PDA

View Full Version : வார்டு தாய் -2



rajeshkrv
31-05-2007, 09:37 PM
வார்டு தாய் -2

மாலினிதேவியின் அறையில் மங்களம்மா நுழைந்தார். அங்கே பரிதாபமாக ஒரு பெண் இருப்பதை பார்த்து இந்த பெண்ணா ரமேசை கொல்ல முயற்சித்தாள் என வியந்தவாறே அவளருகே சென்றாள்
சத்தம் கேட்டவுடன் மாலினி மெல்ல கண் விழித்தாள். யாரும்மா நீங்க என மாலினி கேட்க
நான் இங்கே ஆயா வேலை பார்க்கிறேம்மா. ஒன்ன கவனிச்சிக்கிர சொல்லி டாக்டர் தம்பி சொல்லிச்சு என மங்களம்மா பதிலளித்தார்

ஒன்ன பார்த்தா நல்ல படிச்ச புள்ளையா இருக்கியே இதெல்லாம் என்ன தாயி.. என்ன நடந்துச்சி ..
என மங்கள்ம்மா கேட்ட அந்த ஒரு நொடியில் மாலினியின் முகத்தில் ஒரு சோகமும் கோபமும் வந்து போயிற்று ..
அவன் ஒரு ஒரு பொம்பள பொறுக்கி, அவன் மனுஷனே இல்லம்மா என மாலினி முகத்தை
கடூரமாக்கிக்கொண்டு கூற மங்களம்மா சரிம்மா நீ அலட்டிக்காதே இந்த ஜூஸ் குடி என பேச்சை மாற்றினார்.

ஜூஸை குடித்தவுடன் மாலினி சற்று தெளிவு பெற்றவள் போல் நீங்க இங்க எத்தனை வருஷமா வேலை செய்ரீங்க என மங்களம்மாவை பற்றி விசாரிக்க ஆரம்பித்தாள்

ஒரு 20 வருஷமா வேலை செய்றேம்மா .. என் வூட்டுக்காரருக்கு இங்கன தான் ஆபரேஸன் செஞ்சோம், அப்பொ தொட்டு இங்கன வேலை செய்றேன் .. பக்கத்துல தான் வூடு. ரெண்டு மவனுங்க.. அவனுகளும் மேஸ்திரி வேலை செய்ரானுங்க. அவரு வூட்டுல இருக்காரு. காலைல அவருக்கு எல்லம் செஞ்சு வைச்சுட்டு இங்கே வந்துருவேன். ரவைக்கு 10 மணிக்கு வூட்டுக்கு போவேன் அதுங்காட்டி இந்த ஆஸ்பத்திரி தான் என் வூடு என சிரித்துக்கொண்டே சொன்னார் மங்களம்மா

இங்க என்ன வேலையெல்லாம் செய்வீங்கம்மா என மாலினி மீண்டும் கேட்க எல்லா வேலையும் செய்வேம்மா
குளிப்பாட்ரது,ரூம் சுத்தம் செய்றது, மருந்து கரீக்டா குடிக்க வைக்கிறது, சின்ன பசங்கன்னா கதை சொல்றது,வாந்தி அள்ளரது,சாமிகிட்ட வேண்டிக்கிறது இப்படி எல்லாம்மா..

எப்பவாது இது பிடிக்காமபோயிருக்காம்மா என மாலினி கேட்க இல்லம்மா இதை நான் பிடிச்சுத்தான் செய்றேன் இதுல ஒரு திருப்தி எனக்கு. ஏதோ ஒரு குப்பத்துல பொறந்த இந்த மங்களத்த மங்களம்மா மங்களம்மான்னு இந்த ஆஸ்பத்திரியில அல்லாரும் கூப்பிடராங்களே அந்த அன்பு போதும்மா இன்னும் நல்லா தெம்பா வேலை செய்வேன் என உற்சாகாமாக மங்களம்மா கூறினார்

என்னபத்தி அல்லாமே உன்னாண்ட சொல்லிப்புட்டேன் , நீ சொல்லு ஒன்னப்பத்தி..
என பதில் கேள்வி கேட்டார்

நானா .. நான் ஒரு பாவப்பட்டவம்மா. நானு இந்த பெண்களுக்காக போராட்டம் நடத்துர பெண்ணுரிமை கழகத்தோட தலைவி அப்படி மத்த பெண்களுக்காக போராடற என்னோட வாழ்க்கையே போராட்டமாயிருச்சும்மா.. அந்த பாவி இருக்கானே அதாம்மா அந்த ரமேஷ் அவன் தான் என்னோட புருஷன்.புருஷன்ற பேருல ஒரு ராட்சசன். கல்யாணத்துக்கு முந்தியும் சரி, அப்புறமும் சரி பல பெண்கள அவன் சீரழிச்சிருக்கான் அதெல்லாம் பொறுக்கமுடியாம போன வருஷம் அவன்கிட்ட இருந்து விவாகரத்து வாங்கிட்டேன். இப்போ ஒரு 16 வயசு பொண்ணு இவனோட விசிறி அவளோட வாழ்க்கையில விளையாடிருக்கான். இவன எதிர்த்து புகார் செய்ய யாருக்கும் தைரியம் இல்ல அவ எங்கிட்ட வந்தா. அத கேட்கபோயி சண்டை முத்திருச்சு எனக்கு ஆத்திரம் தாங்காம அவன தள்ளிவிட்டேன் அவனே துப்பாக்கியால கைல சுட்டுகிட்டு எம்மேல பழி போட்டுட்டாம்மா..

அவனுக்கு அப்பா அம்மா யாருனா இருக்காங்களா என மங்களம்மா கேட்க இவன பெத்தவங்க உயிரோடு இருந்திருந்தா நானே கொன்னுருப்பேன் இப்படி ஒரு பிள்ளைய பெத்ததுக்கு என்ன செய்றது அவங்க எப்பவோ செத்துபோயிட்டாங்களாம்..
இருவரது உரையாடலை நர்ஸ் வந்து கலைத்தாள். மருந்து கொடுக்கும் சமயம் என்பதால் நர்ஸ் உள்ளே வர, மங்களம்மா அப்பால வந்து பாக்குறேன் என கூறி அறையிலிருந்து வெளியேறினார்

தொடரும்