PDA

View Full Version : மரணமே என்னை மன்னித்துவிடு



shangaran
01-06-2007, 06:26 AM
துரத்தும் உன் விழிகளால்
என் தூக்கம் தொலைந்ததடி,
நீ பிரிந்த துக்கமோ
தினம் எனை தூக்கிலிடுகிறது,
மரணமோ எனை மறுமணம்
செய்ய தூண்டுகிறது.

கண்மணியே, உனை சந்திக்க
ஒரு வாய்ப்பு கொடு
உனை நேசிக்க ஆணையிடு
பிஞ்சு விரலால் எனை மெல்லதொடு.

உன் இதழ் மீது இருக்கவிடு
உன்னில் தொலைத்த என்னை தேடவிடு
உன் அழகை ஆளவிடு
உன் மடிமீது எனை மாய்த்துவிடு
அதுவரை, மரணமே என்னை மன்னித்துவிடு.

thevaky
01-06-2007, 06:37 AM
ஆகா! மரணத்திடமும் மண்ணிப்பு கேட்கலாமா சங்கர். பாராட்டுக்கள்

விகடன்
01-06-2007, 06:53 AM
நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

ஆனால் எனக்கிரு வரி மட்டும் விளங்கிக்கொள்ள முடியவில்லை,

மரணமோ எனை மறுமணம்
செய்ய தூண்டுகிறது.

என்னும் வரியின் படி ஒருமுறை மரணித்தவராக அல்லவா காட்டுகிறது.

shangaran
01-06-2007, 07:03 AM
இங்கே நான் சொல்ல முற்படுவது என்வென்றால்,

காதலியை பிரிந்த துக்கம் அவரை மிகுந்த வேதனையில் ஆழ்த்துகிறது
(இதை தூக்கிலிடப்படும் வலியுடன் ஒப்பிட்டுள்ளேன்).
அதன் காரணமாக அவர் மரணத்தை மறுமணம் செய்ய விரும்புகிறார்,
அதாவது சாக முடிவெடுக்கிறார்.
(முதல் மணம் காதலியுடன், இரண்டாவதாக மரணத்துடன்)

பிழையிருந்தால் மன்னிக்கவும்...

lolluvathiyar
01-06-2007, 11:50 AM
சன்கரன் அருமை, மரனத்தை மறுமணம் செய்ய கேட்டு
அதற்க்கு கால அவகாசமும் கேட்டு, மண்னிப்பும் கேட்டு
பாராட்டுகிறேன்
பிடியுங்கள் 10 பொற்காசுகள்

அமரன்
01-06-2007, 03:34 PM
நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

ஆனால் எனக்கிரு வரி மட்டும் விளங்கிக்கொள்ள முடியவில்லை,

மரணமோ எனை மறுமணம்
செய்ய தூண்டுகிறது.

என்னும் வரியின் படி ஒருமுறை மரணித்தவராக அல்லவா காட்டுகிறது.
காதலியை அல்லது காதலனைப் பிரிந்த துக்கத்தில் அவர் மனதால் செத்திருக்கலாம். அதை முதல் மரணம் என்று உருவகப்படுத்தி இருக்கலாம். என நினைத்தேன். ஆனால் கவி படைத்தவர் வேறு காரணம் சொல்லிவிட்டாரே!

சிவா.ஜி
02-06-2007, 04:25 AM
உனை நேசிக்க ஆணையிடு...
உன் அழகை ஆளவிடு...
நேசிக்க ஆணையிடச்சொல்லி அவள் அழகை ஆள நினைக்கும் அனுகுமுறை மிக அழகு. வாழ்த்துக்கள் சங்கரன்

shangaran
04-06-2007, 04:23 AM
மிக்க நன்றி அமரன், லொல்லுவாத்தியார் & சிவா.ஜி

கேசுவர்
05-06-2007, 02:32 PM
காதலியின் பிரிவை அருமையாக சொல்லிட்டிங்க சங்கர்....
--
துரத்தும் உன் விழிகளால்
என் தூக்கம் தொலைந்ததடி,
------> உண்மையான வரி சங்கர்.