PDA

View Full Version : புலிகளின் அரசு சட்டப்படியான அரசு!கனடிய மĪ



lebaster6528
04-06-2007, 01:56 PM
வழக்கறிஞர் கரேன் பார்க்கர் நேர்காணல்கரேன் பார்க்கர் கனடாவைச் சேர்ந்த சட்டநிபுணர். மனித உரிமைகள் மற்றும் மனித உரிமைச் சட்டங்களில் தேர்ந்தவர். பொருளாதார ஒதுக்கீடுகள், ஆயுதங்கள் மற்றும் சுற்றுச் சூழல் குறித்து உலகளாவிய சட்டங்கள் உருவாக காரணமாக இருந்தவர். 1982இல் மனித உரிமைக்கான வழக்கறிஞர்கள் அமைப்பை உருவாக்கி;ச் கடந்த 20 ஆண்டு காலமாக அதன் தலைவராக செயல்பட்டு வருகிறார்.
இலங்கை இனச் சிக்கலுக்கு நல்ல முறையில் தீர்வு காணும் நோக்கத்தோடு, மனித உரிமை சட்டங்கள் குறித்த ஜெனிவா தீர்மானங்களை பின்பற்றும் வகையில் இலங்கை அரசுடனும் விடுதலைப் புலிகள் இயக்கத்துடனும் பல சுற்று பேச்சுக்கள் நடத்தியுள்ளார்.

கடந்த மார்ச் 2007இல் கரேன் பார்க்கரை "தமிழ் மிர்ரர்" இதழ் கண்ட பேட்டி

கே : அண்மையில் மீண்டும் திரிகோணமலையில் 5 மாணவர்கள் கொல்லப்பட்டனர். மூதூரில் 18 பொதுநலத் தொண்டர்கள் கொலை செய்யப்பட்டனர். செஞ்சோலையில் குழந்தைகள் மீது குண்டு வீசப்பட்டது. மன்னாரில் பல குடும்பங்கள் படுகொலை செய்யப்பட்டன.. அய்க்கிய நாடுகள் சபை தமிழர்களின் நிலைக்காக என்றாவது எழுந்து பேசுமா?

நான் நிச்சயமாக அய்க்கிய நாடுகளை சபை பேசும் என நம்புகிறேன். தொடர்ந்த இந்த நிகழ்வுகளைக் கண்டு, ஒட்டு மொத்த சூழலும் உண்மையில் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைதான் என்ற முடிவுக்குத்தான் நான் வந்தேன். அய். நா ஹை கமிஷனரிடமும், அய். நா பொதுச் செயலாளரின் இனப் படுகொலை தடுப்புக்கான சிறப்பு ஆலோசகரிடமும் இது குறித்து பேசினேன். இந்த விதத்தில் இச்சிக்கலை நான் எழுப்பியது ஏனென்றால், இதற்குப் பிறகும் அய். நா இதற்குப் பதிலளிக்காமல் இருக்க இயலாது என நினைக்கிறேன். அதோடு, அங்கு நடப்பது ஒரு இனப் படுகொலை தான் என்பதை நான் அழுத்தமாகவே வாதிட்டேன் என நம்புகிறேன்.
கடந்த சனவரியில் முதன் முதலாகத் தொடர்பு கொண்டேன். இன்னமும் எனக்கு ஹை கமிஷனரிடமிருந்தோ, சிறப்பு ஆலோசகரிடமிருந்தோ பதில் வரவில்லை. இருந்த போதும், இதற்கு முன்பு நான் அனுப்பிய மடலுக்கு, சிறப்பு ஆலோசகரிடமிருந்து பதில் வந்திருந்தது.
நிலைமை இத்தனை மோசமாக இருக்கையில் நான் செயல்படாமல் அமைதியாக இருக்க முடியாது. இன ஒழிப்பு, கண்மூடித்தனமான கொலைகள், கட்டாய வெளியேற்றம், பட்டினி, குழந்தைகள் மற்றும் மக்கள் மீது குண்டு வீச்சு, புலம் பெயர்ந்த தமிழர்கள், இலங்கைத் தமிழர்கள் மற்றும் புலிகளுக்கு எதிரான இன வெறி விளிப்புகள்.. இவை அனைத்தையும் முன்னிட்டு உலக சமூகம் கண்டிப்பாக கேள்வி எழுப்ப வேண்டும் என நினைக்கிறேன்.
இவை அனைத்தும் முழுமையாக தமிழர்களுக்கு எதிராக உள்ள தென்னிலங்கை அரசியல் கட்சிகளின் அழுத்தத்தாலேயே நடக்கின்றன. தமிழர்கள் மீதோ, இலங்கை அரசின் செயல்பாடுகள் மீதோ யாரேனும் சிறிதளவு அக்கறை காட்டினால் கூட அவர்கள் இலங்கை அரசால் வெளிப்படையாக தாக்கப்படுவார்கள் என்பதை நான் சிறப்பு ஆலோசகரிடமும், ஹை கமிசனரிடமும் தெரிவித்து விட்டேன். அண்மைச் சான்று, முன்னால் கனடிய அமைச்சர் ஆலன் ராக்கிற்கு நடந்தது. அவர் போரினால் பாதிக்கப்படும் குழந்தைகள் குறித்து ஆய்வு நடத்திக்கொண்டிருந்தார். இத்தனைக்கும் தமிழ்க் குழந்தைகளின் நிலையோடு ஒப்பிட்டு நோக்குகையில் மிக குறைந்த முக்கியத்துவம் உடைய குழந்தை படை வீரர்கள் குறித்து தான் அவர் ஆய்வு செய்தார்.
அய். நா அல்லது பிற இடங்களில் நான் தரும் அறிக்கைகள் கூட இலங்கை அரசால் கடுமையாக உச்சக் குரலில் தாக்கப்படுகின்றன. ஆனால் இது குறித்தே நான் எனது அறிக்கைகளில் இலங்கை அரசைக் குற்றம் சாட்டும் போது.. அவர்கள் குரல் சற்று தணிகிறது. ஏனெனில் அவர்கள் நான் எந்த வகையிலும் வெற்றி பெறுவதை விரும்பவில்லை. கடந்த ஆண்டு செப்டம்பர் அக்டோபரில் நடந்த புதிய மனித உரிமை ஆணையத்தின் இரண்டாவது கூட்டத்தில், நான் தேர்ந்தெடுத்து பயன் படுத்திய விமர்சனமானது, இலங்கை அரசு என் மீதான தாக்குதல்களை குறைத்தது.
இன்னமும், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கும், புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும் ஒரு வலிய அரசிடமிருந்து ஒரு வலிய ஆதரவு தேவை. நார்வேயும் அய்ஸ்லாண்டும், தங்களது அனுசரணைப் பணியை நடுநிலையோடேயே தொடர்கின்றன. ஆனால் ஒப்பீட்டளவில் இவை இரண்டும் மிகச் சிறிய நாடுகள். அதிலும் நார்வே ஒரு நடுநிலை நாடு. புலிகள் மீதான தடையை அய்ரோப்பிய யூனியன் வலியுறுத்தியதே, மற்ற மூன்று நடுநிலை நாடுகளையும் இலங்கை கவனிப்புப் பணியிலிருந்து வெளியேற்றத்தான் என நான் நம்புகிறேன்.
என்னைப் பொறுத்தவரையில்.. அய். நா வையும்.. பிற உலக நாடுகளையும் ஒரு நியாயமான முடிவெடுக்க விடாமல் அழுத்தம் கொடுப்பது அமெரிக்காதான் என்று நான் கருதுகிறேன்.

கே : அமெரிக்கா இது போன்ற அழுத்தத்தை கொடுப்பதற்குக் காரணம், இலங்கை அரசு தாங்கள் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதாகச் சொல்வதாலா அல்லது, அவர்களுக்கு திரிகோணமலை துறைமுகம் போன்று இலங்கை மீதான பிற அக்கறைகள் காரணமாகவா?

அமெரிக்கா திரிகோணமலை துறைமுகத்தை தன் வசப்படுத்தி தனது கடற்படைத் தளமாக்குவதில வெளிப்படை யாகவே ஆர்வம் காட்டி வந்துள்ளது. அதைத் தவிர, பலாலி விமான தளம் மீதும் ஆர்வம் காட்டி வந்துள்ளது. அமெரிக்க அதிகாரிகள் அந்த இடங்களை வந்து பார்வை யிட்டுள்ளனர்.
அமெரிக்காவைப் பொறுத்த வரையில், உலகின் பிற இடங்களில் தங்கள் செல்வாக்கு சரியாக இருப்பதாக நினைக்கிறது. குறிப்பாக லத்தீன் அமெரிக்கா போன்ற இடங்களில். இந்த அரசும், இதற்கு முந்தைய ரீகன், புஷ் அரசுகளும் பெட்ரோலிய வளம் மீது கவனம் செலுத்தி வந்தன. ஆனால் தற்போது, உலகின் எந்தப் பகுதியையும் எந்த நேரத்திலும் தாக்க வல்ல இராணுவ பலத்தை நோக்கிச் செயல்படுகிறது. இலங்கை கடற்படை தளங்களையும், விமானத் தளங்களையும் தராமல், ஆசியாவின் அந்தப் பகுதியில் அமெரிக்காவிற்கு சிக்கல் உள்ளது.
பயங்கரவாதம் என்ற சொல் பிரயோகமே திட்டமிட்ட உள்நோக்கம் கொண்டது என நினைக்கிறேன். அமெரிக்கா விற்கு தெளிவாகவே இது ஓரு ஆயுதம் தாங்கிய விடுதலைப் போர் எனத் தெரியும். ஆனால் திட்டமிட்டே அவர்களுக்கு சாதக மாக பயங்கரவாதம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது. ஆனால் ஆயுதம் தாங்கிய வன்முறை இருக்கும் இடத்தில், ஒன்று அது ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராக இருக்க வேண்டும் அல்லது பயங்கரவாதமாகத்தான் இருக்க வேண்டும். சட்டப்படி அந்த இரண்டாகவும் இருக்க இயலாது.
அமெரிக்கா பயங்கரவாதம் என்ற சொல்லை பிற நாடுகளையும் தொண்டு நிறுவனங்களையும் மிரட்டவும், தமிழர்கள் காலூன்றத்தக்க ஆதரவு அவர்களுக்கு கிடைக்க விடாமல் செய்யவுமே பயன்படுத்து கிறது. அமெரிக்க செஞ்சிலுவை சங்கத்திடம் தமிழர் பகுதிகள், இலங்கை அரசின் கட்டுப் பாட்டில் இருந்த போதும், அங்கு சுனாமி நிவாரணங்கள் வழங்கக் கூடாது என்று கூறியதை நினைத்துப் பாருங்கள். இது நிச்சய மாக எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள இயலாத வகையில் தமிழர்களைக் குறி வைப்பதாகும்.

கே : நிறைய தமிழ் கிராமங்கள் பல்குழல் வெடிகணைகளால் தாக்கப்பட்டதும்.. அது குறித்து சர்வதேச சமூகம் அமைதி காப்பதும் தமிழர்களை கவலை கொள்ள வைத்திருக்கிறது. ஆனால் கொழும்பிலோ அல்லது தென்னிலங்கையிலோ குண்டு வெடிப்பு நிகழ்ந்தால் உடனே விடுதலைப் புலிகளை அவர்கள் கண்டிக்கிறார்கள். இவ்வாறு ஒரு தலைப்பட்சமாக நடப்பதை என்று சர்வதேச சமூகம் நிறுத்தப் போகிறது?

இலங்கையில் நாம் எதிர்கொள்வது ஒரு தப்பிக்க இயலாத சூழலை, பல்குழல் வெடிகணைகளைப் பற்றி எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. அவை இராணுவ தளங்களை நோக்கிச் சென்றால்.. எந்த மீறலும் இல்லை. ஆனால் மக்கள் வசிக்கும் கிராமங்களுக்குச் சென்றால்.. நிச்சயமாக அது மனிதத்தன்மைக்கு எதிரான பெருங்குற்றம்.
சர்வ தேச சமூகம் மிகுந்த வேறுபாடுடன் தான் நடந்து கொள்கிறது. ஒரு சிங்களவருக்கு எதிராக ஏதேனும் நிகழ்ச்சி நடந்தால்.. அது தலைப்புச் செய்தியாகிறது. அதுவே 1000 தமிழர்களுக்கு எதிராக நடந்தால் அது மழுப்பலாக முணுமுணுக்கப்படுகிறது.
இலங்கை அரசு மிக மோசமான போர்க் குற்றங்களைப் புரிந்த போது அமெரிக்காவும் பிற நாடுகளும் விடுத்த அறிக்கைகளானது மிகத் தெளிவான சமாளிப்பாகவே இருந்தன. அவை உண்மையான அக்கறை காட்டவில்லை. ஏனெனில் அது குற்றம் செய்தவர்களையும் அடையாளம் காணவில்லை. பலியானவர் களையும் குறிப்பிடவில்லை. விசயம் அறியாதவர்கள் அந்த அறிக்கையை வாசிக்க நேர்ந்தால், நிச்சயமாகக் குற்றம் செய்தவர்கள் புலிகள் என்றும் பலியானவர்கள் சிங்களவர் கள் என்றும்தான் முடிவுக்கு வருவார்கள். இது வேண்டுமென்றே செய்யப்பட்டதாகவே நினைக்கிறேன். இது நிறுத்தப்பட வேண்டும்.

கே : கடந்த மாவீரர் நாள் உரையில் விடுதலைப் புலிகளின் தலைவர் "விட்டுக் கொடுக்காமல் நிற்கும் சிங்கள பேரின வாதத்தின் நிலையானது சுதந்திர தமிழ் ஈழம் ஒன்றே தீர்வு என்ற நிலைக்குக் கொண்டு வந்து விட்டுள்ளது" எனக் கூறியுள்ளார். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் நியாயப்படுத்தப்பட்டுள்ளதா?

நிச்சயமாக. என்னைப் பொறுத்த வரையில் தன்னுரிமைச் சட்டத்தின் அடிப்படையில், தமிழர் பகுதிகள் தமிழர்களுக்குச் சொந்தமானவை. அது அவர்களின் நிலம். அதாவது புலிகளுக்கு, இந்த அரசை நடத்த சட்டப்படி எல்லாவித உரிமையும் உள்ளது.
தங்களின் சொந்த நாட்டில் அவர்கள் இருப்பது டிலிபாக்டோ ஆகாது. அவர்களது அரசு டிலிபாக்டோ அல்ல. மாறாக டிலிஜுரி அரசு.

கே : டிலிபாக்டோவிற்கும் டிலிஜுரிக்கும் என்ன வேறுபாடு?

டிலிஜுரி என்றால் சட்டப்படி என்று பொருள். நிலம் மற்றும் அரசுகளுக்கு பொருந்தக் கூடிய வகையில் சொல்ல வேண்டுமானால், அந்த நிலம் உங்களுக்குச் சொந்தமானது என்றால், அதை நீங்கள் ஆட்சி செலுத்தினால், நீங்கள் சட்டப்படியான அரசு ஆவீர்கள். இலங்கை அரசு தமிழர்களின் பாரம்பரிய நிலத்தை ஆக்கிரமித்ததுதான் டிலிபாக்டோ. அவர்கள் யதார்த்த நிலையில் அங்கு உள்ளனர். ஆனால் அவர்களுக்கு அந்நிலம் மீது சட்டப்படியான எந்த உரிமையும் கிடையாது. அதனால்.. தமிழ் நிலம் மீது அவர்கள் செலுத்தும் அதிகாரமானது, ஆட்சியானது சட்டப்படியானது அல்ல.
ஆனால் புலிகள், நாங்கள் ஒரு டிலிபாக்டோ அரசை நடத்துகிறோம் என்று கூறுவதன் மூலம் அதன் பொருளை மாற்றிப் பயன்படுத்துகின்றனர். ஆனால் என்னைப் பொறுத்த வரையில் தமிழர்களுக்கு ஒரு சட்டப்படியான அரசு உள்ளதாகவே நினைக்கிறேன். அவர்களுக்கு தன்னுரிமை உள்ளது. தமிழ் நிலப் பகுதிகள் அந்த உரிமையின் கீழ் உள்ளவை. அந்த நிலப் பகுதிகளில் அவர்கள் இருக்கிறார்கள். அதோடு அந்தப் பகுதிகளை நிருவாகம் செய்ய ஒரு அரசையும் நிறுவியிருக்கிறார்கள். இதுதான் சட்டப்படியான அரசு என்பது. அது மட்டுமல்ல. சிங்கள அரசின் பிடியில் உள்ள தமிழ் நிலப் பகுதிகள் மீது டிலிஜுரி அதாவது சட்டப்படியான உரிமை தமிழர்களுக்கு உள்ளது. ஆனால் அது தற்போது அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை. அவ்வளவுதான்.

கே : இந்தியா இலங்கை இனச் சிக்கலுக்குத் தீர்வு காண நினைத்திருந்தால் வெகு நாட்களுக்கு முன்பே செய்திருக்க லாம். ராஜீவ் கொலையைத் தவிர, இந்தி யாவை தள்ளி நிற்க வேறு என்ன காரணங்கள் இருக்கலாம் என நினைக்கிறீர்கள்? இது மனிதாபிமானம் மிக்கதுதானா?

இந்தியா ஒரு மோசமான விளை யாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக இலங்கை மீதும், குறிப்பாக சில தமிழ்ப் பகுதிகள் மீதும் இந்தியாவிற்கு பிராந்திய அரசியல் நோக்கங்கள் உண்டு. ராஜீவ் காந்தி இலங்கையால் வஞ்சகமாக ஏமாற் றப்பட்டார். அடிப்படையில் இந்தியாவின் நலன்களை நோக்கியிருந்தது. ஆனால் அவை பின்பு பின்தள்ளப்பட்டன. அது எப்படி பின் தள்ளப்பட்டது என்பது எனக்கு உறுதியாகத் தெரியும். ராஜீவ் காந்தியும் அதை பின்னாளில் உணர்ந்தார் என்றுதான் நினைக்கிறேன்.
சொல்லப் போனால், ராஜீவ் கொலை நடந்த போது, இந்தியாவில் உள்ள மனித உரிமை ஆர்வலர்களும், பிற குழுக்களும் அது அமெரிக்க உளவு நிறுவனமான சி.அய்.ஏவின் வேலை என நினைத்தனர். அது உண்மையாகவும் இருக்கலாம். நாம் அதை என்றுமே அறியப்போவதில்லை. யார் எதை ஒப்புக் கொள்கிறார்கள் என்பதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. ஒரு தமிழர் அதைச் செய்யப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார௼br />? என்பதால் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக பொறுப்பு என்பதை என்னால் ஏற்க இயலாது. தமிழர்களிலும் துரோகிகள் இருக்கிறார்கள். இதைச் செய்தால் தங்கள் குடும்பத்திற்குப் பெரும் தொகை கிடைக்கும் என்பதற்காக இதைச் செய்யக்கூடிய தமிழர்களும் இருக்கிறார்கள். குடும்பத்தினருக்காக தியாகம் செய்பவர்கள் உண்டு. எல்லா வகையான சாத்தியக் கூறுகளும் உள்ளன. ஆனால் குறிப்பாக மும்பை ஊடகங்களும் பிறரும், (ஸ்டேட்ஸ்மன் இதழும் கூட) தொடக்கக் கட்டத்தில் இது சி.அய்.ஏவால் நடத்தப்பட்டது என்றே எழுதினர். இத்தகைய குறிவைத்துத் தாக்கும் நிகழ்வுகள் உலகெங்கிலும் அமெரிக் காவை எதிர்த்தவர்கள் மீது தொடர்ந்து நடத்தப் பட்டு வந்ததை அவர்கள் குறிப்பிட்டனர்.
என்னைப் பொறுத்த வரையில், புலிகளால் ராஜீவ் குறி வைக்கப்படக்கூடிய சாத்தயம் மிகக் குறைவே என்று நான் அப்போதே நினைத்தேன். ஏனெனில் ராஜீவ் ஏற்கெனவே இலங்கையில் படு தோல்வியை சந்தித்திருந்தார். எனவே மீண்டும் இலங்கை யில் அவர் சிக்குவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை. அதனால் அரசியல் ரீதியாக புலிகள் இதைச் செய்வதற்கு எந்த காரணமும் இல்லை. இது போன்று இறுதி வரை கண்டுபிடிக்க இயலாத குற்றங்கள் இதற்கு முன் உலகெங்கிலும் நடந்துள்ளன. என்றபோதும் எனக்கு சில சந்தேகங்கள் உண்டு.
தொடர்ந்து, விடுதலைப் புலிகளைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவின் பிற அரசியல் கட்சிகளிடமிருந்து வலுவாக எழுந்தது. அப்போதைய அமெரிக்க அதிபர் புஷ் இந்தியா வழியாகப் பயணம் செய்தார். அவர் எத்தனையோ நாடுகளுக்குச் செல்லவேயில்லை. ஆனால் அங்கு சென்றார். அதற்கு ஏதேனும் நோக்கம் இருக்கும் என நினைக்கிறேன். அந்த நோக்கங்கள் பேரங்கள் என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால் நிச்சயமாக தமிழர் நிலை விவாதிக்கப்பட்டது என நம்புகிறேன்.
நாம் அனைவரும் அறிந்தபடி அமெரிக்காவிற்கு அந்த தளங்கள் தேவை. இந்தியாவிடம் அதை உறுதிசெய்ய வேண்டியிருந்தது. இவை தவிர அமெரிக்கா தனது தளங்களை இப்பகுதியில் நிறுவுவதற்கான ஒரே மாற்றிடம் பாகிஸ்தான் தான். நிச்சயம் இந்தியா அமெரிக்கா பாகிஸ்தானில் தனது தளங்களை நிறுவவதை விரும்பாது. அதைவிட இலங்கையில் நிறுவுவது இந்தியாவிற்கு ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருந்திருக்கும்.
ஆனால் என்ன நடந்தது என எனக்குத் தெரியாது. உள் விசயங்கள் அறிந்தவர்கள் நொந்து போய் வெளியே பேசுவதற்கு சிறிது காலம் பிடிக்கும். அது எப்படி வெளிப்படும் என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் தற்போது இந்தியாவில் அழுத்தம் உள்ளது. ஆனால் இந்த அழுத்தம் எவ்வகையில் தமிழர் நலனுக்கானது அல்ல. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் அதே நிலைதான். தமிழ்நாட்டில் உறுதியாக இருக்க வேண்டிய அரசியல்வாதிகள், மிக பலவீன மாக இருக்கிறார்கள். அதனால் புலிகள் மீதான பயங்கரவாத முத்திரை நீக்கப்பட இந்தியா விற்கு அழுத்தம் கொடுக்க யாரும் இல்லை.
அந்த முத்திரை நிச்சயமாக அரசியல் ரீதியாக குத்தப்பட்டதுதான். ஏன் இந்த அரசியல்வாதிகள்.. எங்களுக்கு அது பிடிக்கவில்லை. நாங்கள் அதை எதிர்க்கிறோம் என்று சொல்வதில்லை? அரசியல்வாதிகள் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும். விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்தது தவறு என்று கூற வேண்டும். அப்பட்டியலில் இருந்து அதை நீக்க வேண்டும் என அழுத்தம் கொடுக்க வேண்டும்.

தமிழாக்கம் :புதியவன்