PDA

View Full Version : ஒரு தமிழனின் கைரேகைப் பலன்கள்.கலைவேந்தன்
04-06-2007, 05:59 PM
ஒரு தமிழனின் கைரேகைப் பலன்கள்.

கடுமையான உழைப்பினால்
உன் ஆயுள் ரேகை
அழிந்தது.......

அரசியல் வாதிகளின்
ஆரவாரப் பேச்சுக்கு
கை தட்டியே உன்
அதிர்ஷ்ட ரேகை கலைந்தது......

எண்ணற்ற சினிமாக்களால்
உன் புத்தி ரேகை
மழுங்கியது........

லாட்டரிச் சீட்டுகளைச்
சுரண்டியதாலேயே
உன் உழைப்பு ரேகை
உருக்குலைந்தது........

தங்கைகளின் திருமண ஏற்பாட்டில்
அலைந்து திரிந்ததில்
உன் திருமண ரேகையும்
தொலைந்து போனது.....

முதுமை ரேகை மட்டுமே
முறியாமல் உள்ளது.......

கொஞ்ச நாட்கள் கழிந்தால்
உன் குறையெல்லாம் போய் விடும் போ !

அமரன்
04-06-2007, 06:08 PM
ஒரு தமிழனின் கைரேகைப் பலன்கள்.

கடுமையான உழைப்பினால்
உன் ஆயுள் ரேகை
அழிந்தது.......

அரசியல் வாதிகளின்
ஆரவாரப் பேச்சுக்கு
கை தட்டியே உன்
அதிர்ஷ்ட ரேகை கலைந்தது......

எண்ணற்ற சினிமாக்களால்
உன் புத்தி ரேகை
மழுங்கியது........

லாட்டரிச் சீட்டுகளைச்
சுரண்டியதாலேயே
உன் உழைப்பு ரேகை
உருக்குலைந்தது........

தங்கைகளின் திருமண ஏற்பாட்டில்
அலைந்து திரிந்ததில்
உன் திருமண ரேகையும்
தொலைந்து போனது.....

முதுமை ரேகை மட்டுமே
முறியாமல் உள்ளது.......

கொஞ்ச நாட்கள் கழிந்தால்
உன் குறையெல்லாம் போய் விடும் போ !
இது எமது மக்களின் சாபக்கேடு வேந்தே. உடம்பு ஓடாகத் தேயும்வரை உழைத்துவிட்டு பலனை எடுப்பதில்லை. பலனை எடுக்க அரசியல்வாதிகள் விடுவதில்லை. அவர்களின் பகட்டுப் பேச்சல் கவரப்பட்டு சிந்திக்காமல் கைதட்டி உரிமைகளைப் பறிகொடுப்பதுவும் கொஞ்சமாகக் கிடைக்கும் ஊதியத்தை சினிமா மோகத்தினால் அழிப்பதுவும் கஸ்கப்பட்டு சேமித்த பணத்தில் தங்கை அக்கா குடும்பம் என வாழ்ந்துவிட்டு தனது வாழ்க்கையைப் பறிகொடுத்த ஒருவனுக்கு மரணத்திதான் விடியல். அருமையான சிந்தனை. உங்கள் சமூக சிந்தனைக்கும் கவித்திறமைக்கும் எனது பரிசாக 200 இ-பணம். தொடருங்கள் கலை.....

விகடன்
04-06-2007, 06:11 PM
கலைவேந்தனின் கைரேகை யோதிடம் அருமை.

வாழ்த்துக்கள்.

கலைவேந்தன்
04-06-2007, 06:13 PM
முதன் முதலாய் உங்கள் கையால் பரிசு பெற்றதில் மிக்க மகிழ்ச்சி ஐயா!
நன்றிகள் கோடி!

அமரன்
04-06-2007, 06:15 PM
முதன் முதலாய் உங்கள் கையால் பரிசு பெற்றதில் மிக்க மகிழ்ச்சி ஐயா!
நன்றிகள் கோடி!
கலைவேந்தே! தமிழின் கத்துக்குட்டி நான். ஐயா என்ற மரியாதை எல்லாம் வேண்டாம்.

கலைவேந்தன்
04-06-2007, 06:15 PM
நன்றிகள் திரு ஜாவா அவர்களே!

கலைவேந்தன்
04-06-2007, 06:18 PM
கலைவேந்தே! தமிழின் கத்துக்குட்டி நான். ஐயா என்ற மரியாதை எல்லாம் வேண்டாம்.


சிறு பிள்ளையே ஆயினும் மதிப்புடனும் மரியாதையுடனும் விளிப்பதே தமிழன் பண்பு! நன்றிகள் நண்பரே!

சக்தி
05-06-2007, 02:30 AM
நல்ல கவிதை வாழ்த்துக்கள் கலைவேந்தன்

ஆதவா
05-06-2007, 04:00 AM
ஒரு தமிழனின் கைரேகைப் பலன்கள்.

நிச்சயம் பார்க்கவேண்டிய ரேகைப் பலன்கள் தான்..

கடுமையான உழைப்பினால்
உன் ஆயுள் ரேகை
அழிந்தது.......

தமிழன் கடுமையாக உழைப்பான் என்று சொல்லியதே இந்த கவிதைக்கு வெற்றிதான்.. வெறும் புகழ்ச்சியல்ல. ஆயுள்
ரேகைகள் என்றாவது அழியக் கூடியவை ஆனால் அது எப்படி அழிய வேண்டும் என்பதற்கு உதாரணமாக தமிழனைப்
பற்றீய வரிகள்... மெய் சிலிர்க்கிறது.... அருமை க.வேந்தன்.

அரசியல் வாதிகளின்
ஆரவாரப் பேச்சுக்கு
கை தட்டியே உன்
அதிர்ஷ்ட ரேகை கலைந்தது......

நிதர்சனமான உண்மை. இந்த விஷயங்களில் மேற்சொன்ன வரிகளுக்கு நேர் மாறு நம் தமிழர்கள்.. என்ன செய்ய
அதிர்ஷ்டத்தை தேடவேண்டும்.. இங்கே தேடிவரும் என்று நினைத்துக் கொண்டு அரசியல் வாதிகளின் பிடியில் சிக்கித்
தவிக்கிறார்கள்.. உண்மை வரிகள்.

எண்ணற்ற சினிமாக்களால்
உன் புத்தி ரேகை
மழுங்கியது........

இது சம்மட்டி அடி. சினிமாக்களால்தான் இத்தனை கேவலமும்.. மற்ற நாடுகளில் இந்த பிரச்சனை இருக்கிறதா என்பது
தெரியாது. ஆனால் பழங்காலத்து நாகரீகம் சிதையாமல் இருக்கும் தமிழ்நாட்டில் இப்படியொரு தலைவிதி.. தமிழ்நாட்டில்
சினிமா ஒழிந்தால் அந்நியநாடுகளே தலைநிமிர்ந்து நோக்கும்... சினிமா கூட எடுக்க நேரிடலாம்.

லாட்டரிச் சீட்டுகளைச்
சுரண்டியதாலேயே
உன் உழைப்பு ரேகை
உருக்குலைந்தது........

முதல் வரிகளுக்கு நேர் மாறான வரிகள்... இப்படியும் ஒரு சாரார் இருக்கிறார்கள். பெரும்பாலும் லாட்டரி சீட்டுகள்
ஒழிந்துவிட்ட நிலையில் இந்த வரிகள் சற்று உண்மையை மந்தமாகவே சொல்லுகின்றன.

தங்கைகளின் திருமண ஏற்பாட்டில்
அலைந்து திரிந்ததில்
உன் திருமண ரேகையும்
தொலைந்து போனது.....

க.வேந்தன்... இந்த நிலைமை ஓவ்வொரு அண்ணன்களுக்கும்.. ஏன் எனக்கே கூட.. தங்கைக்கு மணம் முடித்துவிட்டு
அண்ணன்கள் செய்யும் நிலை பலபேரிடம் உண்டு. அந்த வகையில் பலர் திருமணத்தைத் தள்ளி தள்ளியே இளமையை
அனுபவிக்காமல் போகிறார்கள்... என்ன செய்ய.. காசு படுத்தும் பாடு..

முதுமை ரேகை மட்டுமே
முறியாமல் உள்ளது.......

ஹ ஹ...... உண்மைதான்.. இறுதியில் மிஞ்சுவது அது ஒன்றுதான்..

கொஞ்ச நாட்கள் கழிந்தால்
உன் குறையெல்லாம் போய் விடும் போ !

ஹி ஹி.. கொஞ்ச நாட்கள் கழித்து உயிர் இருக்கிறதோ என்னவோ???? அதைத்தான் சிம்பாலிக்காக சொல்லுகிறீர்களா?
:D
--------------------
க.வேந்தன். முன்பே அறிமுகம் ஆன மனிதர் ஆகையால் மட்டுமல்ல. சிறந்த கவிதையும் இது.. சாதாரணமாக
சொல்வதற்கும் ரேகை பலன்கள் வைத்து சொல்வதற்கும் உள்ள வித்தியாசங்கள் நிறைய.. இந்த வித்தியாசத்தைக்
கடைபிடிப்பவர்கள் நிறைய பேரல்ல. எளிமையாகவும் நேர்த்தியாகவும் சொல்ல பலருக்கு முடிகிறது. எனக்கு அந்த
பிரச்சனை நிகழ்வதுண்டு. எளிமை எளிதில் வருவதில்லை.

எந்த ஒரு பாமரன் படித்தாலும் விளங்கும் கவிதை இது.. வெற்றீ அங்கே தான் இருக்கிறது. வெறுமே குறியீட்டுக் கவிதைகளாக இருப்பதில் / எழுதுவதில் பிரயோசனமென்ன.? வார்த்தைகள் அடுக்கலில்ல. விளையாட்டில்லை எந்த ஒரு அழகும் சேர்க்கவில்லை.. ஆனால் ஒட்டுமொத்தத்தையும் கரைத்துக் குடித்தவாறு இருக்கிறது கவிதை... அங்கே இருக்கிறது வெற்றீ.

தொடருங்கள்

(ஒரே திரியில் எல்லா கவிதைகளையும் இடவேண்டாம்... ஒரு கவிதைக்கு ஒரு கவிதை தனி திரி தொடங்குங்கள்.. அவை அனைத்தையும் கவிஞர் அறிமுகம்/தொகுப்பு என்ற திரிக்குள் நீங்கள் வைத்துக் கொள்ளலாம்.)

சிவா.ஜி
05-06-2007, 04:24 AM
நல்ல கவிதை. ஒவ்வொரு ரேகையாக அடுக்கிய விதம் அருமை.ஆச்சர்யமாக இருக்கிறது. சொல்லும் பொருள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தாலும் இப்படியெல்லாம் வித்தியாசமாக சொல்லமுடியும் என்பதை பார்க்கும்போது கவிஞனுக்கு கற்பனை வற்றவே வற்றாது என்பது நிரூபனமாகிறது. பாராட்டுக்கள் கலைவேந்தன்.

கலைவேந்தன்
05-06-2007, 07:23 AM
தங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி ஆதவா அவர்களே!
கவிதையை அங்குலம் அங்குலமாகப் பிரித்து அழகான பொருள்கூறி அற்புதமாய் பாராட்டிய உங்கள் ரசிப்புத்தன்மையை வியந்தேன்.
மீண்டும் நன்றிகள்!

கலைவேந்தன்
05-06-2007, 07:30 AM
பாராட்டிய சக்தி மற்றும் சிவா.ஜி ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

இதயம்
05-06-2007, 07:35 AM
கடுமையான உழைப்பினால்
உன் ஆயுள் ரேகை
அழிந்தது.......

நல்லது தான். உழைப்பு தான் மனிதனை உயர்த்தும்.

அரசியல் வாதிகளின்
ஆரவாரப் பேச்சுக்கு
கை தட்டியே உன்
அதிர்ஷ்ட ரேகை கலைந்தது......

தேவையில்லாதது. அதிர்ஷ்டம் என்பது ஒரு மாயை, அதை உழைப்பு கொண்டு தான் வெற்றி கொள்ள முடியும்.

எண்ணற்ற சினிமாக்களால்
உன் புத்தி ரேகை
மழுங்கியது........

இன்றைய சினிமா பைத்தியங்களுக்கு சாட்டையடி. ஆனால், நிதர்சன உண்மை..!

லாட்டரிச் சீட்டுகளைச்
சுரண்டியதாலேயே
உன் உழைப்பு ரேகை
உருக்குலைந்தது........

இதுவும் அதிர்ஷ்டம் சம்பந்தப்பட்டதே

தங்கைகளின் திருமண ஏற்பாட்டில்
அலைந்து திரிந்ததில்
உன் திருமண ரேகையும்
தொலைந்து போனது.....

இதுவும் அவசியமே. காரணம், அது நம் கடமை.

முதுமை ரேகை மட்டுமே
முறியாமல் உள்ளது.......

அது கூட ஒரு நாள் முறியலாம். அது எல்லோருக்கும் ஒரு நாள் நடந்தே தீரும். இத்தனை இக்கட்டுகள், கஷ்டங்களுக்குள் வாழ்ந்து சாதிப்பதில் தானே மனிதனின் சாதனையும், பெருமையும் அடங்கியிருக்கிறது.

நல்ல கருத்துக்களை நயம்பட உரைத்த கலைவேந்தனுக்கு பாராட்டுக்கள்.

கலைவேந்தன்
06-06-2007, 01:34 AM
நன்றி நண்பரே! தங்கள் அலசல் விமரிசனம் அருமை!

அக்னி
06-06-2007, 01:11 PM
கடுமையான உழைப்பினால்
உன் ஆயுள் ரேகை
அழிந்தது.......
உண்மையாய் உழைப்போரின் அடையாளம்... முதலாளிகளின் சுரண்டும் அடையாளம்...


அரசியல் வாதிகளின்
ஆரவாரப் பேச்சுக்கு
கை தட்டியே உன்
அதிர்ஷ்ட ரேகை கலைந்தது......
ஏமாளிகளின் ஏமாற்றத்தின் அடையாளம்...
ஏமாற்றுவோரால் அழிக்கப்படும் அப்பாவிகளின் நிரந்தர அடையாளம்...

எண்ணற்ற சினிமாக்களால்
உன் புத்தி ரேகை
மழுங்கியது........
பொழுதுபோக்கு அம்சங்கள் வாழ்வை ஆக்கிரமிப்பதன் அடையாளம்...

லாட்டரிச் சீட்டுகளைச்
சுரண்டியதாலேயே
உன் உழைப்பு ரேகை
உருக்குலைந்தது........
அதிஸ்டத்தை நம்பி அலைபவனின் அழிவின் அடையாளம்...

தங்கைகளின் திருமண ஏற்பாட்டில்
அலைந்து திரிந்ததில்
உன் திருமண ரேகையும்
தொலைந்து போனது.....
கடமைக்காய் பாசத்திற்காய் உருகும் மனிதரின் அடையாளம்... வரதட்சிணை அளவுக்கு மீறி கட்டாயப்படுத்திப் பெறுவோரால் அழிக்கப்படும் ஒரு பாசப்பிறப்பின் தேய்வின் அடையாளம்...

தங்கைகளின் திருமண ஏற்பாட்டில்
முறியாமல் உள்ளது.......
இயற்கையை வெல்ல முடியாதலால், மனிதன் விரும்பியோ விரும்பாமலே பெறும் வாழ்வின் முடிவு எச்சரிக்கையின் அடையாளம்...

கொஞ்ச நாட்கள் கழிந்தால்
உன் குறையெல்லாம் போய் விடும் போ !
வெல்ல முடியாத மரணம் உன் பிறப்பிற்கு முற்றுப்புள்ளி போடும்போதும்தான், உனக்கு நிரந்தரமான அமைதி...

அழகான கவிதைக்கு கலைவேந்தன் அவர்களுக்குப் பாராட்டுக்கள்...

ரேகைகள் பார்த்து வாழ்வை திசைமாற்றுவதைவிட, வாழ்வின் உண்மைநிலையைக் கண்டறிந்து வாழ்ந்தால், மரணம் தாண்டியும் நாம் வாழ்வோம்...

கலைவேந்தன்
08-06-2007, 04:54 PM
விரிவான அலசல் !
உன்னதமான கருத்துக்கள்!
நன்றிகள் அக்னி அவர்களே!

ஆதவா
09-06-2007, 01:48 AM
கலைவேந்தரே! நம் மன்றத்தின் சிறப்பே அலசல் விமர்சனம் தான்.... நாங்களெல்லாம் சும்மா ஜுஜுபி... இன்னும் சிலர் விடுப்பில் இருக்கிறார்கள்.. சிலர் ஊரில் இருக்கிறார்கள்... அவர்கள் வந்தால் இப்படியும் விமர்சனமா என்று ஆச்சரியப் படுவீர்கள்.. அந்த அளவுக்கு இருக்கும்.... விரைவில் அவர்கள் வருவார்கள்.

ஓவியா
10-06-2007, 12:27 AM
ஒரு தமிழனின் கைரேகைப் பலன்கள்.

கடுமையான உழைப்பினால்
உன் ஆயுள் ரேகை
அழிந்தது.......

கடுமையான உழைப்பினால்
உன் ஆயுள் கூடியது
(கொழுபற்ற நல்ல ஆரோக்கியம், தேவைக்குமேலும் பணம், வெற்றியாளன் என்று மனதில் சந்தோஷம்)


அரசியல் வாதிகளின்
ஆரவாரப் பேச்சுக்கு
கை தட்டியே உன்
அதிர்ஷ்ட ரேகை கலைந்தது......


அடுப்புமூட்டா திண்டாடும் அன்றாடக்காட்சிக்கு
அரசாங்க ஆட்சியில் கை தட்டியாவது
கஞ்சிக்கு அரிசி மீஞ்சுதே!!!


எண்ணற்ற சினிமாக்களால்
உன் புத்தி ரேகை
மழுங்கியது........

சினிமாக்கனால்
10 வீட்டில் சித்தி ரேகை வளர்ந்ததே!!!
ஒருநாள் சூட்டீங்ட் 100 துணைநடிகர்கள், 99 பக்கவாத்திய டான்சர், 15ரூபா நாட்சம்பள(ல)ம்


லாட்டரிச் சீட்டுகளைச்
சுரண்டியதாலேயே
உன் உழைப்பு ரேகை
உருக்குலைந்தது........

லாட்டரீச் சீட்டுக்காவது
உன் உழைப்பு ரேகை
உருக்குலையுதே

இலவச லாட்டரிச் சீட்டுக்கிடையாதே!!! சீட்டு வாங்க பைசா!!! உழைமனிதா, பிறவிபயனில் துளியாவது செய்


தங்கைகளின் திருமண ஏற்பாட்டில்
அலைந்து திரிந்ததில்
உன் திருமண ரேகையும்
தொலைந்து போனது.....

கடமையை வென்றவனுக்கு
என்றோ தொலைந்து போன
கல்யாண ரேகையும் கைக்கூடுமாம்.

குடும்ப கடமையை சுமப்பவன், பெண்னின் மனதை வென்றவனாம்!!


முதுமை ரேகை மட்டுமே
முறியாமல் உள்ளது.......

முதுமை உடலுக்கே, மனதிற்க்கு இல்லை
அது என்றும் முறியாதே!!

கொஞ்ச நாட்கள் கழிந்தால்
உன் குறையெல்லாம் போய் விடும் போ !

நாட்கள் கழிய வாழ்வு தேயும்!!! தேய-தேய பிறையும் ஒருநாள் இல்லாமல் போகுமாம்,
நீ தேய-தேய உன் வாழ்வும் ஒரு நாள் முடிவைக்காணுமோ!!!!

கொஞ்ச நாட்களை
கொஞ்சக்கொஞ்ச
நாட்களாக கழி
ஏது துன்பம்!! ஏது குறை!! :music-smiley-008: :music-smiley-008: :music-smiley-008:
அன்பின் நன்பரே

சும்மா ஒரு மாறுதலுக்காகதான் இப்படி விமர்சித்தேன்.

உங்களுடைய கவிதைக்கு பலர் பல விதத்தில் விமர்சனம் பதித்தால் கவிதைக்கு பெருமையே!!! கவிதைக்கு பெருமை, கவிஞனின் வளர்ச்சி.

உங்கள் சிந்தனை சிறப்பு, அழகிய கருத்துள்ள கவிதை, மிகவும் பிரமாதம்.

ரசித்துப்படித்தேன். வார்த்தைகளும் பொருட்களும் நல்ல விதத்தில் கோர்த்துள்ளீர்கள். நல்ல கவிநடை. :sport-smiley-014:

பாராட்டுக்களுடன் வாழ்த்துக்களும்.

இணிந்திருங்கள் நண்பரே.

...................................................................
ஆதவா, இதயம், அக்கினி, என பல சிறந்த விமசகர்களின் கருத்துக்கள் அற்புதம். அனைத்து பின்னூட்டங்களும் அருமை.

namsec
10-06-2007, 01:24 AM
ஒரு தமிழனின் கைரேகைப் பலன்கள்.


எண்ணற்ற சினிமாக்களால்
உன் புத்தி ரேகை
மழுங்கியது........

லாட்டரிச் சீட்டுகளைச்
சுரண்டியதாலேயே
உன் உழைப்பு ரேகை
உருக்குலைந்தது........

கொஞ்ச நாட்கள் கழிந்தால்
உன் குறையெல்லாம் போய் விடும் போ !


உன் புத்தி ரேகை மட்டும் அழியாமல் இருந்தால் நீ .......

. நீ சுரன்டிய லாட்டரி உன்னை சுரன்டாமல் இருந்திருக்கும்.

உன் கடுமையான உழைப்பு உன்னை உயர்த்தியிருக்கும்

உயர்வினால் உன்னைத்தேடி மாகலட்சுமி (மனையால்) உன் வாயிர்கதவை தட்டுவாள். வசந்தம் உன் வாழ்வில் ஒளிவீசும்


எதற்க்கப்ப நீ வருத்த படவேண்டும்

கலைவேந்தன்
14-06-2007, 02:25 PM
விமர்சித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி!

ஓவியா
20-06-2007, 01:03 PM
விமர்சித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி!

இப்படி சொன்னா எப்படி நண்பா????

விமர்சனம் பொருந்துதானு சொல்லவில்லையே!!!

ஜோய்ஸ்
20-06-2007, 01:12 PM
மெய் சிலிர்க்கும் கவிதை வரிகள்.அப்பப்பப்பா எப்படித்தான் இப்படி கவிதைகள் வருதோ!

கலைவேந்தன்
23-06-2007, 01:00 PM
பாராட்டிய பெருமக்கள் அனைவருக்கும் நன்றி!
நீங்கள் அளிக்கும் ஊக்கம் என்னை இன்னும் எழுதவைக்கும் என்பதில் ஐயமில்லை!

ஜானகி
13-08-2012, 10:40 AM
கை ரேகை அழிந்தாலென்ன...உன் உயிரில் கலந்தோடும் தமிழ் ரேகை உன் புகழ் பாடும்...! கலங்காதே...

கீதம்
13-08-2012, 10:56 AM
உள்ளங்கைக்குள் அடங்கிவிடுகிற ஒரு சராசரித் தமிழனின் வாழ்க்கையை அற்புதமாய் கவிதைக்குள் அடக்கியவிதம் ஆச்சர்யம். தான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தன்னைச் சுற்றி வளைக்கும் பணிச்சுமை, அரசியல், சினிமா, லாட்டரி, குடும்பப் பொறுப்புகள் இவற்றுக்கு மத்தியில் அல்லாடும் ஒரு சகமனிதனைக் கண்முன் நிறுத்துகிறது கவிதை. பாராட்டுகள் கலைவேந்தன்.

கைரேகை சோதிடக்காரர்கள் போல கவிதையின் ரேகையை அபாரமாய் அலசிய பின்னூட்டங்கள் கவிதையின் சிறப்பை மேலும் உயர்த்திய உறவுகளுக்கும் பாராட்டுகள். திரியை மேலெழுப்பித் தந்த ஜானகி அம்மாவுக்கு நன்றி.