PDA

View Full Version : உயிர் குடிக்கும் பிசாசே



thevaky
29-05-2007, 06:23 AM
தினசரி இப்படித்தான்
அழிக்க நினைக்கும் - உன்
நினைவுகள்
விருட்சமாய் கிளைவிட்டு
செழித்து நிற்கிறது - என்
விழியோர வேதனையாய்
வெட்டினாலும் ஒட்டிக்கொள்ளும்
குருவிச்சையாய்
உன் நினைவுகள் - என்
இதயத்தில் ஒட்டுண்ணியாய்
உயிர்குடிக்கின்றது.

ஆதவா
29-05-2007, 06:39 AM
ரொம்ப அருமை தேவகி..

உருவகத்தோடு ஒட்டி ஒட்டுண்ணியாக்கி காதல் வளர்ப்பைச் சொன்னதும்....
வெட்டி விட்ட காதல் விருட்சமாய் மலர்வதும் அதைச் சொன்னதும்
சரியே

நீங்கள் கவனியுங்கள்.... விழியோர வேதனைகள்.. - விழியோரத்தில் தேங்கி நிற்கும் கண்ணீர்த் துளிகள்... வேதனை மிகுந்தால் தான் கண்ணீர் வரும்.... ஆக அது கண்ணீர் என்று சொல்லிக் கொள்ளலாம்.

விழியோர வேதனைகள் = கண்ணீர்.

உயிர் குடிக்கிறது என்பதாவது நினைவுகளை இழக்க முடியாமல் தனக்குத் தானே துன்புருவது.. சொல்லாடல்களுக்குள் நுழைய முற்பட்ட கவிதை,. மேலும் எழுதுங்கள்.

மனோஜ்
29-05-2007, 07:18 AM
அருமை காதலின் கசப்புகள் என்றும் காயங்களாய்

சிவா.ஜி
31-05-2007, 01:58 PM
வேதனை மிகுந்த வரிகள். காதல் நினைவுகளின் காயம் கவிதையில் தெரிகிறது.பாராட்டுக்கள் தேவகி

lolluvathiyar
31-05-2007, 02:13 PM
அழிக்க நினைக்கும் - உன்
நினைவுகள்


கவிதை அருமை
கையாண்ட வரிகள் அருமை,
ஆனால் ஏதார்த்த உலகில் வாழ கற்று கொள்ள வேண்டும்
காதல் நினைவுகளை அழிக்க முயல கூடாது.
அதை அப்படியே வைத்து கொள்ள வேண்டும்

இன்னொரு நினைவை (புதிய காதலி)
உள்ளே கொண்டு வந்தால் பழைய
நினைவுகள் வேறோடு சாய்ந்து விடும்
புதிய கிளை தான் இனி ஒட்டுன்னி

அக்னி
04-06-2007, 12:20 AM
அழகான கவிதைக்குப் பாராட்டுக்கள். தொடர்ந்தும் படைப்புக்களைத் தாருங்கள்.., தேவகி...

ஆதவா, வாத்தியார் இருவரின் விளக்கங்களும் அருமை...

ஜெயாஸ்தா
04-06-2007, 02:49 AM
நல்ல கவிதை நண்பரே.... உங்கள் கவிதையை படிக்கும்போது எனக்கு வேலிக்கருவை செடிதான் நினைவுக்கு வந்தது. ஆம் எவ்வளவுதான் அழிக்க நாம் நினைத்தாலும் அதை அழிக்க முடிவதில்லை. தலைக்கு மேல் ஒரு அடி உயரத்தில் இந்த செடி காணப்பட்டால், அதன் வேர் பூமிக்கு கீழே பல அடிகள் வளர்ந்து அங்குள்ள நீர்ச்சத்தை உறிஞ்சி மற்ற செடிகளை வளரவிடாமல் செய்து பூமியின் நலத்திற்கு கேடுவிளைவிக்கிறது.

இனியவள்
08-06-2007, 08:33 AM
தினசரி இப்படித்தான்
அழிக்க நினைக்கும் - உன்
நினைவுகள்
விருட்சமாய் கிளைவிட்டு
செழித்து நிற்கிறது - என்
விழியோர வேதனையாய்
வெட்டினாலும் ஒட்டிக்கொள்ளும்
குருவிச்சையாய்
உன் நினைவுகள் - என்
இதயத்தில் ஒட்டுண்ணியாய்
உயிர்குடிக்கின்றது.

நினைவுகளை அழிக்க நினைக்கும் போது தான் அது ஆலமர விருட்சமாய் வேர் விட்டு வளர்கிறது....

ம்ம் உங்கள் கவிதைகள் மிகவும் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் நண்பரே