PDA

View Full Version : வேசிrambal
16-05-2003, 02:54 PM
வேசி

படுக்கைக்கு அழைக்கும்
கண்களுமாய்..
மனதை மயக்கும்
வாசனையுமாய்..
கிறங்கடிக்கும்
ஆடையுமாய்..
எல்லாம் உண்டு
அவளிடம்..
இருந்த போதும்
கிராக்கி கிடைக்காத
வேசியாகவே
இருக்கின்றன
கவிதைகள்...

Narathar
17-05-2003, 04:06 AM
ராம்பால் நம்ம வாசகர்கள் மேல்
என்ன அவ்வளவு கோபம் உங்களுக்கு?

ஒருத்தியிருந்தால் பரவாயில்லை............
வரிசையாய் "பல" வேசிகள்
காத்திருக்கிறார்கள் ஒவ்வ்ருநாளும்!
இவளை அழைப்பதா?
இல்லை அவளை அழைப்பதா
என்றே குழம்பிப்போகிறோம்!
அழைத்தாலும் இவளை அனுபவித்துவிட்டு
அடுத்தவளிடம் ஓடும் அவசரம்!
இவள் சுவையும் தெரிவதில்லை
அவள் சுகமும் புரிவதில்லை!!
புரிந்து கொண்டு நாம் இணைந்து
ஒரு முடிவு எடுப்பது நல்லது!!

poo
17-05-2003, 10:05 AM
நான் வேசிகளை மதிப்பவன்... கவிதைகளையும்தான்..

ஆனாலும் இந்த ஒப்பீடல் ரசிக்கமுடியாதவை....

karikaalan
17-05-2003, 10:47 AM
என்னங்க ராம்பால்ஜி!

கவிதைகள் எழுதுபவரது கற்பனையின் ஊற்று நீர். அதனை எவ்வாறு வேசியுடன் ஒப்பிட்டீர்கள்?

இல்லை, படிப்பவர்கள் அதனை உதாசீனம் செய்வதுபோல் நடந்துகொள்வதால், அவர்களை வேசிகள் என்றீர்களா?!!

===கரிகாலன்

kavidha
17-05-2003, 01:56 PM
விலைமாது போல் இந்த
கலைமாது கவனிப்பாரற்று கிடப்பதைக்கூறுகின்றீர்கள்.
மற்றவர் மனம்
புண்படவேண்டுமென எழுதியிருக்க மாட்டார்
கவிதையின் மேல் மற்றவர்
கண்பட வேண்டுமென எழுதியிருப்பார்.
ஆதங்கம் அர்த்தமானதுதானே
கவிதா

poo
17-05-2003, 02:05 PM
கண்பட வேண்டுமென எழுதியிருப்பார்.............-கவிதா.

-எப்படி நவீனயுகத்தில் வரும் கவர்ச்சி விளம்பரங்கள் (பிளேடு விளம்பரத்தில் வரும் யுவதி!!) போன்ற யுக்தியா இது?!!!!!

rambal
17-05-2003, 03:09 PM
அனைவருக்கும்..
நான் யாரையும் சாடவில்லை..
இங்கு ஒரு தவறு செய்துவிட்டேன்..
என் கவிதைகள் என்று குறிப்பிடாமல்
கவிதைகள் என்று பொதுவாக கூறிவிட்டேன்..
இந்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்..
மற்றபடி மற்றவர் மனம் புண்படும்படி நான் எதையும் எழுதுவதில்லை...
ஆனால்,
இந்தக் கவிதை கண்டு ஒருவரின்
மனம் புண்பட்டுவிட்டது.
அவர் கோபம் நியாயமானது..
என்னிடம் விளக்கம் கேட்டு
அந்த நண்பர் எனக்கு PM அனுப்பியிருக்கலாம்.
அல்லது என் பதில் வரும்வரை கொஞ்சம் பொறுத்திருக்கலாம்..
அதற்குப் பதிலாக
இந்தக் கவிதை எப்படி இருந்திருக்க வேண்டும் என்று
வகுப்பு எடுத்துவிட்டார்..


வேசி என்று உருவகப்படுத்தியது தவறா?
என்னைப் பொறுத்தவரை தவறில்லை.. இது கொஞ்சம் கம்மிதான்..

லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில்
அறுவெறுக்கத்தக்க, ஏற்றுக்கொள்ளமுடியாத, சகிப்புத்தன்மையை சோதனை செய்யக் கூடிய அளவிற்கு
எழுதுவது என்று ஒரு வகை இலக்கியம் இருக்கிறது..
அந்த வகை இலக்கியத்தில் எழுத்தப்பட்டவைகள் எல்லாம் மிகச்சிறந்த நூல்களாக உலகம்
முழுதும் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது.
நம்மில் அந்த வகை இலக்கியம் சார்ந்த எழுத்தாளர்கள் மற்றும் எழுதப்பட்ட புத்தகங்களும் குறைவு..
தமிழில் ஒரு எழுத்தாளர் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களுக்கு சவால்விடும் வகையில் எழுதிக்கொண்டிருக்கிறார்.
அவர் பெயர் நல்ல பெரியவன். கிடைத்தால் படித்துப் பாருங்கள்..

இந்த வேசி கவிதை அந்த வகை அல்ல..
ஆனால், அந்த அளவிற்கு சர்ச்சை ஏற்படுத்திவிட்டதால்
அந்த வகை இலக்கியம் சார்ந்த ஒரு கவிதை ஒன்றை உங்களுக்காக எழுதுகிறேன்..(நீங்கள் விருப்பப்பட்டால்)

மற்றபடி யாரையும் கவரும் கவர்ச்சி விளம்பரம் போல் எல்லாம் இது கிடையாது.. என்னுடைய ஆத்ம திருப்திக்காக எழுதுகிறேன்..
அவ்வளவே..

இங்கு ஏதாகிலும் தவறாயிருந்தால், மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்..
இது ராம்பால் எனும் கவிதை கிறுக்குபவனாக என்னுடைய பதில்...

Nanban
17-05-2003, 03:24 PM
பெரிய, பெரிய வார்த்தைகள் எல்லாம் எழுதாதீர்கள்.....

மன்னிப்பு கேட்க வேண்டிய அளவிற்கு அந்தக் கவிதையில் தவறு ஏதும் இருப்பதாகப் படவில்லை.

இதே கருத்தை, நான் முன்னமே, வெட்கங்கெட்ட தாய் என்ற தலைப்பில் கூட எழுதியுள்ளேன். மேலும், பூ அவர்கள் எழுதிய கவிதைக்கு (சாமி..) நான் எழுதியிருக்கும் பதிலையும் படியுங்கள்.....

தரமான பதிப்புகள் மதிப்பு பெறும்... சிறிது சிறிதாகத் தான் அதற்கு ஆதரவு பெருகும்.......

காத்திருங்கள்......