PDA

View Full Version : பூவெல்லாம் உன்வாசம்...



அமரன்
31-05-2007, 07:27 AM
பொட்டிழந்த விதவை போல
நேற்றிருந்த மரங்கள் கூட
மொட்டுவிட்டுச் சிரிக்கின்றன.

அந்திசாயும் வேளையிலே
அஸ்தமித்த மனிதச் சுடர்கள்
அதிகாலைப் புள்ளினம் போல
வீதிகளை வெளிச்சம் ஆக்குகின்றனர்.

காலுடைந்த குயில்களைப் போல
வீடுகளில் குலாவிய குளவிகள்
பட்டாம் பூச்சிகளாய் பறந்து
உற்சாக கீதம் இசைக்கின்றனர்.

நேற்று இல்லா மாற்றம் இது
வசந்த காலத்தின்
வரவு முழக்கம் இது

இவர்களைத் தழுவிய வசந்தம்
எனக்கு மட்டும் தூரமாய்...
வெகு தொலை தூரமாய்.....

என்வீட்டு தோட்டத்தில்
மலர்கின்ற பூக்களில்கூட
தொலைத்து விட்ட உன்னுடன்
தொலையாத உன் நினைவலைகள்
வாசமாக இருக்கையிலே
எனக்கு ஏது வசந்தகாலம்
கணப்பொழுதில் காற்றுடன்
கலந்து விட்ட தோழனே....!

சிவா.ஜி
02-06-2007, 05:45 AM
நட்புக்காக ஒரு கவிதை.என்றும் உடனிருந்த நன்பன் இன்றில்லாதது எத்தனை வலி.கூடித்திரிந்த நாட்கள் அலைந்து திரிந்த இடங்கள் எல்லாம் நினைவுகளில் தங்கி கொல்லுமே.நட்பு என்ற உயரிய உறவை இழத்தல் எத்தனை கொடுமை.நல்ல கவிதைக்கு பாராட்டுக்கள் அமரன்.

அமரன்
03-06-2007, 05:42 PM
நன்றி சிவா. எத்தனை உறவு வந்தாலும் நட்புக்குத் தனி இடம். நட்பில்லாத மனிதன் உலகில் இல்லை எனலாம்.

அக்னி
03-06-2007, 11:57 PM
பொட்டிழந்த விதவை போல
நேற்றிருந்த மரங்கள் கூட
மொட்டுவிட்டுச் சிரிக்கின்றன.

குளிர்காலத்தில், பசுமை தொலைத்த மரங்களுக்கு அருமையான உவமானம் பொட்டிழந்த விதவை...
ஆனால், ஓர் ஏக்கமும், எதிர்பார்ப்பும் அந்த வரிகளில் தெரிகின்றது. உவமானமும் உவமேயமும் இடம் மாறும்போது, அந்த மரங்கள் மீண்டும் பசுமை பெறுவது போல விதவைகள் பொட்டிடுவார்களோ என்பதே அது...

நிற்க,
பொட்டிழந்த விதவை... மீண்டும் பொட்டிடுவது, சமூகத்தில் பெரிதும் அரிது என்பதைப்போல, காணாமற்போன உங்கள் நட்பு மீண்டும் கிடைக்கும் என்பதும் அரிதே என்பதைக் குறிப்புணர்த்தியிருக்கிறீர்கள். முதல் வரியின் ஆழத்தை கடைசிவரை காட்டியிருக்கிறீர்கள்...
ஆனால்,
விதவையும் பொட்டிடலாம் ஒருவேளை...
நட்பும் மீளக் கிடைக்கும் ஒருவேளை...

ஆக நிரந்தரமாய் பிரியாத, ஒரு நட்புக் குறித்த ஏக்கம் கவிதையாக...

பாராட்டுக்கள்...

கலைவேந்தன்
05-06-2007, 01:52 AM
தங்கள் கவிதை பட்டை தீட்டிய வைரம் போல் ஜொலிக்கிறது.
நட்பை பாராட்டும் கவிதைகள் கிடைப்பது அரிது.
மனம் நிறைந்த பாராட்டுக்கள் நண்பரே!

அமரன்
05-06-2007, 07:27 AM
நன்றி கலைவேந்தன். எனக்கு என்னமோ காதல் கவிதைகள் வருவதில்லை. கடந்தகாலங்களில் நட்பைச் சுவாசித்து வாழ்ந்தவன் இப்போ நட்பே சுவாசமாக வாழ்கின்றேன். அதன் வெளிப்பாடு இக்கவிதை. நன்றி.

ஷீ-நிசி
06-06-2007, 04:34 AM
கவிதையில் வார்த்தைகள் அழகு நண்பரே!

அமரன்
06-06-2007, 06:59 AM
கவிதையில் வார்த்தைகள் அழகு நண்பரே!
நன்றி நிஷி.