PDA

View Full Version : எங்கே இருக்கிறாய்?



சக்தி
29-05-2007, 07:11 AM
எங்கே இருக்கிறாய்?

என்னென்னவோ ஆசைகள்
எத்தனையோ ஏக்கங்கள்
எல்லாம் நிறைவேற
என் தேவதையே
எங்கே இருக்கிறாய் நீ

எனக்கென்றால்
நீ பதற
உனக்கென்றால்
நான் பதற
என்னுள் நீயுமாய்
உன்னுள் நானுமாய் மாற
எங்கே இருகிறாய் நீ

உன் முகம் கண்டு
என் வேதனை அகல
சிறுபுன்னகை தந்து
வரவேற்க
எங்கே இருக்கிறாய் நீ

நான் துவண்டுவிழும்
போதெல்லாம் என்னை
உன் மார்பணைத்து
ஆறுதல் சொல்ல
எங்கே இருக்கிறாய் நீ

நான் ஏறும்
வெற்றிப்படிகளெல்லாம்
உன்னாலே என்று
நான் சொல்லி
பூரிப்படைய
எங்கே இருக்கிறாய் நீ

இரவெல்லாம் பகலாக
பகலெல்லாம் இரவாக
இரவும் பகலும்
இரண்டறக் கலந்து
என்னை மறந்து
உன்னில் கலந்திருக்க
எங்கே இருக்கிறாய் நீ

எங்கேயோ பிறந்து
எங்கேயோ வளர்ந்து
என்னை கரம்பிடித்து
என் இதயம்
கொள்ளை கொள்ள வருபவளே
எங்கே இருகிறாய் நீ :music-smiley-010: :music-smiley-010: :music-smiley-019: :music-smiley-019: :icon_give_rose: :love-smiley-008: :icon_good: :icon_dance:

தீபா
29-05-2007, 07:13 AM
தேவதை
எங்கே தொலைந்துபோவாள்
எங்கே போவாள்?
உன்னுள்ளே
உன் மனத்துள்ளே
நீக்கமற கலந்து
உன் இதயத்தோடு
அளவளாவிக் கொண்டிருப்பாள்
எங்கே தேடுகிறாய்
தொலையாத காதலியை??

கவிதை அருமை....
நீளம் அதிகம்.

சிவா.ஜி
29-05-2007, 07:19 AM
தென்றல் சொன்னதுபோல உங்கள் அருகில்தான் இருக்கிறாள். பார்த்ததும் பல்ப் எரியும்,சுற்றிலும் சாரல் பொழியும், இதயம் படபடக்கும் அதுதான் உங்கள் தேவதை. ஜமாய்ங்கோ.நல்ல கவிதை பாரட்டுக்கள்.

மனோஜ்
29-05-2007, 07:25 AM
உன்னீல் வைத்து
உலகில் தேடவெ
உனர்ந்திடும் மனது
உன்னில் இருப்பதை

அழகிய கவிதை நன்றி

சக்தி
29-05-2007, 07:37 AM
விமர்சனங்களுக்கு நன்றி தோழர்களே. அவள் யாரென்று அறியாதவரை எங்கே என்று தேடிக்கொண்டிருப்பது தானே நியதி

சிவா.ஜி
29-05-2007, 07:48 AM
தேடினால் தெய்வமே கிடைத்துவிடுகிறது.நீங்கள் தேடுவது கிடைக்க வாழ்த்துக்கள் ரோஜா

சக்தி
29-05-2007, 04:13 PM
நன்றி சிவா

விகடன்
29-05-2007, 05:14 PM
ஏக்கங்களையும் மனதிலிருந்த தேக்கங்களையும் சொல்லி
எதிர்பார்ப்புக்களை தூவிவிட்டீர்கள் நண்பரே!

ஆனால் தென்றலின் எதிர்ப்பாட்டு நன்றாக இருந்தாலும்.... எனக்த்தான் பொருந்தாது

ஏனென்றால், இனித்தானே கனவில் மிதக்கப்போகிறேன்...

ஆதவா
29-05-2007, 05:17 PM
விமர்சனங்களுக்கு நன்றி தொழர்களே. அவள் யாரென்று அறியாதவரை எங்கே என்று தேடிக்கொண்டிருப்பது தானே நியதி

யார் தொழல்கிறார்கள்?:ohmy:

சக்தி
29-05-2007, 05:29 PM
மாற்றிவிட்டேன் ஆதவரே, சுட்டிகாட்டியமைக்கு நன்றி. கவிதையைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே

ஆதவா
29-05-2007, 05:43 PM
காதலியைத் தேடியலையும் காதலன்..

கவிதையைப் படித்ததும் காதலியைத் தேடச் சொல்லவில்லை.. ஏனென்றால் எனக்குத் தேவையுமில்லை :D

அருமையான நடையால் பின்னப்பட்டிருக்கிறது ரோஜா. ஒவ்வொருவரும் இப்படித்தான்.. காதலியைத் தேடிக்கொண்டிருக்கிறோம். வாழ்வில் நீங்கள் சொல்வதெல்லாம் அமைந்தாலும் அதை நாம் செய்வோமா என்பது சந்தேகமே! ஆண்மை நிலைநாட்டத்தான் ஆண்கள் முயலுகிறார்களே தவிர பெண்ணின் உணர்வுக்கு மதிப்பளிப்பவர்களாக எவருமில்லை.

வார்த்தைகளில் இன்னும் கொஞ்சம் வலிமை கொண்டுவந்திருக்கவேண்டும். கவிதைக் கரு பற்றி சொல்லவேண்டியதில்லை. இதற்கு ஸ்மைலி போட்டு அசத்தியிருக்கிறீர்கள்... ஆனால் அதற்கு அர்த்தம் சொல்லத்தான் வேண்டும். :)

பொதுவாக, மனிதத்தேடல் காதலில் ஆரம்பிக்கிறது. அதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள்.. ஐகாசுகளும் இந்த கவிதைக்கு.............

thevaky
30-05-2007, 03:18 AM
நான் இலங்கையில் இருக்கிறேன்
நல்ல கவிதை
முடிந்தால் இலங்கைக்கு வாருங்கள் ரோஜா

ஆதவா
30-05-2007, 03:26 AM
தேவகி எதற்கு இதைச் சொன்னீர்கள்? என்று தெரிந்துகொள்ளலாமா?

lolluvathiyar
31-05-2007, 12:57 PM
முகம் தெரியாத, தொடர்பு கொள்ளாத
காதலிக்கே இப்படி கவிதை எழுதுகிறீர்கள்
அறிமுகமான காதலிக்கு எப்படி கவிதை எழுதுவீர்கள்

சக்தி
01-06-2007, 05:54 PM
நன்றி நண்பர்களே, உங்களின் ஊக்குவிப்பு என்னை மெருகேற்றும்