PDA

View Full Version : இந்தியனின் மூளைசக்தி
27-05-2007, 05:02 PM
இந்தியனின் மூளை

நியூயார்க் நகரில் இருக்கும் அந்த புகழ் பெற்ற வங்கிக்குள் நுழைந்த அந்த இந்தியர் அங்கிருந்த அதிகாரியிடம் தனக்கு 5000 டாலர்கள் கடன் வேண்டும் என்றும் தான் இந்தியாவிற்கு இரண்டு வாரப் பயணமாக செல்வதாகவும் திரும்பிவந்து கடன் பணத்தைக் கட்டிவிடுவதாகவும் சொன்னார்.

அதற்கு அந்த அதிகாரி, உங்களுக்கு கடன் கொடுக்கவேண்டுமெனில் நீங்கள் அதற்காக ஏதாவது உத்தரவாதம் கொடுக்கவேண்டும் என்றார். இதைக் கேட்ட அந்த இந்தியர் வங்கிக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த தனது புத்தம்புதிய ஃபெராரி கார் சாவியை அந்த அதிகாரியிடம் கொடுத்தார். கூடவே காரின் உரிமைப் பத்திரங்களையும் கொடுத்தார். வங்கி அதிகாரி திருப்தியுடன் அந்த இந்தியருக்கு அவர் கேட்ட கடனை கொடுத்தார்.

250,000 டாலர் மதிப்புள்ள ஃபெராரி காரை வெறும் 5000 டாலர் கடன் வாங்க பயன்படுத்திய அந்த இந்தியரை நினைத்து வங்கியின் தலைவரும் மற்ற அதிகாரிகளும் அனுபவித்து சிரித்தனர். பிறகு வங்கியின் ஊழியர் ஒருவர் அந்தக் காரை வங்கியின் கீழ்தளத்தில் உள்ள கார்கள் நிறுத்துமிடத்திற்கு கொண்டு சென்று நிறுத்தினார்.

இரண்டு வாரங்கள் கழித்து திரும்பி வந்த இந்தியர் அந்த வங்கிக்கு சென்று தான் வாங்கிய 5000 டாலரையும் அதற்கான வட்டியாக 5.41 டாலரயும் திருப்பிக்கொடுத்தார். அவருக்கு கடன் கொடுத்த அந்த வங்கி அதிகாரி, "சார், உங்களுடன் வியாபாரம் செய்ததில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. நமது பரிவர்த்தனை மிக நல்ல முறையில் நடந்தது. ஆனா ஒரே ஒரு விசயம்தான் எங்களுக்கு இன்னும் புரியலெ, நீங்க போன பிறகு உங்களைப் பத்தி நாங்க விசாரிச்சோம். நீங்க ஒரு பெரிய கோடீஸ்வரர் என்று தெரிந்தது. இவ்வளவும் பெரிய பணக்காரர் கேவலம் 5000 டாலர் கடன் வாங்குகிறாரே என்று எங்களுக்கு ஒரே குழப்பம்" என்றார்.

அதற்கு அந்த இந்தியர், "எனக்கு நியூயார்க் நகரத்தில் கார் நிறுத்தும் வசதி இல்லை. பிறகு எங்கு கொண்டுப்போய் நான் எனது காரை இவ்வளவு குறைந்த 5.41 டாலர் கட்டணத்திற்கு அதுவும் நான் திரும்பி வரும் வரை யாரும் திருடிக்கொண்டுப் போகாமல் பாதுகாப்பாக நிறுத்த முடியும்" என்றார்.

அக்னி
27-05-2007, 05:30 PM
புத்திமான் பலவான்...

பலே... பலே... வாழ்த்துக்கள்...

அமரன்
27-05-2007, 05:53 PM
சிரிக்கவும் சிந்திக்கவும் ஒரு கதை. வாகனப் பெருக்கத்தினால் ஏற்படும் அசௌகரியங்களையும் சொல்லுகின்றது. அத்தைகைய ஒரு பிரச்சினையை எதிர்நோக்கிய ஒரு இந்தியனின் புத்திக்கூர்மையையும் சொல்லும் கதை. ஏமாந்த அமெரிக்கனை நினைத்து சிரிக்கவும் செய்த கதை. நன்றி ரோஜா.

தங்கவேல்
28-05-2007, 03:57 AM
அந்த அளவுக்கா கார்களின் எண்ணிக்கை கூடி விட்டது. எப்பவுமே இந்தியர் தான் எல்லாவற்றிலும் முதல்வராக இருப்பர்...அதாவது ....

சிவா.ஜி
28-05-2007, 04:30 AM
பாதுகாப்புக்கு பாதுகாப்பும் ஆச்சு கட்டணமும் குறைவு. விலையுயர்ந்த காரை அந்த குற்றங்கள் நிறைந்த நகரில் வேறு எங்கு வைப்பது. இந்திய மூளை உண்மையிலேயே சூப்பர் மூளைதான். பாராட்டுக்கள் ரோஜா.

கோபி
29-05-2007, 01:46 PM
நம்மாளுங்க சிந்திக்கும் விதமே தனிதான்......

lolluvathiyar
29-05-2007, 03:00 PM
இந்தியனா கொக்கா, இந்த மூலையை
நம்ம ஊரில் பயன்படுத்த முடியுமா

விகடன்
14-08-2007, 04:15 AM
சில நேரங்களில் புத்திசாதூர்யமாக சிந்திக்கவேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக ஒரு நகைச்சுவைத்துணுக்கு. பராட்டுக்கள்.

இதுவே இலங்கையாக இருந்தால் குண்டிருக்கிறது என்று சொல்லி பிரித்து மேய்ந்தே வைத்திருந்திருப்பார்கள்.

தளபதி
14-08-2007, 04:27 AM
அந்த இந்தியரின் புத்திகூர்மைக்கு மனமார்ந்த பாராட்டுகள். இதை இங்கே கொடுத்த உங்களுக்கு நன்றி.

மீனாகுமார்
14-08-2007, 12:08 PM
அருமையான கதை. அந்த பணக்காரர் புத்திசாலியாக இருக்கலாம். ஆனால், அவர் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. ஒரு வங்கியின் முடியாதவர்களுக்கு கடன் கொடுக்கும் முறையை எப்படி துஷ்பிரயோகம் செய்வது என்பதற்கான எடுத்துக்காட்டு இது. இந்த முறை அவர் புத்திசாலி என்று நிரூபித்திருக்கலாம் ஆனால் அதனால் விளையக்கூடிய விளைவுகளையும் பார்க்க வேண்டும். அந்த வங்கிக்காரர்கள் இது போல் இனி கடன் கேட்பவர்களுக்கு கொடுக்காமல் போகலாம். உண்மையிலேயே பண நெருக்கடி உள்ளவர்களை இதை பாதிக்கலாம். - இது என் சீரியஸான பதில்...

இதை நகைச்சுவை என்று எடுத்துக் கொள்ளும் போது அந்த பணக்காரரின் புத்திசாலித்தனத்தைப் பாராட்ட வேண்டும்....

அக்னி
14-08-2007, 12:12 PM
இது என் சீரியஸான பதில்...


வித்தியாசமான நோக்கில் பார்த்திருக்கிறீர்கள்...
நகைச்சுவையாக அல்லது அதிமேதாவித்தனமாக செய்யும் விடயங்களிலும்,
சாதாரணமானவர்களுக்கு பாதிப்பும் நேரிடும் என்ற உங்கள் பார்வை,
உண்மையிலேயே கவனிக்கப்படவேண்டியதே...

namsec
16-08-2007, 08:22 AM
இந்தியர் அனைவரும் அமர்த்யாசென் என்பது இதன் மூலம் அறியட்டும்.