PDA

View Full Version : வேலின்மேல் ஆணையிட்ட மன்னரும் மறப்பாரோ - நlolluvathiyar
29-05-2007, 04:01 PM
தமிழ் மன்ற ரசிகர்களே, இந்த கவிதை நான் எழுதியதில்லை.
2000 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய இந்த கவியை
நான் மிகவும் ரசித்தேன், நீங்கள் ரசிப்பீர்கள் என்று உங்களுக்கு தருகிறேன்.

இது முருகனுடைய பாடல், முருகன் வருவான் என்று நினைத்து பொருமை இல்லாமல் காத்திருந்த வல்லி,
கோபத்தை முருகன் மீது செலுத்தாமல் அவனுடை வாகனத்தின் மீது செலுத்தினாள்

மறவேன் மறவே னென்று வேலின்மேல் ஆணையிட்ட
மன்னரும் மறப்பாரோ - நீல மயிலே!(மற)

உருகி உருகி உள்ளம் அவரை நினைவதையும்
உயிரும் கரைவதையும் - அறியாரோ மயிலே?(மற)

அன்பர் வரவு நோக்கி இங்குதான் காத்திருக்க
அன்னநடை பயில்வாயோ - வண்ண மயிலே!
பெம்மான் உன் மேலே வரும் பெருமிதம் தலைக்கேறிப்
பாதையை மறந்தாயோ - பேதை மயிலே!
வன்மம் மனதில் கொண்டு வஞ்சம் தீர்க்க நினைந்து
வழியில் உறங்கினாயோ - வாழி நீ மயிலே!(மற)

தன்னிகரில்லாதான் தனயர்பால் மையல் கொண்ட
மங்கைமீ திரங்காயோ - தங்க மயிலே!
சொன்னாலும் நீ அறியாய் சொந்த அறிவுமில்லாய்
உன்னை நொந் தாவதென்ன? - வன்கண் மயிலே!
மன்னும் கரிபரிகள் புவியில் பல இருக்க
உன்னை ஊர்தியாய்க் கொண்டோர் - தன்னையே நோகவேணும்(மற)

எவ்வளவு எளிமையாக புரியும்படி இருக்கிறது என்று பாருங்கள்.
இந்த பாடலை எழுதியது யார் என்று எனக்கு யாரவது கூற முடியுமா?
இதுவரை என் சொந்த கருத்துகளை பதித்து வந்த
இந்த மன்றத்தில் நான் முதல் முதலில் நான் எழுதாத பாடல் (பாடல் காப்பி பேஸ்ட் பண்ணியது)

முக்கியத்துவம் கருதி பதித்தேன்,
தவறு இருப்பின் மண்ணிக்கவும்

அன்புரசிகன்
29-05-2007, 04:12 PM
இந்தப்பாடலுக்கு கோட்டமட்ட போட்டியல் (பாடசாலை காலத்தில்) நடனமாடியதாக ஞாபகம். (சிரிக்கவேண்டாம்)
பாடியது யாரென்று தெரியாது. 2000 ஆண்டுகளா,?முன்னர் அருணகிரி நாதர் என்று நினைத்திருந்தேன். தவிர இதை ஏன் இதை புதிய கவிதைகள், பாடல்கள் > காதல் கவிதைகள் ல் பதிந்துள்ளீர்கள்? விஷேட காரணமேதும் உளதா?

lolluvathiyar
30-05-2007, 08:15 AM
முன்னர் அருணகிரி நாதர் என்று நினைத்திருந்தேன். தவிர இதை ஏன் இதை புதிய கவிதைகள், பாடல்கள் > காதல் கவிதைகள் ல் பதிந்துள்ளீர்கள்? விஷேட காரணமேதும் உளதா?

இது வல்லி முருகன் மீது இருந்த காதலால் பாடியது
அருனகிரிநாதரா, (நான் நாவுகரசராக இருக்கும் என்று நினைத்தேன்)

சிவா.ஜி
30-05-2007, 08:23 AM
முருகனையும் வள்ளியையும் நம்மில் ஒருவராய் நிணைத்து அவர்களின் காதல் கவிதையையும் இந்த பகுதியில் பதிந்திருப்பார். கடவுளாய் இருந்தாலும் காதல் பொதுவானது. நன்றாக இருக்கிறது யார் எழுதியதென்பது எப்படியும் நம் மக்கள் கண்டுபிடித்துவிடுவார்கள் (நானும் முயற்சிக்கிறேன்)

ஆதவா
30-05-2007, 08:34 AM
அதெல்லாம் சரிங்க வாத்தியாரே! இது இடம் பெற வேண்டியது இலக்கியங்கள் பகுதியில்... மாற்றிவிடலாமா?

ஆதவா
30-05-2007, 08:36 AM
இது பா வாகையைச் சாராது இருக்கிறது.. ஆக இது இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பு எழுதப்பட்டதல்ல... சமீப காலத்தில் எழுதப்பட்டது...

சிவா.ஜி
30-05-2007, 08:58 AM
அப்படி போடுங்க ஆதவா ஆராய்ச்சியை ஆரம்பித்து விட்டீர்கள்.இனிதான் களைகட்டும்.

lolluvathiyar
30-05-2007, 09:18 AM
இது பா வாகையைச் சாராது இருக்கிறது.. ஆக இது இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பு எழுதப்பட்டதல்ல... சமீப காலத்தில் எழுதப்பட்டது...

பா வகை அப்படினா என்னக்க புரியலியே

ஆதவா
30-05-2007, 09:23 AM
கிட்டத்தட்ட பாரதி காலத்தில் பா வகை இலக்கணங்கள் முறியடிக்கப்பட்டு கவிதை எழுதப்பட்டது. பா நான்கு வகைகள் உண்டு. அது போக பல விருத்தங்களும் சிந்துக்களும் பல இலக்கணங்கள் உண்டு.. இந்த் பாவகையில் ஆசிரியப்பா விருத்தமும் வெண்பாவும் எனக்குத் தெரியும். மன்றத்தில் எழுதியிருக்கிறேன். ஆக ஒரு நூறு வருடங்களுக்குள் எழுதப்பட்ட கவிதையாக இது இருக்கும்.. இதை அசைபிரித்தால் பா வருவதில்லை . அதோடு சீர் வகைகள் சீராக இல்லை..

lolluvathiyar
06-06-2007, 04:10 PM
ஆக ஒரு நூறு வருடங்களுக்குள் எழுதப்பட்ட கவிதையாக இது இருக்கும்.

ஆதவா, இந்த பாடல் அமரர் கல்கி எழுதிய சிவகாமியின் சபதத்தில் எழுதி இருகிறார்
அந்த கதை 2000 வருடங்களுக்கு முன் ஆட்சி செய்த பல்லவரல் காலத்தின் கதை
கல்கி அவரின் கதைகளை சர்வ ஜாக்கிரதையாக எழுதும் குண்ம் கொண்டவர்
அந்த கால கதைக்கு இந்த காலத்து பாடல் போட மாட்டார்.
ஆகையால் இது மிக பழைய பாடலாக இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது
இதொ அந்த சுட்டியை தேடி உங்களுக்கு தருகிறேன்.
http://www.chennailibrary.com/kalki/ss/ss3-14a.html

விகடன்
05-08-2007, 07:10 PM
இந்தப்பாடலுக்கு கோட்டமட்ட போட்டியல் (பாடசாலை காலத்தில்) நடனமாடியதாக ஞாபகம். (சிரிக்கவேண்டாம்)


சிரிக்க வேண்டாம் என்று சொல்வதைப்பார்த்தால் அன்று பலர் சிரித்திருக்கிறார்கள் போலும்.

அந்த நடனம்தானாம் ஆரம்ப நிகழ்ச்சியாக போடப்பட்டு இறுதியாக்கப்பட்டதாக(தங்களின் ஆட்டத்திறமையால்) கேள்வி.:sport-smiley-018: