PDA

View Full Version : காதல் சம்மதம்



சிவா.ஜி
30-05-2007, 10:24 AM
என் நூறாவது பதிவை கவிதையாய் பதிய நினைத்து இந்த படைப்பை பதிந்திருக்கிறேன்.

உடன்பிறப்பே இல்லாதவனுக்கு
அண்ணா என்ற அழைப்பும்,
பெற்றோர் முகம் கானா பிள்ளைக்கு
மகனே என்ற விளியும்,
பத்துநாள் பட்டினி கிடந்தவனுக்கு
சாப்பிடவா என்ற குரலும்,
விபத்தில் சிக்கிய மகன்
பிழைப்பானோ என
பரிதவிக்கும் பெற்றோருக்கு
உயிருக்கு ஆபத்தில்லை என்ற
மருத்துவரின் கூற்றும்
எத்தனை இன்பத்தைக் கொடுக்குமோ
அத்தனையையும் கொடுத்தது கண்ணே
நீ என்னை காதலா என அழைத்தது!

அமரன்
30-05-2007, 10:52 AM
எளிமையான வரிகளில் கலக்கி விட்டீர்கள். வாழ்த்துகள்

அக்னி
30-05-2007, 10:58 AM
நீங்கள் எதை நினைத்து எழுதினீர்களோ நானறியேன்...

ஆனால், இவை அனைத்தையும் பாசமாக மன்றத்தில் உணருகின்றேன்...

உங்கள் 100 பதிப்புக்கள், மன்றத்தில் முதல் அடி... என்றும் இணைந்திருந்து பல்லாயிரம் 100 பதிப்புக்களைத் தர வாழ்த்துகின்றேன்...

சிவா.ஜி
30-05-2007, 11:06 AM
உங்கள் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி அமரன் அக்னி அவர்களே.

சூரியன்
30-05-2007, 11:34 AM
தொடரட்டும் உம் முயற்சி

ஆதவா
30-05-2007, 12:21 PM
நூறாவது பதிப்புக்கு வாழ்த்துக்கள்
எல்லாவற்றையும் சொல்லிவிட்டு அதனோடு காதலை இறுதியாக்கிவிட்டீர்கள்... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அழைப்புகள் மகிழ்ச்சி தரக்கூடியவை.. அவற்றுள் இதுவுமொன்று.
சரி.. அழைத்தல், விளித்த, குரல், கூற்று என்று மாறிமாறி இட்டமைக்கு ஒரு சபாஷ்.
மகனே என்ற விளியும் என்பதைவிட விளிப்பும் என்று எழுதியிருக்கலாம்..
ஒப்பிடுதலை வர்ணனையாக அல்லாமல் யதார்த்தமாகக் கொடுத்ததும் நன்றாக இருக்கிறது... தொடர்ந்து எழுதுங்கள்..

சிவா.ஜி
30-05-2007, 01:55 PM
நன்றி ஆதவா. மன்றத்தின் மற்ற படைப்புக்களை பார்த்து படித்து மெருகேற்றிக்கொள்கிறேன்.
தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத்தூரும் அறிவு.

shangaran
30-05-2007, 02:06 PM
கலக்கிட்டீங்க அப்பு...

lolluvathiyar
31-05-2007, 12:23 PM
அருமை சிவா,
காதல் வலிமையானது என்பதற்க்கு
இத்தனை உவமைகளா?

சிவா.ஜி
31-05-2007, 12:27 PM
நன்றி வாத்தியாரே!

thevaky
01-06-2007, 06:47 AM
யார் அழைத்தார்கள் சிவா? 100 ஆவாது அல்ல நூறாயிரம் கவிதைகள் இயற்ற வாழ்த்துகின்றேன்.

அன்புடன்
தேவகி:food-smiley-011:

விகடன்
01-06-2007, 06:56 AM
எளிய நைடையில் இனியதோர் கவி.

வாழ்த்துக்கள் காதலா!!!

சிவா.ஜி
02-06-2007, 04:18 AM
நன்றி தேவகி நன்றி ஜாவா.