PDA

View Full Version : முட்டை யாருக்குசிவா.ஜி
26-05-2007, 02:51 PM
ஒரு காலணியில் அடுத்தடுத்த வீடுகளில் ஒரு இந்தியனும் ஒரு பாகிஸ்தானியும் இருந்தார்கள்.
இந்தியன் வளர்த்து வந்த கோழி ஒரு நாள் பாகிஸ்தானி வீட்டில் சென்று முட்டை இட்டுவிட்டது.
அது தெரிந்ததும் இந்தியன் போய் முட்டையை கொடு என்று கேட்டான்.
பாகிஸ்தானி என் வீட்டில் இட்ட முட்டை எனக்குத்தான் சொந்தம் அதனால் தரமுடியாது என்று சொன்னான்.
இந்தியன் கோழி என்னுடயதுதானே அதனால் முட்டை எனக்குத்தான் சொந்தம் என்றான்.வாக்குவாதத்தின் முடிவில் இந்தியன் சொன்னான்,
இப்படி ஏதாவது தீர்க்கமுடியாத பிரச்ச்சினை என்றால் வீரர்கள் வழக்கமாக செய்யும் ஒரு வழி இருக்கிறது நாமும்
அதையே செய்வோமா என்றான். என்ன அது என்று கேட்டதற்கு இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் உதைத்துக்கொள்ளவேண்டும்
உதை வாங்கிய பிறகு எழுந்துகொள்ள யார் அதிக நேரம் எடுத்துக்கொள்கிறார்களோ அவர்கள் தோற்றவர்கள்.
ஜெயித்தவர்கள் முட்டையை எடுத்துக்கொள்ளலாம் என்றான்.பாகிஸ்தானியும் ஒத்துக்கொண்டான்.
முதலில் இந்தியன் உதைப்பதாக சொல்லிவிட்டு வீட்டிற்கு போய் இருப்பதிலேயே கணமனா பூட்ஸை போட்டுக்கொண்டு
வந்து பாகிஸ்தானியின் அடி வயிற்றில் ஓங்கி ஒரு உதை விட்டான். ஐயோ என்று அலறிக்கொண்டு கீழே விழுந்த பாகிஸ்தானி
அரை மணி நேரம் கழித்து எழுந்து இந்தியனைப்பார்த்து இப்போது என்னுடய சான்ஸ் என்று தயாரானான்.
இந்தியன் கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல், பாகிஸ்தானியைப்பார்த்து "முட்டையை நீயே வைத்துக்கொள்" என்று சொல்லிவிட்டு போய் விட்டான்.

அமரன்
26-05-2007, 05:19 PM
மன்னித்து விடுங்கள் சிவா. சிரிக்கத் தோன்றவில்லை. காரணம் புரியவில்லை. மன்னித்து விடுங்கள்.

விகடன்
26-05-2007, 05:32 PM
இதற்கு என்ன பிரதிபலிப்பை காட்டுவது என்று குழம்பிப்போய் உள்ளேனையா!

மனோஜ்
26-05-2007, 05:37 PM
இதில் இந்தியா பாக்கிஸ்தான் தேவையில்லாதது சாதார்னமாக செல்லியிருக்காலாம்

gragavan
26-05-2007, 05:50 PM
:) இது போன்ற போட்டிக் கதைகள் அந்தக் காலத்திலேயே இருந்திருக்கின்றன. உண்மையா பொய்யா என்பதை விடச் சுவாரசியமானவைகள்.

கம்பரும் கூத்தரும் காவிரிக்கரையில் நின்றிருந்தார்களாம். கூத்தரின் காலைத் தடவிய நீர் ஓடி கம்பரின் காலைத் தொட்டு அப்படியே ஓடியதாம். உடனே கூத்தர் "என் காலைத் தொட்ட நீர்தான் உம்மை நனைக்கிறது" என்றாராம்.

உடனே கம்பர், "நீரே வந்து காலில் விழுந்தால் என்ன செய்வது?" என்றாராம். :)

அமரன்
26-05-2007, 05:55 PM
கம்பரின் பதில் சிலேடையாக இருக்கின்றதே.

விகடன்
26-05-2007, 06:00 PM
:)
உடனே கம்பர், "நீரே வந்து காலில் விழுந்தால் என்ன செய்வது?" என்றாராம். :)

மிகவும் இரசித்தேன். இப்படிப்பட்ட புத்தகங்களை ஏங்கு பெறமுடியும்? இ.புத்தகமிருந்தால் அனுப்பிவையுங்களேன். அனுபவித்து விடுகிறேன்!

gragavan
26-05-2007, 06:54 PM
மிகவும் இரசித்தேன். இப்படிப்பட்ட புத்தகங்களை ஏங்கு பெறமுடியும்? இ.புத்தகமிருந்தால் அனுப்பிவையுங்களேன். அனுபவித்து விடுகிறேன்!தெரியலையே ஜாவா. இதை எங்கோ எப்போதோ படித்தேன். எதிலென்று மறந்து விட்டது.

ஆனால் புகழேந்திக்கும் ஒட்டக்கூத்தருக்கும் நடந்த செய்யுட் போட்டியும் சுவையானது.

புகழேந்தி பாண்டிநாடு. கூத்தர் சோழநாடு. சோழன் பாண்டிமகளைக் கட்டியதால் சோழநாட்டுக்குச் சென்றார். தமிழ் வளர்க்கத்தான்.

அங்கு காவிரிக்கு வைகையா? புலிக்கு மீனா? உறையூருக்கு மதுரையா என்று கேள்விகளை அடுக்க.

இவரும்...வைகையின் பெருமை...திருமாலின் முதலவதாரம் மீனா புலியா? ஈசன் 64 திருவிளையால் புரிந்தது மதுரையா உறையூரா என்று பதில் சொல்லியிருக்கிறார். இவை செய்யுள் வடிவில் உள்ளன. அம்மானை என்ற பாடல் வகையில்.

விகடன்
26-05-2007, 07:31 PM
நீங்கள் சொல்லத்தான் ஞாபகம் வருகிறது.
ஒரு படத்தில் சிறுவயதில் பார்த்தது.
ஒரு வினா பெண்ணைப்பார்த்து கேட்கப்படுகிறது... "இலையிலே சிறிய இலை" எதென்று. அதற்கு அந்தப்பெண் பதிலளிக்கிறால் அதுவும் வினாவடியிலே..
"பூவிலே இரண்டுநிறப் பூ எது" என்று...

அக்னி
26-05-2007, 08:08 PM

கொஞ்சம் விளக்குங்களேன். புரியவில்லை...

விகடன்
26-05-2007, 08:21 PM
கொஞ்சம் விளக்குங்களேன். புரியவில்லை...

இப்போதுதான் ஞாபகம் வருகிறது.

முதற் கேள்வி: எள்ளிலும் மிகச்சிறிய இலை என்ன ? என்பது

பதிலாக: பூவிலே இரண்டு நிறப்பூ எது? என்பது.

இரண்டிற்குமே ஒரு விடைதான். அதுதாங்க "விடத்தல்"

விடத்தில் இலைதான் எள்ளை விட சிறிய இலை.
அதன் பூ இரண்டு நிறத்திலிருக்கும். ஒரு பூவிலேயே இரண்டுநிரமும் இருக்கும்.

அக்னி
26-05-2007, 08:28 PM

இப்ப புரிஞ்சுடுத்து. இதுதான் முன்னமே கேட்கப்பட்டிருந்தாலும், இப்படி விளக்கம் தந்தால்தான் புரிந்திருக்கும். நன்றி...

அன்புரசிகன்
26-05-2007, 08:37 PM
முதலில் இந்தியன் உதைப்பதாக சொல்லிவிட்டு வீட்டிற்கு போய் இருப்பதிலேயே கணமனா பூட்ஸை போட்டுக்கொண்டு
வந்து பாகிஸ்தானியின் அடி வயிற்றில் ஓங்கி ஒரு உதை விட்டான். ஐயோ என்று அலறிக்கொண்டு கீழே விழுந்த பாகிஸ்தானி
அரை மணி நேரம் கழித்து எழுந்து இந்தியனைப்பார்த்து இப்போது என்னுடய சான்ஸ் என்று தயாரானான்.
இந்தியன் கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல், பாகிஸ்தானியைப்பார்த்து "முட்டையை நீயே வைத்துக்கொள்" என்று சொல்லிவிட்டு போய் விட்டான்.

மன்னித்து விடுங்கள் சிவா. சிரிக்கத் தோன்றவில்லை. காரணம் புரியவில்லை. மன்னித்து விடுங்கள்.

இதற்கு என்ன பிரதிபலிப்பை காட்டுவது என்று குழம்பிப்போய் உள்ளேனையா!

இதில் இந்தியா பாக்கிஸ்தான் தேவையில்லாதது சாதார்னமாக செல்லியிருக்காலாம்

ஹய்யோ...
இதில் உள்ள நகைச்சுவை இது தான்.
இந்தியருக்கு பக்கத்து வீட்டுகடகாரனுக்கு உதையவேண்டுமென்ற ஆசை நீண்டநாளாக இருந்துள்ளது. அதை முட்டை மூலம் தீர்த்துக்கொண்டுள்ளார்.

சிவா.ஜி
27-05-2007, 05:57 AM
எல்லோரும் மன்னிக்கவும்.சிரிப்பு வரவில்லை என்றாலும் இதன் மூலமாக அற்புதமான உவமைகளும் அந்த நாட்க்களில் படித்த சுவாரசியமானவற்றையும் மன்ற நன்பர்கள் வாயிலாக தெரிந்துகொண்டு ஆனந்தப்பட முடிந்ததே.நன்றி நன்பர்களே.

ஓவியா
31-05-2007, 04:56 PM
அனைத்து பின்னூட்டமும் அருமை. நன்றி.