PDA

View Full Version : சமீபத்தில் படித்த ஒரு சுவாரசியமான அனுபவம



umakarthick
05-06-2007, 09:10 AM
நடன இயக்குனர் ராஜி சுந்தரம் ஒரு முறை அமிதாப் நடித்த் ஒரு இந்தி படித்தில் பணியாற்றினார் அப்போது அமிதாம் ஆட வேண்டிய ஒரு சீன் , அமிதாப்புக்கு இவர் சில நடன அசைவுகளாஇ சொல்லிக் கொடுக்க கடுப்பாகி அமிதாப் ராஜி சுந்தரத்தை பார்த்து 'என் வயசு என்ன ..நீ பாட்டு கஷ்டமான ஸ்டெப்ஸ் ஆக சொல்லி தருகிறாயே இதெல்லாம் என்னால் ஆட முடியாது, நான் என்னால் முடிந்த எனக்கு தெரிந்த சில ஸ்டெப்ஸை ஆடிக் கொள்கிறேன் என சொல்ல..யூனிட்டில் அத்துனை பேரும் கப் சிப் ராஜியும் மூட் அவுட்.



டேக் போக அந்த பாட்டு ஒலிக்க அமிதாப் ஆட ரம்பித்தாராம்..எல்லாருக்கும் ஆச்சர்யம் ஆம் அமிதாம் அப்படியே ராகி சுந்தரம் சொல்லிக் கொடுத்த அந்த ஸ்டெப்ஸ்களை அச்சு பிசகாமல் ஆடிக் காட்ட மொத்த யூனிட் சந்தோஷாமாக..ராஜி சுந்தரத்தை பார்த்து கண்ணடித்து சிரித்தாராம் அமிதாப்.

umakarthick
07-06-2007, 06:32 AM
இதெல்லாம் யாரும் படிக்கலையா??

ஆதவா
07-06-2007, 06:52 AM
எட்டு பேர் படித்திருக்கிறார்கள்... கவலை வேண்டாம்....

aren
07-06-2007, 07:09 AM
இதுமாதிரி பல விஷயங்கள் நடந்திருக்கின்றன. மக்களே உங்களுக்கு தெரிந்தவற்றையும் இங்கே பதிவு செய்யுங்கள்.

அமரன்
07-06-2007, 07:35 AM
தொடர்ந்து கொடுங்க கார்த்திக்.

umakarthick
07-06-2007, 09:39 AM
படித்தால் மட்டும் போதுமா :(

ஆதவா
07-06-2007, 02:56 PM
படித்தால் மட்டும் போதுமா :(

ஆமாம் ஆமாம்.. கார்த்திக். நீங்கள் சொல்வது உண்மைதான்... அதுசரி. எங்கள் கவிதை ஒன்றாவது படித்து பின்னூட்டமிட்டீர்களா?

umakarthick
08-06-2007, 08:39 AM
எல்லாரும் என்னை குறி வைத்து தாக்கி இருக்கீர்கள் , நான் இந்த குழுவில் சேரும் முன்னே நிறைய படித்திருக்கிறேன்..ஆனால் பின்னூட்டமிட முடிய வில்லை..கஷ்ட பட்டு அக்கவுன்ட் கிரியே பண்ணி உள்ளே நுழைந்த உடனே என் எழுத்துக்களை என் சேகரிப்பை முதலில் இட்டு விடலாம் என இட்டுக் கொண்டிருக்கிறேன்.
கிட்ட தட்ட இட்டு விட்டேன் ..இனிமே பாருங்க

Annamalai
12-06-2007, 06:48 AM
பதிவு செய்யுங்கள்.... செய்யுங்கள்....கார்த்திக்.

namsec
12-06-2007, 06:59 AM
இதை தாங்கள் திரையுலக செய்திகள் என்ற தலைப்பின் கீழ் பதித்திருக்கலாம்

உங்களின் தலைப்பு இப்படி இருக்க வேண்டும் சமீபத்தில் படித்த ஒரு சுவாரசியமான செய்தி

அனுபவம் என்றுள்ளது. அனுபவம் என்றால் உங்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சி

aren
12-06-2007, 07:09 AM
எல்லாரும் என்னை குறி வைத்து தாக்கி இருக்கீர்கள் , நான் இந்த குழுவில் சேரும் முன்னே நிறைய படித்திருக்கிறேன்..ஆனால் பின்னூட்டமிட முடிய வில்லை..கஷ்ட பட்டு அக்கவுன்ட் கிரியே பண்ணி உள்ளே நுழைந்த உடனே என் எழுத்துக்களை என் சேகரிப்பை முதலில் இட்டு விடலாம் என இட்டுக் கொண்டிருக்கிறேன்.
கிட்ட தட்ட இட்டு விட்டேன் ..இனிமே பாருங்க

வாங்க வாங்க. இனிமேல் நிச்சயம் ஒரு கலக்கு கலக்குவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

விகடன்
12-08-2007, 06:44 AM
நல்லதொரு விடயம் உமாகார்த்திக். அவரிற்கு திறமை இருக்கிறது. அவரின் இரசிகர்கள் பலரும் இருக்கின்றனர். ஆகையால் அவர் செய்யலாம்.

இதை நாமும் பின்பற்றப்போனால் நமது இடத்தில் இன்னொருத்தனை அடுத்த நொடியே போட்டு முடித்துடுவாங்கள்.

தளபதி
13-08-2007, 02:37 PM
அமிதாபிடம் அந்த முயற்சி இருப்பதால் தான் இன்றும் அவர் முதல் தர நடிகராக திகல்கிறார். நன்றி.

saguni
27-08-2007, 12:29 PM
அமிதாப் உலகையே கலக்கியவர். ராஜூ சுந்தரம் இன்னும் சாதிக்கவேண்டிய்து நிறைய உள்ளது. அதற்கு வழிதவறாதிருந்தால் மகிழ்ச்சி. வித்தியாசமான தகவல் அளித்த கார்த்திக்கு நன்றி!

umakarthick
21-09-2007, 12:17 PM
நன்றி எல்லார் கருத்துக்களுக்கும்