PDA

View Full Version : ஒன்றுக்கு மேற்பட்ட பயனாளர் பெயர்கள்



இராசகுமாரன்
29-05-2007, 12:50 PM
நண்பர்களே,

சமீப காலமாக ஒருவர் பல பயனாளர் பெயர்களை வைத்துக் கொள்வது நமது மன்றத்தில் நவீன நாகரீகமாகிப் போனது. இதை சோதனைக்காக முயற்சித்திருக்கலாம் பிறகு விட்டு விடுவார்கள் என்று பார்த்தால், அது தற்போது எங்களுக்கு சோதனையாக உள்ளது.

ஒரு பெயரில் திரி துவக்கி விட்டு, மறு பெயரில் வந்து பாராட்டுகிறார்கள். ஒரு பெயரில் கவிதை எழுதி விட்டு, பல பெயர்களில் வந்து "கள்ள வோட்டு" போடுகிறார்கள். ஒரு பெயரில் ஒருவரை புகழ்ந்து விட்டு, மறு பெயரில் வந்து திட்டுகிறார்கள். ஏன் இந்த இரட்டை வேடம்? இரட்டை வேடம் இருந்தாலும் பரவாயில்லை, ஒருவர் இங்கே எட்டு வேடம் கூட போடுகிறார்!!! இவர்களை ஏன் தடை செய்யக் கூடாது?

நண்பர்களே! நீங்கள் பல பெயர்களில் வருவதை அறிய இங்கே பல தொழில் நுட்பங்களும், நிரல்களும் உள்ளன. அவை ஒருவர் எத்தனை பெயர்களில் உலாவுகிறார் என்று நிர்வாகிகளுக்கு தெள்ளந்தெளிவாக காட்டி விடுகிறது.

அதனால், ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள்/பயனாளர் பெயர்கள் (usernames) வைத்துக் கொள்ள தடை விதிக்க படுகிறது. சில சொந்த காரணங்களுக்காக ஒன்றுக்கு மேற்பட்ட பயனாளர் பெயர் வைத்துக் கொள்ள விரும்புபவர்கள் நிர்வாகிகளிடன் அனுமதி பெற்றால் அவர்களுக்கு விதி விலக்கு உண்டு. (ஆனால், அதில் ஏதாவது ஒரு பயனாளர் பெயரை மட்டுமே போட்டிகளில் வாக்குச் செலுத்த உபயோகிக்க வேண்டும்).

இந்த விதிமுறையை மீறுபவர்களுக்கு முதலில் எச்சரிக்கை தனிமடல் அனுப்பப் படும். அதற்கு சரியான பதில் கிடைக்காவிடில் அவர்களது அனைத்து கணக்குகளும் முடக்கப் படும்.

ஏற்கனவே பல கணக்குகள் வைத்திருப்பவர்கள், தேவையில்லா கணக்குகளை நிர்வாகத்திற்கு தெரிவித்து மூடிவிடவும், சேர்க்க விரும்பும் கணக்குகளை ஒன்றாக சேர்த்துக் கொள்ளவும், அதிகமாக வைத்துக் கொள்ள விரும்பும் கணக்குகளுக்கு நிர்வாகத்திடம் தெரிவித்து அனுமதி பெற்றுக் கொள்ளவும்.

அடுத்த 10 நாட்களுக்குள் தெரிவிக்காதவர்களின் அனைத்து கணக்குகளும் முடக்கப் படும்.

அப்படி அவர்கள் பல பெயர்களில் வந்து போட்ட வோட்டுகள் அனைத்தும் "செல்லாத ஓட்டுகளாக" கருதப் படும்.

உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.

இராசகுமாரன்

அக்னி
29-05-2007, 12:58 PM
ஆமாம் நிர்வாகி அவர்களே... நான் கூட மன்றம் வரும்போது வேறு பெயரில் பதிந்திருந்தேன். ஆனால் உள்ளே நுழைந்து பார்த்ததும், இப்போதைய பெயரில் பதிந்து கொண்டதும் அந்தப் பயனாளர் பெயரை பாவித்ததேயில்லை. (அந்தப் பெயரை ஆராய்ந்தால் தெரிந்துவிடும்.)

அந்தப் பெயரை எவ்வாறு நிர்வாகத்திற்குத் தெரியவைப்பது?

மேற்பார்வையாளர்களுக்குத் தெரியவைத்தால் சரியா?

அறியத் தாருங்கள்...

நன்றி...

இராசகுமாரன்
29-05-2007, 01:01 PM
என்னிடம், அறிஞரிடம், இளசுவிடம் தெரிவிக்கலாம்.

இந்த மூவரில் யாருக்காவது ஒருவருக்கு தெரிவித்தால் அவர்கள் தக்க நடவடிக்கை எடுப்பார்கள்.

இளசு விடுப்பில் உள்ளார், அறிஞர் சில நாட்கள் வேலையாக உள்ளார். அதனால் எனக்கு தனிமடல் அனுப்பி தெரியப் படுத்தவும்.

கணக்குகளை இணைக்க வேண்டுமா, நீக்க வேண்டுமா என்று குறிப்பிடவும்.

ஓவியன்
29-05-2007, 01:02 PM
அண்ணா!

அந்த ஒன்றுக்கு மேற்பட்ட பயணாள அனுமதியைப் போட்டிகளுக்கு வாக்களிக்கப் பாவிப்பதென்பது மிகத் தவறான ஒரு விடயம். இதற்கு நீங்கள் தக்க நடவடிக்கை எடுக்கலாம், இதற்கு மன்றத்து உறவுகளின் ஆதரவு உங்களுக்குத் தாராளமாகக் கிடைக்கும்.

ஆதவா
29-05-2007, 01:14 PM
அதைத் தடுக்க பல வழிகள் இருக்கிறது ஓவியன்... இம்முறை தடுக்கப்பட்டு இருக்கிறது.. ஒருவரே பல பெயர்களில் வருதலால் நன்மை என்ன என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.. தேவையிருந்தால் நிர்வாகத்திடம் சொல்லி வைத்துக் கொள்ளலாம். இல்லையென்றால் நீக்கிவிடலாம்..

பாரதி
30-05-2007, 12:53 AM
பயனாளராக பதிவு செய்யும் இடத்தில், இவ்விதம் ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்களில் பதிவு செய்வது சரியல்ல என்பதையும் சேர்க்கலாம். மன்ற உறவுகள் விதிமுறைகளை மீறுவது வருத்தமளிக்கிறது.

ஓவியன்
30-05-2007, 04:13 AM
உண்மைதான் அண்ணா!

இதுலும் கூட மோசடிகள் பண்ணுகிறார்களே?

இதயம்
30-05-2007, 04:55 AM
ஒரு பெயரில் திரி துவக்கி விட்டு, மறு பெயரில் வந்து பாராட்டுகிறார்கள். ஒரு பெயரில் கவிதை எழுதி விட்டு, பல பெயர்களில் வந்து "கள்ள வோட்டு" போடுகிறார்கள். ஒரு பெயரில் ஒருவரை புகழ்ந்து விட்டு, மறு பெயரில் வந்து திட்டுகிறார்கள்.

இது தமிழுக்கு கிடைத்த அவமானம். தயவு செய்து இப்படி யாரும் செய்யாதீர்கள்.

சிவா.ஜி
30-05-2007, 05:06 AM
கள்ளவோட்டு கலாச்சாரம் இங்குமா இதை இங்கு செய்ய எப்படியையா மனம் வருகிறது?

சுட்டிபையன்
30-05-2007, 05:32 AM
பத்து நாட்கள் முடியட்டுமே எந்த எந்த பாம்பு எந்த புற்றில இருந்து வருதென்று பாக்கலாம்

விகடன்
30-05-2007, 05:42 AM
இராசகுமாரன் அண்ணாவின் திட்டத்திற்கு நானும் தலை வணங்குகிறேன்.

இந்த அறிவித்தலிற்கு பின்னர் நமது தளம் மிகச் சிறப்புடன் வலம் வருமென்று எதிர்பார்க்கிறேன்.

தங்கவேல்
30-05-2007, 06:18 AM
இப்படி வேற ஆரம்பிச்சுட்டாங்களா.. ? நிர்வாகி தான் நடவடிக்கை எடுக்கனும்.

franklinraja
30-05-2007, 07:10 AM
உண்மையில் வருத்தமான விஷயம்...

தவறாக யாரும், பல கணக்கு வைத்திருப்பின், நிர்வாகிகளிடம் முறையாக தெரிவித்தல் நலம்...

கள்ள ஓட்டுக்காக, பல கணக்கு வைத்திருப்போரின் கணக்குகளை தடை செய்தல், சாலச்சிறந்தது..!

மனோஜ்
30-05-2007, 07:33 AM
என்னடா இது கவிதைபோட்டில ஒருத்தருக்கு அதிக ஓட்டு இருந்ததே திடிர்னு குரைந்து விட்டதே என்று நினைத்தது இதுதான் விஷயமா

வருத்தங்கள் நண்பரே அன்புடன்

lolluvathiyar
30-05-2007, 07:38 AM
வேறு பெயரில் வந்து தன் படைப்பையே துதி பாடுவதில் எந்த பயனும் இல்லை,
என்பதை உனர வைக்கலாம். ஒரே பெயரில் பல படைப்புகளை போடுவது தான் சிறந்தது
படைப்பு மற்றவர் பாராட்ட அல்ல, அது உங்கள் மணதிருப்திக்காக

ஷீ-நிசி
31-05-2007, 05:00 AM
கவிதைப் போட்டியை பண்பட்டவர் திரியில் நடத்தினால், இந்த கள்ள ஓட்டு கேவல செயலை தடுக்க முடியும்.... பண்பட்டவர் அடைமொழியை 500 பதிவுகளுக்கு மேல் இருப்பவருக்கு மட்டுமே தரவேண்டும்..

அறிஞர்
31-05-2007, 04:26 PM
கவிதைப் போட்டியை பண்பட்டவர் திரியில் நடத்தினால், இந்த கள்ள ஓட்டு கேவல செயலை தடுக்க முடியும்.... பண்பட்டவர் அடைமொழியை 500 பதிவுகளுக்கு மேல் இருப்பவருக்கு மட்டுமே தரவேண்டும்..
இது கூட நல்ல யோசனையாக இருக்கிறதே...

aren
31-05-2007, 05:06 PM
கவிதைப் போட்டியை பண்பட்டவர் திரியில் நடத்தினால், இந்த கள்ள ஓட்டு கேவல செயலை தடுக்க முடியும்.... பண்பட்டவர் அடைமொழியை 500 பதிவுகளுக்கு மேல் இருப்பவருக்கு மட்டுமே தரவேண்டும்..


கவிதைப் போட்டியில் அனைவரும் பங்குகொள்ளவேண்டும் என்பதே நம் விருப்பம். ஆகையால் அதை பண்பட்டவர் பகுதியில் நடத்தினால் ஒரு சிலரே அதில் கலந்துகொள்ளமுடியும், ஆகையால் இது சரியாக வரும் என்று தோன்றவில்லை.

நன்றி வணக்கம்
ஆரென்

ஓவியா
01-09-2007, 09:05 PM
விதியை ஒருமுறை நன்கு படித்து பார்த்தேன். நல்ல விதி, கருத்துக்களும் அருமை. தமிழ் மன்றதிற்க்கு என் நன்றிகள்.

அறிஞர்
01-09-2007, 10:23 PM
விதியை ஒருமுறை நன்கு படித்து பார்த்தேன். நல்ல விதி, கருத்துக்களும் அருமை. தமிழ் மன்றதிற்க்கு என் நன்றிகள்.

இவ்வளவு நாள் கழித்து இங்கு பதிலா????
−−−−−−−−−−−−−−−−−−

மன்ற நண்பர்களுக்கு... அன்பான வேண்டுகோள்... ஒரு ஆள் மற்ற பெயரில் வருவதால் யாருக்கும் பயனில்லை.... இது வரை நாங்கள் எந்த கடின நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த நிலை இனியும் வரவேண்டாம் என எண்ணுகிறேன்.

ஓவியா
01-09-2007, 10:24 PM
மன்னிக்கவும் சார். இன்றுதான் திரியை கண்டேன் சார்.

அனுராகவன்
23-03-2008, 02:48 AM
ஆகா நல்ல நடவடிக்கை உடனே எடுங்கள்..
சில பேர்களால் மன்றம் குப்பையாக கூடாது..
நானும் வரவேற்கிறேன்..

சாலைஜெயராமன்
23-03-2008, 02:35 PM
அறிவு எப்போதுமே ஆபத்துதான். மனிதனின் வக்கரங்களில் இப்படியும் ஒன்று. பாராட்டுவதற்காகவாது இரண்டு பேரில் வரட்டும். தன்னையே துதிபாடுவதற்காக இப்படி ஒரு அநாகரீகமான செயலில் ஈடுபட்டுள்ளது அருவருப்பானது. இதில் பிறரை முட்டாளாக்க நினைப்பது இன்னும் கேவலம். தவறுக்கு தவறு செய்து தன்னையே முட்டாளாக்கிக் கொள்ளும் செயல் என்று தெரியாதிருப்பது மதியீனம். கணிணித்துறையில் இம்மாதிரியான விசஷயங்களை மிகச் சுலபமாக பிறர் அறிந்து கொள்ள முடியும் என்று தெரிந்தும் இந்த மாதிரியான அரைவேக்காட்டுத்தனமான செயல்களில் சம்பந்தப்பட்டோர் இதிலிருந்தாவது திருத்திக் கொள்வார்களாக.

நானும் தாமதமாகத்தான் இத்திரியைப் பார்த்தேன் திரு அறிஞர். என்னையும் மன்னிக்கவும்