PDA

View Full Version : சிறப்பு வரம்



சிவா.ஜி
28-05-2007, 02:20 PM
என்னோடு ஒன்றான என் அன்பு மனைவிக்காக இந்த கவிதை.

என்னவளைத் எனக்கு தந்த
இறைவா உனக்கு நன்றி!
வேரோடு பறித்து
வேறிடம் நட்ட செடி
வேர் பிடிக்கவே
குறைந்தபட்ச நாட்களுண்டு!
இல்லறத்தில் இணைந்த
இரண்டாம் நாளே என்னவள்
என் கையில் கீறல் கண்டு கலங்கினாள்
தன் கையில் பட்டதைப்போல் வருந்தினாள்!
மோகம் முப்பதுநாள் கதையல்ல இது!
பாரதப்போரில்,
தன் சேனை வேண்டுமா
தான் வேண்டுமா என
பார்த்தன் கேட்டபோது,
சேனை ஒதுக்கி கண்ணனை வேண்டிய
அர்ச்சுனனைப்போல,
சொந்தங்களை ஒதுக்கி
என் சொந்தமாய் வந்தவள் என்னவள்!
முதல் குழந்தையை ஈன்றபோது
அதை இரண்டாவது குழந்தையென
இந்த முதல் குழந்தைக்கு காட்டினாளே...
அவள் உயர்திணையில் உயர்திணை!
மகள் வேண்டியபோது மகன் பிறந்தது,
சிறிய ஏமாற்றமென்றாலும்
அடுத்து மிக நிச்சயமாய் மகள் தருவேன் என்றாய்
மகனோ மகளோ நம் கையில் இல்லை
இறைவன் தருவதை ஏற்கத்தானே வேண்டுமென
வேதாந்தம் பேசிய என்னிடம்,
விஞ்ஞானம் மெய்ஞானம் எதற்கு
மகள் தருகிறேன் நான் உனக்கு என
மகளையே தந்தாயே..
எப்படி செய்தாய் இந்த
செப்படி வித்தை?
ஆண்டவனையே அன்பால் வசப்படுத்திவிட்டாயோ?
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரமென்றாலும்
இவள் எனக்கு சிறப்புவரம்!
மனைவியைப் போற்றினால்
எள்ளிநகையாட எத்தனையோ பேருண்டு
தூற்றுவார் தூற்றலெல்லாம் போகட்டும் குப்பைக்கு!
நீ எனக்கு தாயானபோது
நான் உனக்கு தாசனாவதில் தயக்கமில்லை!

நம்பிகோபாலன்
28-05-2007, 07:13 PM
பெண்ணை தெய்வமாக பார்க்கும் அனைவருக்கும் இந்த கவிதை பிடிக்கும்.

பெண்களில் உயர்வாக கருதுவது தாய்மை அதற்க்கு காலம் முழுவதும் வணங்கலாம்.

மனோஜ்
28-05-2007, 07:44 PM
வாழ்த்துக்கள் சிறப்புற்ற வாழ்க்கை அமைந்தற்கும்
வாழ்க்கை செழிப்பாய் அமைவதற்கும்
கவிதை அருமை

சிவா.ஜி
29-05-2007, 04:24 AM
நன்றி நம்பி, நன்றி மனோஜ்.

இதயம்
29-05-2007, 04:35 AM
மனைவி விஷயத்தில் இறைவன் வரம் கிடைத்தவர்கள் இரசித்து அனுபவிக்கும் கவிதை இது. தூற்றுபவர்களை தூர வையுங்கள். எழுத்து தூரிகை கொண்டு உங்கள் எண்ணங்களை தொடர்ந்து வரையுங்கள்.

குறிப்பு: உங்கள் கவிதையில் வேரிடம் நட்ட செடி என்பதில் வேறிடம் (வேறு+இடம்) என்ற எழுத்துப்பிழையை திருத்தினால் கவிதை இன்னும் சுவையாக இருக்கும்.

சிவா.ஜி
29-05-2007, 04:39 AM
மிக்க நன்றி இதயம். எழுத்துபிழையை மாற்றிவிட்டேன்.

thevaky
29-05-2007, 05:39 AM
உமது மனைவியை நினைக்க எனக்கு பொறாமையாக இருக்கிறது
உங்கள் வாழ்வு சிறக்க என் வாழ்த்துக்கள்

சக்தி
29-05-2007, 06:03 AM
அழகான கவிதை. பெண்னைப்பற்றிய உயர்வான வரிகள் பாராட்டுக்கள் தொடருங்கள்

கோபி
29-05-2007, 01:40 PM
அழகிய கவிதை.. பெண்ணினம் போற்றும் கவிதை......

lolluvathiyar
31-05-2007, 01:01 PM
[U]மனைவியைப் போற்றினால்
எள்ளிநகையாட எத்தனையோ பேருண்டு
தூற்றுவார் தூற்றலெல்லாம் போகட்டும் குப்பைக்கு!
நீ எனக்கு தாயானபோது
நான் உனக்கு தாசனாவதில் தயக்கமில்லை!


படிக்க படிக்க ஆனந்தமாக இருந்தது, சிவா
காதலியை மயக்க தான் கவிதை வரும்
ஆனால் மனைவியை போற்றி இருக்கும் உங்கள்
வரிகள் கவிதை அல்ல, வாழ்வின் நிஜம்

சிவா.ஜி
31-05-2007, 01:07 PM
இது நிஜமே வாத்தியார் அவர்களே! என் வாழ்வில் நிகழ்ந்ததை கவிதையாய் தர முயன்றேன்.உங்கள் பாராட்டுக்கு நன்றி.

ஆதவா
06-06-2007, 07:59 PM
அருமை சிவாஜி.
நீங்கள் சொல்லும் விடயங்களில் முழு விருப்பமுண்டு. தாசனாக என்ன தயக்கம்? ஏன்? தாயை மதிக்கிறோமே! ஒரு தாயாக மாறும் / தாயாகும் மனைவியை ஏன் மதித்து போற்றக் கூடாது? இந்த பழக்கம் ஏற்பட மதிக்காமல் இருப்பவர்களை கணக்கில் கொள்ளக் கூடாது..

மனைவி என்பவள் யார் என்பதை எளிமையாக சொல்லி அசத்தியிருக்கிறீர்கள். வரிகளை இன்னும் கொஞ்சம் குறைத்து பிழைகளைத் திருத்தி எழுதக் கற்றுக் கொள்ளுங்கள். உண்மையிலேயே உங்கள் மனைவி கொடுத்துவைத்தவர். சும்மா சொல்லவில்லை மனைவி அமைவது வரமென்று.. அதை நிலைநாட்டும் நீங்கள் நிச வாழ்வில் அப்படித்தான் இருப்பீர்கள் என்பது உறுதி கண்டு வியக்கிறேன்/பெருமைப் படுகிறேன்.

இடையில் எப்படி மகள் பிறந்தாள்?? ஒருவேளை நன்றாக படித்தவரோ???

பிரமாதமான கவிதை+எளிமையான நடை+சூப்பர் கரு - அதிக வார்த்தைகள் = 100 பொற்காசுகள்

சிவா.ஜி
07-06-2007, 01:59 PM
அழகான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஆதவா.

இடையில் எப்படி மகள் பிறந்தாள்?? ஒருவேளை நன்றாக படித்தவரோ???
இது புரியவில்லை ஆதவா.

அமரன்
21-07-2007, 09:42 AM
சிவா முதலில் படித்திருந்தாலும் இப்போதுதான் பின்னூட்டமிட முடிந்தது. மனைவிக்கு ஒரு கவிதை. பாரதப்போரை காட்டி சின்னதாக ஆனால் சிறப்பாக விபரித்த விதம் அருமை. ஆனாலும் உங்க மேல் எனக்கு கோபம். இதோ எனது இரண்டாவது குழந்தை என்று காட்டிய மனைவியிடம் நீங்கள் எப்படி பெண்குழந்தை வேண்டும் என்று கேட்கலாம்? உங்களுடன் நான் டூ

சிவா.ஜி
21-07-2007, 09:47 AM
என்னோடு சேர்த்து என் மனைவிக்கு அப்போது இரண்டும் ஆண் குழந்தையாகவே இருந்ததே,அதனால் எங்கள் எல்லோருக்குமாய் ஒரு பெண் வேண்டுமெனத்தான் ஆசைப்பட்டேன். கேட்டதையே கொடுத்துவிட்டாள் என் மனைவி.கோபம் தீர்ந்ததா அமரன்.இல்லை இன்னும் டூ−வா...?

அமரன்
21-07-2007, 09:48 AM
தீர்ந்துச்சு தீர்ந்துச்சு
இப்போ பழம்...

அக்னி
21-07-2007, 10:51 AM
ஒரு நாள் ஆயுள் கொண்ட பூவின் வாசத்தை, அழகைப் பருக,
பல நாள் பண்படுத்தும் நாம்,
எம் ஆயுள் முழுதும் எம்மில் வாசம் செய்ய வாசமாகிய பூவைக்குத்
தாசனாவதில் தவறேது...

பாராட்டுக்கள்... சிவா.ஜி....

சிவா.ஜி
21-07-2007, 10:54 AM
அக்னி உண்மையாகவே கலக்கிட்டீங்க. உங்களின் இந்த அசத்தலான பின்னூட்டம் திரும்பத்திரும்ப படிக்கத்தூண்டியது. மிக்க நன்றி.

இனியவள்
21-07-2007, 10:58 AM
வாழ்த்துக்கள் சிவா.

அருமையான கவி சிவா...


(அமர் இப்படி நிறைய எடுத்து விடுங்க நன்றி அமர் )

இன்பா
21-07-2007, 11:00 AM
உணர்வுகளை தொடுகின்ற கவிதை...

சிவா.ஜி
21-07-2007, 11:06 AM
நன்றி இனியவள். நன்றி வரிப்புலி. உங்களை இப்போதெல்லாம் அதிகப்பகுதிகளில் சந்திப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

அக்னி
21-07-2007, 11:09 AM
நன்றி இனியவள். நன்றி வரிப்புலி. உங்களை இப்போதெல்லாம் அதிகப்பகுதிகளில் சந்திப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

இருவரையும் களை என்று சொல்லுவதில் அப்படி என்ன மகிழ்ச்சி உங்களுக்கு...?
அப்பாடா... இன்றைய பொழுதுக்கு போதும் இது...:wuerg019:

சிவா.ஜி
21-07-2007, 12:57 PM
எப்படீப்பா இப்படியெல்லாம்............. இதுக்குன்னே ரூம் போட்டு யோசிப்பீங்களோ......?

அக்னி
21-07-2007, 01:13 PM
எப்படீப்பா இப்படியெல்லாம்............. இதுக்குன்னே ரூம் போட்டு யோசிப்பீங்களோ......?

ஆமாங்க... டீப்பா தான் யோசிச்சேன்...

சிவா.ஜி
21-07-2007, 01:20 PM
அக்னியில்லயா அதான் எதை எழுதினாலும் அவருக்கு வேண்டியதை கப்புன்னு புடிக்கிறார். யோசிங்க யோசிங்க. இன்னும் என்னென்னல்லாம் வரப்போகுதோ தேவுடா தேவுடா.........

ஓவியன்
21-07-2007, 03:05 PM
சிவா.ஜி!
இது நான் பின்னூடமிடாது தவறவிட்ட ஒரு கவிதையென நினைக்கிறேன். தாமதமாய் பின்னூட்டமிடுவதற்கு மன்னிக்க..........

அவள் உயர்திணையில் உயர்திணை!
இந்த கவிதையில் என்னை மிகவும் கவர்ந்த சொல்லாடல் இது − பாராட்டுக்கள்!.
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயயிக்கப் படுமாமே, இங்கே உங்களுக்கு சொர்க்கமே திருமணமாக நிச்சயிக்கப் பட்டிருக்கிறதே.........
மனதாரப் பாராட்டுகிறேன் சிவா.ஜி − நல்லா இருங்க.........! (வாழ்த்த எனக்கு வயது இல்லை என்றாலும் அன்பாலே வாழ்த்துகிறேன்)

சிவா.ஜி
22-07-2007, 07:44 AM
வாழ்த்த வயது வேண்டாம் ஓவியன், நல்ல மனது போதும். அது நிறையவே உங்களிடம் இருக்கிறது.வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

ஷீ-நிசி
22-07-2007, 02:28 PM
சிவா... என்ன சொல்றது.. இந்த கவிதையை விட உங்கள் மனைவி மிக அழகாய் அமைந்திருக்கிறார்கள்... அடடா... வரிகளில் எத்தனை அன்பு விஞ்சி நிற்கிறது....


முதல் குழந்தையை ஈன்றபோது
அதை இரண்டாவது குழந்தையென
இந்த முதல் குழந்தைக்கு காட்டினாளே...


அடுத்து மிக நிச்சயமாய் மகள் தருவேன் என்றாய்
மகனோ மகளோ நம் கையில் இல்லை
இறைவன் தருவதை ஏற்கத்தானே வேண்டுமென
வேதாந்தம் பேசிய என்னிடம்,
விஞ்ஞானம் மெய்ஞானம் எதற்கு
மகள் தருகிறேன் நான் உனக்கு என
மகளையே தந்தாயே..
எப்படி செய்தாய் இந்த
செப்படி வித்தை?
ஆண்டவனையே அன்பால் வசப்படுத்திவிட்டாயோ?

எனக்கு இந்த கவிதை சொன்ன பாங்கு என்னை வசீகரித்துவிட்டது சிவா.... உங்கள் இருவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்!

சிவா.ஜி
22-07-2007, 02:33 PM
இப்படிப்பட்ட வாழ்த்துக்கள் வெகு நிச்சயமாய் எங்களை இணை பிரியாது இன்பத்துடன் வாழவைக்கும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையோடு என் நன்றிகள் ஷீ−நிசி.