PDA

View Full Version : முதல் கவிதை



rocky
31-05-2007, 04:50 PM
எனக்கும் கவிதை எழுத
ஆசை வந்தது - அதற்கு
அவள் காரணமல்ல,
அவளாயிருந்தால் அக்கவிதை அவளையோ
அல்லது என்னையோ சார்ந்திருக்கும்,
நாண் அனைவருக்கும் எழுத
ஆசைப்பட்டேன், விளைவு நான்
படித்துக் கிழித்ததை விட
எழுதிக் கிழித்தவைகளின் எண்னிக்கை
அதிகமாகிவிட்டது.

அமரன்
31-05-2007, 05:45 PM
ஆரம்பமே கவிதையா? வாழ்த்துகள் ராக்கி. முதல் கவிதையானாலும் சுவையான கவிதை. இங்கே கவிதைகள் சாகரமாக இருக்கின்றன. ஆழ்ந்து படித்து நாமும் கவியாகுவோம். கவிபடைப்போம்.

சூரியன்
01-06-2007, 01:00 PM
முதல் கவிதயே அமர்க்களம் போங்க

அக்னி
01-06-2007, 06:14 PM
எனக்கும் கவிதை எழுத
ஆசை வந்தது - அதற்கு
அவள் காரணமல்ல,
எப்படியோ அவள் வந்துவிட்டாள்...



அவளாயிருந்தால் அக்கவிதை அவளையோ
அல்லது என்னையோ சார்ந்திருக்கும்,
நாண் அனைவருக்கும் எழுத
ஆசைப்பட்டேன்,
ஆனாலும் அவளின் ஆதிக்கம் போகவில்லை...



விளைவு நான்
படித்துக் கிழித்ததை விட
எழுதிக் கிழித்தவைகளின் எண்னிக்கை
அதிகமாகிவிட்டது.
அப்போ நிச்சயமாக அவளுக்கானதேதான்...

மறுப்பில், மறுப்பதை வலியுறுத்தும் கவிதை...
உங்கள் கன்னிக் கவிதையா... அல்லது... தலைப்பு முதற்கவிதையா..?

எப்படியிருந்தாலும், வித்தியாசமான முயற்சி...
தொடருங்கள்... வளருங்கள்... கவருங்கள்...

சிவா.ஜி
02-06-2007, 05:03 AM
காதலில்லாமல் கவிதையா அதுவும் முதல் கவிதை என்றால் கேட்க்கவேண்டுமா? ஆனால் நீங்கள் எல்லோருக்குமாக கவிதை படைக்க வந்திருக்கிறீர்கள் கிழிக்கப்பட்டாலும் பரவாயில்லை தொடர்ந்து படையுங்கள்.வாழ்த்துக்கள்.

ஆதவா
02-06-2007, 05:18 AM
எனக்கும் கவிதை எழுத
ஆசை வந்தது - அதற்கு
அவள் காரணமல்ல,
அவளாயிருந்தால் அக்கவிதை அவளையோ
அல்லது என்னையோ சார்ந்திருக்கும்,
நாண் அனைவருக்கும் எழுத
ஆசைப்பட்டேன், விளைவு நான்
படித்துக் கிழித்ததை விட
எழுதிக் கிழித்தவைகளின் எண்னிக்கை
அதிகமாகிவிட்டது.

வாய்யா ராக்கி.. எடுத்த உடனே கவிதையா? சரி சரி...
கீழ்கண்டவாறு இந்த கவிதையை அடக்கிப்பாரு அப்போ தெரியும் கொஞ்சம் சுவை கூடியிருக்குமென்று..

எனக்கும் கவிதை எழுத
ஆசை வந்தது
அதற்கு அவள் காரணமல்ல,
அவளாயிருந்தால்
அக்கவிதை அவளையோ
அல்லது என்னையோ
சார்ந்திருக்கும்,
நான் அனைவருக்கும் எழுத
ஆசைப்பட்டேன்,
விளைவு ?
நான் படித்துக் கிழித்ததை விட
எழுதிக் கிழித்தவைகளின் எண்ணிக்கை
அதிகமாகிவிட்டது

முதல் கவிதையே டாப்.. ஆனாலும் இன்னும் கொஞ்சம் முயற்சி செய் ராக்கி. அது நிச்சயம் உனக்கு வரும். எல்லாருக்கும் கவிதை எழுத ஆசைப்பட்டது உண்மையானால் இப்படித்தான் எழுதிக்கிழித்தவைகள் அதிகமாக இருக்கும். இது ஒரு வகையில் சமூகக் கவிதையும் கூட. நன்றாக வார்த்தைகளை அடுக்கி எழுது.. நிச்சயம் வெற்றி உனக்கே! மன்றத்தின் அனைத்து கவிதைகளையும் ஒரு பார்வையிடு... ஏற்கனவே பார்த்திருப்பாய்.. பலவற்றிலிருந்து பல புரிந்துகொள்... முதல் கவிதை என்பதை நிச்சயமாக நம்ப முடியவில்லை... அடுத்தடுத்து நான் எதிர்பார்க்கிறேன்..

அமரன்
03-06-2007, 06:27 PM
ஆஹா இதுவல்லவோ நட்பு. ஆதவா வாழ்த்துகளப்பா.

rocky
05-06-2007, 02:33 PM
அனைவருக்கும் எனது பணிவான நன்றிகள். எனது தவறுகளை சுட்டிக்காட்டுங்கள். திருத்திக்கொள்ள முயற்ச்சிக்கிறேன்.

பென்ஸ்
05-06-2007, 02:39 PM
அக்னி மனம் கவர்ந்தீர்....

ஆதவா... கவிதை எழுதுவதை விட திருத்துவது கடினமோ..!!???

ராக்கி..
நல்வரவு...
முதல்கவிதையே முத்தாய்.... காதலிக்காதவன் அரைமனிதம் என்பது என் கருத்து.
காதலை காதலியுங்கள்...
காதலிக்க இந்த உலகில் பலவுன்டு...
சிறந்தது காதலிதான்...

விரைவில் ஒரு கண்ணிர்காலம் வேளியிட வாழ்த்துகள்...

rocky
05-06-2007, 02:50 PM
மிக்க நன்றி பென்ஸ் அவர்களே உங்களுக்காக ஒரு கன்னீர்காலம் நிச்சயமாக எழுதுகிறேன்.

சக்தி
05-06-2007, 02:53 PM
நல்லதொரு கவிதை படைத்த ராக்கிக்கு வாழ்த்துக்கள்

rocky
05-06-2007, 03:00 PM
நன்றி சக்தி

ஷீ-நிசி
05-06-2007, 03:57 PM
கவிதை எழுதும் முயற்சி தோல்வியில் முடிந்ததோ!?.. அதையே கவிதையாக்கி தந்திருக்கிறார் நண்பர் என்று அறிகிறேன்...

கவிதை அருமைதான் நண்பரே!

rocky
05-06-2007, 04:24 PM
மிக்க நன்றி நண்பரே. உங்கள் வியூகம் மிகச்சரி. என்னுடைய தோல்வியைத்தான் கவிதையாக்கியுள்ளேன்.