PDA

View Full Version : மனிதம் வளர்சிவா.ஜி
29-05-2007, 04:58 AM
மனிதத்தின்
மகத்துவம் சொல்பவை மதங்கள்!
தாவரத்தையும் உயிராய் மதிக்கும் மதங்கள்
தீவிரவாதத்தை போதிக்குமா?
மதம் ஏற்று அதன்
வழி நடப்பது மனிதம்!
மதம் பிடித்து வழி தவறினால்
அது மனிதத்தின் மரணம்!
விதைகளைப்பார்!
எங்கு விழுந்தாலும் முளைக்கும்
இந்துவின் நிலமென்றும்,
இசுலாமியர்களின் நிலமென்றும்,
கிறித்தவர்களின் நிலமென்றும்
எவரின் நிலமென்றும் பார்க்காமல்
விழுந்த இடத்தில் வளரும்!
இனம் சொல்லும் கனிகளில்லை
இன்னார்க்கென்று இலைகள் இல்லை
மதம் பூசிய மலர்களில்லை
எல்லோர்க்கும் எல்லாமும் தரும் தரு!
அது உன்னதத்தின் உரு!
நீயும் விதையாய் விழு!
விருட்சமாய் எழு!
அன்பு கொடுத்து அன்பு வாங்கு!
நேசித்து நேசிக்கப்படு!
எதிரிகள் என்று எவரும் இலர்
மதத்தின் துணையால் மனிதம் வளர்!

கோபி
29-05-2007, 01:36 PM
மதம் பிடித்து வழி தவறினால்
அது மனிதத்தின் மரணம்!


அருமையான வரிகள்....

சிவா.ஜி
29-05-2007, 01:48 PM
நன்றி கோபி.

மனோஜ்
29-05-2007, 02:20 PM
வாழ்த்துகள் நண்பரே
அருமையான கவிதை வரிகள்
இந்தியாவின் உயிர் வரிகள்

சிவா.ஜி
29-05-2007, 02:29 PM
நன்றி மனோஜ்.சரியாக சொன்னீர்கள் இந்தியாவில்தான அதிகமான மதக்கலவரங்கள் நடக்கிறது.மனிதனை மனிதன் புரிந்துகொள்ளாமையும் மதத்தையும் அது சொல்லும் தத்துவங்களையும் சரியாக தெரிந்துகொள்ளாமையும்தான் இதற்கு காரணங்கள்.

இதயம்
31-05-2007, 04:24 AM
தாவரத்தையும் உயிராய் மதிக்கும் மதங்கள்
தீவிரவாதத்தை போதிக்குமா?

சாட்டையடி கேள்விகள்..!! மனசாட்சி கொண்ட யாரையும் இந்த கேள்வி நிச்சயம் பாதிக்கும். மனித குலத்தின் நல்வழிக்கு உங்கள் கவிதையும் ஒரு காரணமாக இருக்கும்.

பாராட்டுக்கள் சிவா.

சிவா.ஜி
31-05-2007, 04:42 AM
இதயத்தின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

ஷீ-நிசி
31-05-2007, 05:03 AM
மிக அழகாக உள்ளது நண்பரே கவிதை....


இனம் சொல்லும் கனிகளில்லை
இன்னார்க்கென்று இலைகள் இல்லை
மதம் பூசிய மலர்களில்லை

ரசித்தேன் இந்த வரிகளை.... தொடருங்கள்!

lolluvathiyar
31-05-2007, 02:31 PM
தாவரத்தையும் உயிராய் மதிக்கும் மதங்கள்
தீவிரவாதத்தை போதிக்குமா?

நீயும் விதையாய் விழு!
விருட்சமாய் எழு!


இதை நன்றாக புரிய வைக்க அனைவரும்
பிற மதத்தில் உள்ள குரையை தேடுவதற்க்கு பதில்
தன் மதத்தில் உள்ளவற்றை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்
மதசார்பின்மை என்ற பொய்யான முகமூடியை கிழித்து எறிய வேண்டும்

அக்னி
04-06-2007, 12:16 AM
மதம் ஏற்று அதன்
வழி நடப்பது மனிதம்!
மதம் பிடித்து வழி தவறினால்
அது மனிதத்தின் மரணம்!

மதங்களின் பெயரால் கொடும் செயல்கள் நிகழ்வது, தொன்று தொட்டு நடந்தே வந்தாலும், இன்றைய காலத்தில், அதிகரித்துவிட்டது மனிதம் செத்துக் கொண்டிருப்பதின் அடையாளமே...
உண்மையான வரிகள்...
உணர வைக்கும் கவிதைக்குப் பாராட்டுக்கள்... சிவா.ஜி

aren
04-06-2007, 12:20 AM
அருமையான கவிதை. மதம் என்று மதம் பிடித்து ஆடும் ஒரு சில மனிதர்களுக்கு இது ஒரு சாட்டையடி. தொடருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

சிவா.ஜி
04-06-2007, 04:33 AM
நன்றி ஆரென். நம் கடன் பணி செய்து கிடப்பதே என்பது போல சொல்வோம், சிலரேனும் அதனை உள்வாங்கிக்கொண்டால் நல்லதுதானே.

அமரன்
21-07-2007, 09:46 AM
சிவா...மனிதம் வளர்க்க வந்த மதம் மனிதத்தையே அழிக்கும் நிலமை. தலைகுனிய வேண்டியவர்கள் மனிதர்கள். வார்த்தைகளில் ஒரு வேகம். படிக்கும் போது உணர்ச்சி ஊறுகின்றது. பாராட்டுக்கள்.

சிவா.ஜி
21-07-2007, 09:54 AM
நன்றி அமரன். நான் கவனித்துப்பார்த்ததில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் எல்லா பகுதிகளுக்கும் போய் விட்டுப்போன எல்லாவற்றையும் படித்து அதற்கு தவறாமல் பின்னூட்டம் இடும் உங்கள் செயல் மிக மிக பாராட்டப்படவேண்டியது அமரன்.

அமரன்
21-07-2007, 09:57 AM
சிவா..இங்கே பல புதையல்கள் இருக்கின்றன. சில காரணங்களால் அவை தூங்கி இருகின்றன. அவற்றை படித்து அடுத்தவர்களையும் படிக்கவைத்து மன்ற நந்தவனம் இன்னும் மணம் வீசவேண்டும் என்ற ஆவலின் விளைவு இது. கவிதைகள் அதிகம் பிடிக்கும் என்பதால் அதிகமாக கவிதைகளை தட்டி எழுப்புகின்றேன். நன்றி சிவா.

இனியவள்
21-07-2007, 10:53 AM
சிவா கவி அருமை வாழ்த்துக்கள்

மதவெறி பிடித்து
கொலை வெறியோடு
அலையும் மனிதமிருகத்துக்கு
சரியான சாட்டையடி இந்தக்
கவி

சிவா.ஜி
21-07-2007, 10:56 AM
இனியவள் எங்க போய்ட்டீங்க? ரொம்ப நேரமா ஆளையே காணோமே..?
பாராட்டுக்கு மிக்க நன்றி இனியவள்.

ஓவியன்
22-07-2007, 03:37 AM
எதிரிகள் என்று எவரும் இலர்
மதத்தின் துணையால் மனிதம் வளர்!

சத்தியமான வார்த்தைகள்!
நல்ல கவிதைகளைத் தரும் உங்களுக்கு என் பாராட்டுக்கள் சிவா.ஜி!:thumbsup:

சிவா.ஜி
22-07-2007, 04:14 AM
நன்றி ஓவியன்.முடிந்தவரை எதிரிகளை உருவாக்கிக்கொள்ளாமல் இருக்கலாம். அப்படியும் எதிரிகள் உண்டெனில்,மேலும் விரோதத்தை வளர்க்காமல் ஒதுங்கி விடுவது நல்லதில்லையா?

ஆதவா
22-07-2007, 04:23 AM
உங்களின் நடுநிலை மனது சிலாகிக்கவைக்கிறது சிவா.

மதத்தின் துணையால் மனிதம் வளர்க்க நம்மால் நிச்சயம் முடியும்.. மதத்தின் தேவை/தோற்றமும் அதற்காகத்தான்....

தாவரத்தையும் உயிராய் மதிக்கும் மதங்கள்
தீவிரவாதத்தை போதிக்குமா?


நிச்சயம் போதிப்பதில்லை. நாம் வளர்ப்பதுதான் நல்ல தாவரமும் உடன் களைகளும்... இயற்கைக்குத் (விதைகளுக்குத்) தெரிவதில்லை தாம் இந்த இடத்திலிருப்பவர்கள் என்று. நல்ல அருமையான கருத்து சிவா. இங்கே விதையாக விழுபவர்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்... நாம் கூட அப்படித்தான் இருக்கிறோமா என்று சந்தேகம் எழுகிறது. உலகம் சுற்றிக் கொண்டிருக்கும் பாதை அப்படிப்பட்டது.. எளிமையான வடிவமைப்பு..

இறுதிவரிகள் பலருக்கு நெத்தியடி.... ஆனால் மதத்தின் துணையில் அவர்களின் மனிதம் வளர்த்துவிட்டால் இன்னும் பிரச்சனைதான்... ஹி ஹி

இதே கருத்தினில் இந்தியமண் புலம்புவதை கவிதையாக வடித்த ஞாபகம் வந்தது.. ஒரு பார்வை இட்டு பாருங்களேன்.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9700

ஓவியன்
22-07-2007, 04:24 AM
நல்லது தான் சிவா!
ஆனால் எதற்கும் ஒரு எல்லை உண்டு சிவா!, விலகி இருப்பது அந்த எல்லையைத் தாண்டும் வரையே........
தாண்டினால் புழுவும் புலியாகும்...........

சிவா.ஜி
22-07-2007, 04:46 AM
சரிதான் ஓவியன். எதற்கும் ஒரு எல்லை உண்டு என்பதில் உங்கள் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். புழுவும் சில நேரம் புலியாகும் உணர்வுகள் காயப்படுத்தப்படும்போது.

ஓவியன்
22-07-2007, 04:53 AM
உணர்வுகள் காயப்படுத்தப்பட்டதால் புழுவும் சிலிர்த்துப் புலியான தேசத்திலிருந்து வந்தவன் நான்....
புரிந்து கொண்டமைக்கு நன்றிகள்!.