PDA

View Full Version : காதல் பாரம்..!!

இதயம்
30-05-2007, 12:00 PM
இது மன்றத்தில் என் முதல் கவிதையல்ல, நான் என் வாழ்நாளில் எழுதும் முதல் கவிதை..! காதலித்தால் கவிதை வருமென்பார்கள். காதலையே வாழ்க்கையாக கொண்ட என்னை கவிதை மட்டும் காதலிக்கவே இல்லை. "கிட்டாததை வெட்டென மற" என்பதை மனதில் கொண்டு அதன் பிறகு கவிதையை எழுத நான் கனவிலும் நினைத்ததில்லை. காதல் கொடுக்கும் உணர்வுகள் தான் கவிதை என்றால் அதை நான் எழுத்தில் வடித்தால் ஆயிரம் அத்தியாயங்கள் அட்டகாசமாக முடிந்திருக்கும். ஆனால், வார்த்தை ஜாலம் எனக்கு வஞ்சனை செய்ததில், என்னை பார்த்தால் "பற்றிக்கொண்டு" வரும் கவிதைக்கு..!!

சமீபத்தில் தமிழ் மன்றக்களம் என்னுள் எதையோ உசுப்பி விட்டு "கவிதை" எழுத முடியும் என்று எழுத "விதை" போட்டு "கதை' கட்டிவிட்டது. மன்ற நண்பர்கள் நல்லவர்கள், மென்மையானவர்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் என் முதல் க(வி)தையை உங்கள் முன் வைக்கிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை உள்ளபடி இடுங்கள்.

காதல் பாரம்..!!

பற்றித்தழுவும் பஞ்சு மெத்தை, பட்டு விரிப்பு தருமா - என்
நெற்றி தலை முடி கோதிவிடும் என்னவளின் பட்டு விரல்கள் தரும் சுகத்தை..?

நெய் மணக்கும் உணவு, நெஞ்சை தொடும் இசையும் தந்துவிடுமா - அவள்
கை பிசைந்து காதலோடு கொடுக்கும் ஒரு கவளச் சோற்றின் ருசி..?

உலகம் சுற்றி நான் கண்ட அழகனைத்தும் ஒன்றிணைந்தாலும் - என்னை
கலங்கடிக்கும் காதல் தேவதையின் அழகிற்கு ஈடாகுமா?

மண்ணில் நான் உதித்த காரணத்தை அறியாது தவித்திருந்தேன் - மங்கை அவள்
என்னில் கலந்த போது அதன் காரணம் அறிந்து ஆறுதல் கொண்டேன்.

நெஞ்சின் உறுதியை நேசத்திற்குரியவளுக்கு இரும்பிற்கு ஈடாய் வைத்த இறைவன்
பஞ்சினும் மென்மையாய் உருமாறி உள்ளன்பை காட்ட படைத்ததேனோ..?

முள்ளாய் மாறி முகம் கூட காட்ட மறுத்த என் வண்ண ரோசா - என் கரம் பற்றிய பின்
கள்ளாய் மாறி காதல் போதை ஏற்றும் கண்கட்டு வித்தை நிகழ்ந்தது எப்படி..?

நானே எனக்கு பாரமாகி போய் பரிதவித்திருக்கும் வேளையில் - அந்த கனிமுக கங்காரு
தானே விரும்பி ஏற்று, நான் தந்த உயிர் தாங்கி தன்னிகரற்ற தாயாய் ஆனாளே..!!

சூரியன்
30-05-2007, 12:19 PM
இதுதான் உங்களின் முதல் கவிதையா ? நன்றாகவே எழுதுகிரீர்கள்

ஆதவா
30-05-2007, 12:31 PM
ஒவ்வொரு கவிஞன் பின்னாலும் நிழலாகவோ நிசமாகவோ காதலி இருப்பாள்.. பெண் கவிஞர்களுக்கும் இந்த விதி பொருந்தும். வர்ணனையிலும் சரி வாழ்க்கையிலும் சரி உயர்த்தியே பார்ப்ப்வர்கள் காதலோடு அந்த உயர்வை விட்டுவிடுகிறார்கள்.. மனைவிக்கு இந்த மாதிரி கவிதை எழுதியவர்கள் குறைவே..

அவள் கைவைத்தால் எனக்கொரு சொர்க்கம் என்று சொல்லாமல் சொல்கிறது முதலிரண்டு வரிகள்.. தலை கோதிவிடுதலில் அத்தனை சுகமுண்டு என்பது அனுபவித்தவர்களுக்குப் புரியும்.

இரண்டாவதாக உணவுக்கும் அவள் கைக்கும். கைதொட்டு பேசியவர்களுக்குத் தெரியும் அன்றைய உணவின் பொறாமையும் இசையின் வருத்தமும்.. அழகான வரிகளாய் முதல் கவிதை...

மூன்றாவதும் அப்படித்தான்..

நெஞ்சின் உறுதி...... மிக அருமையான வரிகள்.. அழகான கற்பனை.. வெகுசிலருக்கே இந்தமாதிரி கற்பனை தோன்றும்.. நெஞ்சிருக்கும் இடத்தை பஞ்சிருக்கும் இடமாக்க ஒரு கோரிக்கை...

முள்ளாய் மாறியும்.. அருமையான வரிகள்தான்.. ஆனால் கவிதையின் பாதை சற்றூ விலகிவிட்டது. முதலில் அவள் பற்றிய வர்ணனை கொடுத்துவிட்டு பிறகு வேண்டுதலில் இறங்கி விளைவுக்கு வந்துவிட்டாயிற்று...

நானே...........இது முடிவு... கங்காரு - தாங்கிய தாய் நல்ல கற்பனை.

மொத்தமாக. எதுகைகள் அழகாக அமைந்துள்ளது. வரிகள் நீளமாயிருப்பதன் சலுப்பு தட்டவில்லை. என்றாலும் வருங்காலத்தில் குறைத்துக் கொள்ளுங்கள். அதோடு முதல் கவிதை என்பதை நம்பமுடியவில்லை..
முதற்கவிதைக்கு என் முத்தான வாழ்த்தக்களோடு (இலஞ்சமும்... :D)

சக்தி
30-05-2007, 01:51 PM
நல்லதொரு கவிதை நயம்பட கூறியுள்ளீர்கள், மேலும் உங்களின் கவிதை மெருகேற வாழ்த்துக்கள்

சிவா.ஜி
30-05-2007, 02:00 PM
நல்ல கவிதை. 'இதயத்தி'லிருந்து வரும் கவிதையல்லவா? நயமான நல்ல வரிகள். முதல் கவிதைக்கு பாராட்டுக்கள்.

shangaran
30-05-2007, 02:04 PM
நல்ல ரசனை...
அருமை, தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

இதயம்
30-05-2007, 02:59 PM
நான் எழுதியதை கவிதை என்று அங்கீகரித்த நல்ல உள்ளங்களுக்கு என் நன்றிகள். இந்த பாராட்டும், வாழ்த்தும் என் படைப்பை நிச்சயம் மெருகேற்ற உதவும்.

எல்லோரும் காதலியால் கவிதை புனைவார்கள். ஆனால், என் விஷயத்தில் நேர் எதிர். நான் காதல் கவிதைகள் நிறைய எழுத வேண்டும் என்ற ஆசைக்கு எதிர்ப்பு தெரிவித்தவள் என் முன்னாள் காதலி, இன்னாள் மனைவி. திருமணத்திற்கு முன் நான் அவளுக்கு எழுதிய கடிதத்தில் உனக்காக எதுவும் செய்வேன் என்று வீர வசனம் பேசி எழுதியிருந்தேன். கூடவே கவிதை என்ற பெயரில் ஏதோ ஒரு கருமத்தையும் எழுதியிருந்தேன்.

அதைப்படித்தவள் எனக்காக எதையும் செய்வாய் என்றால் மற்றவர்கள் தன் காதலியிடம் சொல்வது போல் நிலவை பிடித்து தருவாயா என்று பதில் வந்தது. இதென்னடா வம்பாப்போச்சு என்று காதலிக்கும் போது பொதுவாக இப்படி எழுதுவது சகஜம் என்று பதில் தந்தேன். அதற்கு பதில் "நாம் சராசரியாக இருப்பதை விரும்பவில்லை, திருமணத்திற்கு பிறகும் நமக்கிடையில் பொய் கூடாது. கவிதையில் கூட நடிப்பு இருக்கக்கூடாது. அப்போது தான் இருவருக்கும் ஒழுங்காக இருக்க வேண்டும் என்ற அச்சம் இருக்கும். அதுவே நம் ஒழுக்கத்திற்கு சிறந்த காரணமாக இருக்கும் என்றாள்.

நன்றாக மாட்டிக்கொண்டோம், இனி தப்பிக்கமுடியாது என்பதால் நானும் சரி என்று சம்மதித்து தொலைத்தேன். அதனால், இது வரை நான் சிறு சிறு தவறு செய்தாலும் அவளிடம் உடன் பகிர்ந்து கொள்வேன். அவளும் அப்படியே. அவளிடம் சொல்லவேண்டுமே என்ற பயமே என் தவறுகளை குறைக்கிறது. இதனால் குற்ற உணர்ச்சியில்லாமல் நிம்மதியாக இருக்க முடிகிறது. பொறுமையாக படித்ததற்கு நன்றி..!

ஆதவா
30-05-2007, 03:11 PM
வாழ்த்துக்கள் இதயம்.. இது மு.க இ.ம ஆனதற்கு

அடுத்து உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்ததற்கு....

மனோஜ்
30-05-2007, 03:14 PM
அருமை நண்பரே
காதலி மனைவியாக அமைவது ஒரு பாக்கியம் தான்
அவர்களுக்கு நீங்கள் எழுதிய கவிதை சிலாக்கியம் தான்
காதல் கவிதை உங்கள் மனதிலும் வந்தது பாக்கியம் தான்

வாழ்த்துக்கள் நண்பரே தொடர்ந்து கவிதை எழுத...

lolluvathiyar
31-05-2007, 12:51 PM
கவிதையில் கூட நடிப்பு இருக்கக்கூடாது.

உங்கள் கவிதை அருமை, அதுவும் முதல் கவிதையா, நம்ப முடியவில்லை
உங்கள கவிதையை விட உங்கள் மனைவியின் இந்த தத்துவம் அருமை நன்பரே

இதயம்
02-06-2007, 04:24 AM
பாராட்டிய ஆதவா, மனோஜ், லொள்ளுவாத்தியார் ஆகியோருக்கு நன்றி..!

ஓவியா
15-08-2007, 12:37 AM
இது மன்றத்தில் என் முதல் கவிதையல்ல, நான் என் வாழ்நாளில் எழுதும் முதல் கவிதை..! காதலித்தால் கவிதை வருமென்பார்கள். காதலையே வாழ்க்கையாக கொண்ட என்னை கவிதை மட்டும் காதலிக்கவே இல்லை. "கிட்டாததை வெட்டென மற" என்பதை மனதில் கொண்டு அதன் பிறகு கவிதையை எழுத நான் கனவிலும் நினைத்ததில்லை. காதல் கொடுக்கும் உணர்வுகள் தான் கவிதை என்றால் அதை நான் எழுத்தில் வடித்தால் ஆயிரம் அத்தியாயங்கள் அட்டகாசமாக முடிந்திருக்கும். ஆனால், வார்த்தை ஜாலம் எனக்கு வஞ்சனை செய்ததில், என்னை பார்த்தால் "பற்றிக்கொண்டு" வரும் கவிதைக்கு..!!

சமீபத்தில் தமிழ் மன்றக்களம் என்னுள் எதையோ உசுப்பி விட்டு "கவிதை" எழுத முடியும் என்று எழுத "விதை" போட்டு "கதை' கட்டிவிட்டது. மன்ற நண்பர்கள் நல்லவர்கள், மென்மையானவர்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் என் முதல் க(வி)தையை உங்கள் முன் வைக்கிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை உள்ளபடி இடுங்கள்.

காதல் பாரம்..!!

பற்றித்தழுவும் பஞ்சு மெத்தை, பட்டு விரிப்பு தருமா - என்
நெற்றி தலை முடி கோதிவிடும் என்னவளின் பட்டு விரல்கள் தரும் சுகத்தை..?

நெய் மணக்கும் உணவு, நெஞ்சை தொடும் இசையும் தந்துவிடுமா - அவள்
கை பிசைந்து காதலோடு கொடுக்கும் ஒரு கவளச் சோற்றின் ருசி..?

உலகம் சுற்றி நான் கண்ட அழகனைத்தும் ஒன்றிணைந்தாலும் - என்னை
கலங்கடிக்கும் காதல் தேவதையின் அழகிற்கு ஈடாகுமா?

மண்ணில் நான் உதித்த காரணத்தை அறியாது தவித்திருந்தேன் - மங்கை அவள்
என்னில் கலந்த போது அதன் காரணம் அறிந்து ஆறுதல் கொண்டேன்.

நெஞ்சின் உறுதியை நேசத்திற்குரியவளுக்கு இரும்பிற்கு ஈடாய் வைத்த இறைவன்
பஞ்சினும் மென்மையாய் உருமாறி உள்ளன்பை காட்ட படைத்ததேனோ..?

முள்ளாய் மாறி முகம் கூட காட்ட மறுத்த என் வண்ண ரோசா - என் கரம் பற்றிய பின்
கள்ளாய் மாறி காதல் போதை ஏற்றும் கண்கட்டு வித்தை நிகழ்ந்தது எப்படி..?

நானே எனக்கு பாரமாகி போய் பரிதவித்திருக்கும் வேளையில் - அந்த கனிமுக கங்காரு
தானே விரும்பி ஏற்று, நான் தந்த உயிர் தாங்கி தன்னிகரற்ற தாயாய் ஆனாளே..!!

ஒரு பெண்ணால் எவ்வ*ளாவு பெரிய* பாக்கிய*ங்க*ள் ஆண்க*ளுக்கு கிடைக்கின்ற*ன*!! :aktion033::aktion033:

மெல்ல* ஆர*ம்பித்து க*டைசி வ*ரி வ*ரை அருமையாய் எழுதியுள்ளீர்க*ள். பாராட்டுக்க*ள். ர*ச*னை சிற்பிதான் தாங்க*ள்.

உங்கள்* திற*ந்த* ம*ன*தில், ப*ல* க*ல*வையிலான* ர*ச*னைக*ள் அருவிபோல் ஊற்றெடுக்கின்ற*ன*. அவை இப்ப*டி க*விதையாகி நதிப்போல் இங்கு ஓடி ம*ன்ற*த்தை குளிர* செய்கின்ற*ன*. ந*ன்றி

உங்க*ள் 'அவ*ளுட*ன்' என்றும் இன்ப*மாய் வாழ* வாழ்த்துக்க*ள். :music-smiley-019:

இலக்கியன்
15-08-2007, 08:38 AM
முதல் கவிதையிலேயே உங்கள் புலமை தெரிகின்றது தொடர்ந்து எழுதுங்கள்

shibly591
04-07-2008, 05:50 AM
இது உங்கள் முதல் கவிதையா???????

ஒவ்வொரு வரியிலும் அனுபவ முத்திரை அழகாக ஜொலிக்கிறது

வாழ்த்துக்கள் ரொம்ப தாமதமாக.....

நேசம்
04-07-2008, 06:25 AM
தமிழ் மன்றத்துக்கு தான் இது முதல் கவிதை இல்லையா இதயம். வாழ்த்துகள்