AM
நடுவர் மாலனின் தேர்வில் பரிசுக்குரிய இயல் கவிதைகள் இதோ... இதோ...
====================================================
-பகுதி 4-
பேருந்தில்
வேர்வை, அலுப்பு
சில்லறை பாக்கி
கல்லூரிப் பெண்
அழும் குழந்தை
இவையாவும் கடந்து
ரசிக்காமல் இருக்க
முடியவில்லை பெரும்சப்தத்துடன்
இணையாகக் கடந்து போகும் ரயிலை

எத்தனை வயதானாலும், (பயணிக்கும் அவசரத்தில் இல்லாத நாட்களில்)

நம்மைக் குழந்தைகளாக்கிவிடும் மாயம் திறந்த வெளியில் விரையும் இரயில்

வண்டிகளுக்கு உண்டு. அந்த அதிசயத்தை மட்டும் சொல்ல வரவில்லை

கவிதை. அலுப்பும் எரிச்சலும் ஊட்டும் வாழ்க்கைக்கு நடுவில் நம்மை

ரசனைகளுக்கு இட்டுச் செல்லும் தருணங்களை ஒரு புகைப்படம் போலக்

கவிஞர் பதிவு செய்கிறார். நல்ல snap shot. ஆனால் அந்தத் தொழில் நுட்பம்

மட்டுமல்ல, இயந்திரமயமாகிவிட்டது வாழ்க்கை என அலுத்துக் கொள்ளும்

கவிதைகளுக்கு இடையே மனிதர்கள் அலுத்துப் போகிறார்கள், இயந்திரம்

உயிர்ப்பிக்கிறது என வாழ்வின் மறுதலையை (converse) பேசமுற்படும் அந்த

மாறுபட்ட பார்வை யோசிக்க வைத்தது. அதை அவர் உரத்துப் பேசாமல்,

மேசையைத் தட்டி வாதிடாமல், டீக்கடை பெஞ்சில் அமர்ந்திருக்கும்

நண்பனிடம் பேசுவது போலப் பேசும் தொனி எனக்குப் பிடித்திருந்தது.

பாத்திரம் பெரிதா, அல்லது அந்தப் பாத்திரத்தைப் படைத்தவன் பெரியவனா?

கற்பனை பெரிதா, அல்லது அந்தக் கற்பனைக்குக் காரணமானவன்

பெரியவனா? ராமன் பெரியவனா? ராமனைப் படைத்த கம்பன் பெரியவனா?

யோசிக்க யோசிக்க இலக்கியத்தின் பல பரிமாணங்களையும், விடைகாண

முடியாத நித்தியத்துவம் பெற்ற கேள்விகளையும் எழுப்பியது ஒர் கவிதை.

கல்வியை நினைத்த இடத்திற்கு எடுத்துச் செல்லும் மாயக் கம்பளத்தோடு

ஒப்பிட்டு (அந்த ஒப்பீட்டையும் நுட்பமாகச் செய்து) எழுதப்பட்ட ஒரு

கவிதையும் வாசிக்கக் கிடைத்தது. அந்தக் கவிதையை ஒரு கதை போல

நெய்திருந்தார் கவிஞர். கல்வியின் அவசியத்தைப் பற்றி தமிழ்க் கவிதைகள்

காலம் காலமாகப் பேசுகின்றன. உற்றுழி உதவியும் உறு பொருள் கொடுத்தும்

பிற்றை நிலை முனியாமல் கற்றல் நன்றே என்ற சங்காலக் கவிதையில்

துவங்கி கல்வி பற்றி ஒரு சில நூறு கவிதைகள் தமிழில்

எழுதப்பட்டிருக்கலாம். வெள்ளத்தால் போகாது, வெந்தணலில் வேகாது

என்பதில் துவங்கி கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது வரை

கல்வியின் பயனையும் பட்டியல் இட்டிருக்கிறார்கள். மலை வாழை அல்லவோ

கல்வி நீ வாயார உண்பாய் புதல்வி என பாரதிதாசனின் கல்வியை எளிய

வாழைப்பழமாக செய்த கற்பனையிலிருந்து இன்று நாம் வெகு தூரம்

வந்துவிட்டோம் என்பதை நினைவுபடுத்துகிறது மந்திரக் கம்பள உவமை.

ஆனால் கவிதையின் சிறப்பு அந்த அம்மா பாத்திரம். ஞானக்கூத்தனின் அம்மா

சொன்ன பொய்களில் வரும் அம்மாவின் ஜாடை கொண்ட கெட்டிக்கார

ஆனால் அன்பான அம்மா. கற்பனையும் பாத்திரமும் சமகாலத்தைப் பதிவு

செய்கின்றன. படைப்பிலக்கியத்தின் பலன்களில் அதுவும் ஒன்று.

சமகாலப் பிரசினைகளைக் கூர்மையான பார்வையோடும், ஆழமான

கவலையோடும் பார்க்கும் சில கவிதைகள், அதிலும் சுற்றுச் சூழல் கெட்டு

வருவதை, கடல்களில் எண்ணைப் படலங்களைப் பரப்பிச் செல்லும் கப்பல்கள்,

ஓசோன் படலத்தில் விழும் ஓட்டை இவை குறித்து அக்கறையோடு

எழுதப்பட்ட கவிதைகளை அதன் பின் உள்ள உலகு தழுவிய பார்வை,

எதிர்காலம் குறித்த, கேள்விகள் கொண்ட நோக்கு இவற்றிற்காகப்

பாராட்டுகிறேன். எய்ட்ஸுடன் ஒரு பேட்டி, யுத்தம் பற்றிய கவிதைகளையும்

சமகாலப் பதிவாக பார்க்கிறேன்.

(மாலனின் நடுவர் உரை தொடரும்)

Link - http://groups.google.com/group/anbudan/browse_thread/thread/e650dc047b23dadd



I got aruthal parisu ..worth 250 rupees of tamil books



அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் - இயல் கவிதைப் பிரிவு - நடுவர் மாலன்
===========================================================

முதல் ஆறுதல் பரிசுக்குரிய கவிதை

பேருந்தில்
வேர்வை, அலுப்பு
சில்லறை பாக்கி
கல்லூரிப் பெண்
அழும் குழந்தை
இவையாவும் கடந்து
ரசிக்காமல் இருக்க
முடியவில்லை பெரும் சப்தத்துடன்
இணையாகக் கடந்து போகும் ரயிலை.

- கார்த்திக் பிரபு
சென்னை

(ஆறுதல் பரிசு 250 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள்)

*

அன்பின் கார்த்திக் பிரபு,

உங்களின் இந்த அற்புதப் பார்வையை என்னால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை!
உங்களுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

அன்புடனின் கவிதைப் போட்டியில் கலந்துகொண்டதற்கு
அன்புடனின் நன்றி.

மேலும் பல நல்ல கவிதைகள் படைத்து
தமிழ்க் கவிதையுலகைச் சிறக்கச்செய்ய வாழ்த்துக்கள்

அன்புடன் புகாரி

umakarthick
05-06-2007, 09:17 AM
நான் அனுப்பிய கவிதைகள்
-------------------

பேருந்தில்
வேர்வை,அலுப்பு
சில்லறை பாக்கி
கல்லூரி பெண்
அழும் குழந்தை
இவையாவும் கடந்து
ரசிக்காமல் இருக்க
முடிய வில்லை பெரும்சப்தத்துடன்
இணையாக கடந்து போகும் ரயிலை.



2)
சிறுவயதில் கோவிலில்
அம்மனின் விசுவரூபத்தை
பார்த்த படியே
அம்மாவென்றெண்ணி
வேறொருவரின் முந்தானை பிடித்து
நின்றிருக்கிறேன்

அதன் பின் இப்போதும்
அதே போல் நடந்தது
உன்னை பார்த்த போது


3)
இமெயில்கள் ,சாட்டிங்
என்று இன்று எத்தனையோ வந்தாலும்
மழைத் துளியில் நனைந்த
எழுத்துக்களுடன் என் தபால்
பெட்டியில் எனக்காக காத்திருக்கும்
உன் இன்லேன்ட் லெட்டர்களின்
வாசனையை மறக்க முடிய வில்லை இப்போதும்.

4)
சுதந்திர தினம்
தியாகியின் பேட்டிக்கு பின்னர்
பேட்டி கண்டவர் கேட்டார்
'சரி உங்களுக்கு பிடித்த சினிமாவிலிருந்து ஒரு பாடல் கேளுங்கள் !!"

(கவிதை 5 பண்பட்டவர் பகுதிக்கு மாற்றபட்டுள்ளது : மேற்பாவையாளர்)

6)
சாலையில் ஆங்காங்கே
சிதறி கிடக்கும் செருப்புகளை
வைத்து சொல்லி விடலாம்
விபத்தின் கொடூரத்தை

7) இரவு நேர பேருந்து பயணம்:
நேரத்தை மிச்ச படுத்த
இரவை தேர்ந்தெடுக்கிறோம்

திறக்க முடியா ஜன்னல்
காலடியில் கடலை தோல்

திரைப் படம் போடுகிறார்கள்
அதே கதாநாயகன் ,அதே கதாநாயகி
ஆர்பரிக்கும் குழந்தைகள்
அடங்கி விடுகிறார்கள் சீக்கிரமே

'பஸ் பத்தி நிமிசம் நிக்கும்'
குரல் பழகி விட்டது

எதிர்படும் வாகங்களின் வேகம்
எதை கைப்பற்ற விரைகிறார்களோ
என எண்ணத் தோன்றும்

ஒவ்வொரு அபாயகரமான
வளைவுகளில் திரும்பும் போது
இறுகப் பற்றிக் கொள்கிறேன்
இருக்கைகளை

அதிகாலை வானம் சிற்சில பறவைகள்
உலகம் ரம்மியமானது தான்

பேருந்து இலைக்கை அடையும்
போது உறக்கம் இமைமுட்டும்


ந(ர)கர வாழ்க்கையின் அடுத்த நாள்
இரவில் கனவு வரும்
பேருந்தில் பயணிப்பது போல!

பென்ஸ்
05-06-2007, 01:52 PM
நன்றி கார்த்திக்...
வெற்றி பெற்ற கவிதைகளை ப்ரியன் அல்லது சேதுகரசி தனிமடலில் அனுப்பியதாக நினைவு.
உங்கள் கவிதையை அப்போதே வாசித்துவிட்டேன்...
வியந்தேன்...
தொடரட்டும் உங்கள் கவி பணி...

அறிஞர்
05-06-2007, 01:54 PM
வாழ்த்துக்கள் கார்த்திக்.. ஒவ்வொன்றையும் படித்து... தனித்தனியே கருத்துக்கள் கொடுக்கிறேன்.
-------
இன்னும் பல கவிதைகளை மன்றத்தில் தரலாமே..

ஓவியா
05-06-2007, 02:12 PM
பாராட்டுக்களுடன் வாழ்த்துக்களும்.


மூன்றாவது கவிதையை மிகவும் ரசித்தேன். நன்றி.

umakarthick
07-06-2007, 06:27 AM
நன்றி கண்டிப்பாக கருத்துக் கூறுங்கள் ...நன்றி ஓவியா

ஓவியா
07-06-2007, 06:14 PM
நன்றி கண்டிப்பாக கருத்துக் கூறுங்கள் ...நன்றி ஓவியா

தாங்களும் மற்றவர்களின் பதிவுகளை படித்து கருத்துக்கூறுங்களேன்.


நன்றி.

umakarthick
08-06-2007, 08:40 AM
எல்லாரும் என்னை குறி வைத்து தாக்கி இருக்கீர்கள் , நான் இந்த குழுவில் சேரும் முன்னே நிறைய படித்திருக்கிறேன்..ஆனால் பின்னூட்டமிட முடிய வில்லை..கஷ்ட பட்டு அக்கவுன்ட் கிரியே பண்ணி உள்ளே நுழைந்த உடனே என் எழுத்துக்களை என் சேகரிப்பை முதலில் இட்டு விடலாம் என இட்டுக் கொண்டிருக்கிறேன்.
கிட்ட தட்ட இட்டு விட்டேன் ..இனிமே பாருங்க

பென்ஸ்
08-06-2007, 12:30 PM
எல்லாரும் என்னை குறி வைத்து தாக்கி இருக்கீர்கள் , நான் இந்த குழுவில் சேரும் முன்னே நிறைய படித்திருக்கிறேன்..ஆனால் பின்னூட்டமிட முடிய வில்லை..கஷ்ட பட்டு அக்கவுன்ட் கிரியே பண்ணி உள்ளே நுழைந்த உடனே என் எழுத்துக்களை என் சேகரிப்பை முதலில் இட்டு விடலாம் என இட்டுக் கொண்டிருக்கிறேன்.
கிட்ட தட்ட இட்டு விட்டேன் ..இனிமே பாருங்க
கார்த்திக்...
குறிவைத்து உள்ளங்களை கொள்ளை அடிப்பதுதானே எங்கள் எண்ணம், இப்போது அது நமது எண்ணமாகிவிட்டதே.... கலக்குங்க...

umakarthick
21-09-2007, 12:16 PM
நன்றி எல்லார் கருத்துக்களுக்கும்