PDA

View Full Version : இனிய இந்தியா????!!!



poo
16-05-2003, 08:05 AM
அழியும்..
அல்லது அழிக்கப்படும்...
அல்லலோடுதான் கழிகிறது
ஒவ்வொரு இந்திய இரவும்!!..
அடிமைத்தனமாயிருந்த
இந்தியாவை அடிபட்டு
அடமானம் மீட்ட
அரசியல் மருகிப்போய்
மறுஜென்மமெடுத்தாலும்
பங்குண்டென்று
புள்ளிவிவரம் சொல்லுமளவு
மனச்சாட்சியில்லா கடன்....
அன்று வெள்ளையனிடம் மீட்டதை
அவனிடமே அடகுவைக்கும்
அவலச்செயல்......

"ஆட்சிக்கு வந்தால்
கடனை ஒழிப்போம்....
உலக வங்கியின் கிளை
உங்களூரில் திறக்கப்படும்" -
கைகொட்டுகிறது தொண்டர்படை..
கசிந்துருகிறது
தொண்டைக்குழிக்குள்
இந்தியதேசத்தின் பெருமைகள்
மென்றுதின்னப்படுவது கண்டு...

அஸ்ஸாமில் உல்·பா..
ஆந்திரத்தில் நக்ஸலைட்..
காழ்மீரில் லஷ்கர்-இ...
தமிழகத்தில் அல்-உம்மா..
ஆளுக்கால் குத்தகை
முத்திரை இல்லா டெண்டரில்...
மொத்த தேசத்தின்
மீதி இடங்களும் குத்தகை..
நாம் சீல் போட்டு
அணுப்பிய சீலர்களால்...

சீக்கியத் தீவிரவாதி
சுட்டதில் இருவர் பலி...
இரத்தம் கொதிப்பதாய்
புகைவிட்டான் குடிமகன்..
மிச்சம்போட்ட
சிகரெட் துண்டால்
துடிதுடித்து இறந்தன
இருபது உயிர்கள்.....

இருவருக்குமென்ன வித்தியாசம்??!!!..

சாதனை இந்தியாவிற்கு
கனவு காண்கிறோம்..
சத்தமில்லா வாழ்க்கையை
தொலைத்துவிட்டு..

"மனிதனாய் பிறந்திட மாதவம்" -
புத்தங்கங்கள் தீக்குளிக்கும்..
புதைந்துபோகும் மனிதநேயத்தால்..

இந்த இந்தியா..
இனிய இந்தியாவாய்
எப்போது உருவெடுக்கும்?!!..

விடைதெரியா கேள்விகள்..
கேட்டு கேட்டு
அலுத்துப்போன இன்னொரு
இந்தியன்.......

Nanban
16-05-2003, 08:38 AM
கடன் வாங்குதல் தேவை தான். ஆனால், எவ்வகையில் செலவிடப்படுகிறது என்பதில் தான் வித்தியாசம். எத்தனையோ முன்னேற்றங்கள் கண்டாலும், நாம் கீழே கீழே போய்க் கொண்டிருப்பது போன்ற பிரம்மை தோன்ற காரணம் - நாகரீகமற்ற, சுய நல கயவர்கள் கையில் நாம் நம்மை ஆளும் பொறுப்பை ஒப்படைத்தது தான். ஆட்சியாளர்களை மாற்றம் செய்யும் சக்தி மக்கள் கையில் இருந்தாலும், சுயமாக சிந்திக்கும் சக்தி இழந்த மக்களால் ஒன்றும் செய்ய முடியாது தான். என்று அனைவரும் கல்வி கற்று, கற்றதனால் சுயமாக சிந்திக்கும் சக்தி பெறுகின்றனரோ - அன்று எழுச்சி பெறும் இந்த நாடு. ஈடு இணையற்ற பெருமை பெரும். இது நம் காலத்திலும் நடக்கலாம், அல்லது அடுத்த நூற்றாண்டிலும் நடக்கலாம். கவலைப் பட வேண்டியதில்லை....

அமிர்தசரஸ் புகை வண்டி விபத்தில் பாதித்து உடனே கவிதை எழுதிவிட்டீர்களே?

பூ புயல் வேகம் தான்....

வேகத்தோடு தொடருங்கள், உங்கள் பயணத்தை....

வாழ்த்துகள்....

rambal
16-05-2003, 02:59 PM
அந்தக் காலம் வரும்..
வரும்வரை...
உன் கோபம் நியாயமானது..
எல்லோருக்கும் இந்தக் கோபம் உண்டு..
ஆனால்,
வோட்டுப் போடும் போது கொஞ்சம் மறந்தே விடுகிறார்கள்...
ஆகையால்.. இந்த வரலாறு தெரியா வன்முறையின் பயணம் இனிதே தொடர்கிறது...

Narathar
17-05-2003, 04:00 AM
இந்தியர்கள் அனைவரும் பொறுப்போடு இறங்கி
அரசியல் சாக்கடையை சுத்தம் செய்தால் இதுபோன்ற
கொசுத்தொல்லை இருக்காது

poo
17-05-2003, 09:06 AM
கருத்துக்கு நன்றி நண்பர்களே!!!

karikaalan
17-05-2003, 09:18 AM
பூஜி!

மானியங்களை ரத்து செய்யவேண்டாம்... குறைக்கவே அல்லவா முடியவில்லை இந்நாட்டில். ஏன்? சும்மா கொடுத்து கொடுத்து பழக்கம் பண்ணி விட்டார்கள். அதன் விளைவுதான் யாருக்கும் தாங்கள் உபயோகிக்கும் அத்தியாவசியத்தேவைகளுக்கு உரிய விலையைக் கொடுக்க மனம் வரவில்லை.

நிலைமை இவ்வாறிருக்க ஏன் கடன் சுமை ஏறாது? ஓரிடத்தில் நேரும் நஷ்டத்தை ஈடுகட்ட இன்னோரிடத்தில் வரி விதிக்கிறார்கள்/விலை கூட்டுகிறார்கள். இது சரியான பொருளாதாரத்வம் இல்லை. அரசியல்தான் தலையாயது என்றாகிவிட்டபின்னர் பொருளாதாரத்வமாவது வெங்காயமாவது!

===கரிகாலன்

madhuraikumaran
18-05-2003, 07:28 AM
நல்லதொரு ஆதங்கக் கவிதை பூ !
"கண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா" !!!

பூமகள்
24-07-2008, 06:23 PM
இனிய இந்தியா.....
பிணியோடிருக்கும்.. காரணிகள் கட்டியம் கூறுகின்றன.. ஓர் இந்திய இளைஞனின்... ரத்த அணுக்களின் உந்துதலை...

ஒவ்வொரு இந்தியனுக்கும் இது இருந்தால் ஏன் இத்தனை பிறள்வுகள் நாட்டில்...

மனம் கனக்கிறது...

ஒரு இந்திய குடிமகள் தலைவணங்குகிறேன் பூ அண்ணா.. :)

இளசு
24-07-2008, 06:55 PM
பூவின் உணர்ச்சிமய ஆதங்கக்கவிதையும்
நண்பன், ராம்பால்,நாரதர், மதுரைக்குமரன், அண்ணல் என
அன்பிற்குரிய மன்றச் சொந்தங்களும்...

அழகிய காலமதை அசைபோட வைத்த திரி..

ஒருங்குறியாக்கி மேலெழுப்பிய தங்கைக்கு
என் ஆசியும் வாழ்த்தும் என்றென்றும்...

அறிஞர்
24-07-2008, 11:58 PM
இனிய இந்தியாவை நோக்கியே
ஒவ்வொருவரின் பயணமும்..... தொடர்கிறது..

நன்றி பூ, பூமகள்..

மதுரை மைந்தன்
25-07-2008, 02:26 AM
அறிவியல் கனவு கண்டு
அணு சக்தி துணை கொண்டு
இளைய பாரதம் கடுமையாக உழைத்தால்
இனிய இந்தியாவைக் காணலாம்
வருங்காலத்தில்