PDA

View Full Version : உயிர் காக்க உதவுங்கள்



சூரியன்
29-05-2007, 03:40 PM
Patient: R.Sankara Subramanain (Age 28)
Disease: Renal Failure

Required: Rs. Four Lakhs

DD/cheque in favour of : Kovai Medical Centre & Hospital, Coimbatore

Address : S.Kamali, W/o. Sankara Subramanian, No.18, VCS Nagar, 1st Street, G.N.Mills (P.P), Coimbatore- 641 014.

Payment may be sent upto: 25.06.07

இவருக்கு உங்களால் முடிந்த உதவியை அளியுங்கள்

பென்ஸ்
29-05-2007, 03:42 PM
மிக்கி ... நல்லது...
உதவ முன்வருபவர்களுக்கு இது உதவும்...

முடிந்த வரை தமிழில் பதியுங்கள்..

ஆதவா
31-05-2007, 02:09 AM
இந்த மாதிரி தமிழ்நாட்டில் ஆயிரத்தெட்டு பேர் உள்ளார்கள்... எல்லாருக்கும் நம்மால் பணம் கொடுத்துக் கொண்டு இருக்க முடியாது... எனது கசின் ஒருவனுக்கு இப்படிக் கேட்டு ஒருவனும் கொடுக்கவில்லை. கடைசியில் இறந்தே போனான்... அதுமாதிரி காசு இல்லாதவர்களுக்குக் கதி அதுதான்.... மனம் வந்து காசு உள்ளவர்கள் கொடுத்தாலும் எத்தனை பேருக்குத்தான் கொடுக்க முடியும்???????

எனக்கு வாரம் ஒரு தகவல் அலைபேசியில் இந்த மாதிரி வருகிறது......

மிக்கி.. உங்கள் சமூக சேவைக்கு அளவே இல்லை போலிருக்கே :D

இதையும் எங்கிருந்தோ காப்பி அடிச்சு போட்டுட்டீங்க.... அதுசரி

நீங்கள் எவ்ளோ பணம் அவங்களுக்குக் கொடுத்தீங்க???? :icon_dance:

விகடன்
31-05-2007, 03:22 AM
அதுதானே மிக்கி.
முதலில் நீங்கள் பணம் கொடுத்து உதவியமைக்கு முன்மாதிரியாக இருந்தல்லவா மற்றவர்களையும் கேற்கவேண்டும். பணம் அனுப்பியமைக்குரிய உறுதிப்படுத்தக்கூடிய பத்திரங்களிருந்தால் அதையும் இணையுங்கள். உங்களை முன்மாதிரியாக வைத்து பல சமூக சேவையாளர்கள் உங்களுடன் இணையக்கூடும்.

வாழ்க வளமுடன்.

பென்ஸ்
31-05-2007, 12:35 PM
இந்த மாதிரி தமிழ்நாட்டில் ஆயிரத்தெட்டு பேர் உள்ளார்கள்... எல்லாருக்கும் நம்மால் பணம் கொடுத்துக் கொண்டு இருக்க முடியாது... எனது கசின் ஒருவனுக்கு இப்படிக் கேட்டு ஒருவனும் கொடுக்கவில்லை. கடைசியில் இறந்தே போனான்... அதுமாதிரி காசு இல்லாதவர்களுக்குக் கதி அதுதான்.... மனம் வந்து காசு உள்ளவர்கள் கொடுத்தாலும் எத்தனை பேருக்குத்தான் கொடுக்க முடியும்???????

எனக்கு வாரம் ஒரு தகவல் அலைபேசியில் இந்த மாதிரி வருகிறது......

மிக்கி.. உங்கள் சமூக சேவைக்கு அளவே இல்லை போலிருக்கே :D

இதையும் எங்கிருந்தோ காப்பி அடிச்சு போட்டுட்டீங்க.... அதுசரி

நீங்கள் எவ்ளோ பணம் அவங்களுக்குக் கொடுத்தீங்க???? :icon_dance:
ஆதவா... இந்த கருத்தில் எனக்கு உடன்பாடில்லை...
"ஒரு உயிரிலேனும் உன்னால் ஒரு வித்தியாசத்தை கொடுக்கமுடியுமென்றால்.... அது மட்டும் போதும்" என்று நினைப்பவன் நான்....
என்னால் இந்த உலகில் உள்ள எல்லோருக்கும் உதவமுடியுமா என்று தெரியாது... ஆனால் என்னை சுற்றியுள்ள, என்னால் முடும் அளவிஉக்கு உதவகுடியவர்களுக்கு நான் கண்டிப்பாக உதவுவேன்....

சுட்டிபையன்
31-05-2007, 12:42 PM
மிக்கி இப்படி தகவல்கள் போடும் போது ஆதாரங்கலுடன் போடுவது நன்று, இப்போது உலகத்தில் பலவிதமாக கொள்ளையடிக்கிறார்கள்

ஓவியா
31-05-2007, 10:13 PM
மிக்கி அவர்களே,
கொள்ளையடிக்க இது போல் பல வழிகள் வந்துள்ளன. சரியான தகவல்களுடன் தாருங்கள். முடிந்தால் உதவி செய்யலாம்.


அட பென்சு,
அந்த அனாதை இல்லத்திற்க்கு ஒரு பதிவு போட்டீறே அதை தூசு தட்டுங்காளேன். புதியவர்கள் யாரேனும் உதவ முன்வரலாம்.

அறிஞர்
31-05-2007, 10:18 PM
தகவலுக்கு நன்றி.... இந்த தகவல் எப்படி கிடைத்தது என்று தெளிவாக கூறினால் கொடுப்பவர்களுக்கும் நம்பிக்கை ஏற்படுமே..

விகடன்
01-06-2007, 07:03 AM
சரியாகச் சொன்னீர்கள்.
செய்தியில் உண்மைத்தன்மை இருந்தால்த்தானே மேற்கொண்டு ஏதும் செய்ய முடியும்.

சூரியன்
01-06-2007, 01:12 PM
எனக்கு வந்ததை மெயிலில் வந்ததை இங்கே வைத்தேன் அவ்வளவுதான் மற்ற படி சரியாக எதுவும் தெரியவில்லை

அமரன்
01-06-2007, 03:24 PM
எனக்கு வந்ததை மெயிலில் வந்ததை இங்கே வைத்தேன் அவ்வளவுதான் மற்ற படி சரியாக எதுவும் தெரியவில்லை
தவறு மிக்கி. இப்படியான விடயங்களைச் சரியாக உறுதிப்படுத்தாமல் பதிவது தவறானது. உறுதிப்படுத்திய பின்னர் பதிந்திருக்கலாம்.
மேற்பார்வையாளர்களே உறுதிப்படுத்தாத இந்த வகைச்செய்தி இங்கே இருக்கலாமா?

அறிஞர்
01-06-2007, 04:44 PM
கொடுத்த தகவலுக்கு நன்றி.. மிக்கி.....
தற்சமயம் மேலும் வாதங்கள் எழாமல் இருக்க இதை பூட்டுகிறேன்.

இதை பார்த்து உதவி செய்ய விரும்புகிறவர்கள், விசாரித்துவிட்டு உதவுங்கள்... ஏமாந்து போனால் மன்றம் பொறுப்பல்ல.