PDA

View Full Version : குளிர்பானங்களால் காத்திருக்கும் பயங்கரசூரியன்
03-06-2007, 09:59 AM
லண்டன் : குழந்தைகள் அதிகளவில் குளிர்பானங்கள் குடிப்பது பெரும் ஆபத்தை ஏற் படுத்தும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.கண்ணாடி பாட்டில், பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் டின்களில் அடைத்து குளிர்பானங்கள் விற்கப்படுகின்றன. இதே போல, ஜாம், பழச்சாறுகளும் பாட்டில்கள் மற்றும் டப்பாக்களில் அடைத்து விற்கப்படுகின்றன.இவை நாள் கணக்கில் ஸ்டாக் வைத்து விற்கப்படுகின்றன. எனவே, இவை ஈஸ்ட், பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்றவற்றால் கெட்டுப் போகாமல் தடுக்க, சோடியம் பென்சோயேட் என்ற ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இந்த ரசாயனம் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று இப்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.பிரிட்டனில் உள்ள ஷெப்பீல்ட் பல்கலைக்கழக ஆய்வகத்தில் இது குறித்து ஆய்வு நடத்திய பீட்டர் பைப்பர் என்ற விஞ்ஞானி அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளார். பீட்டர் பைப்பர் கூறியதாவது,குளிர்பானம் மற்றும் உணவுப் பொருள் கெட்டுப் போகாமல் தடுப்பதற்காக சேர்க்கப்படும் சோடியம் பென்சோயேட், கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை. இவை டி.என்.ஏ., அணுக்களில் உள்ள மைட்டோகாண்ட்ரியா என்ற பகுதியை பாதிக்கின்றன. மைட்டோகாண்ட்ரியா தான் இந்த அணுக்களுக்கு ஆக்சிஜன் பெற்றுத் தருகிறது. இவை கடுமையாக பாதிக் கப்படும் போது, டி.என்.ஏ., அணுக் களை முடக்கிவிடும். இதனால், பார் கின் சன்ஸ் மற்றும் நரம்பு தொடர் பான கடுமையான நோய்கள் ஏற்படக்கூடும். சோடியம் பென்சோயேட், கல்லீரலையும் பாதிக்கக்கூடியது.சோடியம் பென்சோயேட் குறித்து ஐரோப்பிய யூனியனிலும், அமெரிக்காவிலும் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் நடத்திய ஆய்வுகள் மிகப் பழமையானவை. தற்போதைய நவீன ஆராய்ச்சி முறையில் பரிசோதிக்கும் போது தான், அந்த பழைய ஆய்வுகள், போதுமான பாதுகாப்பு கொண்டது அல்ல என்பது தெரிய வந்துள்ளது.பெரியவர்களை விட, குழந்தைகள் அதிகளவில் இத்தகைய குளிர்பானங்கள், ஜாம் மற்றும் பழச்சாறுகளை அதிகளவில் விரும்பி சாப் பிடுகின்றனர். அதிகளவில் இவற்றை உட் கொள்ளும் போது எதிர்காலத்தில் கடுமையான நோய்களுக்கு அவர்கள் ஆளாகக் கூடும். அந்த குழந்தைகளை நினைத்தால் தான் எனக்கு கவலையளிக்கிறது.இவ்வாறு பீட்டர் பைப்பர் தெரிவித்துள்ளார்.

தங்கவேல்
03-06-2007, 02:04 PM
பகாசுர குளிர்பான கம்பனிகள் தரும் காசைக்கொண்டு நாங்கள் வைத்தியம் பார்த்துக்கொள்வோம் அய்யா. விசத்தையே கொடுத்தாலும், எங்களது உள்ளம் கவர் கனவுக்கன்னி சொல்லி விட்டதால், குடிப்போம்.

சூரியன்
04-06-2007, 07:57 AM
பகாசுர குளிர்பான கம்பனிகள் தரும் காசைக்கொண்டு நாங்கள் வைத்தியம் பார்த்துக்கொள்வோம் அய்யா. விசத்தையே கொடுத்தாலும், எங்களது உள்ளம் கவர் கனவுக்கன்னி சொல்லி விட்டதால், குடிப்போம்.அப்ப உங்களை திருத்த முடியாது

மனோஜ்
04-06-2007, 08:06 AM
மக்களுக்கு எனந்த சென்னாலும் மன்டையில் ஏறாது
ஓ அப்படியா என்று கேட்டு மீன்டும அதை தான் செய்வார்கள்
தகவலுக்கு நன்றி

lolluvathiyar
04-06-2007, 09:39 AM
மிக அருமையான தகவல்இவை ஈஸ்ட், பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்றவற்றால் கெட்டுப் போகாமல் தடுக்க, சோடியம் பென்சோயேட் என்ற ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இந்த ரசாயனம் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று இப்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

அது இன்று கண்டுபிடிக்க பட்டதல்ல
நீண்ட நாளுக்கு முன் நமது இந்திய ஆயுர்வேத மருத்துவர்களா கண்டுபிடிக்க பட்டு எச்சரிக்க பட்டது.

அவர்கள் கெமிக்கல் பெயரை குறிப்பாக சொல்லவில்லை. ஆனால் ஆயுர்வேத மருத்துவம் கூறுவது
எதையும் அடைத்து (Tinned Food) பாதுகாக்க சில பயன்படுத்த படும் பொருள்கள் (Preservatives)
அனைத்தும் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்று கூறபட்டிருக்கு.

இன்னும் துள்ளியமாக சொல்ல வேண்டுமானால் கிருமிகளை அனட விடாத உணவு பொருட்கள்
விசம் கலந்ததாக இருக்க வேண்டும் என்று கூறபட்டிர்க்கு

ஆயுர் வேதம் உப்புகண்டம், ஊறுகாய் கூட ஆபத்தானது என்று கூறுகிறது

இன்பா
05-06-2007, 12:55 PM
நான் எப்பொது சாஃப் டிங்க்ஸ் எடுத்துக்கொள்வதில்லை
உடலுக்கு கேடு என்பதால் அல்ல...

மிகவும் குறைந்த மூலப் பொருட்க்கள் கொண்டு
தயாரிக்கும் பானம் அந்னியனுக்கு அதிக லாபம்
ஈட்டித் தருகிறதே என்ற ஆதங்கத்தால்...

ஏன் பழச்சாறு எடுத்துக் கொள்ள கூடாது...?
உடல் ஆரோக்கியம் மட்டும் அல்லாமல்
எத்தனை குடும்பங்கள்(இந்திய) வாழும் அதனால்...

யோசிக்க வேண்டும்...

ஜோய்ஸ்
06-06-2007, 06:13 AM
செயற்க்கையாக இரசாயன கலப்பால் செய்யப்படும் அத்தனையிலும் விசமே விஞ்சி இருக்கிறது என்கிறது தமிழ் நாட்டு வைத்தியம்.

ஆனால் இந்த நவ நாகரீக யுகத்தில் தவிர்ப்பதுதான் மிகப் பெரும்பாடாக அமைந்து விடுகிறது.
தவிர்த்தல் நலம் பயக்கும்.

தங்கவேல்
07-06-2007, 10:35 AM
ஆமா ஆமா சூரியன். நாங்க திருந்தவே மாட்டோம். மாட்டோம்...
எங்களை என்ன தான் பண்ண சொல்லுறீங்க. ராதிகாக்கா சொல்லுச்சு , சுகாதாரமா உருவாக்கப்படுகிறது என்று.. நாம இப்போ ராதிகாக்கா சொல்லுறதை தானே செய்கிறோம்... பார்கிறோம். அதன் படி வாழ முயற்ச்சி செய்கிறோம்.

நம்ம அரசாங்கம் இதை பத்தி ஒன்னும் சொல்ல வில்லையே. தடையும் பண்ணலையே...

ஜெயாஸ்தா
07-06-2007, 10:46 AM
இந்த விசயத்தில் ஓரளவுக்கு கேரள நண்பர்களை பாராட்டலாம். இதுமாதிரி விசயங்களில் அவர்கள் ஓரளவுக்கு விழிப்புடன் இருக்கிறார்கள். ஆனால் நம்மவர்கள்தான் ரொம்ப மோசம். நான் எப்போதுமே தேநீர்தான் அருந்துகிறேன். 'செயற்கைமுறை வேதி குளிர்பானங்களை' அருந்துவதேயில்லை. அது நண்பர் வரிப்புலியின் கூற்றுபடி பழச்சாறு எடுத்துக்கொள்கிறேன்.

பூச்சிக்கொல்லி விசயம் வெளிவருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, தினமலர்- வாரமலர் அந்துமணி இதைபற்றி ஒரு கட்டுரை மூலம் எச்சரித்திருந்தார். இத்தகைய குளிர்பானங்களிலுள்ள 'சிட்ரிக்அமிலம்' நம் உடலின் எலும்புகளின் மஜ்ஜைகளிலுள்ள இரத்தசிவப்பணுக்களை கொன்றுவிடக்கூடியதாம்.

இதயம்
07-06-2007, 12:49 PM
நம்ம அரசாங்கம் இதை பத்தி ஒன்னும் சொல்ல வில்லையே. தடையும் பண்ணலையே...

அரசாங்கம் என்பது யார்..? கலைஞரா..? மன்மோகன் சிங்கா..? யாருமே இல்லை..!! மக்கள் தான் அரசாங்கம். ஒவ்வொரு குடிமகனும் ஆட்சி நடத்தினால் குளறுபடி வரும் என்று தான் சிறப்பானவர்களை தேர்ந்தெடுத்து நம் பிரதிநிதிகளாக அதிகாரம் கொடுத்து பதவிகளில் உட்கார வைக்கிறோம். அவர்களை தட்டிக்கேட்கும் அதிகாரம் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. தட்டிக்கேட்கும் முன் அந்த தவறை குறித்த சிந்தனையில் குடிமக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். ஆனால், நாம் தான் ஜாதி, மதம், மொழி, இனம் என்ற பெயரால் சிதறி கிடக்கிறோம். அது அந்த தவறை செய்து பணம் சம்பாதிக்கும் சுயநலவாதிகளுக்கு ஏதுவாகிறது. நம்மிடம் புரட்சி குணம் குறைந்து விட்டது. சுயநலம் பெருகிவிட்டது. தீமை எதிரான எண்ணம் மாறிவிட்டது. அரசு சொத்துக்கள் சேதமாக்கப்பட்டால் நமக்கென்ன என்று போகிறோம். ஆனால், அதில் நமக்கு பங்கிருக்கிறது என்பதை மறந்து விடுகிறோம். இப்படி ஒவ்வொருத்தனும் நினைக்கும் போது தனி மனிதனின் இழப்பு கொஞ்சமாக இருக்கலாம். ஆனால், மொத்த இழப்பாக பார்க்கும் போது பெரும் இழப்பு. அது தான் பிறகு நமக்கு வரி ஏற்றம், விலை வாசி கூடுதல் என்ற வகையில் நம்மை நசுக்குகிறது. ஆனால், அப்போதும் நாம் அதை உணர்வதில்லை. அரசை திட்டிவிட்டு அன்றாட வேலை செய்ய கிளம்பி விடுகிறோம்.

ஜனநாயகம், சுதந்திரம் என்ற பெயரில் நாம் நிகழ்காலத்தை நிர்மூலமாக்குகிறோம், எதிர்கால சந்ததிகளுக்கு சத்தமில்லாமல் தீமை செய்து கொண்டிருக்கிறோம். குளிர்பானத்தில் நச்சுப்பொருள் இருப்பதை கண்டுபிடித்தவுடன் எத்தனை போர் எதிர்த்து போராடினோம்..? அரசாங்கம் தடை செய்யாவிட்டால் எத்தனை பேர் போராடி சிறை செல்ல தயாராக இருக்கிறோம். அது உடம்புக்கு கெடுதல் என்று தெரிந்தும் இன்றும் கொஞ்சம் கூட சிந்திக்காமல் குடிக்க கோக், பெருமைக்கு பெப்சியும் தானே உபயோகப்படுத்துகிறோம். அயல்நாட்டு மோகம், ஆடம்பர மோகம், சினிமா மோகம் எல்லாம் சேர்ந்து நம்மை சீரழித்துக் கொண்டிருக்கிறது. இப்படி எழுதித்தான் ஆற்றாமையை தீர்க்க வேண்டியிருக்கிறது. வேறு என்ன செய்ய..?

jasmin
13-06-2007, 06:35 AM
இதயம் - உண்மைதான் ஐயா!

Annamalai
13-06-2007, 06:39 AM
தகவலுக்கு நன்றி

maggi
13-06-2007, 01:33 PM
அரசாங்கம் என்பது யார்..? கலைஞரா..? மன்மோகன் சிங்கா..? யாருமே இல்லை..!! மக்கள் தான் அரசாங்கம். ஒவ்வொரு குடிமகனும் ஆட்சி நடத்தினால் குளறுபடி வரும் என்று தான் சிறப்பானவர்களை தேர்ந்தெடுத்து நம் பிரதிநிதிகளாக அதிகாரம் கொடுத்து பதவிகளில் உட்கார வைக்கிறோம். அவர்களை தட்டிக்கேட்கும் அதிகாரம் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. தட்டிக்கேட்கும் முன் அந்த தவறை குறித்த சிந்தனையில் குடிமக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். ஆனால், நாம் தான் ஜாதி, மதம், மொழி, இனம் என்ற பெயரால் சிதறி கிடக்கிறோம். அது அந்த தவறை செய்து பணம் சம்பாதிக்கும் சுயநலவாதிகளுக்கு ஏதுவாகிறது

உங்கள் கருத்து மிகவும் நியாயமானதே இப்படி நாம் பிளவுபட்டு கொண்டு இருக்கும் வரை எந்த முன்னேற்றமும் ஏற்பட வாய்ப்பே இல்லை. இந்த லட்சனத்தில் இந்தியா விரைவில் வல்லரசு ஆக போகிறதாம் ( இது ஒரு சாரார் கூறி வரும் கருத்து)