PDA

View Full Version : எனது முயற்சிகள்!



சூரியன்
02-06-2007, 02:58 PM
இது எனது 200றாவது பதிப்பு. இதை பதிப்பதுக்குள் எத்ததை போராட்டங்கள் எத்தனை தவறுகள் எப்படியோ அது எல்லாம் கனவுகள் போல் ஓடிவிட்டது இனி மேல் நன்மைகள் மட்டும் உண்டாகட்டும்.



உங்கள் மனதில்
துரோகம் என்று
பட்டது பட்டது தான்
ஆனால்,அலை
கரைக்கு வந்து
சென்று விட்டால்
திரும்பி வராமல்
இருக்காது நான்
அது போல் தான்
உங்களுடன் என்றும்யிருப்பேன்.... :natur008:

ஆதவா
03-06-2007, 01:11 AM
வணக்கம் மிக்கி..

தமிழ் கவிதைகளில் சில சவுகரியங்கள்.... இலக்கண ரீதியாக சொன்னால் வஞ்சப் புகழ்ச்சி. ஆத்திரத்தைக் கொட்டும்போது அவற்றை ஆத்திரமற்ற கவிதை என்று கூட சொல்லலாம்.. உதாரணத்திற்குச் சொன்னேன். உங்கள் கவிதைகள் இரண்டு வகை அர்த்தம் கொடுக்கிறது... நான் எடுத்துக் கொண்ட அர்த்தம் ஒரு வகை. கவிதையின் உண்மை அர்த்தம் வேறு வகை.

வார்த்தைகளைக் கொட்டினால் கவிதை வரும். வார்த்தைகளைத் திட்டினால் அருவா வரும் :D சும்மா சோக்குக்கு....

உமது கவிதைப் பொருள் புரிந்தது. அழகாக இருக்கிறது. மேலும் இதேமாதிரி எழுதுங்கள்.. புரிந்துகொள்ளும்படியாகவே!!!

சூரியனோட முதல் கவிதை இப்படி சூடாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.... நடக்கட்டும்..

வார்த்தைகளுடைய அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள்.. பூமியிலுள்ள நுண்ணிய பொருள்கள் சூரியனின் கண்ணுக்குத் தெரியாது. ஆனால் அதை மிக எளிதில் கண்டுபிடிக்கும் எறும்பினங்கள்... புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

சிவா.ஜி
03-06-2007, 04:42 AM
ஆமாம் மாலையில் மறைந்தாலும் மீண்டும் காலையில் வந்துவிடும் சூரியன்.எப்போதும் இயங்கிக்கொண்டிருக்கும் சூரியனைப்போல் இயக்கத்திலேயே இருங்கள் இந்த இயக்கியத்திலேயே இருங்கள்.கவிதைக்கு வாழ்த்துக்கள்.

அக்னி
03-06-2007, 01:40 PM
தெளிந்த மனம், சரியான பாதையில் உங்களை அழைத்துச் செல்லும்...

மேலும் மேலும் பல பதிவுகள் தந்து அனைவருக்கும், பிடித்தமானவராக மன்றத்தில் ஜொலிக்க வாழ்த்துகின்றேன்...

அமரன்
03-06-2007, 06:25 PM
சூரியன் கவிதைக்கு வாழ்த்துகள். கரைக்கு வந்து சென்றுவிட்டால் திரும்பி வராது இருக்காது அலைகள் என்ற வரி உண்மைதான். வருடிச்செல்லும் அலைகள் இதமானவை. சுகமானவை. காதலர்கள் கால் நனைத்து காதல் மொழி பேசுவதும் அதே அலைச்சாரலில்தான். சிறார்கள் துரத்திப்பிடித்து விளையாடுவதும் அதே அலைகளுடனேயே..... விளையாடுக்காட்டும் அலையாக இருந்துவிடுங்கள்....வருடிச்செல்லும் அலைகளாக இருந்து விடுங்கள். உயிர்குடித்த சுனாமி அலையாகிவிடாதீர்கள்.
உங்களுடன் என்றும்
இணைந்திருக்கும்
நண்பன்