PDA

View Full Version : முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 1,00,000 கோடி



mgandhi
27-05-2007, 06:16 PM
முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ. 1 லட்சம் கோடி


ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ. 1 லட்சம் கோடியை தாண்டியது. நாட்டிலேயே இந்த அளவு சொத்து உள்ள நபர் இவர்தான்.

முகேஷ் அம்பானியின் இளைய சகோதரர் அனில் அம்பானி இவரை விட சொத்து மதிப்பில் பின்தங்கியுள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.90,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

முகேஷ் அம்பானி நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள பங்குகளின் மதிப்பு ரூ.1,11,000 கோடிக்கு மேல் இருக்கும்.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ரிலையன்ஸ் பெட்ரோலியம் உள்ளிட்ட நான்கு நிறுவனங்களில் சந்தை முதலீட்டு மதிப்பு 2,50,000 கோடி. இந்த நிறுவனங்களின் மொத்த முதலீட்டு மதிப்பு ரூ.1.30,000 கோடியாகும்.

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் கேபிடல் உள்ளிட்ட நான்கு நிறுவனங்களில் மொத்த முதலீட்டு மதிப்பு ரூ.1,42,384 கோடி. இதில் அனில் அம்பானி நிறுவனங்களின் மொத்த முதலீடு மட்டும் 87,000 கோடி.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீல் லிமிடெட் சந்தை மதிப்பு கடந்த ஓர் ஆண்டில் ரூ.1,08,000 கோடிக்கும் மேல் உயர்ந்துள்ளது. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் சந்தை மதிப்பு அதே காலக்கட்டத்தில் 70,500 கோடியாகும்.

அம்பானி சகோதரர்களின் சொத்து மதிப்பு அவர்களது பெயரில் உள்ள பங்குகள், மற்றும் அவர்களது குழந்தைகள், மனைவிகள் பெயரில் பல்வேறு நிறுவனங்களில் போடப்பட்டுள்ள பங்குகளையும் உள்ளடக்கியது.

aren
28-05-2007, 03:49 AM
எங்கேயிருந்து எங்கே வந்திருக்கிறார்கள். இவர்களுடைய தந்தையை நிச்சயம் பாராட்டவேண்டும். இவர்களை முன்மாதிரியாகக் கொண்டு நம் இளைய தலைமுறை தங்களுடைய வாழ்க்கையையும் மேன்மடுத்தினால் இந்தியா நிச்சயமாக தலைசிறந்த நாடுகளில் ஒன்றாகிவிடும்.

முகேஷ் மற்றும் அனில் அம்பானிக்கு என்னுடைய பாராட்டுக்கள். அவர்கள் மேன்மேலும் முன்னேற என்னுடைய வாழ்த்த்துக்கள்.

namsec
28-05-2007, 07:03 AM
இன்றைய தினம் நானும்ச்செய்தியை செய்தித்தாளிள் படித்து தெரிந்துகொண்டேன். இவர்கள் தொழில் புரிவதில் ஜாம்பவன்கள் நாம் கணவுகண்டலும் இதை அடயமுடியாது

மனோஜ்
28-05-2007, 07:24 AM
இவர்களால் பலருக்கு வேலைவாய்பு இந்தியாவில் இது பாராட்டுக்குரியதுதான்

ஜோய்ஸ்
28-05-2007, 07:48 AM
ஒன்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வுலகில் நாம் கேள்விப்படும் பல சம்பவங்களில் மிக அதிக விழுக்காடுகள் துன்மார்க்கருக்கே சாதகமாகி வருவது நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

உள்ளவனுக்கு மென்மேலும் கொடுக்கப்படும்,
இல்லாதவனுக்கு உள்ளதும் எடுக்கப்படும்.

இந்த பாணிதான் இங்கும் பெறப்பட்டுள்ளது.