PDA

View Full Version : உன் நினைவுகள்



thevaky
28-05-2007, 05:32 AM
கோடை மழையில் - எழும்
மண்வாசனை போல
என்னைச் சுற்றி
நீ இல்லாத போதும்
உன் நினைவுகள்
நீ எனக்குள் இருப்பதால்
ஏற்படும் அவஸ்தைகளை
தாங்கமுடியவில்லை
நீ இல்லாமலும்
வாழமுடியவில்லை

அன்புடன்
தேவகி

shangaran
28-05-2007, 06:01 AM
எளிய வரிகள், அழுத்தமான உணர்வுகள்.
வாழ்த்துக்கள்.

அமரன்
28-05-2007, 12:50 PM
சின்னதாக ஒரு கவிதை. ஆனால் அழகான கவிதை. நன்றி தேவகி.

சிவா.ஜி
28-05-2007, 01:15 PM
நினைவுகள்-ஆனந்தமும் அதுவே அவஸ்தையும் அதுவே.நல்ல கவிதை. இன்னும் நிறைய எழுதுங்கள். பாராட்டுக்கள்

lolluvathiyar
31-05-2007, 02:18 PM
என்ன தேவகி உன் அனைத்து கவிதைகளும்
பிரிவை ஒட்டியே இருகிறது.
அனுபவமா, இல்லை ஆதங்கமா

மனோஜ்
31-05-2007, 08:19 PM
பிரிவின் வளியை அழகாக கவிதை ஆக்கியது அருமை