PDA

View Full Version : நீ இல்லா இரவுகள்



சிவா.ஜி
02-06-2007, 11:05 AM
நீ இல்லாத இரவில்
கனவுகளின் வரவு இல்லை
தூக்கத்தினோடு எனக்கு உறவு இல்லை!
உன் நினைவுகளின்
சுமை ஏந்தி இமைகளில் வீக்கம்
இரவுகளில் எனக்கேதடி தூக்கம்!
அம்மா வீடென்ன அயல்நாட்டிலா இருக்குது
ஐந்துநாள் பிரிவு என்னை இங்கு உருக்குது
ஏக்கத்தில் தவிப்பது
தூக்கத்துக்கல்ல பெண்னே
நீ வந்துவிட்டால் மட்டுமென்ன
தூங்கவா போகிறேன் கண்னே!

இதயம்
02-06-2007, 11:14 AM
கவிதையின் உருவகப்பொருள் என்ன என்பதை தலைப்பாக இட்டால் சிறப்பாக இருந்திருக்குமே..!!

சிவா.ஜி
02-06-2007, 11:17 AM
'அம்மா வீடென்ன அயல்நாட்டிலா இருக்குது'
இதில்தான் உருவகப்பொருள் இருக்கிறது இதயம் அவர்களே.

அக்னி
02-06-2007, 11:25 AM
விரகதாபத்தை கண்ணியத்தோடு கவியாக்கிய சிவா.ஜி அவர்களுக்கு பாராட்டுக்கள்...

சுட்டிபையன்
02-06-2007, 11:39 AM
நல்ல கவிதை

பாராட்டுக்கள்

ஆதவா
02-06-2007, 11:55 AM
பிரிதலில் ஏக்கம்
கவிதையில் தாக்கம்.

கணவனுக்குத் தேவையான ஒன்று அவள் எடுத்துச் சென்றிருக்கவேண்டும். இதயமாக அது இருக்கலாம்.. எதுவுமாகவும் இருக்கலாம். இமைகளின் வீக்கம் இரவில் இல்லா தூக்கங்கள் காதலைக் குறிப்பதாகத் தெரியவில்லை. கவிதை முழுக்க வாசனை தூக்குகிறது. அது எந்த வாசனை என்றூ நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

மொத்தத்தில் எம்மோடு க.கா கவிதை எழுத ஒரு ஆள் தயார் என்று நினைக்கிறேன்.. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் மக்களே?

ஆதவா
02-06-2007, 11:56 AM
நல்ல கவிதை

பாராட்டுக்கள்

நல்ல கவிதைனுதான் தெரியுமாச்சே!! அதுல ரெண்டு வரி பாராட்டு மட்டும் போதுமாங்க சுட்டி?? ரெண்டு வார்த்தை சேர்த்து போடுங்கள்... எழுதியவருக்கும் ஊக்கமாக இருக்குமல்லவா?

இதயம்
02-06-2007, 12:24 PM
'அம்மா வீடென்ன அயல்நாட்டிலா இருக்குது'
இதில்தான் உருவகப்பொருள் இருக்கிறது இதயம் அவர்களே.

அதில் உருவகப்பொருள் சொல்லப்படவில்லை. தலைப்பு மாற்றத்திற்கு பிறகு கவிதை தனித்தன்மையுடன் தெரிகிறது. கொஞ்சம் எல்லை தாண்டியிருந்தால் பண்பட்டவர்கள் பதிவுகளுக்கு போயிருக்கும். பிழைத்தீர்கள்..!!

நல்ல கவிதைக்கு பாராட்டுக்கள்..!!

சிவா.ஜி
02-06-2007, 01:01 PM
இதயம்,அக்னி,சுட்டி மற்றும் ஆதவா அனைவருக்கும் நன்றி. அதென்ன ஆதவா க.கா? தெரிந்துகொள்ள ஆசை.

இதயம்
02-06-2007, 01:16 PM
இதயம்,அக்னி,சுட்டி மற்றும் ஆதவா அனைவருக்கும் நன்றி. அதென்ன ஆதவா க.கா? தெரிந்துகொள்ள ஆசை.
பண்பட்டவர் பகுதிக்கு போனால் புரியும்..!!

சிவா.ஜி
02-06-2007, 01:44 PM
எனக்கு அனுமதியில்லை ஐயா.

ஆதவா
02-06-2007, 01:45 PM
விரைவில் கிடைக்கும் சிவா..

சிவா.ஜி
02-06-2007, 01:48 PM
நன்றி ஆதவா உங்கள் படைப்புக்களை படிக்க ஆர்வமாய் இருக்கிறேன்.

சக்தி
02-06-2007, 01:49 PM
ஆதவருக்கு ஒரு நல்ல துணை கிடைத்து விட்டார் என்றே நினைக்கிறேன்

அமரன்
02-06-2007, 08:59 PM
பிரிதலில் ஏக்கம்
கவிதையில் தாக்கம்.

கணவனுக்குத் தேவையான ஒன்று அவள் எடுத்துச் சென்றிருக்கவேண்டும். இதயமாக அது இருக்கலாம்.. எதுவுமாகவும் இருக்கலாம். இமைகளின் வீக்கம் இரவில் இல்லா தூக்கங்கள் காதலைக் குறிப்பதாகத் தெரியவில்லை. கவிதை முழுக்க வாசனை தூக்குகிறது. அது எந்த வாசனை என்றூ நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

மொத்தத்தில் எம்மோடு க.கா கவிதை எழுத ஒரு ஆள் தயார் என்று நினைக்கிறேன்.. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் மக்களே?
ஆமாம் ஆதவா இதை அங்கேதான் மாற்றவேண்டும் போலுள்ளது. அவருக்குத்தான் அனுமதி கிடைத்துவிட்டதே!

அமரன்
02-06-2007, 09:02 PM
மனைவியைப் பிரிந்த ஏக்கம் அழகாகச் சொல்லி விட்டீர்கள் சிவா. அவளைப் பிரிந்து வாடும்போது ஏது தூக்கம். தூக்கமில்லாதபோது ஏது கனவு. தூங்காமல் வீங்கிய இமைகளை உங்களவளை ஏந்துவதாக உருவகப்படுத்தி கலக்கிவிட்டீர்கள். தொடருங்கள்.

சிவா.ஜி
03-06-2007, 04:37 AM
நான் உணர்ந்ததை நீங்களும் உணர்ந்து எழுதியதற்கு மிக்க நன்றி அமரன்.

rocky
07-06-2007, 03:49 PM
கவிதை மிகவும் அருமையாக இருந்தது. முதலில் இது ஒரு காதல் கவிதை என்றே நினைத்தேன் கடைசி நான்கு வரிகளில்தான் தெரிந்தது அது நாகரீகமாகவும் இலைமறை காயாக சொல்லப்பட்ட கவிதை என்று புரிந்தது. மிகவும் அருமை நண்பரே.

சிவா.ஜி
09-06-2007, 04:52 AM
நல்லதொரு பின்னோட்டத்திற்கு மிக்க நன்றி ராக்கி.உங்களின் அடுத்த கவிதையை காண ஆவலாக உள்ளேன்.