PDA

View Full Version : தமிழ் போட்பரப்பு - Tamil Podcasting

leomohan
26-05-2007, 01:41 PM
உங்களிடம் Apple iPod உள்ளதா? சுமார் 300 டாலர்கள்.

www.apple.com (http://www.apple.com)

http://daringfireball.net/misc/2004/10/df_ipod_front+back.jpg

leomohan
26-05-2007, 01:42 PM
அல்லது Microsoft Zune உள்ளதா? சுமார் 250 டாலர்கள்

www.zune.net (http://www.zune.net)

http://www.zunetotal.com/imagenes/noticias/zune-vs-ipod-g.jpg

leomohan
26-05-2007, 01:50 PM
Podcasting ஐ போட்பரப்பு என்று கூறலாம்.

இது இணையத்தில் புதியதாக பிறந்த ஒரு பழக்கம்.

நீங்கள் எந்த தலைப்பிலாவது பேசி இதை ஒலி கோப்பு வடிவில் பதிவு செய்யலாம். .mp3

பிறகு அதை நீங்கள் பல போட்பரப்பு கோப்பகங்கள் Podcasting Directoriesல் ஏற்றலாம்.

இத்தளங்களுக்கு செல்பவர்கள் தாங்கள் விரும்பும் தலைப்பில் தேடுவார்கள்.

பிறகு அதை தரவிறக்கம் செய்து மேலே பிரசுரிக்கப்பட்ட கருவிகளில் ஒரு மென்பொருள் கொண்டு ஏற்றுவார்கள்.
-Microsoft Zune Software
-iPod iTunes Software

பிறகு கையடக்க கருவியான இதை பையில் போட்டுக் கொண்டு நாம் முன்பு பிரயோகித்த WalkMan, DiscMan போன்று எடுத்து செல்வார்கள்.

அது மட்டும் அல்லா பாடல்கள், திரைபடங்கள் அனைத்தையும் எங்கும் காணலாம்.

கணினியில் உள்ள USB 2.0 port இன் மூலம் இது Charge ஆகிக் கொள்ளும்.

அல்லது USB 2.0 Charger வாங்கினால் நேரிடியாக Power Sourceல் கொண்டு மின்கலத்தை Charge செய்யலாம்.

இணையத்தில் இருந்து தரவிறக்கும் பாடல்களை திரைபடங்களை இதில் ஏற்றலாம்.

Microsoft Zune 3.0 inch திரை அளவும் Apple iPod 2.3 inch திரை அளவிலும் வருகிறது.

Zune மேலும் FM Radio, Wireless போன்ற வசதிகளை கொண்டுள்ளது.

இந்த தளத்தில் சென்று பாருங்கள் - http://www.podbazaar.com/
தமிழில் நிறைய போட்பரப்பு கோப்புகள் உள்ளன.

மேலும் Podcasting, Pod, Podcasting directories என்று தேடினால் பல தளங்கள் கிடைக்கும்.

மேலும் சந்தேகம் கேட்டால் இந்த பகுதி தொடரும்.

இல்லையேல் முற்றும்

அக்னி
26-05-2007, 02:24 PM
நான் முதற் படத்தைப் பார்த்துவிட்டு அவசரப்பட்டு, என்னிடமும் ஒன்றுள்ளது, அதையும் பதிவோம் என்று நீளம், அகலம் அளந்துவிட்டுத்தான் யோசித்தேன் இது மோகனின் பதிவாச்சே. இப்படி சிறுபிள்ளைத்தனமாக படம் போடுவாரா என்று...

சரி பொறுப்போம் என்று பொறுத்தால் தொடர்ந்தது அரியதகவல்...

நன்றி மோகன் அவர்களே...

உண்மையாக நான்தான் சிறுபிள்ளைத்தனமாக இருந்துவிட்டேன்...

நாமும் ஒளிப்பதிவுகளை ஏற்றலாமோ?

மனோஜ்
26-05-2007, 02:54 PM
அருமை தகவல் மோகன் சார்

leomohan
26-05-2007, 03:08 PM
நான் முதற் படத்தைப் பார்த்துவிட்டு அவசரப்பட்டு, என்னிடமும் ஒன்றுள்ளது, அதையும் பதிவோம் என்று நீளம், அகலம் அளந்துவிட்டுத்தான் யோசித்தேன் இது மோகனின் பதிவாச்சே. இப்படி சிறுபிள்ளைத்தனமாக படம் போடுவாரா என்று...

சரி பொறுப்போம் என்று பொறுத்தால் தொடர்ந்தது அரியதகவல்...

நன்றி மோகன் அவர்களே...

உண்மையாக நான்தான் சிறுபிள்ளைத்தனமாக இருந்துவிட்டேன்...

நாமும் ஒளிப்பதிவுகளை ஏற்றலோமோ?

ஆம் அக்னி. நாமும் ஏற்றலாம். பல தளங்கள் இதற்கு வசதிகள் தருகின்றன. www.odeo.com (http://www.odeo.com) சென்று பாருங்கள்.

leomohan
26-05-2007, 03:10 PM
அருமை தகவல் மோகன் சார்

நன்றி மனோஜ்.

அமரன்
26-05-2007, 04:00 PM
மோகன் ஒரு சிறு சந்தேகம். இந்த ஐ-பொட் சாதனம் வாங்குவதற்காக நான் ஒரு கடைக்குப் போனேன். அங்கே அப்பில் ஐ-பொட் மட்டுமே இருந்தது. வேறு பிரான்ட் ஐ-பொட் இருக்கவில்லை. அதனால் நான் வாங்கவில்லை. எனது சந்தேகம் என்னவென்றால் இந்த ஐ-பொட் ஆப்பிள் பிரான்டில் மட்டுமா இருக்கு. இல்லாதுவிட்டால் வேறு பிரான்டில் இருக்கின்றதா? வேறு பிரான்டில் இல்லை என்று நான் சொன்னபோது எனது நண்பன் அதை மறுத்து என்னை எடுக்கவிடாது தடுத்துவிட்டான். அதனால் எனக்கு குழப்பமாக உள்ளது. உதவமுடியுமா?

leomohan
26-05-2007, 04:22 PM
iPod என்பது Apple இன் காப்புரிமை பெற்ற பெயர். கருவிகள் எல்லாமே ஒரு function தான்.

Microsoft இதை Zune என்று அழைக்கிறார்கள்.

Creative இடத்திலும் இதுபோன்ற Audio/Video Player உண்டு.

குறிப்பு - நண்பர்களுக்கு இணையத்தில் எங்கு தமிழ் போட்பரப்பு கோப்புகள் தொடுப்புகள் கிடைத்தாலும் இங்கு பதியுங்கள். அனைவரும் பயன்பெறலாம்.

குறிப்பு - இந்த கருவி இல்லாதவர்கள் இணையத்திலிருந்து இந்த கோப்புகளை தரவிறக்கம் செய்து கணினியில் கேட்கலாம்.

அமரன்
26-05-2007, 04:33 PM
நன்றி மோகன். பாரதிதாசன் கவிதைகள் பாரதியார் கவிதைகள் ஒலி வடிவில் இருந்தால் அதன் சுட்டியைத் தரமுடியுமா?

இராசகுமாரன்
26-05-2007, 04:36 PM
குறிப்பு - நண்பர்களுக்கு இணையத்தில் எங்கு தமிழ் போட்பரப்பு கோப்புகள் தொடுப்புகள் கிடைத்தாலும் இங்கு பதியுங்கள். அனைவரும் பயன்பெறலாம்.

குறிப்பு - இந்த கருவி இல்லாதவர்கள் இணையத்திலிருந்து இந்த கோப்புகளை தரவிறக்கம் செய்து கணினியில் கேட்கலாம்.

மோகன்,

அனைவருக்கும் இன்னொரு புதிய தொழில் நுட்பத்தை அறிமுகப் படுத்தியிருக்கிறீர்கள். விரைவில் இது விஸ்வரூபம் எடுக்கும் என்று நம்புவோம். அப்போது இந்த திரி மட்டும் போதாது, ஒரு தனி பகுதியே தேவைப் படலாம். அதுவரை தற்போது நமது கதம்ப மன்றத்தின் "ஒலி-ஒளி பகுதி"-யை உபயோகப் படுத்திக் கொள்ளலாமே!

நமது தளத்தின் படைப்புகள், குறிப்பாக கவிதைகள், போட்பரப்பு மூலம் விரைவில் அனைவரையும் சென்றடையும் காலம் தூரமில்லை என்று தெரிகிறது.

leomohan
26-05-2007, 04:48 PM
மோகன்,

அனைவருக்கும் இன்னொரு புதிய தொழில் நுட்பத்தை அறிமுகப் படுத்தியிருக்கிறீர்கள். விரைவில் இது விஸ்வரூபம் எடுக்கும் என்று நம்புவோம்.

உங்கள் ஊக்கத்திற்கு நன்றி.

அப்போது இந்த திரி மட்டும் போதாது, ஒரு தனி பகுதியே தேவைப் படலாம். அதுவரை தற்போது நமது கதம்ப மன்றத்தின் "ஒலி-ஒளி பகுதி"-யை உபயோகப் படுத்திக் கொள்ளலாமே!

நன்றி. அவ்வாறே மாற்றிவிடுங்களேன்.

நமது தளத்தின் படைப்புகள், குறிப்பாக கவிதைகள், போட்பரப்பு மூலம் விரைவில் அனைவரையும் சென்றடையும் காலம் தூரமில்லை என்று தெரிகிறது.

இது அருமையான யோசனை. அனைவரும் செயல்படுத்தினால் நம் மன்றத்தின் பங்களிப்புகள் இணையத்தில் அதிகமாகிவிடும்.

இராசகுமாரன்
26-05-2007, 05:02 PM
உங்கள் ஊக்கத்திற்கு நன்றி.

நன்றி. அவ்வாறே மாற்றிவிடுங்களேன்.

தமிழ் போட்பரப்பு சுட்டிகள் உள்ள பதிப்புகளை மட்டும் இணைத்து ஒலி-ஒளிப் பகுதியில் தனித் திரியாக்கியுள்ளேன்.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9654

மேலும் போட்பரப்பு சுட்டிகளை அங்கே சேர்க்கவும்.

தேவைப் பட்டால், மன்றத்திலேயே போட்பரப்பை நேரடியாக கேட்கும் வசதியையும் கொண்டு வர முயற்சி செய்கிறேன்.

விகடன்
26-05-2007, 05:04 PM
தங்களின் இந்தத்தகவலே புதிய தகவலாக இருக்கும்போது என்ன கேள்வியை கேற்பது?
வேணுமென்றால் இப்படி கேற்கிறேன்.

இன்னும் பல விடயங்களை தரமுடியுமா???

மயூ
26-05-2007, 05:55 PM
அருமையான தகவல் லியோ மோகன் அவர்களே...
நீங்கள் பொட்காஸ்டிக் கேட்க ipod, Zune வைத்திருக்கத் தேவையில்லைதானே? சாதாரண mp3 player போதுமானதுதானே...
RSS ஓடையை வாசித்து அதில் இருந்து கணனிக்கு கோப்பை பதிவிறக்க சாதாரண மென்பொருள் போதும் தானே.. விலைகூடிய இந்த ipod தேவையா????

leomohan
26-05-2007, 07:02 PM
தமிழ் போட்பரப்பு சுட்டிகள் உள்ள பதிப்புகளை மட்டும் இணைத்து ஒலி-ஒளிப் பகுதியில் தனித் திரியாக்கியுள்ளேன்.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9654

மேலும் போட்பரப்பு சுட்டிகளை அங்கே சேர்க்கவும்.

தேவைப் பட்டால், மன்றத்திலேயே போட்பரப்பை நேரடியாக கேட்கும் வசதியையும் கொண்டு வர முயற்சி செய்கிறேன்.

மிக்க நன்றி ராஜகுமார். அவ்வாறு ஒரு வசதி வரும் என்றால் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். தங்களுக்கு சிரமம் இல்லாமல் இருந்தால்.

leomohan
26-05-2007, 07:03 PM
அருமையான தகவல் லியோ மோகன் அவர்களே...
நீங்கள் பொட்காஸ்டிக் கேட்க ipod, Zune வைத்திருக்கத் தேவையில்லைதானே? சாதாரண mp3 player போதுமானதுதானே...
RSS ஓடையை வாசித்து அதில் இருந்து கணனிக்கு கோப்பை பதிவிறக்க சாதாரண மென்பொருள் போதும் தானே.. விலைகூடிய இந்த ipod தேவையா????

ஆம். ஒலிகோப்புகளை வாசிக்க mp3 player போதுமானது.

அக்னி
26-05-2007, 07:12 PM
பயனுள்ள தகவல்கள்... நன்றிகள்...

leomohan
26-05-2007, 07:16 PM
தங்களின் இந்தத்தகவலே புதிய தகவலாக இருக்கும்போது என்ன கேள்வியை கேற்பது?
வேணுமென்றால் இப்படி கேற்கிறேன்.

இன்னும் பல விடயங்களை தரமுடியுமா???

அவசியம் ஜாவா. நான் புதியதாக Microsoft Zune வாங்கியுள்ளேன். அதனுடன் விளையாட விளையாட கி்ட்டும் தகவல்களை பகிர்ந்துக் கொள்கிறேன்.

ஓவியா
26-05-2007, 07:32 PM
தேவையான தகவல். விளக்கமும் அருமை. மக்களுக்கு நல்ல பயனுல்ல விசயமும் கூட.

மிக்க நன்றி மோகன். தாங்கள் வலைப்பூ புலியாவே மாறிவிட்டீர்கள்.

தலைவருக்கும் நன்றி.

மயூ
26-05-2007, 08:07 PM
அவசியம் ஜாவா. நான் புதியதாக Microsoft Zune வாங்கியுள்ளேன். அதனுடன் விளையாட விளையாட கி்ட்டும் தகவல்களை பகிர்ந்துக் கொள்கிறேன்.
ipod க்கு போட்டியாக பெரியண்ணணா மைக்ராசாப்ட் களத்தில் இறக்கியதே இநத Zune வர்த்தக ரீதியாக வெற்றிபெறவில்லையாமே???

wi-fi மூலம் பாடல் ஏற்றலாம் என்று நண்பன் சொன்னான் உண்மையா????

leomohan
27-05-2007, 06:00 AM
தேவையான தகவல். விளக்கமும் அருமை. மக்களுக்கு நல்ல பயனுல்ல விசயமும் கூட.

மிக்க நன்றி மோகன். தாங்கள் வலைப்பூ புலியாவே மாறிவிட்டீர்கள்.

தலைவருக்கும் நன்றி.

:-) :-)

leomohan
27-05-2007, 06:01 AM
ipod க்கு போட்டியாக பெரியண்ணணா மைக்ராசாப்ட் களத்தில் இறக்கியதே இநத Zune வர்த்தக ரீதியாக வெற்றிபெறவில்லையாமே???

wi-fi மூலம் பாடல் ஏற்றலாம் என்று நண்பன் சொன்னான் உண்மையா????

Microsoft Microsoft தான்.ஆம் கம்பியி்ல்லா இணைப்பு மற்றும் FM வானோலியும் உள்ளது. 3 inch திரை வேறு.

மயூ
27-05-2007, 08:44 AM
Microsoft Microsoft தான்.ஆம் கம்பியி்ல்லா இணைப்பு மற்றும் FM வானோலியும் உள்ளது. 3 inch திரை வேறு.
தகவலுக்கு நன்றி மோகன்!!!:sport-smiley-007:

அமரன்
27-05-2007, 01:53 PM
எது சிறந்தது மோகன்.

leomohan
27-05-2007, 03:08 PM
எது சிறந்தது மோகன்.

இடம் அதிகம் வேண்டுவோர் FM கேட்காதோருக்கு iPod சிறந்தது. 80 GB வன்தட்டுடன் வருகிறது.

இடம் குறைவாக இருந்தாலும் FM கேட்க விரும்புவோர் சற்று திரையில் பெரிய அளவில் படம் காண விரும்புவோருக்கு Microsoft Zune சிறந்தது.

அமரன்
27-05-2007, 05:41 PM
தரத்தில் சிறந்தது எது என்று கூற முடியுமா?

கேசுவர்
27-05-2007, 05:52 PM
Apple - ipod போலவே Cowon - PMP (Personal Media Players)
புகழ்ப்பெற்ற jet Audio , இந்த cowon தயாரிப்பே....
என்று ஏற்கனவே அறிமுகப்படித்திய்ள்ளது.
ipod வாங்கும் முன்னர் நான் சில கருத்துகளை , படித்துவிட்டு
இந்த பிளெயரை வாங்கினேன்..
இது ipodடை விட பல நல்ல செயல்பாடுங்கள் உள்ளது
உதா..தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இதில் பதிவு செயல்லாம்...

இன்னும் பல பல ...

நான் வைத்துருப்பது cowon A2 PMP ...

இதோ அதற்கான சுட்டி (http://cowonglobal.com/)

leomohan
27-05-2007, 06:48 PM
தரத்தில் சிறந்தது எது என்று கூற முடியுமா?

இரண்டுமே சீனாவில் தயாரிக்கப்படுகின்றன. சராசரியாக இது போன்ற கருவிகளின் ஆயுள் இரண்டு-மூன்று வருடங்கள் மட்டுமே.

leomohan
27-05-2007, 06:49 PM
Apple - ipod போலவே Cowon - PMP (Personal Media Players)
புகழ்ப்பெற்ற jet Audio , இந்த cowon தயாரிப்பே....
என்று ஏற்கனவே அறிமுகப்படித்திய்ள்ளது.
ipod வாங்கும் முன்னர் நான் சில கருத்துகளை , படித்துவிட்டு
இந்த பிளெயரை வாங்கினேன்..
இது ipodடை விட பல நல்ல செயல்பாடுங்கள் உள்ளது
உதா..தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இதில் பதிவு செயல்லாம்...

இன்னும் பல பல ...

நான் வைத்துருப்பது cowon A2 PMP ...

இதோ அதற்கான சுட்டி (http://cowonglobal.com/)

அருமையான தகவல். நன்றி கேசுவர்.