PDA

View Full Version : டிராபிக் போலீஸ்



lolluvathiyar
30-05-2007, 11:43 AM
டிராபிக் போலீஸ்

நன்பர்களே இது நான் 20 வருடங்களாக அனுபவித்த முற்றிலும் கற்பனை இல்லாத உன்மை சம்பவம்

நான் பள்ளிகூடம் படித்து கொண்டிருக்கும் போது ஒரு முரை லூனாவில் (அந்த காலத்து மொபட்) டவுனுக்கு போனேன்.
அப்ப போலீசு காரனிடம் சிக்கீட்டேன்.

போலீஸ் : "வயசு என்ன"
நான் : "16"

போலீஸ் : "லைசன்ஸ் இருக்கா"
நான் : "இல்ல"

அப்பரம் வண்டி கொண்டு போய் ஸ்டேசனில் விட்டு விட்டு அப்பாவை கூட்டிட்டு வர சொன்னான்.
எனக்கு பயம் வண்டி போயிருச்சோனு. இன்னிக்கு அப்பாகிட்ட நல்ல அடிதான்.
நான் பயந்து கொண்டே பஸ் ஏறு வீட்டுக்கு போய் அப்பாவிடம் அழுதேன்.
நான் : அப்பா, லைசன்ஸ் இல்லினு போலிசுகாரன் வண்டிய பிடுங்கி வச்சுட்டானப்பா

அப்பா : "அந்த நாய்களுக்கு ஒரு 10 ரூபா வீசிருந்தா விட்டுருப்பான், இது கூட தெரியாதா, சரி வா"

ஸ்ட்டேஸனுக்கு போனோம்.
போலீஸ் : "சின்ன பையன் கிட்ட ஏன் வண்டிய கொடுத்து அனுப்பரீங்க, நாங்க இவனையும் அல்லவா கோர்டுக்கு கொண்டு போனோம்"

நான் : "ஊரல ஓட்டர தைரியத்தில் டவுனுக்கு வந்துட்டானுங்க, பைன் எல்லாம் எதுக்குங்க"
இப்படி பேசி அப்பா, 20 ரூபா தந்திட்டு வண்டிய எடுத்துட்டு வந்துட்டாரு

சில வருடம் கழித்து
நான் ஒரு மாலை நேரம் டிவிஎஸ் மொப்பட்டில் வந்து கொண்டிருந்தேன். அப்பவும் ஒரு போலீஸ் வண்டிய நிறுத்தினான்
இப்ப எனக்கு பயம் துளியும் இல்ல. அதுவும் நான் வந்து கொண்டிருந்தது ஒன் வே.

போலீஸ் : "லைசன்ஸ் இருக்கா"
நான் : "இல்ல"

போலீஸ் : "ஆர்சீ பூக் இருக்கா"
நான் : "கொண்டு வல்லீங்க"

போலீஸ் : "வண்டி இண்சூரன்ஸ் இருக்கா"
நான் : "கட்டரதே இல்லீங்க"

போலீஸ் : "வண்டி யாருது"
நான் : "அப்பாது"

போலீஸ் : "ஒன் வேயில் வர கூடாது தெரியுமுல்ல"
நான் : "நைட் தானுங்க"

போலீஸ் : "நைட் பத்து மனிக்கு மேல தான் ஒன்வே கிடையாது இப்ப மனி 9"
நான் : "தெரியாதுங்க"

போலீஸ் : "குடிச்சிருக்கியா"
நான் : "ஆமாங்க"

போலீஸ் :
"பைன் கட்டு
வண்டியில் லைட் எரியல ரூ.50
ஒஎ வேயில் வந்ததுக்கு ரூ. 50
லைசன்ஸ் இல்லதுக்கு ரூ 200
ஆர்சி புக் இல்லாதுக்கு ரூ 50
இன்சூரன்ஸ் இல்லதுக்கு ரூ 50
அப்பாவுக்கு தெரியாம வண்டி எடுத்ததுக்கு ரூ, 100
குடிச்சுட்டு வண்டி ஓட்டினதுக்கு ரூ. 1000"

போலீஸ் : "கட்டு 1500 ரூபாய"
நான் : அவ்வளவு காசு இல்லீங்க ஐயா

போலீஸ் : "அப்ப வண்டிய விடு ஸ்டேசனுக்கு"
நான் : இங்கே ஏதாவது அட்ஜஸ்டு பன்னிக்க முடியாதுங்களா

போலீஸ் : "ம் புத்திசாலியா இருக்க, படக் நு 100 கட்டிட்டு வண்டிய எடுத்துட்டு கிளம்பு"
நான் : "அவ்வளவு இல்லீங்க"

என்று சொல்லி 20 ரூபாய நீட்டினேன்.

போலீஸ் : " ஏம்பா நாங்க மூனு போலிசு இருக்கோம், விளையாடரியா 100 கட்டு, இல்ல விடு ஸ்டேசனுக்கு"
நான் : "என்கிட்ட 50 ரு தான் இருக்குங்க"

போலீஸ் : " சரி அத கொடுத்துட்டு போ"
நான் : "ஆளுக்கு 10 ரூ மொத்தம் ரூ 30 தரேன்"

போலீஸ் : " பேர்மா பேசர, ஸ்டேசனுக்கு போனா 1500 பேந்துரும், அதுக்கு வெரும் 30 தரியா"

எனக்கு தெரியும் அந்த 1500 இவங்களுக்கு வராது, கவர்மெண்டுக்கு தான்,
ஆனா நான் கொடுக்க போர முப்பது ரூ இவங்கலுக்கு அல்லவா,

நான் : "சார் 50 ரூ தான் இருக்கு, பெட்ரோல் போட 20 வேனும் (அப்ப பெட்ரோல் லிட்டர் ரூ.18) அதான் ரூ.30 தரேனு சொன்னேன், தப்பா நினைச்சுகாதீங்க"

போலீஸ் : சரி கொடுத்துட்டு போ, இனிமே தண்னி போட்டுட்டு ஓட்டாதே.

நான் கொடுத்துட்டு வீட்டுக்கு போயிட்டேன்.

சரி இனிமேல் யோக்கியமா இருக்கலாம்னு
லைசன்ஸ் எடுத்துகிட்டேன், ஒரு நாள் மீண்டும் போலிசிடம் நிறுந்தினேன்.
ஒழுங்கான ரோட்டில் தான் வந்தேன். (ஒன் வே இல்ல)
லைசன்ஸ் ஆர்.சீ பூக் காட்டியாச்சு, குடிக்கல.

போலீஸ் : இன்சூரன்ள் இருக்கா?
நான் : இல்ல

போலீஸ் : ஏன் இல்ல அப்ப கட்டு பைன.
நான் : சார் பழைய மொம்பட் சார், வித்தா 3000 கூட போகாது, இதுக்கு எவன் இன்சூரன்ஸ் தருவாங்க.

போலீஸ் : சரி ஒரு 50 ரூபா தந்துட்டு போ.
நான் : நான் 10 ரூபா தான் இருக்கு சார்

போலீஸ் : டேய் ஸ்டேசனுக்கு போனா 500 ரூபா தெண்டம் அழுவனும் தெரியுமல்ல
நான் : தெரியும் சார் ஆனா அது உங்களுக்கு கிடைக்காதே, இருக்கர 10 ரூபாய வாங்கிக்குங்க சார்.

போலீஸ் : சரி கொடுத்துட்டு நடைய கட்டு

இப்படி பல தடவை எனக்கு பழகி போச்சு, போலீஸ மேல இருக்கர மரியாதையே போச்சு.

ஒரு தடவை பைக்கில் செல்லும் போது நிறுத்தினான். நான் லைசன்ஸ் எடுத்தேன்.
போலீஸ் : தம்பி அதெல்லாம் நான் உங்கிட்ட கேட்டனா?
காலையிலிருந்து வெய்யில்ல நிக்கரேன். இன்னிக்கு ஒன்னும் தேரல.
நான் நினைச்சனா, over speed, rash driving என்று உனக்கு சார்ஜ் சீட் போட முடியும்.
ஆனா நான் அப்படி எல்லாம் ஈனதனமா செய்யரதில்லப்பா?
தண்ணி போட ஒரு 10 ரூ சார்டேஜ் ஆகுது, ஒரு 10 ரூபா கொடுத்துட்டு போப்பா.
கருமம்டா நு 5 ரூபா தந்திட்டு வந்தேன், திரும்பி பார்த்தேன், அடுத்த வண்டிய நிறுத்தி பிச்சை எடுத்துட்டு இருந்தான்.

ஒரு நாள் என் நன்பன் வண்டிய பிடிச்சு சார்ஜ் சீட்டு போடு கொடுத்துட்டாங்க.
அவன் பயந்த சுபாவம், என் கிட்ட வந்தான், சார்ஜ் சீட்ட காட்டினான்.

நான் : "ஏண்டா அந்த பிச்ச காரனுக்கு 10 ரூம் தந்துட்டு வரலாமுல்ல, வண்டிய விட்டுட்டு வந்திருக்க"

சரி நானும் போனேன், மூனு போலீசு காரங்க இருந்தாங்க. எக்கசக்க வண்டி பிடிச்சு வச்சிருந்தாங்க.

அவன பிடிச்ச போலீச பார்த்தேன்.
நான் : சார் இவன் வண்டி லைசன்ஸ் இல்லாம பிடிச்சுட்டீங்களாமா?

போலீஸ் : அதான் பை கட்டிட்டு எடுத்துட்டு போலாம்னு வந்தேன்.
(ஒரு 10 ரூபாய அவனிடம் தந்தேன்)

போலீஸ் : தம்பி நான் ரொம்ப ஸ்டிரிக்ட். சார்ஜெண்ட் வேற இருக்காரு.

சரி அவர பார்த்தேன், புரிந்து விட்டார்,
சார்ஜெண்ட் 100 ரூபா கொடுத்துட்டு போ,
நான் : சார் நாங்க வேலைக்கு போரவங்க, அவ்வளவு எங்க கிட்ட இருக்குமா சார்?
சார்ஜெண்ட் சரி நா சார்ஜெண்ட் ப்பா, போலீசு மாதிரி அரமா கேவலமா தராத, ஒரு 50 குடுத்துட்டு போ.

கூட்டமா இருப்பதால இதுக்கு மேல பேரம் பேச முடியாதுனு, 50 அழுதுட்டு வந்தோம்.

என்ன அப்படி பாக்கரீங்க. இது எல்லாம் தம்பில்லையானு கேக்கரீங்க, ஆனா உன்மையா நடந்ததே.

சூரியன்
30-05-2007, 11:55 AM
இதை பார்க்கும் போது போக்குவரத்து போலீஷ் இப்படியுமா என்று தொன்றுகிறது.

அதை விட நீங்க இது வரைக்கும் சுமார் 200 க்குள் தான் அபராதம் கட்டீயிருக்கீங்க அப்படித்தானே

sarcharan
30-05-2007, 11:58 AM
இந்த போலீசுகாரங்களுக்கு வெக்கம், மானம், சூடு, சுரணை எதுவும் கிடையாது.
நானும் என் நண்பனும் இதுபோல வண்டியில் போனோம். மாமங்காரன் புடிச்சிக்கிட்டான். ஆங்கிலம் தெரிந்திருந்தும் கன்னடத்துல பேச ஆரம்பிச்சான். என் நண்பன் சும்மா இருக்காம என்கிட்ட பணம் இல்ல credit card தான் இருக்குன்னு சொன்னான்.
ஹேங்.. அப்புறம் 400 ரூபா மொய் எழுதினோம்.
அப்பால போகும் போது தம்பி.. நீங்க தமிழான்னு கேட்டான்?
நான்: ஏன் தமிழ்ன்னா ஒரு 50 ரூபா தள்ளுபடி தருவியான்னேன்....

அன்னிக்கி எனக்கு நல்லநேரம் தப்பிச்சேன்.

வெற்றி
30-05-2007, 12:06 PM
இதே போல் எனக்கும் நேர்த்தது...ஆனால் அப்போது விஜயகாந்தின் படங்களில் கோட்டு சீன் பார்த்ஹ்டு கெட்டுப்போயிருந்த காலம்...
ஆகவே சரிதான் சார்ஜ்-ஸீட் போடுன்னு சொல்லி கோட்ட்க்கு போயிட்டேன்..அங்கே தான் கிரகணம், ஆரமிச்சிது...ஒரு வக்கீல் (எங்க தெருவில் வசிப்பவர்தான்) என்னை பார்த்து ஓடி வந்து அதுக்காக ஆஜர் ஆகிறேன்னு சொல்லி 100 ரூபா வாங்கி வாதாடி கடைசியில் 50 ரூபாய் மட்டும் பைன் போட்டர்கள்..
ஆனால் வக்கீல் வைக்காமல் இருந்தவர்களுக்கு 50 ரூபாய் தான் அபராதம்..
எனக்கு கூட்டி பார்த்தால் மொத்தம் 150 ரூபாய் தண்டம்..
அப்போ இருந்து போலீஸ் (டிராபிக்) கைகாட்டினால் நிற்பதே இல்லை..
பி.கு : ஹெல்மெட் சட்டத்தால் இன்னும் ஒரு வருடத்தில் ஒவ்வொரு டி.போலீஸிசும் ஒரு வீடோ அல்லது பிளட்டோ வாங்கிவிடுவார்கள் தானே???

சூரியன்
30-05-2007, 12:13 PM
இதே போல் எனக்கும் நேர்த்தது...ஆனால் அப்போது விஜயகாந்தின் படங்களில் கோட்டு சீன் பார்த்ஹ்டு கெட்டுப்போயிருந்த காலம்...
ஆகவே சரிதான் சார்ஜ்-ஸீட் போடுன்னு சொல்லி கோட்ட்க்கு போயிட்டேன்..அங்கே தான் கிரகணம், ஆரமிச்சிது...ஒரு வக்கீல் (எங்க தெருவில் வசிப்பவர்தான்) என்னை பார்த்து ஓடி வந்து அதுக்காக ஆஜர் ஆகிறேன்னு சொல்லி 100 ரூபா வாங்கி வாதாடி கடைசியில் 50 ரூபாய் மட்டும் பைன் போட்டர்கள்..
ஆனால் வக்கீல் வைக்காமல் இருந்தவர்களுக்கு 50 ரூபாய் தான் அபராதம்..
எனக்கு கூட்டி பார்த்தால் மொத்தம் 150 ரூபாய் தண்டம்..
அப்போ இருந்து போலீஸ் (டிராபிக்) கைகாட்டினால் நிற்பதே இல்லை..
பி.கு : ஹெல்மெட் சட்டத்தால் இன்னும் ஒரு வருடத்தில் ஒவ்வொரு டி.போலீஸிசும் ஒரு வீடோ அல்லது பிளட்டோ வாங்கிவிடுவார்கள் தானே???



ஏமாந்தால் ஒரு பிளாட் என்ன ரெண்டு மூனு வாங்கிருவாங்க

lolluvathiyar
31-05-2007, 11:24 AM
ஹெல்மெட் சட்டத்தால் இன்னும் ஒரு வருடத்தில் ஒவ்வொரு டி.போலீஸிசும் ஒரு வீடோ அல்லது பிளட்டோ வாங்கிவிடுவார்கள் தானே???

அப்படி யெல்லாம் உயோகமா செய்ய மாட்டாங்க
குடி கூத்தியா இப்படி தான் அந்த பணம் செலவலிப்பாங்க

சிவா.ஜி
31-05-2007, 11:31 AM
லொள்ளுவாத்தியார் ரொம்ப காட்டமா இருக்கார்ன்னு நெனைக்கிறேன்.அக்னிவெயில் முடிஞ்சிபோச்சுங்கோ. ஆனாலும் கோபம் நியாயமானதுதான்.

ஆதவா
31-05-2007, 11:43 AM
வாத்தியாரே! அருமைங்க.... அதிலும் தண்ணி போட்டுட்டு அவ்ளோ தைரியமா சொன்னது இன்னும் சூப்பரப்பு...

என்னோட அனுபவம் இதோ..

முதல் அனுபவம் : சென்னையில எபிக் னு ஒரு ப்ரோக்ராம் பண்ணீட்டு இருந்தப்ப நள்ளிரவில் நானும் என் நண்பர்கள் இருவரும் சாப்பிடச் சென்றோம். சந்தேகத்தின் பேரில் எங்கள் மூவரையும் பிடித்துக் கொண்டார்கள் போலிஸ்காரர்கள்.. எங்கள் முதலாளி அப்போதைய இப்போதைய முதல்வரான கலைஞரைத் தெரிந்து வைத்தவர் (அப்படி என்றூ சொன்னார்கள்) அதைச் சொன்னதும் ரொம்ப எளக்காரம் ஆகி எங்கள் மூவரையும் குத்த வைத்து (இதற்கு தமிழில் என்ன என்ப்து அறியேன்) உட்காரச் சொல்லினான்.. சிறிது நேரத்தில் எங்களில் ஒருவன் " சார் எவ்ளோ பணம் வேணும்?" என்றான்... அவனும் குறிப்பிட்ட தொகை கொடுத்துவிடச் சொன்னான்.. ஆனால் ரொம்பவே ஸ்ட்ரிக்ட்.. எங்களில் இருவரை மட்டுமே வெளியே விட்டான்.. நாங்கள் உடனே சென்று எங்கள் முதலாளிக்கு போன் போட்டு கமிசனரைத் தொடர்பு கொண்டு அவரை விடுவிக்குமாறு கேட்டோம்.. தூக்கக் கலக்கத்தில் ரொம்ப நேரம் கழித்துதான் கமிசனருக்கு போன் போட்டார்.... அதன் பிறகே வந்தோம். அன்று அவர்களிடம் அழுத தொகை கிட்டத்தட்ட நூறைத் தாண்டும் என்று நினைக்கிறேன்..

அனுபவம் இரண்டு : புதிதாக வண்டி வாங்கி பல பிரச்சனைகள் இருக்க,அதை ரிஜிஸ்டர் செய்யாமலே ஓட்டவேண்டியிருந்தது..வண்டி வாங்கி சுமார் மூன்று மாதங்கள் ரிஜிஸ்டர் பண்ணாமலே ஓட்டினேன்.. இடையில் ஒருவனிடம் மாட்டி முழிக்க.. அதுவும் வீட்டிற்கு மிக அருகிலே..... நூற்றைம்பது கேட்டான்... இருப்பதோ ஐம்பது... ஒருவழியாக பேசி முடித்து ஐம்பதைக் கொடுத்தேன்... வேறவழியில்லை.. அந்த போலிஸ் காரன் ஒரு இந்திக்காரன்... அவனே பல இடங்களில் பிச்சை எடுப்பதும் பார்த்திருக்கிறேன்

அனுபவம் மூன்று : ஆங்கிலப் படங்கள் வரும் எந்த வெள்ளியும் விடுவதில்லை.. (நாளை கூட) அப்படி ஒருநாள் தி ஐலண்ட் என்ற படம் பார்த்துவிட்டு வீடு திரும்புகையில் ஒருவனிடம் மாட்டினோம்... அதுவும் ட்ராபிக் போலிஸல்ல... நாங்கள் வேகமாக சென்றிருந்தால் தப்பியிருக்கலாம்.. மூன்று பேர் வண்டியில் சென்றதுதான் குற்றமாகிவிட்டது.. கையில் வேறு காசு இல்லை. வேறவழியின்றி ஏடிஎம் சென்று நூறு ரூபாய் எடுத்தேன்... தண்டம்... ஐம்பது ரூபாய் எடுக்கும்படி இருந்தால் எவ்ளொ நன்றாக இருக்கும்?? அந்த நூறோடு எங்கள் பர்ஸிலிருக்கும் ஐம்பது காசு சில்லறைகூட அவன் விட்டு வைக்கவில்லை.. கேவலம்...

போலிஸ்காரர்களின் அட்டூழியம் அனுபவிக்காத அனுபவஸ்தர்கள் உலகில் உண்டோ?

விகடன்
31-05-2007, 06:18 PM
உங்கள் அநுபவங்களைப்பார்த்தபின்னர்தான் எனது அநுபவங்களில் ஒன்றைச் சொல்லலாம் என்று விளைகிறேன். மற்றவற்றை சொல்லவேண்டுமானால் கதாப்பிரசங்கந்தான் நடத்த வேண்டும்...

இதுதாங்க கதை,

ஒருமுறை தங்கையை ஓட்டோவில் அவளது பள்ளிக்கூடத்தில் கொண்டுபோய் விட்டேன். ஆனால் அங்கு வீதியில் வழமையாக இருக்கும் பொலீஸ்காரன் ஓட்டோக்களில் வருவோர் இறக்குவதற்கு என்று ஒரு இடமும் மோட்டார் சைக்கிளிற்கென்றொ ஓரிடமாகவும் பேணிவந்திருக்கிறான். ஆனால் நானோ கொழும்பிலிருந்து சென்றிருந்ததால் இந்த ஒழுங்குமுறையெல்லாம் தெரியாது. ஆகையால் வீதி ஒழுங்குமுறைக்கமைய மோட்டார் சைக்கிளில் வந்தோர் இறக்கி விட்டுக்கொண்டிருக்குமிடத்திற்கு பின்னால் நிறுத்தினேன். அப்போது போலீஸ்காரன் என்னை முன்னே வரச்சொல்லி கையசைத்தான். அந்நேரம் ஏதுமறையாத தங்கை ஓட்டோவிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தாள். ஆகையால் நான் முன்னொனெடுக்காது அவ்விடத்திலேயே வைத்திருந்தேன். தன் பேச்சை கவனிக்காதிருப்பதாக கருதிய அந்த மடையன் எனது பெயரில் நடுவீதியில் நிறுத்தியதாக எழுதி கோட் கேசிற்கும் கொண்டுபோகுமளவிற்கு அமைத்துவிட்டான். ஆத்திரமடைந்த நான் எந்த பணமும் கட்டாது எனது லைசன்ஸ்சை எடுப்பதாக தீர்மானங்கொண்டேன். உடனே அந்தக்காலத்தில் மாடவ்வ நீதவான்இளஞ்செளியனிடம் சென்று இதைக்கூற, அவரோ, "தம்பி. நீ கம்பஸில படிக்கிறா. இந்த நாய்களுடன் முரண்டு உன் பேரில் கேஸை கோட் வரை கொண்டு வராமல் பார்த்துக்கொள். மீறி வந்தால் நான் கட்டாயம் நங்கு விசாரித்துத்தான் தீர்ப்பளிப்பேன். ஆகையால் வந்தாலும் கவலைப்படத்தேவையில்லை. ஏலக்கூடியளவு தவிர்க்கப்பார்" என்று கூறினார். இருந்தாலும் எனது குறிக்கோளை மாற்ற சம்மதமில்லாமையாஇ. நண்பன் ஒருவன் உதவியுடன் ரபிக் போலீஸில் பெரியவனுடன் கதைத்து என்னிடம் லைசன்ஸ்சை பறித்தவனை அவருடைய அலுவலகத்திற்கு வரவழைத்து பறித்து தந்தார். கோட்டிற்கு பதியப்பட்ட புத்தகத்தில் " சிக்கனல் போடாது திருப்பியது" என்று மாற்றி எழுதி கேசை வலிமை குறைந்ததாக்கி விட்டார்.

அதன் பிறகு என்னை பார்த்தால் அவன் அவமானத்துடன் கூடிய கோஅத்துடன் என்னைப்பார்ப்பான். நானும் " ஏலுமென்றால் பண்ணிப்பார்" என்பது போல் ஒரு முரால்பார்வையுடன் கடந்து செல்வேன். இருந்தாலும் ஒரு பயம். ஏனென்றால், சுட்டுப்போட்டு "தவறுதலான சூடு என்றோ அல்லது ஒரு கிறிநைட்டை வைத்துப்போட்டு பொலி என்றோ சொல்லி கேஷை முடிக்கும் வல்லமை அவங்களிற்க்குண்டு.

அறிஞர்
31-05-2007, 06:41 PM
இது என்ன போலீஸ் பற்றிய கதை தொடரா......

10 வயதில் சைக்கிளில் ஹெட்லைட் இல்லையென பிடித்துவிட்டனர். அழுது தப்பித்தேன்... அந்த வயது அப்படி.

20 வயதில் சென்னை டி-நகரில் ஒன்வேயில் போனதற்கு பிடித்தனர். சென்னை போலீஸ் கொஞ்சம் காஸ்ட்லி. அப்பவே 50ரூபாய் அழுதேன்.

இப்ப ஹெல்மெட் கலெக்ஷன் நன்றாக கிடைக்கும்.

ஓவியா
31-05-2007, 06:57 PM
இதுனாலதான் நான் பைக்கே வாங்கவில்லை மக்களே!!!

நல்லவாத்தியார் அண்ணா, அருமையாக எழுதி இருகின்றீர்கள்.

சுவாரஸ்யமாக இருக்கின்றது. நன்றி.

மனோஜ்
31-05-2007, 07:16 PM
அருமையான போலீஸ் கதைகள்
எங்கள் அப்பா போலீஸ் அதனால் மாட்டினால் அவர் பெயரை செல்லி தப்பித்து விடுவென் சில முறை
போலீஸ் காரங்க பையனே இப்படினா எப்படி என்பதால்
உடன் கார் உரிமையேடு எடுத்து விட்டேன்

விகடன்
31-05-2007, 07:17 PM
அருமையான போலீஸ் கதைகள்
எங்கள் அப்பா போலீஸ் அதனால் மாட்டினால் அவர் பெயரை செல்லி தப்பித்து விடுவென் சில முறை

அப்பா போலீசா?
அப்படியென்றால் இனிமேல் போலீச்க்கவலை எமக்கில்லை என்று சொல்லுங்கள்.

ஓவியா
31-05-2007, 07:21 PM
அருமையான போலீஸ் கதைகள்
எங்கள் அப்பா போலீஸ் அதனால் மாட்டினால் அவர் பெயரை செல்லி தப்பித்து விடுவென் சில முறை
போலீஸ் காரங்க பையனே இப்படினா எப்படி என்பதால்
உடன் கார் உரிமையேடு எடுத்து விட்டேன்

மனோஜ், லண்டனில் என்ன புடிச்சாலும் உங்க அப்பு பேர சொல்லி தப்பிக்கலாமா!!!!! :love-smiley-008:

மனோஜ்
31-05-2007, 07:26 PM
மனோஜ், லண்டனில் என்ன புடிச்சாலும் உங்க அப்பு பேர சொல்லி தப்பிக்கலாமா!!!!! :love-smiley-008:
செல்லி பாருங்க தப்பி...............

உள்ள வைத்து விடுவாங்க அவ்வளவு தான்

ஓவியா
31-05-2007, 07:29 PM
செல்லி பாருங்க தப்பி...............

உள்ள வைத்து விடுவாங்க அவ்வளவு தான்

அச்சோ.....................:icon_smokeing:

மனோஜ்
31-05-2007, 07:31 PM
என் படக்குனு சிகரட்ட பத்த வைச்சிடிங்க

தப்பு தப்பு ...............ரிலாக்ஸ் ஒகே

அக்னி
01-06-2007, 06:24 PM
வாத்தியாருக்கு மட்டுமோ அனுபவம் என்று பார்த்தால், எல்லோருக்கும் ஒவ்வொன்றாய் வந்து விழுகிறதே...

கொஞ்சம் சேர்ந்ததும், நகலெடுத்து, காவல்துறைக்கு அனுப்பி வைக்கத்தான் இருக்கு...

காவலர்கள்.., ஒரு சிலரின் நடவடிக்கைகளினால், நேர்மையானவர்களும் சிக்கிவிடுவதுதான் வேதனை...

வேலியே பயிரை மேய்ந்தால்..."
சம்பந்தப்படும் காவலர்கள்... உணருவார்களா..?

அமரன்
01-06-2007, 06:30 PM
வாத்தியாரே உங்க டிராபிக் அனுபவம் அருமை. ஹெல்மெட் தேவையா என்ற திரியில் உங்க விவாதக் கருத்துகளுக்கு இந்த அனுபவங்கள் கூடக் காரணமாக இருக்கலாம் அல்லவா, நமக்கு இப்படி ஒரு சம்பவமும் நடக்கலைங்க. ஏன்னா நமக்கு வண்டியே ஓட்டத் தெரியாதுங்க.

இன்பா
02-06-2007, 06:07 AM
இதை பார்க்கும் போது போக்குவரத்து போலீஷ் இப்படியுமா என்று தொன்றுகிறது.

அதை விட நீங்க இது வரைக்கும் சுமார் 200 க்குள் தான் அபராதம் கட்டீயிருக்கீங்க அப்படித்தானே

ஆமா மிக்கி போலிஸ் எப்பவுமே இப்படித்தான்.....

(ஆமா மன்றத்துல ரிஜிஸ்ட்டர் ஆகும்போது கையில...)

lolluvathiyar
27-06-2007, 02:11 PM
லொள்ளுவாத்தியார் ரொம்ப காட்டமா இருக்கார்ன்னு நெனைக்கிறேன்.

காட்டம் பாதி
அன்பு பாதி
கலந்து செய்த கலவை நான்
வெளியே காட்டம்
உள்ளே அன்பு

அது அந்தந்த சமயத்தில் வெளிபடும் உனர்வுகள்

ஜோய்ஸ்
27-06-2007, 02:16 PM
அடப்பாவிகளா! இப்படியுமா செய்வார்கள் காவலர்கள்?ஏதோ உங்க நேரம்ன்னு நிணைக்கிறேன்.

aren
27-06-2007, 02:34 PM
20 வயதில் சென்னை டி-நகரில் ஒன்வேயில் போனதற்கு பிடித்தனர். சென்னை போலீஸ் கொஞ்சம் காஸ்ட்லி. அப்பவே 50ரூபாய் அழுதேன்.


அப்பவே 50 ரூபாய் அழுதேன் − பல யுகங்களுக்குமுன் நடந்த விஷயம் மாதிரி தெரிகிறது. வயது தானாகவே வெளியே தெரிந்துவிடும் போலிருக்கிறதே.

மன்மதன்
29-02-2008, 12:23 PM
போலிஸ்காரர்களின் அட்டூழியம் அனுபவிக்காத அனுபவஸ்தர்கள் உலகில் உண்டோ?

வண்டி ஓட்டும் அனைவரும் ஒரு முறையேனும் அனுபவித்து இருப்பார்கள்.. நான் இருமுறை அனுபவித்து இருக்கிறேன்.:grin:

ஒன்று ஸ்பென்சர் அருகே.. அடுத்து ஸ்பென்சர் எதிரே..

ஸ்பென்ஸர் அருகே : ஒருதடவை நிதானமாக :music-smiley-016:வண்டி ஓட்டி வரும் போது, சத்யம் எதிரே இருக்கும் ரோட்டில் ஏதோ நினைவில் புகுந்து மவுண்ட் ரோட்டில் நுழைய அந்த ரோட்டின் நடுவில் நின்று கொண்டு எதிரில் சிக்னலை தேடினேன்.:medium-smiley-088: அப்பொழுதுதான் கவனித்தேன்.. நான் தன்னந்தனியாக ரோட்டின் நடுவில் நிற்க என் இருபுறமும் எதிரிலிருந்து வரும் வண்டிகள் கிராஸ் பண்ணி கொண்டிருந்தன..:icon_shok: அங்கே குடையில் உட்கார்ந்திருந்த வெள்ளை சட்டை மாமா:Christo_pancho:, என்னை கூப்பிட்டு 'என்ன ராசா எங்கே போவணும், இது ஒன்வே, அப்படியே திரும்பி, அடுத்த ரோட்டை புட்ச்சி போயிடு என்று அன்பாக வழி அனுப்பி வைத்தார்..
(இடையில் சில சம்பாஷனைகள் நடந்தது..என்னிடம் இருந்த(தே) 100 ரூபாயை அன்பாக வாங்கிவிட்டுதான் அனுப்பினார் அந்த மவராசன்.. அவர் ரொம்ம்ப நல்ல்லவர்..:traurig001:)

ஸ்பென்சர் எதிரில் : ஹெல்மெட் சட்டம் வந்த புதிதில் நான் ஹெல்மெட் போட்டூ வண்டி ஓட்டி வந்தேன். ஸ்பென்சர் அருகே உள்ளே ஒரு சிக்னலில் அனைவரையும் மடக்கி லைசன்ஸ்/இன்ஸூரன்ஸ் கேட்டார்கள்.. ஹெல்மெட்டை கழட்டி விட்டு நான் என்னுடைய டாக்குமெண்ட்ஸை காட்டி விட்டு , ஸ்பென்சர்தானே போறோம்..எதுக்கு ஹெல்மெட் போட்டு மறுபடியும் உடனே கழட்டணும்னு வண்டியில் மாட்டி விட்டு ஓட்டினேன்..:rolleyes: ஸ்பென்சர் வாசலிலே ஒரு வெள்ளை சட்டை குரூப்:Christo_pancho: நின்று என் வண்டியை மடக்கி ஏன் ஹெல்மெட் போடலேன்னு கேட்டது..:ohmy: நான் இப்பத்தான் அங்கே செக் அப் பண்ணினாங்க. இங்கே உள்ளேதானே போறோம்ன்னு போடலேன்னேன்..கேட்டாங்களா..:icon_nono: இல்லையே.. கையில் ஒரு பேப்பரை வலுக்கட்டாயமாக திணித்து :icon_wacko:50 ரூபாய் புடிங்கினாங்க. :sauer028: