PDA

View Full Version : விளம்பரம்



கேசுவர்
27-05-2007, 05:19 PM
இயற்கையின் தயாரிப்பில்....
மகத்துவமான உயிர்கள் அரங்கேற்றும்...
புற கண்களுக்கு புலப்படாதா
புவி ஈர்ப்பை மிறிய இடப்பெயர்ப்பு.
மிக விரைவில் ....
வெள்ளித்திரைகளில் அல்ல
உங்கள் மனத்திரையில்...

ஒளி ஒவியம்-காந்த கண்கள்,உரையாடல்-மொழி பேதமற்ற உணர்வுகள்,பாடல்கள்- எழுத்தப்படாத சொற்கள்,இசை-இதழ்கள்,இயக்கம்-இதயம்
ஆம் , இது *காதலுக்கான விளம்பரம் ...

* Subject to Market's Risk,விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

ஓவியா
01-06-2007, 12:05 AM
நீங்கதான் உண்மையான கவிஞர்.

ஏன் என்றால் எனக்கு கவிதை புரியலையே!!!!

அறிஞர்
01-06-2007, 12:15 AM
எழுத்துப்பிழைகள் இருப்பதால் புரியவில்லையா...
அன்பரே எழுத்துப்பிழைகளை திருத்த இயலுமா.

சிவா.ஜி
02-06-2007, 05:31 AM
இதயங்களின் இடமாற்றத்தை அழகாக சொல்லியிருக்கிறீர்கள். title card-ம் நல்ல கற்பனை.ஓவியாவும் அறிஞரும் சொன்னதுபோல எழுத்துப்பிழை நீக்கினால் நல்ல கவிதை கேஷ்வர்.

இதயம்
02-06-2007, 05:34 AM
ஒரு அழகான திரைப்படத்தின் முன்னோட்டத்தை போல காதலுக்கு முன்னோட்டம் கொடுத்த நீங்கள் இறுதியில் Subject to Market's Risk என்று சொல்லி பங்குச்சந்தையின் நிலையில்லா அபாயத்தை காதலுடன் ஒப்பிட்டு அச்சமூட்டிவிட்டீர்களே, இது நியாயமா..?

அமரன்
02-06-2007, 10:08 PM
நீங்கதான் உண்மையான கவிஞர்.

ஏன் என்றால் எனக்கு கவிதை புரியலையே!!!!
உங்களுக்கே இப்படி என்றால் நமக்கு எல்லாம்..................?:mad: :mad:

கேசுவர்
03-06-2007, 06:44 PM
சத்தியமாக நான் கவிஞர் இல்லை சத்தியமாக நான் கவிஞர் இல்லை, ஓவியா,அமரன்.
எதோ கற்பனைக்கு வந்ததை எழுதுவேன் ,,,இல்லை இல்லை ..கிறுக்குவேன்,,,இது எனக்கே தெரியும் !!! என்னப்பண்ண !!! ஆர்வக்கொளாறு !!! ...:)...
மன்றத்தில் இருப்பவங்க என்னை செம்மைபடுத்துவார்கள் என்ற நம்பிக்கையில் கிறுக்கிறேன்...
எழுத்துப்பிழைகளை திருத்திவிட்டேன் , நன்றி அறிஞரே எழுத்துப்பிழைகளை சுட்டிக்காட்டியதற்கு.
நன்றி சிவாஜி , இதயம்,
முடிவில் பங்குச்சந்தையை போல முடித்தற்கு காரணம் .சில காதலர்களின் காதல்கள் நிலையற்றதாக இருப்பதனால் தான்.

அமரன்
03-06-2007, 07:17 PM
இப்போ புரியுது கேசுவர்.
காதலைப்பற்ரி சொல்ல வாறீங்க.
உயிர்களின் ஜீவநதி
விழிகளில் அரும்பிடும்
கலக்கல் மொழி..

இதயங்கள் மாறிடும்
ரகசிய மாற்றம்
அருமை கேசுவர். எழுத்துப்பிழைதான் விளக்கமின்மைக்குக் காரணம்.
கிறுக்கல்களை புடம்போட்டு ஜொலிக்கவைக்க இங்கா பல வித்தகர்கள் உள்ளனர்.
தொடர்ந்து கிறுக்குங்கள்.