PDA

View Full Version : எளிமையான கதை ஆனால் ஆழமான சிந்தனை!



சக்தி
27-05-2007, 05:10 PM
ஒரு எளிமையான கதை அதே சமயத்தில் ஆழமான சிந்தனை

தற்போது நல்ல நிலையிலிருக்கும் சில மூத்த மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து தாங்கள் படித்தப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியரை சந்திக்க சென்றனர். சந்திப்பின் போது சுவாரஸ்யமாக சென்றுக்கொண்டிருந்த உரையாடல் திடீரென்று வேலை மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தம் பற்றிய விவாதமாக மாறியது.

வந்தவர்களுக்கு காபி கொடுக்க சமையலறைக்கு சென்ற பேராசிரியர் திரும்ப வரும்போது ஒரு பெரிய கூஜாவில் காப்பியையும் பலவிதமான கோப்பைகளையும் எடுத்து வந்தார். அவை பீங்கான், பிளாஸ்டிக், வெள்ளி, எவர்சில்வர், கண்ணாடி கோப்பையென சில விலை உயர்ந்தவைகளாகவும், வேலைப்பாடுகளுடனும் சில சாதாரணமாகவும் பலவிதங்களில் இருந்தன. பேரசிரியர் அவற்றை மேஜை மீது வைத்துவிட்டு, எல்லோரையும் சூடான காப்பியை தாங்களாகவே ஊற்றி குடிக்க சொன்னார்.

எல்லோரும் ஆளுக்கொரு கோப்பையில் காப்பியை ஊற்றி அருந்த தொடங்கும்போது பேராசிரியர் சொன்னார், நண்பர்களே கவனியுங்கள்
"நீங்க எல்லோரும் விலை உயர்ந்த, அழகான கோப்பைகளில் காப்பியை எடுத்திருக்கிறீர்கள். மேஜையில் மீதி இருப்பது மிக சாதாரணமான, விலை மதிப்பற்ற கோப்பைகள். உங்கள் அனைவருக்கும் மிகச் சிறந்த பொருட்கள்தான் தேவைப்படுகின்றன. அதைத்தான் எதிர்ப்பார்க்கிறீர்கள். அது தான் உங்கள் பிரச்சினனகளுக்கும் மன அழுத்தத்திற்கும் காரணம்."

"உண்மையில் நம் அனைவருக்கும் வேண்டியது காப்பி, கோப்பையல்ல. ஆனால் நீங்கள் எல்லோரும் நல்ல விலையுயர்ந்த கோப்பையை தான் எடுக்க முயற்சித்தீர்கள், மேலும் அடுத்தவர் எப்படிப்பட்ட கோப்பையை எடுத்திருக்கிறார் என்பதையும் நோட்டமிட்டீர்கள்."

"இப்பொழுது வாழ்க்கை என்பதை காப்பி என்று வைத்துக்கொண்டால் வேலை, பணம், சமூகத்தில் நமக்குள்ள பொறுப்பு, அந்தஸ்து ஆகியவை கோப்பைகள். இவையெல்லாம் வாழ்க்கையை வாழ்வதற்காக நம்மால் பயன்படுத்தப்படும் கருவிகள். இவற்றால் எல்லாம் வாழ்க்கையின் தரம் மாறாது."

"பொதுவாக நாம் கோப்பையின் மீதே கவனம் வைப்பதால் காப்பியின் சுவையை அனுபவிக்காமல் போய்விடுகிறோம்."

"ஆகவே நண்பர்களே கோப்பையில் உங்கள் கவனத்தை சிதறவிடாமல் காப்பியின் சுவையை அனுபவியுங்கள்."

நன்றி: Kanthi

அக்னி
27-05-2007, 05:34 PM
நல்ல வாழ்க்கைச் சிந்தனையை சுவையாகத் தந்திருக்கின்றீர்கள். நன்றி...

கேசுவர்
27-05-2007, 05:35 PM
மிக அருமையான கதை,
உண்மையான வாழ்வின் அர்த்தம் புரியாமல், பொய்யான கவுரவத்திற்காகவும்,
வாழ்கைத்தரம் என்ன என்பதை முழுமையாக உணராத என்னை போல உள்ளவைகளுக்கு பொருந்தகூடிய கதை.

உண்மையான சவுகரியத்தை மறந்து உல்லாசத்தில் பறக்க....
தேடுத்தலிலே வாழ்கை போய்விடுக்கிறது...
நல்ல கதை தந்தற்கு நன்றி ரோஜா .

அமரன்
27-05-2007, 05:49 PM
இன்றைய காலகட்டத்துக்கு மிகவும் தேவையான கருத்துடன் கூடிய கதை. இன்று நமக்காக வாழ்வதைக் காட்டிலும் மற்றவர்களுக்காக வாழ்வது ஒரு வாடிக்கையாகிவிட்டது. மற்றவர்களுக்காக வாழ்வது என்று நான் சொல்வது மற்றவர்களின் விருப்பதிற்காக அல்லது மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என நினைத்து தேவையில்லாப் பிரச்சினைகளை வலிய உள்வாங்குவது. அப்படியான மனிதர்களுக்கு சரியான நெற்றி அடி. நன்றி கலந்த பாராட்டுகள் ரோஜா

ஓவியா
31-05-2007, 11:09 PM
அருமையான படிப்பினை கற்றுக்கொடுக்கும் கதை.

எனக்கு நல்ல தெளிவு பிறந்தது, அடியேனும் கூஜாவை நோக்கலாம், ஆனால் வேண்டியதோ காப்பிதானே!!!!!

என்ன விழிப்புணர்வு.

நன்றி: காந்தி
நன்றி: ரோஜா

balasubramanian
14-06-2007, 06:00 AM
சக்தி அவர்களே

மிக அருமையான பதிவு. மிக்க நன்றி

இளசு
14-06-2007, 06:36 AM
நல்ல கருத்து.. நன்றி சக்தி..


சித்திரக்கிண்ணத்தில் பேதமில்லை - உன்
சிந்தையிலேதான் பேதமடா

--- கவியரசு சொன்னது இது!

தமிழ்சுவடி
15-06-2007, 07:21 AM
ஆங்கிலத்தில் மட்டுமே மெயிலில் வரும் இது போன்ற கதைகளை தமிழ் படுத்தி தரும் சேவைக்கு நன்றிகள் பல.

rajaji
06-07-2007, 01:55 AM
இன்றைய காலத்திற்கு தேவையான மிக நல்ல கருத்து. நீங்கள் எழுதியதை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டால் அவர்கள் வாழ்வு நிச்சயம் சிறப்படையும். தங்கள் ஆக்கத்திற்கு நன்றி.

Gobalan
10-07-2007, 03:39 PM
இந்த "மெடிரியலிஸ்டிக்" உலகத்தில் இந்த கதையின் கருத்தை பின்பற்றுவது மிகவும் வேண்டியதக்கது. ஆனால் நம்மில் பலர் கோப்பையை அழகிற்க்கு முக்கியம் தந்து காபியின் மணம் என்ன என்பதையே மறந்து பொயிருக்கும் இன்னிலையில் இந்த கதையின் சாரத்தை மனதில் கொண்டு அதை தன் வாழ்க்கையில் பின் பற்றினால் நம் சமுதாயதம் மேன்படும். நன்றி.

விகடன்
27-07-2007, 02:54 PM
ந*ல்லதொரு நற்சிந்தனை. எளிமையானாலும் இனிமையாக விளக்கப்படிடிருக்கிறது

நன்றி சக்தி