PDA

View Full Version : நான் இந்துவா? இசுலாமியனா?

ஆதவா
29-05-2007, 04:41 AM
இந்த கவிதை யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப் படவில்லை.. அப்படி இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன்.

வேட்கைகளின்
தொகுப்புக்களோ
கோபக் கனலின்
கொஞ்சல்களோ

என் கண்,
முன்னர்,
வெளிறித் தொங்கிய
அனலிலிருந்து
இன்று
மெளனமாய் நீண்டு
வெறியாடுகிறது
மதக் குருத்துக்கள்

சிந்திய துளிகளுல்
மதச் சூட்டு இருக்குமோ என.
சூள்கொண்டு மாய்ந்த
கண்கள் தேடியது
பார்வையை இழந்துவிட்டு.

இவ் வுலோபிகளின்
உயிர்ச் சடலங்களை
உருவாக்கிய
என்னை

யாரென்று வினவிய
வினாவினால்
குருதி தொய்ந்த
என் சிரத்திலே
சீழ்ந்து ஒழுகியதைத்
தொட்டு ருசித்தேன்
நான்
இந்துவா?
இஸ்லாமியனா?

இதயம்
29-05-2007, 04:45 AM
மதம் என்ற போர்வையில், மதங்கள் சொல்லாதவற்றை மனிதத்தின் மீது திணிக்கும் காட்டுமிராண்டிகள் இதைக்கண்டாவது திருந்த வேண்டும். உங்கள் கவிதை வருந்த வைக்கும் கவிதை அல்ல. மானுடத்தை வாழவைக்கும் கவிதை.

ஆதவா
29-05-2007, 04:58 AM
மிக நன்றி இதயம்./ புரிதலில்தான் எல்லாமே இருக்கிறது என்பதைச் சொல்லி எனக்கு ஊக்கமளித்தமைக்கு நன்றி..

leomohan
29-05-2007, 06:23 AM
உங்கள் ஆதங்கம் புரிகிறது ஆதவா.

மதங்கள் என்பதே தவறான கருத்து அல்ல.

ஒருவரை இன்னொரு மதத்தவர் மத மாற்ற முயல்வது தான் தவறு.

மதசண்டைகள் தான் தவறு.

எந்த மதம் பெரியது என்று வாதிடுவது தான் தவறு.

என் மத கடவுள் பெரியவன் என்று கூச்சலிடுவது தான் தவறு.

ஆதவா
29-05-2007, 06:33 AM
சரியாகச் சொன்னீர்கள் மோகன்.... நன்றி... ஒவ்வொருவனும் மதம் சம்பந்தமாக ஏற்படுத்தும் பிரச்சனைகளை கைவிட்டாலே அவர்கள் கடவுள் ஆகிவிடுவார்கள்... இந்த கவிதை நாயகன் இந்திய மண். இந்த மண்ணுக்கே களங்கம் விளைவிக்கும் நாய கர்கள் இருப்பதாலேயே இன்னும் முழுமையான மதசார்பற்ற நாடாக இந்தியா ஆக முடிவதில்லை...

நன்றி.

அக்னி
29-05-2007, 10:42 AM
மதங்கள் பல இருந்தாலும் எதுவுமே, தீயதைப் போதிக்கவில்லை. ஆனால் மனித மனம்தான் மதத்தை மதம் பிடித்ததாக்குகின்றது...

மானுடம் என்பது சிறப்புப் பெறவும், ஒழுக்கமான வாழ்வியல் ஒழுங்கைப் பேணவும் மதம் பயன்படவேண்டுமே தவிர, மதத்தால் மானுடம் திசைதிரும்பிடுதல் என்றுமே வேதனைதான்.

இது பிரிவினைக் கவிதை அல்ல... பிரிவினை வேண்டாம் என்ற ஒவ்வொருவரின் ஆதங்கம் ஆதவனின் வரிகளில் வெளிப்படுகின்றது...

பாராட்டுக்கள்...

ஆதவனுக்கே ரோச்லைட்டா...?
(எங்கேயோ பார்த்தீபன் பேசியதிலிருந்து...)

ஓவியன்
29-05-2007, 10:45 AM
ஒவ்வொருவரும் தத்தம் மதங்களின் கொள்கைகளைச் சரிவரச் செய்தாலே போதும் வீண் சண்டைகள் வந்திடாது.

வரிககள் அருமை ஆதவா!

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்....

lolluvathiyar
29-05-2007, 10:50 AM
ஆதவா, உங்கள் காதல் கவிதைகளையே அதிகமாக படித்த
எனக்கு புதிய சிந்தனையுடன் எழுதிய உங்கள் வரிகள் அருமை

மதங்கள் என்பதே தவறான கருத்து அல்ல.
தவறு மதத்திடம் இல்லை, மத தலைவர்களிடம் தான்

ஒருவரை இன்னொரு மதத்தவர் மத மாற்ற முயல்வது தான் தவறு.
எல்லாம் Give & Take பாலிசிதான், அதை விட முக்கியமானது
மதம் மாரியவன் தாய் மதத்திர்க்கு திரும்பாமல் பார்த்து கொள்வது
மதசண்டைகள் தான் தவறு.
அப்புரம் எப்படி வல்லரசு நாடுகளுக்கு ஆயுதம் விற்பனையாகும்
எந்த மதம் பெரியது என்று வாதிடுவது தான் தவறு.
ஆமாம், பிறகு மொழியையும் சாதியையும் பெரிது என தூக்கி விடுவோமே
.

leomohan
29-05-2007, 10:56 AM
மதங்கள் பல இருந்தாலும் எதுவுமே, தீயதைப் போதிக்கவில்லை. ஆனால் மனித மனம்தான் மதத்தை மதம் பிடித்ததாக்குகின்றது...

)

சத்தியமான வரிகள்.

ஆதவா
29-05-2007, 10:58 AM
மதங்கள் பல இருந்தாலும் எதுவுமே, தீயதைப் போதிக்கவில்லை. ஆனால் மனித மனம்தான் மதத்தை மதம் பிடித்ததாக்குகின்றது...

மானுடம் என்பது சிறப்புப் பெறவும், ஒழுக்கமான வாழ்வியல் ஒழுங்கைப் பேணவும் மதம் பயன்படவேண்டுமே தவிர, மதத்தால் மானுடம் திசைதிரும்பிடுதல் என்றுமே வேதனைதான்.

இது பிரிவினைக் கவிதை அல்ல... பிரிவினை வேண்டாம் என்ற ஒவ்வொருவரின் ஆதங்கம் ஆதவனின் வரிகளில் வெளிப்படுகின்றது...

பாராட்டுக்கள்...

ஆதவனுக்கே ரோச்லைட்டா...?
(எங்கேயோ பார்த்தீபன் பேசியதிலிருந்து...)

அருமை அருமை... அக்னி.. சிறப்பான பின்னூட்டம்.. இந்த கவிதை எனக்குக் கற்றுக் கொடுக்கிறது பல பாடங்கள்... நன்றீ.

அன்புரசிகன்
29-05-2007, 10:59 AM
அனேகமாக தெற்க்காசியாவில் உள்ள பிரச்சனை மதம்-இனம். இரண்டையும் வைத்தே 50 வருடங்களுக்கு மேலாக அரசியல் அரசாங்கம் (அராஜகம்) செய்கிறார்கள். வரிகளுக்கு வாழ்த்துக்கள் ஆதவரே.

ஆதவா
29-05-2007, 10:59 AM
ஒவ்வொருவரும் தத்தம் மதங்களின் கொள்கைகளைச் சரிவரச் செய்தாலே போதும் வீண் சண்டைகள் வந்திடாது.

வரிககள் அருமை ஆதவா!

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்....

நன்றீ ஓவியன்.... பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும்..:icon_give_rose:

ஆதவா, உங்கள் காதல் கவிதைகளையே அதிகமாக படித்த
எனக்கு புதிய சிந்தனையுடன் எழுதிய உங்கள் வரிகள் அருமை

ஆஹா வாத்தியாரே!! சமீபகாலமாக காதல் கவிதை எழுதுவதை நிறுத்தியிருந்தேனே.... நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்றூ தெரியவில்லை.. நன்றி வாத்தியாரே!!

leomohan
29-05-2007, 11:09 AM
ஆஹா வாத்தியாரே!! சமீபகாலமாக காதல் கவிதை எழுதுவதை நிறுத்தியிருந்தேனே.... நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்றூ தெரியவில்லை.. நன்றி வாத்தியாரே!!

ஏன் காதல் தோல்வியா :icon_03:

அன்புரசிகன்
29-05-2007, 11:11 AM
ஏன் காதல் தோல்வியா :icon_03:

தோல்வியி் கவி வராதோ?

சிவா.ஜி
03-06-2007, 04:51 AM
மீண்டும் மீண்டும் வாசிக்கப்படவேண்டிய கவிதை.இது வெறும் வார்த்தைகள் அல்ல.சிந்திக்க தூண்டும் கவிதை எழுதிய கவி ஆதவாவுக்கு பாராட்டுக்கள்.மதத்தைபற்றிய என் கருத்தையும் எனக்கு தெரிந்த வார்த்தைகளில் மனிதம் வளர் என்ற என் கவிதையில் சொல்லியிருகிறேன்.

ஆதவா
04-06-2007, 07:37 AM
ஏன் காதல் தோல்வியா :icon_03:

ஹி ஹி... அப்படியும் வைத்துக் கொள்ளலாமோ????

தோல்வியி் கவி வராதோ?

அதுவும் சரிதான்..

மீண்டும் மீண்டும் வாசிக்கப்படவேண்டிய கவிதை.இது வெறும் வார்த்தைகள் அல்ல.சிந்திக்க தூண்டும் கவிதை எழுதிய கவி ஆதவாவுக்கு பாராட்டுக்கள்.மதத்தைபற்றிய என் கருத்தையும் எனக்கு தெரிந்த வார்த்தைகளில் மனிதம் வளர் என்ற என் கவிதையில் சொல்லியிருகிறேன்.

நன்றி சிவா... உங்கள் கவியை கவனிக்கிறேன்.

seguwera
24-08-2011, 10:12 PM
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சில மிருகம் இருப்பது போல தான் சிலருக்கு "தன் மதம் தான் உயர்ந்தது" என்கிற எண்ணம். முன்பெல்லாம் மதம் உள்ளேயே இருந்தாலும் மனித நேயம் என்ற சட்டையையாவது அணிந்துகொண்டு வெளியில் வந்த மனிதன் தற்போது சட்டையை கலட்டி மாட்டிவிட்டு மிருகத்தை வெளியில் கூச்சமே இல்லாமல் காட்டிக்கொண்டு இருக்கிறான்