PDA

View Full Version : மன்றத்தைக் காண முடியவில்லை...?பாரதி
29-05-2007, 12:54 AM
அன்பு நிர்வாகி மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு...

நேற்று மாலை இந்திய நேரம் சுமார் 05:00 மணிக்கு தமிழ்மன்றத்தைக் காண முயன்ற போது, மன்றத்தின் "பேண்ட்வித்" அளவு மீறப்பட்டு விட்டது என்ற பிழைச்செய்தி மட்டுமே வந்தது. பலமுறை முயற்சித்தும் பலனளிக்க வில்லை. மன்றத்தின் முகப்பைக் கூட காண இயலவில்லை. இன்று காலை எந்த பிரச்சினையும் இன்றி மன்றத்தைக் காண முடிந்தது.

மன்றத்திற்கு 'பேண்ட்வித்' கட்டுபாடு உள்ளதா..? ஆம் எனில் அதை கண்காணிக்க மற்றும் கட்டுப்படுத்த ஏதேனும் ஏற்பாடுகள் உள்ளதா..?

அளவுக்கதிகமான படங்கள், ஒலி-ஒளிக் கோப்புகள், மின்புத்தகங்கள் இவற்றின் காரணமாக பயனாளர்களுக்கு இந்த பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா..?

எதிர்காலத்தில் இத்தகைய பிரச்சினைகள் தோன்றாமலிருக்க ஏற்பாடுகள் உள்ளனவா என்பதைக் குறித்து மன்ற உறவுகள் அறிந்து கொள்வதற்காக விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும். நன்றி.

இதயம்
29-05-2007, 04:24 AM
இந்த பிரச்சினை ஏற்பட்டது உண்மை தான். ஆனால், நேற்றே அது சரியாகிவிட்டது. நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்து பார்த்து விட்டு போய்விட்டீர்கள் என நினைக்கிறேன். ஆனால், நான் செய்து கொண்டேயிருந்தேன். இறுதியில் கிடைத்தே விட்டது. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்..!!

franklinraja
29-05-2007, 06:16 AM
நிர்வாகி அவர்களுக்கு,

எனக்கும் இதே பிரச்சினை வந்தது, இன்று இல்லை...!

mania
29-05-2007, 06:32 AM
எனக்கும்தான்.....
அன்புடன்
மணியா...

இராசகுமாரன்
29-05-2007, 10:17 AM
இந்த மாதம் மன்றத்தில் உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் வருகை எண்ணிக்கை கூடுதல், மேலும் புதிய மின் புத்தகங்கள் ஏற்றம், புதிய வசதிகள் அறிமுகம் காரணமாக இந்த மாதம் நமது பேண்ட்-விட்த் 28 நாட்களிலேயே முடிந்து விட்டது. அதிமாக பேண்ட்-விட்த் கைவசம் இருந்தும், அவ்வளவு தேவைப் படாது என்று இருந்து விட்டேன்.

நேற்று அமீரக நேரப் படி 2 மணிவரை மன்றத்தில் உலாவி விட்டு, இல்லம் சென்று மதிய உணவருந்தி விட்டு 4 மணிக்கு மீண்டும் வந்து பார்த்தால் மன்றத்தின் இயக்கம் தடை பட்டிருந்தது. உடனே 5 நிமிடத்தில் சரி செய்யப் பட்டு விட்டது.

தற்போது 80 சதவீதத்தை அடைந்தவுடன் சற்று முன் கூட்டியே ஞாபகப் படுத்தும் செயலி முடுக்கி விடப் பட்டுள்ளது.

ஆவலாக வந்து பார்த்து விட்டு நமது உறுப்பினர்கள் சிறிது நேரம் ஏமாற்றம் அடைந்திருப்பார்கள், அதற்காக வருந்துகிறேன்.

lolluvathiyar
29-05-2007, 10:18 AM
எனக்கு நேற்று காலை முதல் கிடைக்க வில்லை
இன்று எந்த பிரச்சனையும் இல்லை

அன்புரசிகன்
29-05-2007, 10:24 AM
பான்ட் வித் பிரச்சனை யுடன் தற்சமையம் DATABASE ERROR என்றும் வருகிறதே...

அக்னி
29-05-2007, 10:28 AM
நான் விஷமிகள் விளையாட்டைக் காட்டி விட்டார்களோ என்று பயந்தே விட்டேன்.

அமரன்
29-05-2007, 10:29 AM
ஆம் நிர்வாகி அவர்களே நேற்ரு பிரான்சின் நேரம் இரவு எட்டு மணிமுதல் டெட்டாபேச் பிரச்சினை இருந்தது.

இராசகுமாரன்
29-05-2007, 12:13 PM
பான்ட் வித் பிரச்சனை யுடன் தற்சமையம் DATABASE ERROR என்றும் வருகிறதே...


தகவல் தளப் பிழைச் செய்தி வேறு யாருக்காவது வருகிறதா? எனக்கு நேற்றும் இன்றும் இதுவரை வரவில்லை.

அந்த செய்தியை நகல் எடுக்க முடிந்தால், எனது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். அதன் மீது தகுந்த சீரமைப்பு நடவடிக்கை எடுக்கிறேன்.

அன்புரசிகன்
29-05-2007, 01:41 PM
தகவல் தளப் பிழைச் செய்தி வேறு யாருக்காவது வருகிறதா? எனக்கு நேற்றும் இன்றும் இதுவரை வரவில்லை.

அந்த செய்தியை நகல் எடுக்க முடிந்தால், எனது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். அதன் மீது தகுந்த சீரமைப்பு நடவடிக்கை எடுக்கிறேன்.
ஆதவாவிற்கும் வந்ததாக கூறினார். ஆனால் 2-3 தடவை refresh பண்ணியபின் சரியாகி விட்டது.:thumbsup:
இனி ஒருமுறை வந்தால் அனுப்புகிறேன்.
நன்றி.

விகடன்
29-05-2007, 07:12 PM
பான்ட் வித் பிரச்சனை யுடன் தற்சமையம் DATABASE ERROR என்றும் வருகிறதே...

ஆமாம்.
எனக்கும் மூன்று தடவை வந்தது. இனிமேல் வந்தால் அறியத்தருகிறேன்.

அறிஞர்
29-05-2007, 07:17 PM
ஒரு சில பிரச்சனைகள் வருவது மூலம், எதிர்காலத்தில் வரும் பெரிய பிரச்சனைகளை எளிதில் எதிர்கொள்ள வசதியாக இருக்கிறது.

எனக்கும் மன்றத்தை நிறுத்தி வைக்கும்பொழுது DATABASE ERROR என்று வந்துள்ளது. பிறகு சரியாகிவிடுவதால் அதை பெரிது படுத்துவதில்லை.

பாரதி
30-05-2007, 01:13 AM
விளக்கத்திற்கு நன்றி.

இன்பா
30-05-2007, 06:56 AM
எனக்கு database error என்று சில சமயங்களில் வருகிறது, பிறகு 5 அல்லது 10 நிமிடங்களுக்கு தானாக சரியாகிவிடுகிறது...