PDA

View Full Version : தெரிந்துகொள்ளலாமா

சிவா.ஜி
03-06-2007, 12:16 PM
இதில் பெரும்பான்மையோருக்கு விடை தெரிந்திருக்கும்.என்னைப்போல் தெரியாத சிலருக்கு.
தெரிந்துகொள்வோம்:
1.YAHOO-வின் விரிவாக்கம் என்ன?
2.ADIDAS-ன் விரிவாக்கம் என்ன?
3.STAR TV-யில் உள்ள STAR என்பதன் விரிவாக்கம் என்ன?
4.Baker's Dozen எதைக்குறிக்கிறது?
5.1984-1985 காலக்கட்டத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சியால்கோட்டில்
நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்தியா 210/3 வெங்சர்க்கார் 94 (அவுட் இல்லை)
இருந்தாலும் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது ஏன்?
6.GOODBYE எந்த நான்கு வார்த்தைகளின் அர்த்தத்தை வெளிப்படுத்துகிறது?
7.Agnes Gonxha Bojaxhiu யாருடைய இயற்பெயர்?
8.ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திரம் பெற்ற மற்ற ஒரே நாடு எது?
9.ஜேம்ஸ்பாண்டுக்கு 007 எதனால் கொடுக்கப்பட்டது?
10.தன்னுடைய முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதல் பந்தை சந்தித்த கிரிக்கெட் வீரர் யார்?
11.Mt.Rushmore மலையில் செதுக்கப்பட்டிருக்கும் நான்கு ஜனாதிபதிகள் யாவர்?
12.எந்த நாடு நான்கு பக்கமும் ஒரே நாட்டால் சூழப்பட்டிருக்கிறது?(வாடிகனை தவிர)
13.எந்த ஒரே விளையாட்டு இடது கையால் விளையாடக்கூடாது?

பதில்கள்:
1.Yet Another Hierarchy of Officious Oracle
2.All Day I Dream About Sports
3.Satellite Television Asian Region
4.ஒரு டஜனை(12) விட ஒன்று அதிகமாக
அதாவது 13 எண்ணிக்கை இருப்பதை குறிக்கும்.
5.இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டது தெரிந்ததால்.
6.'God be with you'
7.அன்னை தெரசா.
8.தென் கொரியா.
9.இதில் 007 என்பது பனிப்போரின் சமயம்
ரஷ்யாவின் ISD கோட் எண்.
10.ஜெஃப்ரி பாய்காட்.
11.ஜார்ஜ் வாஷிங்டன்,தாமஸ் ஜெஃபெர்சன்,
த்யோடர் ரூஸ்வெல்ட் மற்றும் ஆப்ரஹாம் லிங்கன்.
12.லெசோத்தோ(Lesotho) தென் ஆப்பிரிக்காவால் சூழப்பட்டிருக்கிறது.
13.போலோ.

அக்னி
03-06-2007, 12:19 PM
பயனுள்ள தகவலுக்கு நன்றி சிவா.ஜி...
ஆனால்,
கேள்விகளின் கீழ் பதில்களை இரு நிறங்களைப் பாவித்து பதிந்தால் வாசிக்க இன்னும் இலகுவாக இருக்கும் என எண்ணுகின்றேன்...

அத்துடன் 11 கேள்விகளும், 13 பதில்களும் உள்ளன. கவனத்திற்கொள்ளவும்.

சிவா.ஜி
03-06-2007, 12:30 PM
தவறுக்கு மன்னிக்கவும் அக்னி.இப்போது திருத்திவிட்டேன்.நன்றி.

lolluvathiyar
03-06-2007, 12:33 PM
பதல்கள் மற்றவர் தரும்படி செய்திருக்கலாம் சிவா
ஒரு சிறு திருத்தம் 007 என்பதன் அர்த்தம்
பிரிட்டிஷ் போலிஸ்லில் ஒவ்வொரு போலீசுக்கும் கோட் நம்பர் தந்திருப்பார்கள்

அந்த நம்பரில் 00 என்று தொடங்கும் நம்பர்கள் கொண்ட போலீஸ் அதிகாரிகள்
அனுமதி இல்லாமல் யாரையும் கொல்ல முடியும் (Licence to Kill)
இதன் அடிபடையில் தான் இவான் பிளெம்மிங்ஸ் ஜேம்ஸ் பாண்ட் என்ற தன் கதாபாத்திரத்துக்கு 007 என்ற பெயரிட்டார்

சிவா.ஜி
03-06-2007, 12:37 PM
நான் படித்ததில் இப்படித்தான் இருந்ததால் எழுதிவிட்டேன்.உங்கள் பதிவைப்பார்த்து சரியான பதிலை நன்பர்கள் தெரிந்துகொள்வார்கள்.(வாத்தியார்ன்னா சும்மாவா...)

அக்னி
03-06-2007, 12:40 PM
தவறுக்கு மன்னிக்கவும் அக்னி.இப்போது திருத்திவிட்டேன்.நன்றி.

ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதிலை அதன்கீழேயே தந்தால் வாசிக்க இலகு என்று சொன்னேன். போட்டியில்லை என்பதால், அவ்வாறு அமைவது, நன்றல்லவா..?

அக்னி
03-06-2007, 12:40 PM
லொள்ளுவாத்தியாரின் திருத்தத்திற்கும், விளக்கத்திற்கும் நன்றிகள்...

அமரன்
03-06-2007, 01:40 PM
பதல்கள் மற்றவர் தரும்படி செய்திருக்கலாம் சிவா
ஒரு சிறு திருத்தம் 007 என்பதன் அர்த்தம்
பிரிட்டிஷ் போலிஸ்லில் ஒவ்வொரு போலீசுக்கும் கோட் நம்பர் தந்திருப்பார்கள்

அந்த நம்பரில் 00 என்று தொடங்கும் நம்பர்கள் கொண்ட போலீஸ் அதிகாரிகள்
அனுமதி இல்லாமல் யாரையும் கொல்ல முடியும் (Licence to Kill)
இதன் அடிபடையில் தான் இவான் பிளெம்மிங்ஸ் ஜேம்ஸ் பாண்ட் என்ற தன் கதாபாத்திரத்துக்கு 007 என்ற பெயரிட்டார்
உண்மைதான். அவர் அக்குழுவில் எழாவது அதிகாரி. அதனால் அவருக்கு 00 உடன் 7 உம் சேர்ந்துகொண்டது.

அமரன்
03-06-2007, 01:42 PM
ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதிலை அதன்கீழேயே தந்தால் வாசிக்க இலகு என்று சொன்னேன். போட்டியில்லை என்பதால், அவ்வாறு அமைவது, நன்றல்லவா..?
இதையேதான் நானும் சொல்கின்றேன். வினாவில் கீழேயே பதிலைப் பதியுங்கள். அப்படி இல்லாது போட்டியாக நடத்த விரும்பின் வினாவை முதன்நாளும் பதிலை அடுத்தா நாளும் பதியுங்கள். இப்படியான பயனுள்ள தகவல்களை தொடர்ந்து தாருங்கள் சிவா.

சிவா.ஜி
03-06-2007, 01:45 PM
ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதிலை அதன்கீழேயே தந்தால் வாசிக்க இலகு என்று சொன்னேன். போட்டியில்லை என்பதால், அவ்வாறு அமைவது, நன்றல்லவா..?
உண்மைதான்.ஒரு சிறு இடைவெளி விட்டால் படிக்கும்போதே அதற்கு பதில் யோசிப்பவர்களுக்கு கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்குமே என்பதால் அப்படி கொடுத்துவிட்டேன்.

அக்னி
03-06-2007, 01:46 PM
தனக்கென ஒரு ஸ்ரைலை, தனக்கென ஒரு அறிமுக இசையை, தனக்கென ஒரு இலக்கத்தை, தனக்கென ஒரு ரசிகர்களை கொண்ட ஒரு மனிதனாய்ப் பிறக்காத நடிகன் ஜேம்ஸ்பாண்ட் என்றால், உண்மையானதுதான்.

அக்னி
03-06-2007, 01:49 PM
உண்மைதான்.ஒரு சிறு இடைவெளி விட்டால் படிக்கும்போதே அதற்கு பதில் யோசிப்பவர்களுக்கு கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்குமே என்பதால் அப்படி கொடுத்துவிட்டேன்.
அப்படியானால் விடைகளை வெள்ளை நிறமாக்கிவிடுங்கள். அப்போது, தெளிவில்லாமல் இருக்கும். தேவையானபோது அந்த விடையை தெரிவு செய்துபார்க்கும் போது தெளிவாகத் தெரியும்...

உதாரணமாக...
இப்படி

சக்தி
03-06-2007, 01:51 PM
தனக்கென ஒரு ஸ்ரைலை, தனக்கென ஒரு அறிமுக இசையை, தனக்கென ஒரு இலக்கத்தை, தனக்கென ஒரு ரசிகர்களை கொண்ட ஒரு மனிதனாய்ப் பிறக்காத நடிகன் ஜேம்ஸ்பாண்ட் என்றால், உண்மையானதுதான்.

இதில் ஏது உள்குத்து இருக்கிர மாதிரி இருக்கே அக்னி, உண்மையா?:violent-smiley-034:

சிவா.ஜி
03-06-2007, 01:54 PM
அப்படியானால் விடைகளை வெள்ளை நிறமாக்கிவிடுங்கள். அப்போது, தெளிவில்லாமல் இருக்கும். தேவையானபோது அந்த விடையை தெரிவு செய்துபார்க்கும் போது தெளிவாகத் தெரியும்...

உதாரணமாக...
இப்படி

நன்றி அக்னி. என் அடுத்த பதிவில் இதையே பின்பற்றுகிறேன்.

இதயம்
03-06-2007, 01:59 PM
கேள்வி ஒன்றை எழுப்பும் போது அதற்கான விடை உடனே தெரிந்து விட்டால் அதில் எந்த சுவராசியமும் இருக்காது. அதனால் சிவா.ஜி ஆரம்பத்தில் செய்த முறைதான் எனக்கு சரியாக தோன்றுகிறது.

அக்னி அவர்கள் சொன்னது போல் வெண்ணிறத்தில் இட்டாலும் விடை தெளிவாகவே தெரிகிறது. மற்ற நண்பர்களும் தங்கள் கருத்தை தெரிவிக்கவும்.

அக்னி
03-06-2007, 11:21 PM
இதில் ஏது உள்குத்து இருக்கிர மாதிரி இருக்கே அக்னி, உண்மையா?:violent-smiley-034:
உள்குத்தும் இல்லை. வெளிக்குத்தும் இல்லை. ஜேம்ஸ்பாண்ட் என்பது உண்மையிலேயே கற்பனைதானே. அப்படியானால் நான் சொன்னதில் ஏது தவறு..?

அக்னி அவர்கள் சொன்னது போல் வெண்ணிறத்தில் இட்டாலும் விடை தெளிவாகவே தெரிகிறது. மற்ற நண்பர்களும் தங்கள் கருத்தை தெரிவிக்கவும்.
எது எப்படியோ, சிறந்த திரியாகப் பயணிக்கவேண்டும். இதயம் அவர்கள் சொல்வதும் ஏற்புடையதே...