PDA

View Full Version : நெஞ்சின் வலிகள்



சக்தி
26-05-2007, 07:03 PM
கண்ணில் ரத்தம் வழியுதடி
இந்த கண்ணில்லா மனிதரை
நினைத்திடும் பொழுது.
பார்த்து பார்த்து செல்வார்
இவர் பார்த்த பழுதுகள்
ஏராளம்
ஏன் என்று கேட்க
எள்ளவும் வீரமில்லை
எண்ணித் துணிக கருமமென்று
வாழ்வாரும் யாருமில்லை.
கொள்ளைகொண்டு போனதெல்லாம்
போனபின்பு- இங்கு கும்மியடித்து
அழுது என்ன பயன்
மனிதம் கற்றுக்கொடுத்த
மண்ணில்-இன்று
மதம்பிடித்து போனதென்ன.
காக்கை குருவியெங்கள் ஜாதி
என்றான் பாரதி-இங்கு
காக்கைக்கும் குருவிக்கும்
ஜாதியை வைத்தது யாரடி
பெண்ணீயம் பேசும் மனிதர்கள்
மனதில் கண்ணீயம் காப்பதில்லை ஏனடி
பழம் பெருமை பேசி
மனிதர் இங்கே
பாழாய் போகின்றாரே
காவியுடையணிந்த கயவர்கள்
இங்கே காவியம் படைக்கின்றார்
மொழிகொண்ட மனிதரெல்லாம்(மனதில்)
பழிகொண்டு வாழ்கின்றார்
கண்ணிலே ஒளியில்லை
நெஞ்சிலே உரமில்லை
அஞ்சி அஞ்சி சாகின்றார்
வஞ்சகத்தில் வாழ்கின்றார்
கற்றுக்கொடுத்த இனம்
இன்று கற்றுக்கொண்டிருகிறது
இந்த நிலை மாறுமோ
மனிதர் இனம் மீளுமோ?

அமரன்
27-05-2007, 02:15 PM
இப்போதுதான் ராஜா உங்கள் கவிதைப் படித்தேன். விரைவில் விமர்சனத்துடன் வருகின்றேன்.

இன்பா
29-05-2007, 04:20 AM
சமூக அக்கறையுடன் நீங்கள் தீட்டிய இத கவிதை வரிகள்...
யோசிக்க வைக்கிறது...

வாழ்த்துக்கள்

ஆதவா
29-05-2007, 04:29 AM
அருமை அருமை... கொஞ்சம் பாரதியின் வாசம் வருகிறது. இந்த கருத்துக்கள்தான் எல்லா கவிஞர்களிடமும் சுற்றுகிறது. (சிறிது நேரத்தில் என் கவிதையிலும் வரும்.)
இந்த நிலை என்றுமே மாறாது. நம் ஆசைகள் தீராது. கொஞ்சம் பாரதி வாசனை தவிர்த்து மேற்கோள் காட்டியவாறு செய்திருக்கலாம்.. இன்னும் வலிக்கான வார்த்தைகளை வலிமையாக செய்திருக்கலாம்... ஒரு பெண்ணைப் பார்த்து சொல்வது போலவும் உள்ளது.. அதைத் தவிர்த்தோ அல்லது இறுதிவரை அதைக் கடைபிடித்தோ வந்திருக்கலாம்..

குமுறல் உண்மை... அது வரிகளில் தெரிகிறது/தெறிக்கிறது..

தொடருங்கள்.

சக்தி
30-05-2007, 04:09 PM
நன்றி ஆதவரே உங்களின் படைப்புக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

ஆதவா
30-05-2007, 04:16 PM
ரோசா.. எனது படைப்புகள் ஆங்காங்கே கிடக்கும்... எடுத்துப் பாருங்கள்....

ஷீ-நிசி
31-05-2007, 04:13 AM
நண்பரே! பாரதியின் கவிதை படித்தது போல் இருந்தது...


பெண்ணீயம் பேசும் மனிதர்கள்
மனதில் கண்ணீயம் காப்பதில்லை ஏனடி

மிக ரசித்த வரிகள்....

இதயம்
31-05-2007, 04:21 AM
கவிதைகளில் பாரதி நெடி. எடுத்து வைத்த கருத்துக்கள் காரமுள்ளவை. அனல் கவிதையில் உங்கள் அக அழகு தெரிகிறது.