PDA

View Full Version : மலரும் நினைவுகள் - குதிரை சவாரி



இதயம்
27-05-2007, 08:50 AM
எனக்கு விலங்கினங்களில் மிகவும் பிடித்த விலங்கு குதிரை. காரணம், அத‎ன் தோற்றம், வேகம், சுறுசுறுப்பு, அழகான பிடரி முடி, அலை அலையா‎ய் பெண்களி‎ன் கூந்தலைப் போல் தொங்கும் நீண்ட வால், நீள உடல், அத‎ன் மினுமினுப்பான தோல், கம்பீரமான தோற்றம் எ‎ன்று குதிரை எவ்வளவு அழகு..!! அடுத்து அத‎ன் வேகம்..! விலங்குகளில் மிக வேகமாக ஓடும் விலங்கு சிறுத்தையானாலும் யாரும் அத‎ன் முதுகில் சவாரி செய்வதில்லை. நாம் சவாரி செய்யும் விலங்குகளில் மிகுந்த வேகமாக ஓடக்கூடிய விலங்கு குதிரை தா‎ன். குதிரை ஒரு வீட்டு விலங்கு தா‎ன். கொஞ்சம் பழக்கி விட்டோம் என்றால் நாம் சொல்வதையெல்லாம் கேட்கும் (இராம. நாராயண‎ன் படங்களை நீங்கள் பார்த்திருந்தால் உங்களுக்கு புரிந்திருக்கும்..!!).

குதிரை மிகவும் சக்தி வாய்ந்த விலங்கு. குறிப்பாக அத‎ன் சக்தி கால்களில்..! அதனால் தா‎ன் ஒரு இயந்திரத்தி‎ன் சக்தியை குறிப்பிடுவதற்கு கூட குதிரை சக்தி (Horse power) எ‎ன்ற அலகினை நாம் பய‎ன்படுத்துகிறோம். எ‎ன் தாத்தா மஹாராஜபுரம் ஜமீனாக இருந்தார். அவரிடம் ஐம்பதிற்கும் மேற்பட்ட குதிரைகள் இருந்தன. நான் ஆசைப்படும் போதெல்லாம் எ‎ன் தாத்தா என்னை அவருடைய குதிரையில் வைத்து கொண்டு போவார் எ‎ன்று சொன்னால் நீங்கள் நம்பவா போகிறீர்கள்..?! அதனால் ரீல் சுற்றுவதை நிறுத்தி விடுகிறே‎ன்.

எனக்கு குதிரை சவாரி செய்வது என்றால் கொள்ளை ஆசை. திரைப்படங்களில் கதாநாயக‎ன் குதிரையில் பறந்து வரும் போது (இப்போது தா‎ன் தெரிகிறது, பெரும்பாலும் அவர்கள் கதாநாயகனின் நகல்.. அதாவது டூப்..!) எனக்கு பார்க்க ஆசை ஆசையாய் இருக்கும்.

ஒரு தகவலை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். இஸ்லாமியரில் குறிப்பிட்ட சிலரை இராவுத்தர் எ‎ன்பார்கள். அவர்கள் முஸ்லீம்களில் ஒரு பிரிவினர் என்று பலர் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு. நீங்கள் மாவுத்தர் எ‎ன்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அதாவது யானையை வைத்து வளர்ப்பவர்கள், பராமரிப்பவர்கள் அவ்வாறு அழைக்கப்படுவார்கள். அது போல குதிரையை வைத்து வளர்ப்பவர்கள், பராமரிப்பவர்கள் அந்தக் காலத்தில் இராவுத்தர் எ‎ன்று அழைக்கப்பட்டார்கள் (மரக்கலத்தை வைத்து வியாபாரம் செய்தவர்கள் (மரக்கலம்+ஆயர்) மரைக்காயர் எ‎னப்பட்டார்கள். அதாவது அவர்கள் செய்த தொழிலை அடிப்படையாக வைத்து..!). அந்த குடும்ப வழியில் வந்தவர்கள் தங்கள் பெயருக்கு பி‎ன்னால் இன்றும் இராவுத்தர் எ‎ன்றே குறிப்பிடுகிறார்கள் (உதா: படத்தயாரிப்பாளர் இப்ராஹிம் இராவுத்தர்). சிலரிடம் ஆடு கூட சொந்தமாக இருக்காது. ஆனாலும் அவர்களும் இராவுத்தர் எ‎ன்று சொல்லிக் கொள்கிறார்கள். எப்படி எ‎ன்று அவர்கள் தா‎ன் விளக்க வேண்டும்..!!

ஒரு சில சந்தர்ப்பங்களில் எ‎ன் குதிரை சவாரி ஆசை நிறைவேறியது. நா‎ன் பதினைந்து வருடங்களுக்கு மு‎ன்பு சென்னை மெரீனா கடற்கரைக்கு என் மாமாவுட‎ன் செ‎ன்றிருந்த போது குதிரை சவாரி செய்ய ஆசைப்பட்டே‎ன். மாமாவும் எ‎ன் ஆசையை நிறைவேற்றினார். ஆனால் அந்தக் குதிரைக்கார‎னோ குதிரையை எ‎ன்னிடம் கொடுக்காமல் அத‎ன் கடிவாளத்தை பிடித்துக் கொண்டு கூடவே ஓடி வந்தா‎ன். அப்போது எனக்கு குதிரை சவாரியின் சந்தோஷத்தை விட, அவன் கூடவே ஓடி வருவதை பார்த்த பரிதாபம் தான் அதிகம் ஏற்பட்டது.

அதே போல் ஒரு முறை ஊட்டியில் போட் க்ளப் ரோட்டில் நண்பர்களுட‎ன் குதிரை சவாரி செய்ய ஆசைப்பட்டே‎ன். அந்தக் குதிரைகள் மிகப் பெரிதாக இருந்தன. நாமாகவே சவாரி செய்யலாம் எ‎ன்று குதிரைக்கார‎ன் எ‎ங்களிடம் கொடுத்து விட்டா‎ன். குதிரை ஓட ஆரம்பித்தவுடன் உடலெல்லாம் சொல்ல முடியாத அளவுக்கு குலுக்கியது (பழகியவர்களுக்கு இது சுலபம்). எனக்கு கீழே விழுந்து விடுவோமோ பயமாகி விட்டது. மற்ற குதிரைகளில் இருந்த நண்பர்களையும் காணவில்லை (எங்கு கொண்டு போய் குப்புறத் தள்ளியதோ..?!). ஒரு குறிப்பிட்ட இடம் வந்தவுட‎ன் குதிரை திடீரென்று நி‎‎ன்று விட்டது. எனக்கு ஒ‎ன்றும் புரியவில்லை. குதிரைக்காரன் இருக்கும் இடத்திற்கு செல்ல இ‎ன்னும் நிறைய தூரம் இருந்தது. குதிரையை விட்டு விட்டு இறங்கிப் போகலாம் எ‎ன்றால், குதிரை எங்கே..? எ‎ன்று குதிரைக்காரன் கேட்பானே..?!

சரி குதிரையை நடக்கவாவது செய்யலாம் எ‎ன்று நா‎ன் காலால் குதிரையின் வயிற்றில் உதைக்கிறே‎ன், கடிவாளத்தை சுண்டுகிறே‎ன், ம்ஹம்..! நகர்வேனா எ‎ன்று விட்டது..! அப்போது எங்கிருந்தோ ஒரு விசில் சத்தம் கேட்டது பாருங்கள்..! குதிரை தலை தெறிக்க ஓட ஆரம்பித்தது. கடவுளை வேண்டிக் கொண்டு உயிரையும், பிடரி முடியையும் இறுக்கமாக பிடித்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டே‎ன். கண்களை விழித்துப் பார்த்த போது குதிரைக்கார‎ன் அருகில் நின்றி‎ருந்தது. பிறகு தா‎ன் எல்லாம் புரிந்தது. அவன் என்னதான் நம்மிடம் குதிரையைக் கொடுத்தாலும் ரிமோட் அவன் கையில் தான். நாம் எதுவும் கட்டுப்படுத்த முடியாது. விசிலை வைத்து குதிரையை இயக்குகிறா‎ன் என்று புரிந்தது. அத்தோடு எ‎ன் குதிரை சவாரி ஆசை சவாரி குதிரையைப் போல் ஓடியே போனது.!!

ஷீ-நிசி
28-05-2007, 05:34 AM
மிக அருமையான நகைச்சுவை... எனக்கு அதுபோல் ஆசை இருந்தது... ஒருமுறை மகாபலிபுரம் நண்பர்களோசு சென்றபோது என் குதிரை ஆசை அங்கே நிறைவேறியது...அவன் சில டெக்னீக் சொல்லிக்கொடுத்தான்.. அதன் படி நானும் ஓட்டினேன்.. கொஞ்ச தூரத்தில் கடற்கரையில் ஒரு வெள்ளைக்கார ஜோடி படுத்திருந்தது... குதிரை அவர்கள் மேலே ஏறிடப்போகிறதோ என்று பயந்துவிட்டேன்.. காரணம் அவர்களை நோக்கியே போவது போல் இருந்தது... நல்லவேளை கடிவாளத்தை பிடித்து அப்படி இப்படின்னு இழுத்தேன்.. அது இந்தப் பக்கம் கடலுக்காய் திரும்பிவிட்டது....

சிவா.ஜி
29-05-2007, 04:35 AM
நானும் மெரீனாவில் குதிரை சவாரி செய்திருக்கிறேன், ஆனாலும் சிறுவயதில் செய்த எருமை சவாரிக்கு ஈடாகாது.

rajaji
06-07-2007, 02:13 AM
என் சிறு வயதில் நானும் சவாரி செய்துள்ளேன். ஆனால் என் தந்தையின் நண்பரோடு, காரணம் அப்போது எனக்கு 10 வயது.

விகடன்
12-08-2007, 06:26 AM
நனும் ஒருதடவை குதிரைச்சவாரி செய்தேன். ஆனால் அன்றைய தினம் எனக்கு வலிகள் நிறைந்த தினமாகவே இருந்தது.
குதிரையில் சாவகாசமாக இருந்து சவாரி செய்தால் தெரிந்திருக்கும் எப்படி இருக்குமென்று. !!!

சுருக்கமாக சொல்லப்போனால் குதிரைச் சவாரி என்பது அரை மண்டியில் நின்று வருவதுதான்.

ஓவியா
13-08-2007, 12:39 AM
சபாஷ், அருமையான அனுபவ பதிவு, நகைச்சுவை தூள் பறக்கும் அளவிற்க்கு நன்றாக உள்ளது, பாராட்டுக்கள் இதயம்.

கேப்பில் டூப்பு டுபுக்கு ராவுத்தர்களை வாரியதை மிகவும் சிரித்து ரசித்தேன்.

எனக்கும் குதிரையுடன் சவாரி அனுபவம் உள்ளது, இரண்டு நாட்டில். ஒன்று பிலிபைஸில், நாங்கள் ஒரு 15பேர் இரவு 12மணியளவில் ஓபேன் பார்க்கில் பிறந்தநாள் விருந்து வைத்து லூட்டி அடித்துக்கொண்டு இருந்தோம், ஒரு அரைமணி நேரத்தில் 6 குதிரையில் போலிஸ்காரர்கள் எங்களை புடைசூழ, அய்க்கோ போலிஸ் ஸ்டேஷனுக்கு போக போரேனே என்று அஞ்சா நெஞ்ச குஞ்சம்மாவாகிய நான் ஆடிதான் போனேன், பின் அவர்கள் மாமுல் வாங்கிவிட்டு 'ஏஞ்சாய்' என்று சொல்லி சென்று விட்டார்கள்..

இது ஜப்பானில், ஒரு பெரிய பார்க்கில் விருந்து வைபவம் ஒன்று நடந்துக்கொண்டிருந்தது, அதுவும் ஃசேரட்டி விழாவைபவம். குதிரை வைத்து சவாரி செய்து காசு சேர்த்துக் கொண்டிருந்தார்கள் சிலர். நானும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க திட்டம் தீட்டி கூப்பனும் வாங்கி விட்டேன், நான் ஒருவள் மட்டுமே தமிழ் பெண், சரி சவாரியும் ஆரம்பமானது. நானோ சவாரியிலே அங்கு நடக்கும் விருந்தினை வலம் வந்து கண்டு ரசிக்க ஆவலாய் ஏரி குதிரையில் அமர, அதுவும் நாட்டின் பெயருடன் என் பெயரும் பதித்த சட்டை அணிந்ததால்.....அங்குள்ள ஜப்பனியர்கள் அனைவரும் என்னை கண்டுகளிக்க ஆரம்பித்து விட்டனர், என்னை மட்டும் ஏதோ ஒரு வின்னோத பொருள் போல அனைவாரும் நின்று நித்தானித்து பார்க்க......மலேசியா மலேசியா என்று கையும் தட்ட ஆரம்பித்தனா விட்டனர்......வெட்கத்தில் சிவந்து போனேன் கூச்சம் தாங்காமல் பாதியிலே இங்கி நடந்து வர ஆரம்பித்து விட்டேன்............நடக்ககூடாதது நடந்து போச்சு, ஆமாம் ஓட வேண்டிய குதிரை அன்று என்னால் நாடந்து போச்சு

ஆதவா
13-08-2007, 01:20 AM
அட இந்த பதிவு என் கண்ணூக்குத் தெரியாமல் போச்சே!! (கண்ணாடிய மாத்தனும்..) அருமை அருமை... நான் யானையைத் தவிர வேறெதிலும் உட்கார்ந்ததில்லை,. அதுக்கே பயப்படுவேன்.. யானை மேல உட்கார்ந்தே பதினஞ்சு வருசம் இருக்கும்.... குதிரை சவாரி கூட போனதில்லை,

குதிரை சம்பந்தமாக கண்ட இரண்டு என்னவென்றால்

அதன் வேகம், இரண்டாவது சொல்ல வெட்கம்... சீ போங்க..

ஓவியா
13-08-2007, 01:22 AM
அடடே ஆதவா!! ஹி ஹி ஹி

தளபதி
13-08-2007, 08:30 AM
நான் மாட்டுவண்டி கொண்டு நடத்தப்படும் போட்டியில் கலந்து இருக்கிறேன். அதை பழக்குவது, நம் கை பிரம்பினால் அதற்கு நம் தேவைகளை சொல்வது என்று நிறைய அனுபவம்.
மாட்டுவண்டியில் உட்கார்ந்து கொண்டு எங்கள் தாத்தா ஊரில் சுற்றி வருவதே மிகப்பெரிய சுகம். கிராமத்திலிருந்து சந்தைக்கு செல்லும் பாதையில் வண்டியை தட்டிவிட்டால் அந்த வண்டி சத்தமும் நம்மை வருடிச் செல்லும் காற்றும், அடடா!!! ஆனந்தம்.
எங்கள் வீட்டு மாடுகள் நல்ல வலிமையுடன் இருக்கும். அந்த நல்ல பாதையில் செல்லும்போது அவைகளும் ஆனந்தத்துடன் செல்லும். வரிசையாக செல்லும் வண்டிச்சத்தம் நல்ல இசையாக ஒலிக்கும்.
சில சமயம் அந்திவேளையில் வண்டியை மெல்ல நகரவிட்டு அதன் தாலாட்டில் குட்டி தூக்கம் போட்டிருக்கிறேன்.

இதயம்
13-08-2007, 08:58 AM
உங்களுடைய நினைவுச்சாரல் என் மனதில் மிகுந்த குளிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது அக்னிகுமாரன். காரணம், இதே அனுபவத்தை பால்ய வயதில் அனுபவித்தவன் நான். என் தாய் வழித்தாத்தாவோடு வண்டி கட்டிக்கொண்டு வாண்டுகளோடு வாண்டுகளாய் குதூகலித்துப்போன அந்த நினைவுகள் என் மனதில் என்றும் உறைந்து போன உன்னத நினைவுகள். அந்த சம்பவங்கள் என் மனதில் இன்று நினைத்தாலும் சுகம் கொடுக்க முக்கிய காரணம் ஒன்று உண்டு. அது கோபம் என்றால் இன்னதென்று அறியாத, எல்லோரிடமும் அன்பை பொழியும், புன்சிரிப்பை மட்டும் தன் முகத்தின் முகவரியாய் கொண்ட என் தாத்தா..! தந்தைக்கும், மகனுக்குமான புரிதலில் ஏற்படும் பிரச்சினைக்கு காரணம் தலைமுறை இடைவெளி என்கிறார்கள். ஆனால், அதே தலைமுறை இடைவெளி தாத்தாவுக்கும், பேரனுக்கும் பெரும்பாலும் மிகுந்த புரிந்துணர்வை தந்து இருவரையும் மகிழ்விக்கிறதே அது எப்படி..? அப்படி ஒரு புரிந்துணர்வில் நாங்கள் இருவரும் சந்தோஷத்தை அதிகம் அனுபவித்தோம். அதற்கேற்றார் போல் என் தாத்தாவும் இருந்தார். என் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள ஒரு நல்ல நண்பனாய், நேர்மை, உண்மை, ஒழுக்கம் சொல்லிக்கொடுக்கும் சிறந்த ஆசிரியராய், தேவைகளை நிறைவேற்றி வளர்க்கும் நல்ல பெற்றோராய் என்று எல்லாமாய் இருந்தவர் அவர்.

நாம் சிலரைப்பற்றி நினைக்கும் போது அவர்களுடனான உறவை பிரதிபலிக்கும் விதமாக நம் மனதில் பல தரப்பட்ட உணர்வுகள் தோன்றுவது இயல்பு. என் தாத்தா பற்றி நான் நினைக்கும் போது நான் நுழைவது ஒரு தனி உலகம். அது அன்பையும், சந்தோஷத்தை மட்டுமே அடிப்படையாக கொண்ட அற்புதம் உலகம். இன்று நான் வாழும் சந்தோஷமான மணவாழ்க்கைக்கு அடித்தளம் போட்டவரும் அவரே. எங்கள் இருவரைப்பற்றியும் எதிர்த்தரப்பில் உயர்த்திச்சொல்லி, எங்களுக்குள் ஈர்ப்பை ஏற்படுத்தியது அவருடைய வார்த்தைகள் தான். நாங்கள் இணைவதில் பிரச்சினை வந்தபோது எனக்காக நியாயம் பேசியவரும் அவர் தான். என் மனதில் மலையளவு உயர்ந்திருக்கும் அந்த அன்புள்ளத்தை மரணம் என்ற அரக்கன் எங்களிடமிருந்து பிரித்தது வேதனையிலும் வேதனை. நல்லவர்கள் இறந்தும் வாழ்வார்கள் என்று சொல்வார்கள். அதை நாங்கள் எங்கள் சந்தோஷ வாழ்க்கையில் உணர்கிறோம்..!

தளபதி
13-08-2007, 10:54 AM
ஓ!! இதயம். நீங்களும் அந்த கிராமத்து அனுபவம் கொண்டவரா?? ஆனால் உங்கள் தாத்தா உங்களிடம் நிறைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என்பது புரிகிறது.
தாத்தாக்களுக்கு பேரன் பேத்திகளுடன் சேர்ந்துவிட்டால் எப்படி இருக்குமோ, ??? தெரியாது, மிகவும் குசியாகிவிடுவார்.

மேலும், எனக்கு அஞ்சு மாமாக்கள், அவர்களுடன் நாங்கள் அடித்த கொட்டங்கள்.. ஆகா,... அந்த ஊரில் நடந்த நாடகங்கள், திருவிழாக்கள் மேலும் போட்டிகள் என்று சொல்லி மாளாது. சொல்லில் அடங்காது. எனக்கு அதையெல்லாம் நினைக்கும்போது சந்தோசமாக இருக்கிறது.

இந்த திரியை ஆரம்பித்து அந்த மலரும் நினைவுகளில் என்னை மூள்கடித்த உங்களுக்கு மிகவும் நன்றி.