PDA

View Full Version : சானியா தோல்வி



Mathu
31-05-2007, 09:52 PM
சானியா மிர்ஷா இரண்டாவது சுற்றில் சேர்பியாவை சேர்ந்த இவாநோவிச் இடம் (6:1,6:4) தோல்வி.

இவரிடம் ஆட்டத்தில் இருக்கும் வேகத்துக்கு இணையாக விவேகம் இல்லை என்றே சொல்ல தோன்றுகிறது.
தரமான ஒரு பயிற்சியாளரை நாடினால் நிறைய முனேற்றம் காணலாம்.

ஆனால் இவாநோவிச் மிக வேகமாக முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் டீன்ஏஜ் ஆட்டக்காரர்.

அறிஞர்
31-05-2007, 09:53 PM
பல இடத்தில தோல்வி முகமாக இருக்கிறார்....

50 இடத்தை விட்டு இன்னும் முன்னேற வேண்டும்.

Mathu
31-05-2007, 09:58 PM
பல இளம் வீரர்கள் இப்போ முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்
இவர்களிடம் தாக்கு பிடிப்பதென்றால் கொங்சம் கஸ்டமான காரியம் தான்.
எனக்கு சரியான பயிற்சி இல்லையோ என்று தோன்றுகிறது.

ஓவியா
31-05-2007, 10:22 PM
ஆமாம் அவரூக்கு பயிற்சி பற்றாக்குறையாக இருக்க வாய்ப்புள்ளது. அடுத்த ஆட்டத்தில் பார்ப்போம்.

நன்றி மது.

சூரியன்
01-06-2007, 01:18 PM
இன்னும் முயற்சி செய்ய வேண்டும்

அமரன்
01-06-2007, 03:21 PM
சானியாவின் ஆட்டத்தில் தவறில்லை. சில ஷாட்கள் அவருக்குத் தனித்துவமானவை. நல்ல ஒரு பயிற்சியாளர் கிடைத்தால் இன்னும் நன்றாக வரக்கூடியவர்.

இன்பா
02-06-2007, 06:14 AM
அவர் திறமைக்கு மீறியே விளையாடுகிறார்...
இன்னும் நல்ல பயிற்ச்சி, முதிர்ச்சி வேண்டும் அதற்க்கு
அமரன் சொல்வதைப் போல நல்ல பயிற்ச்சியாளர் வேண்டும்...

ராஜா
02-06-2007, 06:26 AM
சானியாவிடம் ஆரம்பத்தில் இருந்த ஆர்வமும் ஈடுபாடும் இப்போது இல்லை.

அவர் விளம்பர பணத்தில் சுகம் கண்டுவிட்டார். இனி அவர் தேறுவது கடினம்.

டென்னிஸ் விளையாட்டில் தேவையானவை.. துல்லியம், எதிராளி பலவீனமறிதல், உடல் சக்தியைச் சீராகப் பயன்படுத்துதல்.. இடைவிடாப் பயிற்சி.
எல்லா விளையாட்டுகளுக்கும் இவையனைத்தும் தேவையென்றாலும் மகளிர் டென்னிசுக்கு அதிலும் இந்திய உடலமைப்புக்கு நான் மேற்சொன்னவை இன்றியமையாதவை..

ஆனால் நம் சானியாவிடம் இவை அனைத்தும் தேவையான அளவில் இல்லை.

எனவே சானியா பேரில் அதிக நம்பிக்கை வைக்காதீர்கள்..!

saguni
07-07-2007, 05:15 PM
ராஜா அவர்களே! உங்கள் வாதத்தில் விளம்பர மயக்கம் வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளலாம் ஆனாலும் சானியாவிற்கு ரசிகர் கூட்டம் கூடிக்கொண்டே போகிறதே கவனித்தீர்களா??