PDA

View Full Version : கூக்குள் யுடுப்புனின் ஒலி-ஒளியை



கேசுவர்
29-05-2007, 12:07 PM
கூக்குள் யுடுப்புலில் இருக்கும் ஒலி-ஒளியை எப்படித்தரவிறக்கம் செய்வது ?

கூக்குள் யுடுப்புப்பற்றி எல்லோருக்கும் நன்கு தெரியும்,நம்மை ஆச்சரியப்படவைக்கும் ஒலி-ஒளி,
ரசிக்கவைக்கும் ஒலி-ஒளி,சிரிக்கவைக்கும் ஒலி-ஒளி,..இப்படிச்சொல்லிக்கொண்டேப்போகலாம்.

ஆனால் அவைகளை தரவிறக்கம் செய்யமுடியாது , அதற்கு பல நியாமானக்காரணங்கள் உள்ளன.

அதை நிவர்த்திச்செய்யும் வகையில் சந்தையில் பல வலைத்தளங்கள் இருக்கின்றன.

இந்த வலைத்தளங்கள் சென்று யுடுப்புனின் சுட்டியை தந்தால்,
அவை நமக்கு .FLV பைல்களாக திருப்பித்தரும் , இந்த .FLV பைல்களை
.AVI or MPEG ....அதாவது வீடியோ பைல்களாக மாற்ற பல் இலவசமென்பொருள்கள்
இருக்கின்றன.அவற்றைக்கொண்டு நமக்கு தேவையனா யுடுப்பு ஒலி-ஒளிகளை
நமது கணிணியிலோ அல்லது சிடி ப்ளேயர்களிலோ பார்த்து மகிழலாம்.

அப்படியில்லையேனில் இதோ ஒரு குறுக்கு வழி

1.இங்கே செல்லவும் http://vixy.net/
2. URL என்று இருக்கும் பெட்டியில் யுடுப்புனின் ஒலி-ஒளிகான சுட்டியை தரவும்.
3. சில நிமடங்களில் ...உங்களின் வீடியோ பைல்கள் தரவிருக்கத்திற்கு தயார்.
இதைவிட வேறு நல்ல வழிகள் இருப்பின் தெரியப்படுத்தவும்.

நன்றி : கூகுள் தேடல்.

ஆதவா
29-05-2007, 01:24 PM
நண்பரே ! இது சம்பந்தமாக தமிழ்பித்தன் சில மென்பொருள்களைக் கொடுத்துள்ளார்.... தேடிப்பிடித்துப் பாருங்கள்...

கேசுவர்
29-05-2007, 03:00 PM
நன்றி ஆதவா ,,, இதோ தேடுகிறேன்...

இணைய நண்பன்
30-05-2007, 07:20 PM
இதில் முயற்சித்து பாருங்கள்
http://javimoya.com/blog/youtube_en.php

http://www.youtubex.com/