PDA

View Full Version : பேண்ட்-விட்த்"



அக்னி
29-05-2007, 10:31 AM
"பேண்ட்-விட்த்" என்பது என்ன என்று விளக்குக.

இதன் அளவு மீறப்பட்டதால் நேற்று மன்றம் தடைப்பட்டது, அனைவரும் அறிந்தது...

இதனை மீண்டும் ஏற்படாது தடுப்பதில் நுகர்வோரின் ஒத்துழைப்பு எவ்வாறு இருக்கவேண்டும்?

leomohan
29-05-2007, 10:43 AM
"பேண்ட்-விட்த்" என்பது என்ன என்று விளக்குக.

இதன் அளவு மீறப்பட்டதால் நேற்று மன்றம் தடைப்பட்டது, அனைவரும் அறிந்தது...

இதனை மீண்டும் ஏற்படாது தடுப்பதில் நுகர்வோரின் ஒத்துழைப்பு எவ்வாறு இருக்கவேண்டும்?

பொதுவாக Bandwidth எனும் வார்த்தை தவறாக பயன்படுத்தப்படுகிறது.

Internet இணைப்பு ஒரு தண்ணீர் குழாய் என்று வைத்துக் கொண்டால் அதில் எத்தனை கொள்ளளவு தண்ணீர் செல்ல முடியும் என்பதே Bandwdith. எடுத்துக் காட்டாக 256 Kbps இணைய இணைப்பு உள்ளது என்று சொல்வார்கள்.

ஆனால் மன்றம் நேற்று தடைபட்டதன் காரணம் Data Transfer Limit அல்லது எத்தனை Bytes உள்ளே வெளியே செல்ல அனுமதி இருக்கிறது என்பதை கொண்டு உள்ளது. அதாவது நாம் நம்முடைய இணையதளத்தை ஒரு வழங்கியிடமிருந்து பெறுகிறோம் என்றால் அவர்கள் ஒரு மாதத்திற்கு இத்தனை GB உள்ளே வெளியே செல்ல அனுமதி என்று தருகிறார்கள்.

இதேனீ தளத்தில் மாதத்திற்கு 600 GB தருகிறார்கள். அதை முற்றிலும் பயன்படுத்திய பிறகு மேல் வரும் விருந்தினர்களுக்கு இந்த செய்தி வரும்.

நன்றி.
bandwidth
The amount of information or data that can be sent over a network connection in a given period of time. Bandwidth is usually stated in bits per second (bps), kilobits per second (kbps), or megabits per second (mps).
www.tecrime.com/0gloss.htm (http://www.google.com/url?sa=X&start=1&oi=define&q=http://www.tecrime.com/0gloss.htm&usg=AFrqEzcsJTNgQiNVLEmXdwRQk8hW-IXzmw)

ஓவியன்
29-05-2007, 10:46 AM
ஆகா மோகன்!

அக்னி இந்த திரியைப் பதித்த போது, உங்களைத் தான் நினைத்தேன்.

தகவலுக்கு நன்றிகள்.

அக்னி
29-05-2007, 10:47 AM
நன்றி... மோகன், சுருக்கமான தெளிவான விளக்கத்திற்கு...

அன்புரசிகன்
29-05-2007, 10:55 AM
நன்றான விளக்கம். நன்றி மோகன்.

leomohan
29-05-2007, 10:58 AM
ஆகா மோகன்!

அக்னி இந்த திரியைப் பதித்த போது, உங்களைத் தான் நினைத்தேன்.

தகவலுக்கு நன்றிகள்.

நன்றி ஓவியன் அவர்களே.

இராசகுமாரன்
29-05-2007, 06:13 PM
மோகன் அழகாக விளக்கியுள்ளார்.

இன்னும் சிறிது விவரிப்பாக கூற வேண்டுமென்றால், பேண்ட்-விட்த் என்பது இணையத் தளத்தை இயக்கும் எரிபொருள் போல. நமது தளத்தின் பெயரை உலாவியில் முகவரிப் பகுதியில் தட்டச்சு செய்வதில் தொடங்கி தளத்தினுள் நீங்கள் செய்யும் ஒவ்வொரு வேலையும் Request-Respond முறையில் வேலை செய்கிறது. அவ்வாறு வேலை செய்ய எரிபொருள் தேவை.

அதாவது உலாவியில் http://www.tamilmantram.com என்று தட்டச்சு செய்தவுடன், அது தமிழ்மன்றம்.காம் என்ற தளத்தை கொண்டு வா என்ற உங்கள் Request (விண்ணப்பம்) அனுப்புகிறது, இந்த உங்கள் விண்ணப்பத்தை ஏற்று கொண்டு நமது தளம் பதில் (Resond) கொடுக்க வேண்டும். இது போல நமது தளத்தினுள் ஒவ்வொரு சுட்டியை கொடுக்கும் போதும் உங்களது Request அனுப்பப் பட்டு, அதற்கு Response ஆக பக்கங்கள் உலாவியின் மூலம் திரையில் கிடைக்கிறது.

இந்த ஒவ்வொரு Request-Respond செயல்களுக்கு தேவைப் படும் எரிபொருள் சக்தி தான் Bandwidth.

சாதாரண எழுத்துக்கள் சார்ந்த Response-களுக்கு குறைந்த எரிபொருள் போதும், படங்களுக்கு சற்று அதிகம் தேவை, அசைபடங்களுக்கு அதைவிட சற்று அதிகம் தேவை, பதிவிறக்கம் செய்வதினால் இன்னும் அதிகம் செலவாகும்.

இவ்வாறு நமது தளத்திற்கு வந்து செல்லும் ஒவ்வொருவருடைய எரிபொருள் செலவை கணக்கிட்டு மொத்தமாக ஒரு மாதத்திற்கு எவ்வளவு தேவைப்படும் என்று வாங்கி வைத்துக் கொள்வோம். அது தீர்ந்து விட்டால் தளம் இயங்காமல் தடை பட்டுவிடும். மீண்டும் எரிபொருள் வாங்கி நிரப்பினால் மீண்டும் ஓடத் துவங்கும்.

அக்னி
29-05-2007, 06:22 PM
ஓகோ இப்படியெல்லாம் இருக்கிறதா..?

நன்றி இராசகுமாரன் விளக்கத்திற்கு. எளிமையான விளக்கம். புரிந்துகொண்டேன்...

விகடன்
29-05-2007, 06:40 PM
மோகன், நிர்வாகி இராசகுமாரன் ஆகியோரின் விளக்கம் நன்றாக இருக்கிறது. பாண்ட் விட்த்தைப்பற்றி வழங்கிய குப்பிக்கு மிக்க நன்றி.

நானும் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ஒருத்தந்தாங்க.

அக்னி
29-05-2007, 06:44 PM
மோகன், நிர்வாகி இராசகுமாரன் ஆகியோரின் விளக்கம் நன்றாக இருக்கிறது. பாண்ட் விட்த்தைப்பற்றி வழங்கிய குப்பிக்கு மிக்க நன்றி.

நானும் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ஒருத்தந்தாங்க.

என்றால் யார்..?

விகடன்
29-05-2007, 06:48 PM
என்றால் யார்..?

மன்னிச்சுக்கப்பா.

குப்பி என்றால் தப்பாக எண்ணிவிடாதீர்கள்.

"குப்பி" என்றால், பல்கலைக்கழகங்களில் போதனாசிரியர்கள் என்னதான் ஆத்து ஆத்து என்று ஆங்கிலத்தில் முன்னிற்கு நின்று ஆத்தினாலும் தாய் மொழியில் ஒரு விடயத்தை அறிந்து கொள்வதைப்போல வருமா? ஆகையால் பரீட்சைக்கு சில தினங்களுக்கு முன்னர் அவரவர் தமது சீனியர்களிடமிருந்து படித்த பாடங்கள் அனைத்தையும் அவரவர் தாய் மொழியில் விளக்கங்களைப் பெற்றுக்கொள்வோம். அது பரீட்சைக்கு மிக உபயோகமாக அமையும். அதைத்தாங்க குப்பி என்பது.

இராசகுமாரன்
30-05-2007, 05:13 AM
எங்களுடைய வட்டார மொழியில்,
தண்ணி அடிக்க கூடிய பேர்வழிகளைத் தான்
"குப்பி" பார்ட்டி போகிறான் பார் என்பார்கள்.

விகடன்
30-05-2007, 06:00 AM
இது மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் பேசப்படும் ஒரு கலைச்சொல். சத்தியமாக இராஜகுமாரன் அண்ணாவின் கருத்துப்பட நான் சொல்லவில்லை.

ஏன் அண்ணா இப்படியெல்லாம் மாட்டி வைக்கிறீர்கள். என்னுடைய நிலை "பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையாகிவிட்ட" கதையாகியல்லவா போகப்போகிறது?