PDA

View Full Version : சைவக்காதல்..



rambal
02-04-2003, 09:52 AM
சின்னதாய் பொய்க் கோபம்
காட்டினாய்..

கொஞ்சம் பெரியதாய் விழி
திறந்து அழகாய் ஆச்சரியப்பட்டாய்..

இன்னும் ஒரு படி மேலே போய்
இதழ் மூடி புன்னகை அடக்க முயன்று தோற்றாய்..

எனக்கு முதுகு காட்டி
தலை கவிழ்ந்து ரசித்தாய்..

கூந்தல் புகுந்த என் கை பட்டு
சிலிர்த்தாய்..

எனக்குத் தெரியும்..
உனக்குப் பிடிக்கும் இந்த முத்தம் என்று..

பின் ஏன் இத்தனை
நாள் சைவமாயிருந்தாய்?

aren
02-04-2003, 12:39 PM
சைவமாக இருந்து தன் காதலைனை காத்திருக்க வைப்பதில் ஒரு சுவை இருக்கிறது. அதை அனுபவிப்பதற்க்காகத்தான் என்று நினைக்கிறேன். கவிதை அருமை.

நன்றி வணக்கம்
ஆரென்

இளசு
02-04-2003, 06:37 PM
அழகு கவிதை ராம்...
காக்கவைத்து காத்திருந்து
ஊடல் செய்து , விரதம் காத்து
பின்
அன்பைப் படையல் இட்டு
அமுத எச்சில் பரிமாறும்
காதலர் பூஜையில்தான்
எத்தனை சுகம்.... மண்ணில்
சொர்க்கமாய் வரும்....

Narathar
03-04-2003, 06:59 AM
சினிமாக்கவிகளை மிஞ்சுகிறார் ராம்பால்!!!

rambal
03-04-2003, 07:44 AM
சினிமாக்கவிகளை மிஞ்சுகிறார் ராம்பால்!!!

சினிமாவில் இருப்பது கவிகள் அல்ல..
அவர்கள் பாடல் ஆசிரியர்கள்..
நான் எழுதுவது சினிமா பாடலும் அல்ல..
கவிதை என்ற பெயரில் சில கிறுக்கல்களே..
என் கிறுக்கலை கவிதையோடும் சேர்க்காதீர்கள்..
திரைப் பாடலோடும் சேர்க்காதீர்கள்..
அதுவும் போக சினிமா பாடலையும் கவிதையையும் குழப்பாதீர்கள்..

இளசு
03-04-2003, 08:05 AM
வெள்ளோட்ட காலம் இது தோழர்களே
மெள்ள மெள்ள... தள்ளுங்கள் துடுப்புகளை....

anushajasmin
04-04-2003, 11:00 AM
மிக அழகாக இருந்தது உங்கள் கவிதையின் நடை. முத்தத்தில் எது சைவமா அசைவமா என்று ஒர் பாட்டே இருக்கிறது. நீங்கல் குறிப்பிட்டிருப்பது சைவம் என்று நினைக்கிறேன்.

Narathar
05-04-2003, 04:04 AM
கூந்தல் புகுந்த என் கை பட்டு
சிலிர்த்தாய்..


ராம்பால்...... உங்களின் இந்தவரிகள் எனக்கு புன்னகைமன்னன் படப்பாடலில் இந்த வரிகளை ஞாபகப்படுத்தியது...

கூந்தலில் நுழைந்த கைகள்
ஒரு கோலம் போட்டதோ....
தன்னிலை மறந்த பெண்மை
அதை தாங்காதோ........


சினிமாவில் இருப்பது கவிகள் அல்ல..
அவர்கள் பாடல் ஆசிரியர்கள்..
நான் எழுதுவது சினிமா பாடலும் அல்ல..
கவிதை என்ற பெயரில் சில கிறுக்கல்களே..
என் கிறுக்கலை கவிதையோடும் சேர்க்காதீர்கள்..
திரைப் பாடலோடும் சேர்க்காதீர்கள்..
அதுவும் போக சினிமா பாடலையும் கவிதையையும் குழப்பாதீர்கள்..

அப்போ எதோட எதை சேர்க்கனும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க ராம்பால்!!!!
உங்க எதிர்சீட்டையாவது வாய்திறக்க விடுங்க................ நாராயனா!!!!

Narathar
05-04-2003, 04:08 AM
முத்தத்தில் எது சைவமா அசைவமா என்று ஒர் பாட்டே

அப்போ இவங்க ஒப்பிடுறதுக்கு என்ன சொல்லப்போறீங்க?

rambal
05-04-2003, 03:48 PM
நான் தான் ஏற்கனவே சொல்லிவிட்டேனே..
உங்கள் ஏடாகூடமான ஆட்டத்திற்கு நான் வரவில்லை..
எதிர் சீட்டும் தான்..
அவரும் மிரண்டு போய் இருக்கிறார்..
நாராயணா!நாராயணா!

discreteplague
06-04-2003, 03:13 AM
சைவ காதலில் இருக்கு சுகமே தனிதான்.

விஷ்னு

Narathar
07-04-2003, 05:37 AM
நான் என்ன தீவிரவாதியா? மிரட்டுவதற்கு............
நாராயனா... நல்லதுக்கு காலம் இல்லை!!!

rambal
07-04-2003, 03:32 PM
ஏடாகூடமாக கேள்வி கேட்பதால் என்றும் வைத்துக் கொள்ளலாம்..
தீவிரமாக வாதம் செய்வதாலும் வைத்துக் கொள்ளலாம்..
கடைசியாக உண்மையை ஒத்துக் கொண்டீர்கள்...
(ஸ்ரீலங்காவில் வவுனியாலதான வீடு... நாராயணா..!நாராயணா..!)

இளசு
07-04-2003, 05:12 PM
தம்பிகளே

வெள்ளோட்ட காலமிது
மெள்ள தள்ளுங்கள் துடுப்புகளை

rambal
07-04-2003, 05:22 PM
நாராயணா!நாராயணா!
நாராயனா என்று எழுதியதின் அர்த்தம் இன்னுமா விளங்கவில்லை..
நாராயணா!நாராயணா!(சும்மா உட்டாலக்கடிக்கு)

Nanban
10-01-2004, 03:01 PM
சைவம் தான் திரும்பிப் பார்க்கும் பொழுது இனிக்கிறது....... சுவைக்கிறது.

அசைவம் ஆனபின்பு தான் பல பிரச்னைகளும் தலை தூக்க...