PDA

View Full Version : கமல்ஹாசன் பற்றி சுஜாதா(பழைய பேப்பர்!)



umakarthick
05-06-2007, 09:08 AM
கமலஹாசனுடன் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்ததில் அவருடைய off-screen personality சுவாரஸியமாக வெளிப்பட்டது.இருபத்து மூன்று வயது. ஒரு மலையாளப் படப்பிடிப்பிலிருந்து வந்திருந்தார்.பஞ்சு மிட்டாய் வண்ணத்தில் ஜிப்பா,ஜரிகை வேஷ்டி.

அவர் அறையில் ஆடம்பரங்கள் எதுவும் இல்லை.ஏர்கண்டிஷனிரின் செளகரியத்தைத் தவிர.ஒரே ஒரு படம் இருந்தது.உக்கிரமாக முறைக்கும் ப்ரூஸ்லி. அமெரிக்க சினிமா சரித்திரத்தைப்பற்றியும் Sound in cinema பற்றியும் புத்தகங்கள் தென்பட்டன.படிக்கிறார்.இங்கிலிஷ் பண்பட்டு இருக்கிறது.கணையாளி போன்ற புத்தகங்களையும் புதுக்கவிதைகளையும் ரசிக்கிறார்.தன் தொழிலில் உள்ள சிரிப்பான விஷயங்களை இயல்பாக எடுத்துச்சொல்கிறார்.போலன்ஸ்கி,கோடார்ட் போன்ற ஐரோப்பிய டைரக்டர்களைப் பற்றிஅவருக்கு தெரிந்திருக்கிறது.ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் Frenzy என்ற படத்தில் ஒரு ஷார்ட்டைப் பற்றி உற்சாகமாக அவருடன் பத்து நிமிடங்கள் அலச முடிகிறது."மலையாளப் படங்கள் இப்போது பரவாயில்லை போலிருக்கிறதே" என்றேன்.அவர் "அதெல்லாம் அந்தக்காலம்,இப்போது மலையாளப் படங்கள் பின்னோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றன"தன் சட்டையைக் காட்டி "மலையாளப் படம்" என்றார்.

"எனக்கு அழவரவில்லை அழு அழு என்கிறார்கள்.ஒரு சமீபத்திய தமிழ் படத்துக்கு மூன்று பாட்டில் கிளிசரின் ஆயிற்று."

"பாடலைப் படமெடுக்கும் போது கதாநாயகிக்கு கூந்தல் விரிந்திருப்பது ஒரு செள்கரியம்.உதட்டசைவு மறந்துவிட்டால்! சட்டென்று கூந்தலைப் பிரித்து அதில் மறைந்து கொள்ளலாம்."

"டேய் முத்து,மாடசாமி,பிடிடா"என்று கிராமத்தில் குடிசையில் வின்சென்டர் ரைபிள்களை வினியோகிக்கும் கர்ணன் படங்களையும் படுத்துக்கொண்டே படமெடுக்கும் காமிராக்கோணங்களையும்(imagine ஜோதிலட்சுமி)அம்மாக்களையும்,தியாகங்களையும் மிகவும் ரசித்து அவருடன் விமர்சித்துக் கொண்டிருந்ததில் எனக்கு நேரம் போனது தெரியவில்லை.படப்பிடிப்பு காத்திருந்தது.ஆப்பிள் ஜூஸ் கொடுத்து அனுப்பிவிட்டார்.

உரக்கப் பேசும் உரக்க நடிக்கும் தமிழ் சினிமாவில் சற்று மென்மையாக,கற்பனையுடன்,நம்பும்படி நடக்கும் கமலஹாசனிடம் தமிழில் நவசினிமாவில் உதயத்தை எதிர்பார்க்கிறேன்.

அக்டோபர் 1976

பென்ஸ்
05-06-2007, 02:47 PM
சில நாட்களுக்கு முன் ப்ரியன் கமலஹாசன் எழுதிய புதுகவிதைகளை தனிமடலில் அனுப்பி இருந்தார்.... எத்தனை புதுமையான சிந்தனை, தெளிவான சிந்தனை...
இவரும் இறந்த பிறகுதான் விருதுகளையும் , புகழையும் பாடுவார்கள்....

ராஜா
05-06-2007, 03:00 PM
அப்போ கமலஹாசனுக்கு 54 வயசா..?

வேட்டையாடு விளையாடுல ரொம்பத் தளர்ந்து போய்தான் தெரியறார்..

சக்தி
05-06-2007, 03:01 PM
தமிழ் சினிமாவை உலகதரத்திற்கு உயர்த்த வேண்டும் என்ற வெறி கொண்டவர் கமலஹாசன். சிறந்த நடிப்பும் அவர் பலதுறைகளில் கொண்ட ஞானமும் வியக்கத்தக்கது.

ஓவியா
05-06-2007, 03:03 PM
சில நாட்களுக்கு முன் ப்ரியன் கமலஹாசன் எழுதிய புதுகவிதைகளை தனிமடலில் அனுப்பி இருந்தார்.... எத்தனை புதுமையான சிந்தனை, தெளிவான சிந்தனை...இவரும் இறந்த பிறகுதான் விருதுகளையும் , புகழையும் பாடுவார்கள்....


பென்சு, அந்த கவிதைகளை இலக்கிய பகுதியில் இடமுடியுமா?? நாமும் அவரை கவ்ரவிக்கலாமே!!.

ஒருமுறை அன்பே சிவம் படத்துடன் ஜெமினியை ஒப்பிட்டு ஜெமினிக்கு பரிசு கிடைத்த கூத்தைப்பார்த்து எனக்கு ஆத்திரம்தான் வந்தது.

கமலின் சிந்தனை அபாரம்.

நன்றி மக்களே.

பென்ஸ்
05-06-2007, 03:12 PM
பென்சு, அந்த கவிதைகளை இலக்கிய பகுதியில் இடமுடியுமா?? நாமும் அவரை கவ்ரவிக்கலாமே!!.

ஒருமுறை அன்பே சிவம் படத்துடன் ஜெமினியை ஒப்பிட்டு ஜெமினிக்கு பரிசு கிடைத்த கூத்தைப்பார்த்து எனக்கு ஆத்திரம்தான் வந்தது.

கமலின் சிந்தனை அபாரம்.

நன்றி மக்களே.
அவை இந்தியாவில் இருக்கின்றன...
ப்ரியனிடம் இட சொல்லுகிறேன்...

ஓவியா
05-06-2007, 04:32 PM
அவை இந்தியாவில் இருக்கின்றன...
ப்ரியனிடம் இட சொல்லுகிறேன்...

நன்றி நண்பா.

umakarthick
07-06-2007, 06:26 AM
எல்லாருக்கும் நன்றி ..அந்த க் கவிதைகள் என்னிடமே இருக்கின்றன ..ஆனால் அவை எல்லாம் புகைப்படக் கவிதைகள் பரவாயில்லையா..ப்ரியன் தான் எனக்கு அனுப்பினார்

அப்புறம் கமலுக்கு 54 வயது தான்..தளர்ந்தாலும் அந்த கெட்டப் கூட நல்லா தான் இருந்தது.

Gobalan
08-07-2007, 06:11 PM
கமலஹாசன் ஒரு மிக தேற்ச்சிவாய்ந்த, நவீன சிந்தனையுடன் செயல்படும் இயற்க்கை நடிகர். அவர் நடிப்பில் பல பட்ங்களில் ஆராய்ச்சி முதலிடுவதால் அவரின் படங்கள் பல வெற்றி ஆவதில்லை. அவர் தொடர்ந்து பாலிவுட்டில் நடித்திருந்தால் அவரை "ஒகோ− ஒகோ"ன்று புகழ்ந்திருப்பார்கள், தமிழ் நாட்டில் மட்டும் அல்லாமல் நம் நாட்டின் அனைத்து வர்கத்தினரும். அவர் ஒரு கலை விஞ்யானி. அவர் நமக்கு கடவுள் தந்த வரம் என்றும் கூறலாம். நன்றி.

ஓவியன்
08-07-2007, 07:02 PM
உங்கள் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன் கோபாலன்!

ஐந்து சண்டைகளும் மூன்று குத்துப்பாடல்களும் இருந்தால் வெற்றிப்படம் என்று இருக்கும் இந்தக் காலத்தில் கமலஹாசனைப் போன்ற திறமைசாலிகளுக்கு இடம் கிடைப்பது கடினம் தான்..................

காலம் மாற வேண்டும், இரசிகர்கள் மாற வேண்டும்..........
அப்போது தான் திறமைசாலிகளுக்குச் சரியான இடம் கிடைக்கும்.

aren
09-07-2007, 01:40 AM
கமலஹாசன் அவர்களைப் பற்றி அருமையாக 1976ஆம் ஆண்டிலேயே கணித்து சொல்லியிருக்கிறார் சுஜாதா அவர்கள். அவர் கணிப்பு இன்று உண்மை.

கமலஹாசன் தமிழ் திரையுலகிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்.

அமரன்
09-07-2007, 07:57 AM
அருமையான பழைய நினைவை பகிர்ந்துகொண்ட உமாகார்த்திக்குக்கு நன்றி. கமலகாசன் என்னும் இமயத்தினைப் பற்றி எப்பவோ சுஜாதா கூறியது மிகச்சரியானதே.

விகடன்
28-07-2007, 05:47 AM
என்னைப்பொறுத்தவரையில் நடிகர் திலகம் சிவாஜி சினிமாத்துறையிலொரு அவதாரமென்றால் கமலஹாசனும் ஒரு அவதாரமே.

umakarthick
21-09-2007, 12:16 PM
நன்றி எல்லார் கருத்துக்களுக்கும்

பூமகள்
23-09-2007, 08:45 AM
மிக்க நன்றிகள் கார்த்திக்.
தமிழ் திரையுலகில் சிவாஜி ஒரு லெஜண்ட் என்றால் கமலஹாசனும் அடுத்த தலைமுறையில் வந்த லெஜண்ட் தான்.
அவரை இன்னும் நன்றாக பயன்படுத்த தமிழ் சினிமா தவறிவிட்டதோ???
அவர் இன்னும் பல சாதனைகள் படைக்க வேண்டும். அவரின் சிந்தனைகள் அனைத்தும் நமக்கு விருந்தாக அமைய வேண்டும்.
54 வயதாகிவிட்டதா கமலுக்கு?? நம்பமுடியவில்லை. அவருக்கு நலமான வாழ்வையும் நீண்ட ஆயுளையும் இறைவன் அளிக்க வேண்டும். அப்போது தான் நமக்கு இன்னும் "அன்பே சிவம்" போன்ற சிறந்த படைப்புக்கள் கிடைக்கும்.

இங்கு அவரின் கவிதைகள் பதித்தாகிவிட்டதா? யாரேனும் எனக்கு அதன் சுட்டி கொடுங்களேன்.