PDA

View Full Version : மென்பொருள் நிறுவுதலை கண்காணிக்க...



பாரதி
29-05-2007, 01:02 AM
நாம் நமது கணினியில் சோதனை செய்வதற்காகவோ அல்லது உபயோகிப்பதற்காகவோ பலவிதமான மென்பொருட்களை நிறுவுகிறோம். சில வேளைகளில் நண்பர்களிடம் இருந்து பெறப்பட்ட குறுவட்டை உபயோகிப்போம். இப்போதெல்லாம் பல மென்பொருட்களில் பலவிதமான நச்சு நிரல்கள் அல்லது நமது செயல்களை கண்காணிக்கக்கூடிய வகையில் அமைந்த நிரல்கள் இருக்கக்கூடும். நாம் அவ்வகை மென்பொருட்களை நிறுவும் போது, அதனுள் இருக்கும் நச்சு நிரல்களும் நாம் அறியாமலே கணினியில் நிறுவப்பட்டுவிடும். நமக்கு அந்த பொருள் திருப்தி இல்லை என்றாலோ, தேவை இல்லை என்றாலோ நீக்கி விடுகிறோம். நாம் அவ்விதம் நீக்கினாலும் பெரும்பாலானவை தமது சுவடுகளை ரெஜிஸ்ட்ரியிலும், வேறு சில இடங்களிலும் விட்டுச்செல்லும் தன்மை கொண்டவை. சில வேளைகளில் நச்சு நிரல் நீக்கி அல்லது சில சிறப்பு மென்பொருட்களை உபயோகித்து நீக்க வேண்டி இருக்கும்.


அதற்கு பதிலாக ஒரு மென்பொருள் நிறுவப்படும் போது எந்தப்பகுதிகளில் என்ன மாற்றத்தைச் செய்கின்றது என்பதை கண்டு ஒட்டு மொத்தமாக அதை நீக்கி விடுதல் சிறப்பல்லவா..?


அத்தகைய ஒரு மென்பொருள்தான் ஆல்டைரிஸ். ஆங்கிலத்தில் Altiris Software Virtualization Solution என்றும் சுருக்கமாக ASVS என்றும் அழைக்கப்படுகிறது. இப்போதெல்லாம் பிரபல சைமாண்டெக் நிறுவனமும் இந்த மென்பொருளை உள்ளடக்கியே தனது தயாரிப்புகளை உண்டாக்குவதாக தகவல்.


இந்த மென்பொருள் தனிநபர் பயன்பாட்டிற்கு முற்றிலும் இலவசமாகும். இது விண்டோஸிற்கும், நிறுவி(Installer)க்கும் இடையே உள்ள அடுக்கு போல செயல்படுகிறது. ஏதாகிலும் மென்பொருள் நிறுவப்படும் போது, அந்த மென்பொருள் எங்கெல்லாம் எழுதப்படுகிறது, என்ன மாற்றங்களை உண்டாக்குகிறது என்பதை தொடர்ந்து கண்காணித்து பதிவு செய்து வைத்துக்கொள்கிறது. அந்த மென்பொருளை நாம் தேவையில்லை என்று கருதினால், ASVS உதவி கொண்டு அதை நீக்கினால் மென்பொருள் முழுவதும் கணினியிலிருந்து நீக்கப்பட்டு விடும் அதாவது, அம்மென்பொருள் நிறுவப்படுவதற்கு முன்னர் கணினி என்ன நிலையில் இருந்ததோ அந்த நிலைக்கு கொண்டு செல்லப்படும்!



ASVS மென்பொருளை உபயோகிக்க வேண்டுமெனில் அதை இணையதளத்திலிருந்து பதிவிறக்கி, கணினியில் நிறுவிக்கொள்ள வேண்டும்.



அந்த தளத்தில் பதிவு செய்து கொண்டு அனுமதி எண்ணை (license key) பெற்றுக்கொண்டு முழு உபயோகத்திற்கான பயன்பாடாக மாற்றிக்கொள்ள வேண்டும்.



ASVS மென்பொருளை நிறுவிய பின்னர் கணினியின் இயக்கத்தை நிறுத்தி, மறுபடி இயக்கவும்.



ASVS மென்பொருளை இயக்க வேண்டும்.



File > Create New Layer என்பதை அழுத்த வேண்டும்.



திரையில் புதிதாக வரும் செய்திப்பெட்டியில் Install application என்பது தானாக தேர்வு செய்யப்பட்டிருக்கும்.



Next என்பதை அழுத்தவும்.



இப்போது புதிய பெயரைக்கொண்ட ஒரு லேயரை (layer)- உருவாக்க வேண்டும். பொதுவாக என்ன மென்பொருளை நிறுவுகிறோமோ அந்த மென்பொருளின் பெயரைத் தருவது, பிற்பாடு நமது உபயோகத்திற்கு எளிதாக இருக்கும்.



அதை அடுத்து Single Programme Capture என்பதை தேர்வு செய்யுங்கள்.



எந்த மென்பொருளை நிறுவப்போகிறோமோ அந்த மென்பொருளின் கோப்பு எங்கு இருக்கிறது என்ற விபரத்தை தர வேண்டும். உதாரணமாக நிறுவப்போகும் மென்பொருளில் இருக்கும் install.exe அல்லது setup.exe போன்ற கோப்புகளை தேர்வு செய்ய வேண்டும்.



இதைத் தொடர்ந்து ASVS - ல் புதிய லேயரை உருவாக்கி முடித்ததும், நிறுவப்பட வேண்டிய மென்பொருள் தானாக கணினியில் நிறுவத்தொடங்கும். இதை சாதாரணமாக நாம் எவ்விதம் மென்பொருளை நிறுவுகிறோமோ அதைப் போலவே நிறுவவும்.



புதிய மென்பொருள் நிறுவி முடிக்கும் வரை, ASVS அதை தொடர்ந்து கண்காணித்து நிறுவி முடித்த பின்னர் தனது இயக்கத்தை நிறுத்திக்கொள்ளும்.


எப்போதாவது உங்களுக்கு குறிப்பிட்ட முறையில் நிறுவப்பட்ட ஒரு மென்பொருள் தேவையில்லை என்று கருதி, அதை நீக்க விரும்பினால் ASVS மென்பொருளை இயக்குங்கள். அதில் நீக்க வேண்டிய மென்பொருள் லேயரை தேர்வு செய்து, லேயரை நீக்குவதற்கான முறையை தேர்வு செய்யுங்கள். அவ்வளவுதான்..!


தவறாமல் இந்த மென்பொருளை உபயோகிப்பதன் மூலம், நமது கணினியை சற்றே நல்ல முறையில் நாம் பராமரிக்க இயலும் என்று நம்புகிறேன்.


மென்பொருளின் பெயர்: Altiris Software Virtualization Solution


பதிவிறக்க வேண்டிய முகவரி: http://www.svsdownloads.com


குறிப்பு: ஆங்கில வார்த்தைகளுக்கு மன்னிக்கவும்

தங்கவேல்
29-05-2007, 01:27 AM
பாரதி, இயக்கி பார்த்து பின்னூட்டம் இடுகிறேன்.

leomohan
29-05-2007, 06:25 AM
அருமையான மிகவும் பயனுள்ள பதிவு பாரதி.நன்றி.

ராசராசன்
29-05-2007, 12:24 PM
இந்த ASVS மென்பொருள் நிறுவிய பிறகு நாம் கணினியில் புதிதாக சேர்க்கும் மென்பொருளை மட்டுமே கண்காணித்து தடயங்களை நமக்கு தருமா, இல்லை ஏற்கனவே இருந்த மென்பொருள்களின் மொத்த தொகுப்புகளின் தடயங்களையும் அள்ளித் தருமா? விளக்கினால் வசதியாக இருக்கும்.

நன்றி.

பாரதி
30-05-2007, 12:05 AM
இந்த ASVS மென்பொருள் நிறுவிய பிறகு நாம் கணினியில் புதிதாக சேர்க்கும் மென்பொருளை மட்டுமே கண்காணித்து தடயங்களை நமக்கு தருமா, இல்லை ஏற்கனவே இருந்த மென்பொருள்களின் மொத்த தொகுப்புகளின் தடயங்களையும் அள்ளித் தருமா? விளக்கினால் வசதியாக இருக்கும்.

நன்றி.

ASVS நிறுவிய பின்னர், கணினியில் புதிதாக நிறுவப்படும் மென்பொருட்களை மட்டுமே கண்காணிக்கும். முன்னதாக நிறுவப்பட்ட மென்பொருட்களை கண்காணிக்காது. முக்கியமாக பதிவில் கூறப்பட்டது போல ASVS மூலமே புதிய மென்பொருட்களை நிறுவ வேண்டும். அப்போதுதான் நமக்கு பயன்படும்.

பாரதி
30-05-2007, 07:41 PM
நன்றி தங்கவேல், நன்றி லியோமோகன்.

மனோஜ்
30-05-2007, 08:06 PM
தகவலுக்கு நன்றி
தரவிரக்கம் செய்துகொன்டிருக்கிறோன்

ஓவியா
31-05-2007, 09:47 PM
நல்ல தகவல், ஆலொசனைக்கு நன்றி அண்ணா.

முயன்று பார்த்து விட்டு சொல்லுகிறேன்.

பாரதி
31-05-2007, 10:44 PM
நன்றி மனோஜ், ஓவியா.

கலைநேசன்
01-06-2007, 08:26 PM
நல்லதொரு விடையத்தை தந்ததற்கு மிக்க நன்றிகள்

சிவா.ஜி
03-06-2007, 08:21 AM
மிக உபயோகமான தகவலை தந்த பாரதிக்கு மிக்க நன்றி.

பையன்
03-06-2007, 03:38 PM
நன்றி, நன்றி. நன்றி.

ஜெயாஸ்தா
07-06-2007, 11:20 AM
எனது கணிணியில் நான் சோதனைக்காக நிறுவிய மென்பொருட்களை நீக்கம்போது நிறைய கோப்புகள் நீக்கப்படாமல் குப்பையாக கிடந்துவிடுகிறது. சில மென்பொருட்களை முழுவதுமாக நீக்கவே முடிவதில்லை. உங்களின் இந்த தகவல் பயனுள்ளதாகஇருக்கும் என நினைக்கிறேன். நன்றி நண்பரே.

பாரதி
07-06-2007, 11:10 PM
கருத்தளித்த கலைநேசன், சிவா.ஜி, பையன், ஜே.எம் ஆகியோருக்கு நன்றி. யாரேனும் உபயோகித்தீர்கள் எனில் எப்படி இருக்கிறது என்பதையும் சேர்த்து தகவல் தந்தீர்கள் என்றால் அனைவருக்கும் உதவியாக இருக்கும்.