PDA

View Full Version : என் இயலாமையின் மீது ஓர் வீடு பயணிக்கிறது



அகத்தியன்
01-06-2007, 07:09 PM
ஓர் நீண்ட கனவின்
பாடு பொருள் என எண்ணிக்கொள்வேன்.
கனத்த துயரம் என்னை அமிழ்த்த
இயலாமை இன்னும் வீடொன்றினை சுற்றிக்கண்ணடிக்கும்.

அம்மா சொல்வாள்-
''எல்லோரும் வீடு கட்டியிருக்கிறார்கள்,எம்மை தவிர'' என,
அவள் கண்களின் வெறுமை என்னை வறட்சியாக்கும்.
ஊர் கூடிச் சிரிக்கும பிரமை
என் இயலாமையின் மீது ஓர் வீடு பயணிக்கிறது

தங்கைகளின் தூக்கப் பெருமூச்சுக்கள்
என் தளைகளை அறுக்க தவிக்கும்
ஆனாலும்
விதி நின்று சிரிக்கும்-சூழ்நிலைகளை பாடி,
என் விடுதலை நாட்கள் தூரப்போவதை சொல்லி....
கைபிசைந்து இயலாமை
விட்டம் பார்த்து வெறிக்க மட்டும் அனுமதிக்கும்.

ஒவ்வொரு பொழுதுகளும்,
வெவ்வேறு வீடுகளுடன் கனவாய் கழியும்.
என் விலங்குகள் பார்த்து சிரித்துக்கொள்வேன்.

எட்டிப்பிடிக்க எண்ணும்,
என் விடுதலை காலங்கள் தள்ளிச்செல்லும்.

வெறுமைகளின் எல்லை விசாலமாக
இன்னும் என் இயலாமை மீது ஓர் வீடு பயணிக்கிறது

வெறுமை களைந்து,
தளையறுத்து,
வீடு பெறும் லட்சியங்கள் ஓயாது.
கூரைகள் வேயப்படும் வரை.

சிவா.ஜி
02-06-2007, 05:19 AM
சொந்த வீடு என்பது சுகம்.எல்லோருடைய வாழ்க்கை லட்சியம்.கற்களால் கட்டப்பட்டாலும் குடும்பத்தின் ஒரு அங்கமாகும்.மானம் மறைக்கப்படும் மகிழ்ச்சி திறக்கப்படும் ஒரு மந்திர கட்டிடம்.அனுபவித்தவன் என்ற முறையில் என்னை மிக பாதித்த கவிதை. பாராட்டுக்கள் அகத்தியன்.

அக்னி
04-06-2007, 12:07 AM
அனேகமானோருக்கு பிரச்சினையாக இருக்கும் ஓர் கருவை மையப்படுத்திய கவிதை...
எளிமையான வரிகளில் உணர்வு சொல்லிப் போகும் கவிதை...
பாராட்டுக்கள்...

அகத்தியன்,
கவிதைகளில் எளிமையைக் கொஞ்சம் கனதியாக்குங்கள்...
அது, உங்கள் கவிதைகளை, மேலும் அழகூட்டும்...

அகத்தியன்
04-06-2007, 04:25 PM
அகத்தியன்,
கவிதைகளில் எளிமையைக் கொஞ்சம் கனதியாக்குங்கள்...
அது, உங்கள் கவிதைகளை, மேலும் அழகூட்டும்...
தங்கள் பாராட்டுக்கும் அறிவுரைக்கும் நன்றி நண்பரே.

கவிதைகளில் கனதி போதாது என்கிறீரா?

அக்னி
04-06-2007, 07:31 PM
தங்கள் பாராட்டுக்கும் அறிவுரைக்கும் நன்றி நண்பரே.

கவிதைகளில் கனதி போதாது என்கிறீரா?

நண்பரே, நான் கவிதை எழுதுவதில் சாதாரணமானவன். தவறாக கொள்ளவேண்டாம் எனது கருத்தை. நான் தொட வேண்டிய சிகரம் கண்ணுக்கும் தெரியாத தொலைவில் எங்கோ உள்ளது.

உங்களது கவிதையில் கருவின் கனதி நிரம்பவே உள்ளது. ஆனால் கவிதைக்குரிய அலங்காரங்களை இன்னும் அதிகரித்தால், உங்கள் கவிதை மேலும் அழகு பெறும். அதைத்தான் அவ்வாறு குறிப்பிட்டேன். தவறானால், தகுதி மீறி இருந்தால் மன்னிக்கவும்.

நன்றி!

அகத்தியன்
05-06-2007, 05:05 PM
நண்பரே, நான் கவிதை எழுதுவதில் சாதாரணமானவன். தவறாக கொள்ளவேண்டாம் எனது கருத்தை. நான் தொட வேண்டிய சிகரம் கண்ணுக்கும் தெரியாத தொலைவில் எங்கோ உள்ளது.

உங்களது கவிதையில் கருவின் கனதி நிரம்பவே உள்ளது. ஆனால் கவிதைக்குரிய அலங்காரங்களை இன்னும் அதிகரித்தால், உங்கள் கவிதை மேலும் அழகு பெறும். அதைத்தான் அவ்வாறு குறிப்பிட்டேன். தவறானால், தகுதி மீறி இருந்தால் மன்னிக்கவும்.

நன்றி!
ஐயோ உங்கள் மன்னிப்பு என்னை ரொம்ப சங்கோஜப்படுத்துகிறது. உங்கள் அறிவுரைக்கு நிறைய நன்றி.
நண்பன் பிழைகளை தைரியமாய் சொல்வான் மன்னிப்பு கேட்க மாட்டான்.


உங்களது கவிதையில் கருவின் கனதி நிரம்பவே உள்ளது. ஆனால் கவிதைக்குரிய அலங்காரங்களை இன்னும் அதிகரித்தால், உங்கள் கவிதை மேலும் அழகு பெறும்.
நன்றி!
இருந்தும் உங்கள் கருத்துடன் நான் உடன்படேன்.
என்னை பொறுத்தவரையில்,
கவிதை எப்போதும் கதர் சட்டையைத்தான் விரும்புகிறது.

முடிந்தால் இது பற்றி ஏனைய நண்பர்களும் சொல்லலாமே.
நண்பர் அக்னிக்கு என் நன்றிகள்
உங்கள் விமர்சனங்களை இன்னும் எதிர்பார்க்கிறேன்.

அக்னி
05-06-2007, 06:01 PM
நண்பர் அக்னிக்கு என் நன்றிகள்
உங்கள் விமர்சனங்களை இன்னும் எதிர்பார்க்கிறேன்.
விமர்சனம் என்ற நிலைக்கு வர நான் இன்னும் வளர வேண்டும். ஆனால் எனது பார்வையில் பின்னூட்டங்கள் இயலுமானவரை இடுவேன்.

உங்கள் புரிதலும், கவிஞனுக்குரிய வணங்கா நெஞ்சமும் உங்கள் மேல் மதிப்பை அதிகரிக்கிறது...

அகத்தியரே தொடருங்கள்...

அதற்குமுன்,
கவிஞர்கள் அறிமுகம், தொகுப்பு (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=91)
இங்கே ஒரு அறிமுகத்தையும் போட்டுவிடுங்களேன். மற்றவர்களும் இனங்காண இலகுவாக இருக்கும்...

நன்றி!