PDA

View Full Version : என் அன்னைக்கு வாழ்த்துகவி



மனோஜ்
28-05-2007, 04:07 PM
உலகத்தை பார்க்கும் முன்
உன் உலகத்தில் உதித்தேன்
உருவங்கள் கானும் முன்
உதிரத்தில் வளர்ந்தென்

உலகத்தில் வந்தபின்னும்
உன் உதிரத்தை ஊட்டி
உலகத்தில் மனிதனாய்
உருவங்களில் ஒருவனாய்

பிறந்த நான் பாரங்கள் இன்றி
பிறப்பில் துன்பங்கள் இன்றி
பிடித்த என் கைகளுடன்
பிடிவதாம் பிடித்த என்னை

அன்பால் அனணத்து முத்தங்கள் கொடுத்து
அருமையாய் வளர்த்தாய் - இறைவன்
அருள் எனக்கு கிடைக்க திருமறையை போதித்தாய்
அழுகாய் என்னை வளர்த்து மகிழ்ந்தாய்

நல்ல வழிகள் பொதித்து
நல்லவனாய் வளர்த்தாய்
நன்னேறியில் நடத்திட
நடவடிக்கைகள் பல எடுத்தாய்

தந்தையில் கண்டிப்பில் கடினம் இருக்கையில்
தவமேடுத்தவன் என்று தடுத்து விட்டாய்
தவறுகள் செய்தேன் தனித்து கண்டித்தாய்
தாவிடும் வயதினில் தாரக மந்திரம் நீ

வாழ்வில் என் உயிர் நீ
வாழ்கையில் என் படி நீ
வளர்ச்சியின் அடிப்படை நீ என்
வாழ்வு முழுவதும் உனக்கே சொந்தம்

என் அன்பு அன்னையே
என் நன்றிகள் கொட்டி கொடுத்தாலும்
தகுமா உன் அன்புக்கு ஈடாக...

சிவா.ஜி
29-05-2007, 07:25 AM
தாயிற்சிறந்த கோயில்லை அந்த தாயை எத்தனை பாராட்டினாலும் குறைவுதான்.தன்னலம் கருதாத் தாய்க்கு நல்ல தனையனாய் உள்ள உங்களை நினைத்து பெருமையாய் இருக்கிறது. வாழ்த்துக்கள் மனோஜ்.

மனோஜ்
29-05-2007, 07:27 AM
மிக்க நன்றி சிவாஜி (தாங்களும் எழுதுங்கலேன்)

சிவா.ஜி
29-05-2007, 07:40 AM
எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன் உங்கள் பாராட்டையும் பெற்றுக்கொண்டிருக்கிறேன்.

இதயம்
29-05-2007, 07:49 AM
உங்களின் தாய் பற்றிய கவிதைக்காக கிடைக்கும் ஒவ்வொரு பாராட்டும் நீங்கள் உங்கள் தாய்க்கு செலுத்தும் நன்றிக்கடன்கள். ஆனால், இப்போதும் நான் கடனாளியாகவே இருக்கிறேன்.

மனோஜ்
29-05-2007, 07:52 AM
உங்களின் தாய் பற்றிய கவிதைக்காக கிடைக்கும் ஒவ்வொரு பாராட்டும் நீங்கள் உங்கள் தாய்க்கு செலுத்தும் நன்றிக்கடன்கள். ஆனால், இப்போதும் நான் கடனாளியாகவே இருக்கிறேன்.

மிக்க நன்றி இதயம் அவர்களே (யாருக்கு நீங்கள் கடனாளி உங்கள் அன்னைக்கா)

இதயம்
29-05-2007, 07:56 AM
யாருக்கு நீங்கள் கடனாளி உங்கள் அன்னைக்கா

ஆமாம். எனக்கும் கவிப்புலமை இருந்திருந்தால் உங்களைப்போல் கவிபாடி கடனை தீர்க்கமுடியுமே..!

மனோஜ்
29-05-2007, 08:00 AM
நானும் கவிதை என்பது அவ்வளவாக எழுதியது இல்லை நண்பரே

மனோஜ்
31-05-2007, 08:14 AM
மன்றம் வந்த பிறகு எழுதி கற்று கொன்டேன் நீங்களும் முயற்சியுங்கள் கண்டிப்பாக வெற்றி அடைவீர்கள் நன்றி

அமரன்
31-05-2007, 08:35 AM
அம்மாவுக்கு ஒரு கவிதை. வாழ்த்துக்கூற வேண்டிய அவசியமில்லை என நினைக்கின்றேன். நன்றிதான் கூறவேண்டும் இப்படி ஒரு கவிதை எழுதியதுக்கு. நன்றி மனோஜ். இக்கவிதைக்காக எனது பரிசு 250 இ-பணம். இதைப்போல இன்னும் பல கவிதைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன்.

சுட்டிபையன்
31-05-2007, 08:45 AM
தெய்வம் நீயம்மா
ஈரைந்து மாதம் சுமந்து
இந்த உலகத்திற்க்கு
என்னை அறிமுகப்படுதிய
உனக்கு என்ன செய்வேனோ.......?
என் தெய்வத் தாயோ.......
என் தாயாகி, குருவாகி
நண்பியாகி,காதலியாகி
என்னுள் வாழ்பவளே
எந்தன் உயிர் நீ கொடுத்த
பிச்சைதான் தாயே
என்னுயிரை எடுக்கும்
உரிமையும் உனக்கு மட்டும்தான்
என் தாயே.........
என்னை ஒரு தடவை
பார்த்து விடு உன்
கண்ணைத் திறந்து.....

மனோஜ்
31-05-2007, 08:49 AM
நன்றி சுட்டி
நன்றி அமரன்
தொடர்ந்து வருபவர்களும் ஒரு சிறு கவிதையாவது உங்கள் தாயிற்கு எழுதும்படி கொட்டு கொள்கிறோன்

ஆதவா
31-05-2007, 12:24 PM
அருமை மனோஜ்... அம்மா கவிதை என்றாலே கவிஞர்களுக்கு எங்கிருந்துதான் வார்த்தை வருகிறதோ தெரியவில்லை.. பிரமாதம்.... உலகம் பார்த்ததும் உதிரத்தில் வளர்ந்ததும் பிரமாதம்..... சூப்பர்.

உதிரம் ஊட்டும் தாய்... இதற்காகவே உங்களுக்கு பரிசு கொடுக்கலாம்.. உருவங்களில் ஒருவனும் அழகு..

நல்ல மோனை அடுக்கல்;

அன்பால் அனைத்து ??? அணைத்து என்று இருக்கவேண்டும்... அர்த்தமே மாறிவிட்டது பாருங்கள்.

அதோடு,,, அருமையாய் வளர்த்தாய் இறைவன் என்ற வரியில் இறைவனை கீழே போட்டிருக்க்வேண்டும்.. இடம் மாறி அமர்ந்திருக்கிறது. அதே போல் பொதித்தாய் என்றால் தவறான அர்த்தம்.. கவிதையின் பாதை விலகிவிட்டது... போதித்தாய் என்றிருக்கவேண்டும். அழுகாய் ????? பிழைகளால் சலுப்பு வருகிறது மனோஜ்

மோனை அடுக்கலுக்காக மெனக்கெட்டு இருப்பது வரிகளில் தெரிகிறது.. அந்த செயலை விட்டுவிடுங்கள்.. குறில் எழுத்துக்கள் சில நெடிலாக மாறீ கவிதையின் அர்தத்தை ரொம்பவே குழப்பிவிடுகிறது,.

வாழ்வின் உயிர் மட்டுமல்ல உயிர் கொடுத்தவளும் அவளே
மிகச் சரியான வரிகள் அவை...

அன்னைக்கு நன்றி இன்னொரு அன்னை உருவாக்குதல்.......

பிழை களையுங்கள்... கவிதைகளிலாவது...

கரு : 50
நடை : 45
மோனை : 25
கவிதை : 50
பிழை : -50
வாழ்த்துக்கள்....

மனோஜ்
31-05-2007, 05:14 PM
இதற்கு தான் ஆதவா உமது விமர்சனம் வென்டும என்றோன்
என்னை புடமிட்டு பொன்ஆக்குவது இது தான்
நன்றி நண்பா

ஓவியா
01-09-2007, 01:02 AM
அருமையான கவிதை.

அம்மா என்றாலே நாவில் தேனூருமாம். கொடுத்து வைத்த உங்களுக்கு என் பாராட்டுக்கள்.

எனக்கு அம்மா என்றாலே பயமும், சொகமும்தான் வரும். அடியில் போலிஸ், பக்தியில் முனி, பாசத்தில் ..........ம்ம் சொல்ல வார்த்தையில்லை. எங்கம்மா கொள்ளைய*ழகு, ரொம்ப நல்லவங்க. நாந்தான் எதிர்கட்சி. ஹி ஹி ஹி