PDA

View Full Version : அம்மா...



ஷீ-நிசி
31-05-2007, 04:03 AM
கர்ப்பத்தின் அறையில்
களிப்போடு தாங்கியவளே!
மாதங்கள் பத்தும்
வலியோடு தூங்கியவளே!

பாரம் இறக்கிவைத்து
அழுகுரல் வந்த....
தூரம் செவிவைத்து
உன் தலைசாய்த்தாய்!

கண் திறக்காமல்,
கதறிக்கொண்டிருந்தேன்!
உன் குருதி பாலானது!
எனக்கது முதல் உணவானது!

எல்லாம் புதிதாய் அணிவித்து,
பள்ளிக்கனுப்பினாய்! -நீ
அணிந்ததை எல்லாம் விற்று,
கல்லூரிக்கும் அனுப்பினாய்!

கண்ணீர் விட்டாய்!
பலமுறை மணவறை
மணாளானாலும்
சிலமுறை கருவறை
மகனாலும்!

ஆனால், என்றுமே
இன்பம் மட்டுமே அளித்தாய்!
உன்னில் விதைத்தவனுக்கும்
உன்னில் விழுந்த எனக்கும்!

அம்மா!

ஒவ்வொரு உயிரும்.....
மண்ணில் மரிக்கும்வரை,
தன்னில் நினைக்கவேண்டும்!

விகடன்
31-05-2007, 04:08 AM
நெஞ்சைத் தொட்டுச்சென்ற வைர வரிகள்.

உண்மைதான். பிள்ளைகள் மூர்க்கமான முடிவுகள் எடுத்தாலும் எப்பொழுதுமே பிள்ளைக்காக, அவர்களின் எதிர்கால நலனிற்காக தன்னைத் தியாகஞ் செய்பவள் அம்மாதான்.

ஷீ-நிசி
31-05-2007, 04:24 AM
நன்றி ஜாவா

இதயம்
31-05-2007, 04:33 AM
மனதை கரையவைக்கும் கவிதை. தாயைப் போற்ற தனிக்காரணம் ஏதும் தேவையில்லை, இவ்வுலகத்திற்கு நம்மை தந்த காரணம் போதும்.

பெண்ணின் பெருமை பற்றி நான் எழுதினால் நண்பர்கள் சிலர் எதிர் குரல் கொடுக்கிறார்கள். அது சரி.. அவர்களெல்லாம் ஷீ-நிசி ஆவார்களா..?

பாராட்டுக்களும், நன்றிகளும் ஷீ-நிசி..!!

சிவா.ஜி
31-05-2007, 04:36 AM
கண்ணீர் விட்டாய்!
பலமுறை மணவறை
மணாளானாலும்
சிலமுறை கருவறை
மகனாலும்!

ஆனால், என்றுமே
இன்பம் மட்டுமே அளித்தாய்!
உன்னில் விதைத்தவனுக்கும்
உன்னில் விழுந்த எனக்கும்!


மிக அருமையான வரிகள் நிதர்சனமான உண்மை. ஒரு கவிஞன் எழுதியதைப்போல் அன்பையும்,தியாகத்தையும்,பாசத்தையும் பற்றி ஒரே வார்த்தையில் கவிதை எழுத சொன்னால் 'அம்மா' என்று எழுதுவேன் என்றது எத்தனை சத்தியமான உண்மை. பாராட்டுக்கள் ஷீ.

ஷீ-நிசி
31-05-2007, 04:48 AM
நன்றி இதயம்.. நன்றி சிவா..

அமரன்
31-05-2007, 07:18 AM
கண்கலங்க வைத்துவிட்டீர்கள் நிஷி. அம்மாபடும் வேதனைகளையும் அவள் எமக்காச் செய்யும் தியாகங்களையும் கண்முன் நிறுத்தி இதயத்தையே கலங்கடித்துவிட்டீர்கள். இப்படியான அம்மாவுக்கு நாம் என்ன செய்ய வேண்டும். அவள் எதையுமே எதிர்பார்ப்பதில்லையே.ஆனால் நாம் சாதனைகள் செய்யும்போது அவள்பட்ட வேதனைகள் அவளுக்கு தென்றலாக வருடும் அல்லவா? நன்றி நிஷி. பரிசுத்தொகை 250 இ-பணம்.

ஆதவா
31-05-2007, 07:25 AM
கர்ப்பத்தின் அறையில்
களிப்போடு தாங்கியவளே!
மாதங்கள் பத்தும்
வலியோடு தூங்கியவளே!

வேணாங்க!! நமக்குள்ள வெட்டுகுத்து ஆகிடும்... இப்படியெல்லாம் எழுதினீங்கன்னா நான் என்னத்த வெச்சு இனிமே
எழுதறது???? தாங்கியவளே தூங்கியவளே சூப்பர்.... முதலிரண்டு வரிகள் புரிய மறுக்கின்றன..

பாரம் இறக்கிவைத்து
அழுகுரல் வந்த....
தூரம் செவிவைத்து
உன் தலைசாய்த்தாய்!

ம்ம்ம்... திரும்பவும் இயல்பான எதுகை. ரொம்ப ஓவராத்தான் போய்ட்டுருக்கீங்க (வடிவேலு பாணியில் படிக்கவும். :D )

கண் திறக்காமல்,
கதறிக்கொண்டிருந்தேன்!
உன் குருதி பாலானது!
எனக்கது முதல் உணவானது!

முதல் உணவு... அருமை... தற்சமயங்களில் இந்த உணவு தடுக்கப்படுகிறதாமே அழகுக்காக... அதை வைத்து ஒரு கவி
எழுதுங்க ஷீ!!!

எல்லாம் புதிதாய் அணிவித்து,
பள்ளிக்கனுப்பினாய்! -நீ
அணிந்ததை எல்லாம் விற்று,
கல்லூரிக்கும் அனுப்பினாய்!

இது கலக்கல்... அணிவித்து அனுப்புவதும் அணிந்ததை விற்று அனுப்புவது.... கிரேட்.. யோசிச்சா இப்படித்தான்
யோசிக்கனும்.. வொண்டர்..

கண்ணீர் விட்டாய்!
பலமுறை மணவறை
மணாளானாலும்
சிலமுறை கருவறை
மகனாலும்!

ம்ம்ம்.... ஆம்.. உண்மைதான்.. பெண்களுக்கு அது ஆறுதலும் ஆயுதமும் கூட... மணாளனால் மணவறைக் கண்ணிர் அதே
மணாளனால் மகனுக்காக கண்ணீர்... ஆனால் இரண்டுக்கும் பின்னர் பேரானந்தம் இருக்கிறதே!!!

ஆனால், என்றுமே
இன்பம் மட்டுமே அளித்தாய்!
உன்னில் விதைத்தவனுக்கும்
உன்னில் விழுந்த எனக்கும்!

மகனாக.......... தாய் எப்போதுமே கேடு நினைக்கமாட்டாள்.. இன்பம் மட்டுமே தரும் தாயைக் கண்ணில் காணாதவர் இலர்.
கடையிரண்டு வரிகள் உண்மையைச் சொல்லுகின்றன... அருமை..

அம்மா!

ஒவ்வொரு உயிரும்.....
மண்ணில் மரிக்கும்வரை,
தன்னில் நினைக்கவேண்டும்!

நிச்சயம்..... அந்த வகையில் உங்கள் தாய் கொடுத்துவைத்தவர்... அம்மா என்ற வார்த்தையே ஒரு கவிதைதான்.. இங்கே
அம்மா கவிதை எழுதியவர்கள் மிகச் சிலரே! அதில் உங்கள் கவிதை டாப்.... (ஏன் அப்பாவுக்கு ஒரு கவிதை எழுத
மாட்டேன்கிறார்கள்????)

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மாறாத கவிதைக் கரு.. சலிக்காத வார்த்தைப் பொட்டலம்.. சுமாரான கவிஞரும்
சூப்பராக எழுதவைக்கும் சக்தி இந்த அம்மாவுக்கு உண்டு.. வாழ்த்துக்கள் ஷி

வழமைபோல காசுகள் உண்டு..

மனோஜ்
31-05-2007, 07:42 AM
வாழ்த்துக்கள் ஷீ
நானு உங்க நேரத்தில் தான் எழுதினேன் பாருங்க என் கவிதை யாருக்கும் பிடிக்கலபொல யாரும் கண்டுகவில்லை உங்ககவிதை அளவிற்கு என்றும் ஏழுதமுடியாது என்பது உண்மை
நானும் ரசித்த வரிகள் நன்றி ஷீ

ஷீ-நிசி
31-05-2007, 07:45 AM
நன்றி அமரன்... உணர்ந்து எழுதியுள்ளீர்கள் உங்கள் விமர்சனத்தை...



நன்றி ஆதவா....

உன்னுடைய விமர்சனத்துக்காகவே தொடர்ந்து கவிதை படைக்கலாம்....
அப்பாவிற்காக கவிதை எழுதியுள்ளேனே ஆதவா....

ஆதவா
31-05-2007, 07:57 AM
வாழ்த்துக்கள் ஷீ
நானு உங்க நேரத்தில் தான் எழுதினேன் பாருங்க என் கவிதை யாருக்கும் பிடிக்கலபொல யாரும் கண்டுகவில்லை உங்ககவிதை அளவிற்கு என்றும் ஏழுதமுடியாது என்பது உண்மை
நானும் ரசித்த வரிகள் நன்றி ஷீ

அப்படியில்ல மனோஜ்... உங்க கவிதை நான் கவனிக்கவில்லை... சுட்டி கொடுக்கவும்...

அமரன்
31-05-2007, 07:58 AM
அப்பாவுக்கும் ஒரு கவிதையா? எழுதி வைத்துக்கொண்டு பதிவதில் ஏனிந்தத் தாமதம் நிஷி. எதிர்பார்த்துக் காத்திருக்கின்றேன்.

ஷீ-நிசி
31-05-2007, 10:39 AM
வாழ்த்துக்கள் ஷீ
நானு உங்க நேரத்தில் தான் எழுதினேன் பாருங்க என் கவிதை யாருக்கும் பிடிக்கலபொல யாரும் கண்டுகவில்லை உங்ககவிதை அளவிற்கு என்றும் ஏழுதமுடியாது என்பது உண்மை
நானும் ரசித்த வரிகள் நன்றி ஷீ



அப்படி இல்லை.. மனோஜ்.. என்னுடைய எத்தனையோ கவிதைகள் குறைவான பின்னூட்டங்களோடு சென்றுள்ளது.. நம் எழுத்துக்களை பாதுகாக்கும் பெட்டகம் இந்த மன்றம்...

வாழ்த்துதலுக்கு நன்றி மனோஜ்

ஷீ-நிசி
31-05-2007, 10:42 AM
அப்பாவுக்கும் ஒரு கவிதையா? எழுதி வைத்துக்கொண்டு பதிவதில் ஏனிந்தத் தாமதம் நிஷி. எதிர்பார்த்துக் காத்திருக்கின்றேன்.


அமரன் ஏற்கெனவே எழுதியுள்ளேன்...

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=168231&postcount=351

ஒரு சின்ன விண்ணப்பம்.. நிஷி அல்ல நிசி

இதயம்
31-05-2007, 10:46 AM
உங்கள் கவிதைக்கு வேண்டுமானால் பின்னூட்டம் குறைவாக இருந்திருக்கலாம். ஆனால், அதன் பின் இருக்கும் ஊட்டம் கவிதை படித்த அனைவரின் ஆரோக்கிய வாழ்க்கைக்கு அவசியமாக இருக்கும் என்பது என் நம்பிக்கை. கண்ணில் படாவிட்டாலும், கண்டுகொள்ளப்படாவிட்டாலும் வைரம் வைரம் தானே..!! நீங்கள் வைரத்தை படையுங்கள்.. நாங்கள் பட்டை தீட்டுகிறோம்.

lolluvathiyar
31-05-2007, 12:11 PM
அனைத்து வரிகளும் அருமை நிசி



உன் குருதி பாலானது!
எனக்கது முதல் உணவானது!




இந்த வரியை படிக்கும் போது எனக்கு தூக்கி வாரி போட்டது
எப்படி உங்களுக்கு இப்படி வார்த்தைகள் வருகிறது
பிடியுங்கள் 5 பொற்காசுகள்

ஷீ-நிசி
01-06-2007, 07:11 AM
மிக்க நன்றி வாத்தியார்....

க.கமலக்கண்ணன்
02-06-2007, 06:51 AM
கர்ப்பத்தின் அறையில்
களிப்போடு தாங்கியவளே!
மாதங்கள் பத்தும்
வலியோடு தூங்கியவளே!

பாரம் இறக்கிவைத்து
அழுகுரல் வந்த....
தூரம் செவிவைத்து
உன் தலைசாய்த்தாய்!

- என்னை கவர்ந்த வைர வரிகள்...

அம்மாவை பற்றி அவர்களுடைய

ஆற்றலைப் பற்றி மனம் முழுவதும் உங்கள்

இலக்கிய வைர வரிகளால்

ஈடு இல்லாமல் செதுக்கி

உணர்வுகளை அள்ளித் தெளித்து உயிர்

ஊட்டமாய் அளித்த ஷீ-நிசி க்கு

எனது மானப்பூர்வமான வாழ்த்துக்கள்

ஷீ-நிசி
04-06-2007, 04:13 AM
மிக அருமையாக வாழ்த்தினீர்கள் கமல்... மிக்க நன்றி......

அக்னி
04-06-2007, 08:27 AM
அம்மா...
மழலை மொழியின் புரியாமையை கவிதையாய் ரசித்து உணர்பவள்...
உணர்வதோடு நின்றுவிடாமல், குறிப்பறிந்து தேவையானவற்றைத் தருபவள்...

என்னைப் பொறுத்தவரையில் பூமியில், நாம் பாசத்தைத் தொலைக்கும் முதல் நிகழ்வு.., எமது பிறப்பு...

அம்மா என்ற கவிதைக்குக் கவிதை.., நெஞ்சைத் தொடுகின்றது...
பாராட்டுக்கள் ஷீ-நிசி...

namsec
04-06-2007, 08:50 AM
கவிதயை இயற்றியாதால் இதற்க்கு நீ சொந்தம் கொண்டாடலாம் ....

தாயின் மீது பாசம் கொண்ட ஆனைவரும் உன் கவி மீது சொந்தம் கொண்டாடவைத்தாய்

ஒரு வகையில் நீயும் கள்வனே

ஷீ-நிசி
04-06-2007, 08:59 AM
நன்றி அக்னி, நன்றி நாம்செக்