PDA

View Full Version : வேர்ட் டாகுமெண்டில் ஒரு சந்தேகம்!

அரசன்
29-05-2007, 10:59 AM
ஒரு வேர்ட் டாகுமெண்டில் ஒரு சில பக்கங்களுக்கு ரோமன் எண்களும், மீதியுள்ள பக்கங்களுக்கு 1,2,3.....என்றும் பேஜ் நம்பர் செட் செய்ய வேண்டுமென்றால் எவ்வாறு செய்வது? நான் பேஜ் நம்பர் செட் செய்யும்போது முழுவதும் ரோமன் எண்ணாகவோ அல்லது முழுவதும் 1,2,3.... எண்ணாகவோ செட் ஆகிறது. ரோமன் எண்களும், ஆங்கில எண்களும்(1,2,3,...)ஒரே வேர்ட் டாகுமெண்டில் எவ்வாறு செட் செய்வது?
உதவி செய்யுங்கள்.

leomohan
29-05-2007, 11:02 AM

எங்கிருந்து வேண்டுமோ அந்த பக்கத்திற்கு முன் Insert - Section Break கொடுங்கள்.

அன்புரசிகன்
29-05-2007, 11:05 AM
உங்கள் கேள்வி யை சுருக்கமாக சொன்னால் வித்தியாசமான header and Footer கொடுப்பது பற்றியது.
enter பண்ணி அடுத்தபக்கம் போகும் பழக்கத்தை தவிருங்கள். எப்போதும் page break கொடுங்கள்.
நீங்கள் ஒரு பக்கத்திலிருந்து அடுத்த பக்கத்திற்கு வித்தியாசமான பக்க இலக்கம் கொடுக்கப்போகிறீர்கள் எனின் Insert>page break இல் next page என்று கொடுக்கவேண்டும்.
பின்னர் பக்க இலக்கம் கொடுக்க எத்தனிக்கும் முன் same as previous page எனும் சுட்டியை கிளிக் செய்த இல்லாது பண்ணிவிடுங்கள். இப்போது உங்களுக்கு விரும்பிய format இல் நீங்கள் பக்க இலக்கமோ header-footer கொடுக்கலாம்.

அரசன்
29-05-2007, 11:11 AM
எங்கிருந்து வேண்டுமோ அந்த பக்கத்திற்கு முன் Insert - Section Break கொடுங்கள்.

ரோமன் எண் கொடுத்து செய்து பார்த்தேன். பின்பும் ரோமன் எண் மட்டுமே வருகிறது. ஒரு குறிப்பிட்ட பக்கத்திற்கு ரோமன் எண்களும், மீதியுள்ள பக்கத்திற்கு ஆங்கில எண்களும்(1,2,3,..)வருமாறு எவ்வாறு செட் பண்ணுவது?
நன்றி, தங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன்.

அன்புரசிகன்
29-05-2007, 11:14 AM

நான் சொன்னது போல் முயலுங்கள். மோகன் கூறியதும் சரி. ஆனால் நீங்கள் Office 2007 எனின் link to previous என்பதை இல்லாது பண்ணவேண்டும். 2003 எனின் same as previous என்பதை இல்லாது பண்ணவேண்டும்.

அரசன்
29-05-2007, 11:18 AM
நான் சொன்னது போல் முயலுங்கள். மோகன் கூறியதும் சரி. ஆனால் நீங்கள் Office 2007 எனின் link to previous என்பதை இல்லாது பண்ணவேண்டும். 2003 எனின் same as previous என்பதை இல்லாது பண்ணவேண்டும்.

நான் ஆபிஸ் 2000 பயன்படுத்துகிறேன்.

அன்புரசிகன்
29-05-2007, 11:23 AM
தற்சமயம் அது கைவசம் இல்லை. நான் கூறியதுபோல் அங்கு இல்லையா?

அரசன்
29-05-2007, 11:24 AM
தற்சமயம் அது கைவசம் இல்லை. நான் கூறியதுபோல் அங்கு இல்லையா?

அப்படி ஒன்றும் இல்லையே

அரசன்
29-05-2007, 11:33 AM
உங்கள் கேள்வி யை சுருக்கமாக சொன்னால் வித்தியாசமான header and Footer கொடுப்பது பற்றியது.
enter பண்ணி அடுத்தபக்கம் போகும் பழக்கத்தை தவிருங்கள். எப்போதும் page break கொடுங்கள்.
நீங்கள் ஒரு பக்கத்திலிருந்து அடுத்த பக்கத்திற்கு வித்தியாசமான பக்க இலக்கம் கொடுக்கப்போகிறீர்கள் எனின் Insert>page break இல் next page என்று கொடுக்கவேண்டும்.
பின்னர் பக்க இலக்கம் கொடுக்க எத்தனிக்கும் முன் same as previous page எனும் சுட்டியை கிளிக் செய்த இல்லாது பண்ணிவிடுங்கள். இப்போது உங்களுக்கு விரும்பிய format இல் நீங்கள் பக்க இலக்கமோ header-footer கொடுக்கலாம்.

உதாரனத்துக்கு ஒன்று சொல்கிறேன். அதாவது ஒரு புத்தகத்தில் முன்னுரை, பொருளடக்கம் போன்ற பக்கங்களுக்கு ரோமன் எண்களும், பாடம் ஆரம்பிக்கும் பக்கத்திலிருந்து 1,2,3,4.....என்ற எண்களும் குறிப்பிட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள் அல்லவா, அதுபோல பேஜ் செட் பண்றது எப்படி?

அன்புரசிகன்
29-05-2007, 12:05 PM
அது நேரடியாக இருக்காது.
முதலில் உங்களுக்கு எந்த பக்கம் மாறவேண்டுமோ அதற்கு முதல் பக்கத்தில் இருந்து Insert>Page break>ல் section break ல் next page என்பதை தெரிவு செய்யுங்கள். புது பக்கம் வரும். அங்கு இருந்து கொண்டு view>header and footer என்பதை தெரிவுசெய்தால் அந்த பக்கத்தின் header-footer ஆனது active ஆக வரும். அப்போது header and footer tool bar ல் same as previous என்பதை அழுத்தி inactive செய்திடுங்கள். பக்க இலக்கம் footer ல் கொடுப்பதாயின் கீழே பார்க்கவும்.

http://www.slcues.com/mantram/help/word1.jpg
---
http://www.slcues.com/mantram/help/word2.jpg
--
http://www.slcues.com/mantram/help/word3.jpg

அரசன்
29-05-2007, 12:45 PM
தெளிவான விளக்கமளித்த அன்புரசிகனுக்கு மிக்க நன்றி. சற்று குழம்பியபின் தான் தெரிந்துக் கொண்டேன். தகவலுக்கு நன்றி.