PDA

View Full Version : விழி வழிந்து



ப்ரியன்
30-05-2007, 08:18 AM
அழுது அரற்றும்
பெண்ணின் கண்ணீராய்
கரைந்து ஒழுகிக்கொண்டிருக்கிறது
மேகப்பந்து;

கரும் கம்பளம்
போர்த்தியதாய்
நீண்டு விரவியிருக்கிறது
இருள்;

சரசரக்கும் செருப்பினால்
உறக்கம் கலைந்ததென
குரைத்து ஓய்கிறதொரு
நாய்;

எண்ணெய் இட மறந்ததை
சத்தமாய்
முறையிட்டு வழிவிடுகிறது
வாசற்கதவு;

வெகுநேரமாகி
வீடு திரும்பும்
எனக்காய்

கதவிற்கு தலைசாய தந்து
காத்திருக்கும் அவளின்
விழி வழிந்து காத்திருக்கிறது
காதல்!

- ப்ரியன்.

ஆதவா
30-05-2007, 08:24 AM
கவிதை அருமை. வாழ்த்துக்கள்

சிவா.ஜி
30-05-2007, 08:29 AM
நல்ல கவிதை. அவள் விழி வழிந்து விழுமுன் அதைத்தாங்குங்கள் அது காதல் கலந்த கண்ணீர் விலை மதிப்பற்றது. பாராட்டுக்கள் ப்ரியன்.

தமிழ்ப்புயல்
31-05-2007, 08:20 AM
அருமையான கவிதை.
தொடர்ந்து கலக்குங்கள்.

இனியவள்
08-06-2007, 01:35 PM
அழுது அரற்றும்
பெண்ணின் கண்ணீராய்
கரைந்து ஒழுகிக்கொண்டிருக்கிறது
மேகப்பந்து;

கரும் கம்பளம்
போர்த்தியதாய்
நீண்டு விரவியிருக்கிறது
இருள்;

சரசரக்கும் செருப்பினால்
உறக்கம் கலைந்ததென
குரைத்து ஓய்கிறதொரு
நாய்;

எண்ணெய் இட மறந்ததை
சத்தமாய்
முறையிட்டு வழிவிடுகிறது
வாசற்கதவு;

வெகுநேரமாகி
வீடு திரும்பும்
எனக்காய்

கதவிற்கு தலைசாய தந்து
காத்திருக்கும் அவளின்
விழி வழிந்து காத்திருக்கிறது
காதல்!

- ப்ரியன்.

அருமையான கவிதை ப்ரியன் .... வாழ்த்துக்கள்

ஓவியா
08-06-2007, 03:32 PM
ப்ரியன் கவிதையின் கரு அருமை..

பல காதலை பல விதமாய் காண்பதிலும், அதை சொல்வதிலும் நீங்க கில்லாடிதான்.

பிரபஞ்சத்தில், பல விழிகள் இப்படிதான் விடியலுக்காக காத்திருக்கின்றன.

பென்ஸ்
05-09-2007, 07:01 AM
ப்ரியன்...

சம்பவம் ஒன்று .." வழிமீது விழி வைத்து காத்திருக்கும் பெண்"...

இதை விவரிக்க சாதரணமாக நான் கவிஜர்கள் அவளது சோகத்தை உணர்வுகளால் சொல்லுவாற்கள்... ஆனால் இது எனக்கு புதியதாக தெரியுது...
காத்திருக்கும் பெண்...
அவளை சுற்றி நடக்கும் சம்பவங்கள் கூட சோகமாய்...
கூர்மையான நிசப்த்தம் கொடுக்கும் நீளும் இரவு...

அழகு பாராட்டுகள்.....

உங்கள் அடுத்த காதல் தொடர் கவிதைகள் எப்போது...
மழை கவிதைகள் இன்னும் ஈரமாயிருக்கு... ஆனாலும் அடுத்த தூறலுக்காய்...

ஜெயாஸ்தா
05-09-2007, 12:25 PM
அவள் அவனின் வரவை எதிர்நோக்கி காலடி ஓசைக்காக சுற்றுப்புறத்தை கூர்நோக்கி காத்திருப்பதால் மழைஇரவு இருள் நாய்குரைத்தல் கதவின் கீச்சொலி ஆகியவை அவள் காதில் மட்டுமல்ல நம் காதிலும் விழத்தான் செய்கிறது.

தங்கவேல்
05-09-2007, 12:29 PM
ப்ரியன் காதலியின் காதல்... உண்மையில் ஏதோ ஒரு சோகம் வருகிறது உங்களது கவிதையில்... ,,,வாழ்த்துக்கள்..